எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 17, 2014

ஃப்ரூட் சாலட் – 76 – தலைந”ர”கம் – என்னத்த சொல்ல – மனசு வலிக்குது!இந்த வார செய்தி:

தலைநகம் என்பது தான் இந்தியாவின் தலைநகரம் தில்லி மாநகருக்குப் பொருத்தமாக இருக்கும்.  இந்த வாரம் 51 வயது நிறைந்த ஒரு பெண்மணியை தலைநகரின் மையப் பகுதியான புது தில்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மாலை 05.30 மணியிலிருந்து 07.45 மணிக்குள் எட்டு மிருகங்கள் சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள். 

சென்ற வருடம் நடந்த நிகழ்வு பலரை இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வைத்தாலும், தலைநகரில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறைவதாக இல்லை.  பல பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது இன்றைக்கும் தொடர்கிறது. சிறுமிகள் கூட இந்த காமுகர்கள் பிடியிலிருந்து தப்புவதில்லை என்று நினைக்கும் போது இப்படிப்பட்ட ஆண்களுக்கு எந்த தண்டனை சரியாக இருக்கும் என மனதுக்குள் குமுறல்கள்...

எட்டு பேரில் இரண்டு பேரை பிடித்துவிட்டதாக செய்தி வெளிவந்திருக்கிறது. மற்ற குற்றவாளிகளையும் பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதற்குள் 51-வயது பெண்மணிக்கு 71-வயதானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! பொதுவாகவே தில்லி நகரில் இரவு நேரம் மட்டுமல்ல, பகல் நேரம் கூட சுதந்திரமாக பெண்கள் பயமின்றி நடமாட முடிவதில்லை என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது.

ஆட்சி மாறினாலும், அரசியல் மாறாது என்று தோன்றுகிறது. இதை வைத்து ஆதாயம் தேட மட்டுமே அரசியல்வாதிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.  கடுமையான சட்டங்களும், முன்மாதிரியான தண்டனைகளும் வரும்வரை இந்த மாதிரி குற்றங்கள் தொடர்வது நிற்கப் போவதில்லை.  காவல் துறை எங்கள் கையில் இல்லை, இருந்தால் நாங்கள் இது போன்ற நிகழ்வுகளை நடக்கவிடாது செய்துவிடுவோம் என்று ஒவ்வொரு அரசாங்கமும் சொல்வது வழக்கமாகிவிட்டது.

குற்றங்கள் குறைய, பாதுகாப்பான சூழல் அமைய அவர்கள் தான் பாடுபட வேண்டும் என்பதை இந்த அரசியல்வாதிகளுக்கும், காவல்துறைக்கும் யார் புரிய வைப்பது!

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி

LIFE’S DEEPEST FEELINGS ARE OFTEN EXPRESSED IN SILENCE. AND THE ONE WHO CAN READ VOLUMES FROM YOUR SILENCE IS YOUR DEAREST PERSON!

இந்த வாரத்தின் புகைப்படம்: 


சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று – எடுத்த இடம் பற்றி சீக்கிரம் தெரிந்து கொள்வீர்கள்!

ரசித்த பாடல்:

நேற்று ஒரு பாடல் கேட்டேன் – கேட்கும்போதே பிடித்திருந்தது. என்ன படம் என்று கவனித்தபோது “விழாஎன்று பெயர் போட்டார்கள். எனக்குப் பிடித்த என்னத்த சொல்ல, சொல்ல ஒண்ணும் இல்லஎனும் அந்த பாடல் இதோ உங்களுக்காக!
ரசித்த காணொளி:

நிறைய பைக் ரசிகர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பார்க்கும்போதே பிடிக்கும்.  இங்க பாருங்களேன் இந்த ஆள் என்ன பண்ணப் போறார்னு!
படித்ததில் பிடித்தது!:


மனசு வலிக்குது....

பெத்தவ பார்த்திருந்தா,
பத்தி எரிஞ்சிருப்பா!
அண்ணந் தம்பி பார்த்திருந்தா,
அப்பவே செத்திருப்பான்!
அக்கா தங்கை பார்த்திருந்தா,
அழுதே போய் சேர்ந்திருப்பா!
சொந்தக்காரன் பார்த்திருந்தா,
செத்தே போயிருப்பான்!
ஊருக்காரன் பார்த்தாக்கூட
உயிரையும் விட்டிருப்பான்!
யாரு பெத்த புள்ளைய்யா நீ....
என் மனசு வலிக்குது!
மனுஷ சாதிக்கு மட்டும்தாய்யா
சமபந்தி விருந்து அங்கே!
புத்தி கொஞ்சம் கொறஞ்சு போனா
சகல ஜீவனும் சமம் இங்கே!
இலவசத்த அள்ளி தந்து
ஏமாத்தி ஓட்டு வாங்கி
அரியணையில் அமர்ந்திருக்கும்
அரியவகை மனிதர்களே....
இலவசத்த கொறைச்சிக்கிட்டு
இவர் மாதிரி ஜீவனுக்கு
ஏதாச்சும் செய்யுங்கய்யா....
என்னமாச்சும் பண்ணுங்கய்யா!

-   வி. மாணிக்கவாசகம்.....

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 comments:

 1. அன்பு நண்பரே
  "தலை நரகம்" பகிர்வு அருமை. ஆனால் நமது நாடு எப்போது திருந்தும். இறைவன் தான் அருள வேண்டும். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  தலை நகரில் இருந்து விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 2. Idhayaththinil Raththam Vadindhu kondirukkinradhey, Dheivamey Nee ivargalai dhandippadhu eppodhu??

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் சித்தப்பா...

   Delete
 3. மாணிக்கவாசகத்தின் கவிதை மனதில் தைத்தது! முகப்புத்தக இற்றை (குழந்தையும்) மனதைக் கொள்ளை கொள்கிறது! கற்பழிப்பாளர்களுக்கு என்ன தண்டனை தருவதென்று தெரியலையா வெங்கட்...? கேஸ், என்கொயரி எதுவுமில்லாம, பிடிச்ச உடனே ‘லுல்லா’வை நறுக்கிவிட்டு அனுப்பிடணும். அதான் எனக்குத் தெரிஞ்ச நியாயமான தண்டனை!

  ReplyDelete
  Replies
  1. சரியான தண்டனை தான் சொல்லி இருக்கீங்க கணேஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 4. பழக்கலவை சுவையாய் இருந்தது என சொல்ல முடியவில்லை. காரணம் திரு வி.மாணிக்கவாசகம் அவர்களின் மனசு வலிக்குது என்ற கவிதையையும் அதோடு கூடிய படத்தைப் பார்த்ததும். இருப்பினும் பல்வேறு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா...

   Delete
 5. திருடு, வழிப்பறி எல்லாம்போய் எங்கே வந்து நிற்கிறோம் என நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது. ஒருவேளை இவ்வளவு நாளும் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறோமோ என்றுகூடத் தோன்றுகிறது. இதற்கு ஒரு வழி பிறக்க வேண்டும்.

  முகப்புத்தக இற்றையுடன் பாப்பாவும் கவர்ந்தது. (டெல்லி?) குளிரில் மரம் இங்குள்ளதுபோல் இருக்கிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் அதில் இரண்டு பேர் அமர்ந்துள்ளனர். கடைசி படம் பர்க்க மனசு வலிக்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 6. முகப்புத்தக இற்றையுடன் பாப்பா ரசிக்கவைதது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. முகப்புத்தக இற்றையும், குழந்தையும் : அருமை + அழகு...

  மற்ற முதல் தகவல் + கடைசி படங்கள் : கொடூரம் + வேதனை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. தலைநகர வேதனை அதிர்ச்சி, அங்கே ரோடுதான் சுத்தமே ஒழிய மனிதர்கள் இல்லை, கவிதை மனதில் வலி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 9. ஏனோ மனம் கனக்க வைத்து விட்டுச் சென்றது இவ்வார பதிவு.....
  குறிப்பாக முதலும் கடைசியும் ......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 10. இந்த வார செய்தி : அந்த சுற்று வட்டாரப் பகுதியில் (நகரின் இதயப்பகுதியாம்) மாலை நேரங்களில் தெருநாய்கள் அனைத்தும் போதையின் பாதையில்தான் சுற்றுகின்றன.

  முகப்புத்தக இற்றை: வாவ்!

  படித்ததில் பிடித்தது:- இல்லை. படித்ததில் வலித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 11. முதல் இறுதி செய்தி மனதை கனக்கச் செய்தாலும் தொடர்ந்து வந்த பகிர்வுகள் ரசிக்கும் படியிருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 12. முகப்புத்தக இற்றையுடன் உள்ள பாப்பாவும் அந்த செய்தியும் ரஸிக்கவைத்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. //பெத்தவ பார்த்திருந்தா,
  பத்தி எரிஞ்சிருப்பா!
  அண்ணந் தம்பி பார்த்திருந்தா,
  அப்பவே செத்திருப்பான்!
  அக்கா தங்கை பார்த்திருந்தா,
  அழுதே போய் சேர்ந்திருப்பா!
  சொந்தக்காரன் பார்த்திருந்தா,
  செத்தே போயிருப்பான்!
  ஊருக்காரன் பார்த்தாக்கூட
  உயிரையும் விட்டிருப்பான்!
  யாரு பெத்த புள்ளைய்யா நீ..///

  மேலே சொன்னவங்க எல்லாம் உதவி இருந்தா இவருக்கு இப்படி ஒரு நிலமை வந்து இருக்காதே.

  ஒரு வேளை இவன் முதலில் இப்படி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இவர்கள் எல்லாம் பார்த்து அதன் பின் அவர்கள் மேல் உலகத்திற்கு சென்ற பின் மீண்டும் இவன் சாப்பிட வந்திருப்பானோ

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதே நினைப்பு வந்தது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 14. ஆண்பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் உனக்கு சரி பாதி. அவளுக்கும் ரத்தம், சதை, உணர்ச்சிகள் இருக்குன்னு சொல்லி வளர்க்கனும். நம்ம ஊருல அது இல்லியே! ஒரு சினிமா, பார்க், டூர்ன்னு போய் வந்தப் பின் ஆம்பிள்ளை அக்கடான்னு தூங்குவாங்க. ஆனா, பொம்பளைங்க!?தன் வீட்டு மனுசிக்கே அந்த நிலைன்னா, மத்த பெண்களை எப்படி மதிப்பாங்க!?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 15. சுதா த்வாரகாநாதன் புது தில்லிJanuary 17, 2014 at 10:59 AM

  தலைநரகம்-பகலில் கூட வெளியே பாதுகாப்பு இலலையே. இது போன்ற நிகழ்வுகளை தடுக்கவே முடியாதா.
  முகப்புத்தக இற்றை பாப்பா, குறுஞ்செய்தி,படம் பலே ஜோர்.
  கடைசி படமும் கவிதையும் பார்த்து தலைப்புக்கேற்ப மனசு வலிக்குது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 16. கணேஷ் சொல்வதை நான் முற்றும் ஆமோதிக்கிறேன்.மிருகங்களையும் விட மோசமானவர்களுக்கு வேறு என்ன தண்டனை கொடுக்க முடியும். திரு.மாணிக்கவாசகத்தின் வரிகள் அவர்து பதைபதைப்பையும் நம் எண்ணங்களையும் வெளிப்படுதுகிறது. பாப்பா அழகு சொல்லி முடியாது..நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 17. ஆட்சி மாறுவதால் குற்றவாளிகள் மாறிவிடுவார்களா என்ன? இவர்கள் எப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் பார்க்கலாம்.
  மற்ற அனைத்துமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. தலைநகர் இப்படி பாதுகாப்பின்றி ஆகிவருவது கொடுமை! கவிதை மனதை பிழிந்தது! முகப்புத்தக இடுகை ரசிக்க வைத்தது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 19. தலை நகரம் கற்பழிப்பு விஷயத்தில்
  தலை நரகமாகத்தான் இருக்கும் போல இருக்கிறது
  பாடலும் பழமொழியும் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 20. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 21. படிக்கவே பிடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 22. தலைநகரம் - உண்மையிலேயே பெண்களுக்கு பாதுக்காப்பற்ற நகரமாகி விட்டது. இந்தியாவின் தலைநகரமே இப்படி இருந்தா மற்ற நகரங்கள்????

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 23. "//ஆண்களுக்கு எந்த தண்டனை சரியாக இருக்கும் என மனதுக்குள் குமுறல்கள்...//" - ஒரே தண்டனை நடு ரோட்டில் கல்லால் அடித்து கொள்வது தான் சரியான தண்டனை. இப்படி ஒரு மிருகத்துக்கு தண்டனை அளித்தால், மற்ற மிருகங்கள் எல்லாம் அடங்கி ஒடுங்கி விடும். ஆனால் அந்த சட்டம் மட்டும் நம் நாட்டில் வரவே வராது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 24. கவிதை அருமை...
  முகப்புத்தக இற்றை கலக்கல்...
  காணொளிகள் அற்புதம்...
  தில்லி சம்பவம் வேதனை...
  போட்டோ சூப்பர்...
  மொத்தத்தில் இந்த சாலட் சுவையாய்... அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 25. அருமை வெங்கட்!! கடைசி படமும் கவிதையும் மனதைப் பிழிந்தன!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 26. 1.தலைநகரம் தலைகுனிவு.
  2.முகநூல் பகிர்வு உள்ளம் கொள்ளை போகுதே!
  3.புகைப்படம் ஆஹா !
  4.பைக் ஆட் டூ மச்
  5.கவிதை கண்ணீர்!
  மொத்தத்தில் சாலட் கிளாஸ் மசாலா !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 27. தலைநகரை செய்தி மனிதர்கள் ஏன் இப்படி ? என்ற கேள்வி எழுந்து கலங்க வைக்கிறது.
  முகப்பு இற்றை அருமை.
  கவிதை இந்தநிலமை யாருக்கும் வரக்கூடாது இறைவா !என இறைவனிடம் கேட்க சொல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 28. வணக்கம்
  ஐயா.

  பதிவைபடிக்கும் போது.. தன்மானம் மிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புரட்சி பிறக்கும் என்பதில் ஐயமில்லை... முகப்புத்தக பதிவும்.. கவிதையும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
  த.ம 8வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 29. முதல் செய்தியும் இறுதிச் செய்தியும் மனதை அசைத்தாலும் முகப்புத்தக இற்றையின் குழந்தை அதைச் சரி செய்து விட்டது.... எந்தன் முகப்புத்தக பகிர்வில் இரண்டு செய்திகள் இடமும் பிடித்து விட்டன...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....