தலைநகரிலிருந்து.....
பகுதி-26
இந்த
ஞாயிறன்று தலைநகரை வாட்டிக் கொண்டிருந்த கடும் குளிர் கொஞ்சம் கருணை காட்டியது.
சூரியன் கொஞ்சம் கண் திறக்கவே தில்லி வாழ் மக்களில் பலர் புகுந்து கொண்டிருந்த
ரஜாயிலிருந்து வெளியே வந்து கொஞ்சம் சூரிய ஒளி உடம்பில் பட தில்லி நகரத்தின்
சாலைகளுக்கு வந்தனர். வெள்ளிக்கிழமை மாலை
அலுவலகத்திலிருந்து வீடு வந்த பின் வெளியே இறங்காத நானும் ஞாயிறன்று மதியம் கையில்
காமெராவுடன் வெளியே வந்தேன்.
தில்லியின்
ராஜபாட்டையின் இரு புறங்களிலும், குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும்
விஜய் சௌக் பகுதியில் இந்த மாதங்களில் நிறைய பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகளை
வைத்திருப்பார்கள். அவற்றில் பல
வண்ணங்களில் பூக்கள் இருக்க, அவற்றை புகைப்படம் எடுக்கும் நோக்கத்துடன்
சென்றேன். என்னை ஏமாற்றாது, நிறைய வண்ணங்களில்
பூக்கள் இருக்க, அவற்றை என் காமெராவிற்குள் சிறைபிடித்தேன்.
ஞாயிறன்று
வெளியிட்ட ‘ஜனவரி மலர்களே ஜனவரி மலர்களே’ பதிவில் வெளியிட்ட படங்கள் இங்கே எடுத்தவை
தான். பார்க்காவிடில் பார்த்து விடுங்களேன்!
அங்கிருந்து
அப்படியே தீன் மூர்த்தி பவன் எனப்படும் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம் சென்றேன்.
காரணம் அங்கே நிறைய ரோஜாக்கள் வைத்திருப்பார்கள். அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கே
இருந்த உணவகத்தில் ”ராஜ்மா
சாவல்”
சாப்பிட்டு பார்த்தேன். முப்பது ரூபாய்க்கு பரவாயில்லை ரகம். அங்கிருந்து வீடு
திரும்பலாமா இல்லை வேறு என்ன செய்யலாம் என யோசித்து, பத்மநாபன் அண்ணாச்சியின்
இல்லத்திற்குச் சென்றேன்.
அவர்
வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் “நீங்க Deer Park
போயிருக்கீங்களா? நான் போனதில்லை.” என்று கேட்க, நானும் செல்லாத காரணத்தால் இரண்டு பேரும்
அதை நோக்கி பயணித்தோம். பேருந்தில் செல்லும்போது IIT Gate அருகில் இறங்கி
பூங்கா நோக்கி நடந்தால் நாங்கள் இறங்கிய இடத்திலிருந்தது “ROSE GARDEN”! மானோ பூவோ எதை பார்த்தால் என்ன, நேரம் போனால் சரி என
உள்ளே நுழைந்தோம்.
பெயர் தான் ROSE GARDEN, ஆனால் அதுவோ
அடர்ந்த காடு போல இருந்தது அந்த இடம். காட்டுக்கு நடுவே செல்லும் ஒற்றையடி பாதை
போல, இங்கே மூன்று நான்கு அடி பாதை – மனிதர்கள் நடக்கவும், jogging செய்யவும் அமைத்திருந்தார்கள். அதன் வழியே செல்லும்போது இரு புறத்திலும்
மரங்கள், மரங்கள் பலவிதமான மரங்கள். நிறைய பெண் மயில்களையும் ஒரு சில ஆண்
மயில்களையும் பார்க்க முடிந்தது. ஒரு ஆண் மயில் அழகாய் நின்று போஸ் கொடுக்க, சரி அதை
புகைப்படம் எடுக்கலாம் என காமெராவினை வெளியே எடுப்பதற்குள் அங்கே பக்கத்தில்
இருந்த மரத்தின் அருகிலிருந்து சத்தம் வர காட்டுக்குள் ஓடி விட்டது!
“என்ன சத்தம் வந்தது?” எனக் கேட்பவர்களுக்கு – முத்தத்தின் சத்தம் தான்! மரத்தின் கீழே ஒரு ஜோடி –
சுற்றுச்சூழலில் என்ன நடக்கிறது, யார் வருகிறார்கள் என்பது பற்றி கவலை கொள்ளாது
முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சரி அவர்களது தேடல்களை நடத்தட்டும் என
நகர்ந்தால் பூங்காவில் இருக்கும் பட்சிகளின் ஒலிகளை விட இங்கே மரத்துக்கு மரம்
இருக்கும் ஜோடிகளின் சில்மிஷ சத்தமும் முத்த சத்தமும் தான் அதிகம் கேட்கிறது.
குளிர்
காலம் என்பதால் இங்கே மாலை வேளையிலேயே இருட்டி விடுகிறது. வீட்டுக்குப் போகத் தோன்றாமல் இங்கே ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டும் முத்தப் பரிமாற்றம் செய்து கொண்டும் பல்வேறு விதமான
பரவச நிலையில் இருந்த ஜோடிகள் எண்ணிலடங்கா. ரோஜாவையும் காணவில்லை, மானையும்
காணவில்லை, சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணத்தில் இந்த பூங்காவினை
விட்டு வேறு வழியில் வெளியே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் – ஜோடிகள்
தான் இவை. அப்படி வரும்போது சில ஆண்கள் குடித்து விட்டு உள்ளே வந்தனர்.
இது
போல குடித்துவிட்டு
வரும் ஆண்கள், நன்கு இருட்டியபிறகும், பூங்காவின் உள்ளே
இருக்கும் பரவச நிலையில் இருக்கும் ஜோடிகளை வம்புக்கிழுத்து சில பல தகறாறுகள்
அவ்வப்போது நடப்பதுண்டு என்பதை பூங்காவின் அருகில் வசிக்கும் அலுவலக நண்பர் ஒருவர்
அடுத்த நாள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
சமீபத்தில் தனது காதலனுடன் இப்படி வந்த ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட
விஷயமும் நாளிதழில் வந்ததே பார்க்கவில்லையா என்கிறார்! என்னவோ போங்கப்பா, என்று
வெளியே வந்தால், எதிரே “DEER PARK” – நான் இங்கே
இருக்கேன், நீங்க வேற என்னத்தையோ பார்த்துட்டு வரீங்களே என எங்களைப் பார்த்து பல்லை இளித்தது.
சரி மான்களையும் பார்த்து விடலாம் என உள்ளே நுழைந்தால்
நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் – புள்ளி மான்கள் அங்கே இருக்க, காமிராவினை
தைரியமாக வெளியே எடுத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ஒரு ஆண் மானும் பெண்
மானும் மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டிருக்க, அதைப் புகைப்படமாக்க நினைத்தபோது
எங்களைப் பார்த்து விட்ட அந்த மான்கள் வெட்கப்பட்டுக் கொண்டு தனித்தனியே வேறு
பாதைகளில் சென்றன! மான் கூட்டங்களை புகைப்படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தபோது
சிலர் அவற்றிற்கு உணவு கொடுத்தார்கள்!
பட்டாணியின் தோல், பழங்களின் தோல்கள் என சிலர்
கம்பித்தடுப்புக்கு அப்பால் போட, ஒரு பெரியவர் பாலிதீன் பையை சேர்த்து உள்ளே
போட்டார். உணவினை இப்படி பாலீதின் பையில்
போட்டால் அந்த மான் எப்படி சாப்பிடும்? அதையும் சேர்த்து சாப்பிட்டு உடல்நலம்
கெட்டுப் போகுமே என்ற எண்ணம் கூட இல்லை அந்த பெரியவருக்கு!
கஷ்டப்பட்டு ப்ளாஸ்டிக் தின்கின்ற மான்....
இப்படியாக மான்களைப் பார்க்கச் சென்று எதை எதையோ
பார்த்த அனுபவங்களும் கிடைத்தன அந்த ஞாயிறில். தில்லியில் இது போன்ற பல
பூங்காக்களில், நகரின் மையப்பகுதியில் இருக்கும் கன்னாட் ப்ளேஸில் இருக்கும்
செண்ட்ரல் பார்க் உட்பட, நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது இந்தியா தானா,
இல்லை வேறு ஏதோ வெளிநாடா என்று தோன்றுகிறது. பொது இடத்தில் முத்தம் கொடுக்கும்
அளவிற்கு இந்தியா முன்னேறிவிட்டதா என்ற எண்ணமும் தோன்றியது.
இதன் தொடர்புடைய இன்னுமொரு பதிவு இரண்டொரு நாட்களில்
வெளியாகும். அதுவும் நான் இதுவரை, இந்த இருபத்தி மூன்று வருடங்களில் பார்த்திராத
தில்லி பற்றிய பகிர்வு தான். தில்லி நகர்
பற்றிய கண்ணோட்டத்தினை மாற்றிக் கொள்ள வைத்துவிட்ட விஷயம் பற்றிய பதிவு அது.
விரைவில் வெளியிடுகிறேன்!
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
எல்லா மலர்களும் அழகே. குறிப்பாகக் குவிந்த ரோஜா மிக அழகு.
பதிலளிநீக்குபரவச ஜோடிகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பவைகளை நான் நம்ப மாட்டேன். அனாவசியமாகப் பொய் சொல்கிறீர்கள். பின்னே... ஆதாரத்துக்கு ஒரு படம் கூட இல்லையே...!
வெங்கட் சார் வெட்கப்பட்டதால் அதை படம் எடுக்கவில்லை.. அடுத்த தடவை போகும் போது வெட்கப்படமா நிறைய சுட்டு வருவார் என எதிர்பார்க்கலாம்
நீக்குநண்பர் ஸ்ரீராம் கேட்ட அதே கேள்வியை நானும் கேட்கிறேன். இத்தனை மா படங்களை எடுத்தவர் ஒரு மு படம் கூட எடுக்காதது ஏன்? ஏன்? ஏன்? எடுக்க மனமில்லையா அல்லது கொடுக்க மனமில்லையா?
நீக்குஉங்க விருப்பத்தினை நிறைவேற்ற இன்னுமொரு முறை அங்கே சென்றால் தான் உண்டு ஸ்ரீராம். நீங்க ஒண்ணு பண்ணுங்க! மதுரைத்தமிழன், அப்பாதுரை எல்லோரையும் அழைச்சுட்டு ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்துடுங்க! ஃபோட்டோ எடுத்து பார்க்கறதை விட நேர்ல பாக்கறது சுலபம்! :)))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!
அடுத்த முறை அந்த திசைக்கே போகக் கூடாது என உத்தரவு! எனக்கும் போக விருப்பமில்லை. அதுனால, ஸ்ரீராம் சாருக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.
மாமு! இந்த மு படம் எடுக்கலை! மா படம் மட்டும் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
அழகான பகிர்வு நண்ரே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.
நீக்குபொருத்தமான தலைப்புதான் ஐயா.
பதிலளிநீக்குநாகரிகம் என்ற பெயரில் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.
நீக்குதங்களது முதல் வருகை கல்நெஞ்சம் [ஏங்க இந்த புனைப்பெயர்?].
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
த.ம.3
பதிலளிநீக்குதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குமான்கள் கொள்ளை அழகு... ஆனால் நம் மக்கள் மீது கோபம் வருகிறது....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குஅழகிய மலர்கள்... பெரியவர் செய்தது மிகவும் தவறு...
பதிலளிநீக்குதவறு தான். கேட்டதற்கு பதிலும் கிடைத்தது - ”எல்லாம் எனக்குத் தெரியும் போ!”
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
மனவருத்தமளிக்கும் செய்திகள். இன்றைய இளைஞர்கள் போக்கு ஒருபுறம், இயற்கையை அழிக்கும் முயற்சிகள் மறுபுறம். விலங்குகள் பாலிதீன் பைகளைத் தின்பதால் மூச்சடைத்து இறந்துபோகும் என்பது கூடவா அறியாதவர்கள் நம் மக்கள்! என்றுதான் உணர்ந்து திருந்துவார்களோ? அழகழகான புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நீக்குமிகவும் வேதனையாக இருக்கின்றது. வெட்கங்கெட்ட மனிதர்களை விட விவரமறியா மான்களை நினைத்து மனம் வருந்துகின்றது. படங்களின் அழகில் மனம் லயிக்க வில்லை.
பதிலளிநீக்குபாவம் ... பாலிதீன் பையைத் தின்ற மானைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குமலர்களும் மான்களும் அழகு..
பதிலளிநீக்குROSE GARDEN, சென்றபோது எங்கே ரோஜாப்பூக்கள் என்று தேடி ஏமாந்தோம் ..
பெயர் மட்டும் தான் ROSE GARDEN, என்றார்கள்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குமலர்களையும் ,மிருகங்களையும் ரசிக்க முடிந்த அளவிற்கு ,மனிதர்களின் செயல்களை ரசிக்க முடியவில்லை !
பதிலளிநீக்குத ம 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅருமையான படங்களுடன் நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.
நீக்குகூறுகெட்ட கிழட்டுப்பயலுக்கு மூக்குல ஒரு குத்து விட்டுருக்கலாம் நீங்க ? இல்லைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருவேன்னு சொல்லியாவது மிரட்டி இருக்கலாம்.
பதிலளிநீக்குபூக்கள்...மான்கள்...அழகோ அழகு ஆனால் அந்த பிளாஸ்டிக் திங்கும் மானை பார்க்கும் போதுதான் நெஞ்சம் பகீர் என்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குஎங்க ஊருல மான்களை நாங்க பார்ப்பது அநேகமாக இரவு நேரங்களில்தான் பல சமயங்களில் ரோட்டில் அடிபட்டு செத்துகிடப்பதை அடிக்கடி பார்க்கலாம் மானை அடிக்கும் கார்களுக்கு டேமேஜ் மிக அதிகம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன். இங்கே காட்டு வழிப் பாதைகளில் நிறைய இப்படி நடக்கிறது. ஹரியானா/உத்திரப் பிரதேசம் பகுதிகளில் நீல்காய் எனப்படும் மானினம், வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கிறது அடிக்கடி நடக்கிறது.
நீக்குசபாஷ்! சரியான தலைப்பூ!
பதிலளிநீக்குமான்கள் நேரில் பார்த்ததை விட புகைப்படங்களில் இன்னும் அழகாக திரிகின்றன.
தில்லிப் பூங்காக்களில் காதலர்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள் என்று கேட்டதுண்டு. ஆனால் இவ்வளவு அநாகரிகக் காதலர்களை(??) எதிர்பார்க்கவில்லை. காதலர்களைக் கண்டோம். காதலைக் காணவில்லை. தில்லியின் நடுவில் ஒரு அழகான காடு, நாய்களுக்காக!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்கு//காதலர்களைக் கண்டோம்..... காதலைக் காணவில்லை!// அங்கே காதலை விட காமமே அதிகமிருந்தது!
படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த இரண்டாவது படம் மிகவும் அழகு.
பதிலளிநீக்கு"//இது போல குடித்துவிட்டு வரும் ஆண்கள், நன்கு இருட்டியபிறகும், பூங்காவின் உள்ளே இருக்கும் பரவச நிலையில் இருக்கும் ஜோடிகளை வம்புக்கிழுத்து சில பல தகறாறுகள் அவ்வப்போது நடப்பதுண்டு//" - இப்படி நடக்கும் என்று தெரிந்தும் வருகின்ற ஜோடிகளை என்ன சொல்வது !!!!!.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குஅது பற்றிய கவலைப் படுவதாக தெரியவில்லை அந்த ஜோடிகள்.
பதிவுக்கேத்த தலைப்பு. நம்ம கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீறி இப்படி அநாகரிகமா நடந்துக்கிட்டா எப்படி!?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு
பதிலளிநீக்கு//நகரின் மையப்பகுதியில் இருக்கும் கன்னாட் ப்ளேஸில் இருக்கும் செண்ட்ரல் பார்க் உட்பட, நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது இந்தியா தானா, இல்லை வேறு ஏதோ வெளிநாடா என்று தோன்றுகிறது.//
1968 இல் நான் புது டில்லியில் இருந்தபோதே இது போன்ற நிகழ்வுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அரங்கேறியதை கண்டு என் நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபோது ‘Scandinavian நாடுகள் என சொல்லப்படுகின்ற டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் தான் இது போல் பொது இடங்கள் என்றும் பாராமல் ஜோடிகள் தங்கள் ‘அன்பை’ பரிமாறிக்கொள்வார்கள்.பொறுத்திருங்கள். இன்னும் சில ஆண்டுகளில் நாம் அவர்களை மிஞ்சிவிடுவோம்.’என்றார். உங்கள் பதிவைப்பார்த்ததும் அவர் சொன்னது சரியாகிவிட்டது என எண்ணிக்கொண்டேன்.
மனிதர்கள் மிருகங்களாக மாறும்போது, அவைகள் (ஆண் மானும் பெண் மானும்) வெட்கப்பட்டுக் கொண்டு தனித்தனியே வேறு பாதைகளில் சென்றதில் ஆச்சரியமில்லை. நல்ல பதிவு வாழ்த்துக்கள்!
தில்லியில் இதற்கென்றே சில பூங்காக்களை தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள்... வந்த புதிதில், Buddha Jeyanthi Park பக்கம் போயிடாதே என நண்பர்கள் சொல்வார்கள். அங்கே அனைத்தும் இப்படித்தான் நடக்கும் எனச் சொல்வார்கள்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
படங்கள் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குமலர்களும் அழகு, மான்களும் அழகு..
பதிலளிநீக்குமயில் தான் ஏமாற்றி விட்டது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குமலர்கள் அனைத்தும் அழகு. மான்களும் அப்படியே. மானிடர்கள் தான் இடர் விளைக்கிறார்கள் மானிடம்...........
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குPoruththamana thalaippu. Azhagana pookkalin padangal. Innuma Delhi il pengal ippadi nadandhu kolgirargal. Pengalukku konjam kooda bayame illai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குநல்ல படங்களுடன் அழகிய பகிர்வு !நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
நீக்குபடங்களுடன் பகிர்வு அற்புதம்
பதிலளிநீக்குமனிதர்கள் குறித்த கவலையை
குறிப்பாக இளம் காதலர்கள் குறித்த கவலை
இப்பதிவைப் படிக்க கூடுதலாகிப் போகிறது
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குவண்ணமிகு மலர்கள் பல கண்டேன், புள்ளிமான்களின் எழில்மிகு தோற்றத்தினைக் கண்டேன் . மனத்தை பேரானந்த பாதையில் அழைத்துச் செல்ல, திரு வெங்கட் அவர்களை ஊக்குவித்த "வித்தகனின்" பெருங்கருணையை எண்ணி வியக்கும் காலையில், மேனாட்டுப் பழக்கங்களை தமதாக்கி நமது கலாச்சாரத்தினை சீரழிக்க முயலும் மக்கள் என்னும் போர்வையில் உலவும் "மாக்களின்" செயல்கண்டு உள்ளம் கொதித்தேன். மாற்றம் வரும் நிச்சியம் என நம்புவோம் . நன்றி திரு வெங்கட் அவர்களே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் சித்தப்பா.
நீக்குtha.ma 11
பதிலளிநீக்குதமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குகண் கவரும் படங்கள்! கருத்தை நெருடும் செய்திகள்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குப்ளாஸ்டிக் சாப்பிடும் பரிதாபமான மானைத்தவிர மற்ற மான்களும், பூக்களும் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குதமிழ்மணம் 13 ஆவது ஓட்டு.
பதிலளிநீக்குஇந்த ஓட்டுகள் பூக்களுக்கா, மான்களுக்கா இல்லை முத்த சத்தத்திற்கா என்று தெரியவில்லை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி.
நீக்குமலர்களும் ,மான்களும் அழகு அதைக்கெடுக்கும் மனிதர்களின் நிலையை என்ன சொல்ல!..ம்ம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
நீக்குஅனுபவம் புதுமை அவ்விடம் கண்டேன் நீங்கள் மு. கொடுத்துப் பார்த்த அனைவரும் கூட்டுக்குடும்ப வாசிகளோ. பூக்களின் படங்கள் அழகு. உங்கள் கைவண்ணத்தில் அதிகமாகத் தெரிகிறதோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குபடங்களும் பகிர்வும் சிறப்பு. மூன்றாவது படம் மிக அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மிகவும் அருமையாக எழுதியுள்ளிர்கள்.. படங்கள் மிக அழகு.. வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபப்ளிக் இடங்களில் முத்தம் - பாவம்... மும்பை போல, வீட்டில் இடமும் ப்ரைவசியும் கிடையாதாயிருக்கும்..... அல்லது புது வாழ்க்கையை எண்ணும் காதலர்களாக இருக்கும்.
பதிலளிநீக்குமான்கள் படங்கள் அழகு. பாலியஸ்டருடன் உணவைப் போட்டவர்-இவரை மாதிரி ஆட்களெல்லாம் பார்க்குகளுக்கு வராமலிருந்தாலே நல்லது