எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 22, 2014

ஓவியக் கவிதை – 16 – திரு ரூபன்

 
டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினாறாம் கவிதை.ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.


இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு ரூபன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:ரூபனின் எழுத்துப்படைப்புகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் திரு ரூபன், தீபாவளி சமயத்தில் நடத்திய கவிதைப் போட்டியும் தற்போது நடத்தும் கட்டுரைப் போட்டியும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.  கட்டுரைப் போட்டி பற்றிய சமீபத்திய அவரது பகிர்வு இங்கே. திண்டுக்கல் தனபாலன் போலவே இவரும் நிறைய வலைப்பூக்களைப் படித்து கருத்திடுபவர். நான் படிக்கும் பல தளங்களில் இவர்கள் இருவரது கருத்துகளும் தவறாது இடம் பெறுவது பார்த்திருக்கிறேன். கட்டுரைப் போட்டிக்கு இது வரை கட்டுரை அனுப்பாதவர்கள் அனுப்பலாமே!

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு ரூபன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....மலையோரம் தனியாக

இசைபாடும் கலைமானே

புன்னைமரத்தின் அடியினிலே

என் கூந்தலில் இசைபாடும்-மன்னவனே

உன் சிலம்பணிந்த கைகள்

என் மெய்யழகை  தொடுகையிலே.

என் கடைக்கண் பார்வையை-உன் மீது செலுத்துகிறேன்

நான் வெட்கி நாணத்தில் தலைகுனிந்து

தள்ளிதள்ளிப் போகிறேனே.நெற்றியில் திலகம் சூடியவள்

தலையினிலே மல்லிகைப்பூ வைத்தவளே

மல்லிகை பூவில் இருந்து

ஊற்றெடுத்து பாயும்

தேனமுதத்தை வண்டுகள் திருடுமுன்

நானே திருடவந்த உன் மன்னவன் அல்லவா.இல்லை இல்லை மன்னவனே.

நான் வண்டுகள் மதுவுண்டு கழிக்க முன்

என் கூந்தலில் நானே மல்லிகைப்பூ-சூடினேன்

பிறர் பாதம் பட்ட மண்ணில் என்

கூந்தலில் சூடும் மல்லிகைப்பூ

விழுமென்று நினைத்து தாங்கி பிடிக்கிறாய் மன்னவனே

உன்பாசத்தை நான் அறிவேன் இப்போதே - என் மன்னவனேஎன்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினாறாம் கவிதை இது. கவிதை படைத்த திரு ரூபன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!

டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

முந்தைய பகுதிகள்:36 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  த.ம 2வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 3. ரூபன் - தங்களது எழுத்தாக்கம் அருமை. அழகான கவிதை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. மன்னவனே -
  உன் சிலம்பணிந்த கைகள்!..
  சிலம்பு!?..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்! :) ரூபன் சொல்வார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 5. வணக்கம்
  ஐயா.
  பதிவை பார்த்த போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...என்னுடைய ஓவியக்கவிதையை வெளியிட்டமைக்கு தைப்பொங்கல் கட்டுரைப்போட்டி சம்மந்தமான விளம்பரம் தங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா... தங்களின் இந்த சேவை எழுத்துலகில் மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
  போட்டிக்கான கட்டுரைகள் வந்து குவிந்து கொண்டு இருக்கிறது....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. உங்கள் தளத்திலும் அறிவிப்பு செய்தமைக்கு மிக்க மிக்க நன்றி... தம்பியின் கவிதை அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

  ReplyDelete
  Replies
  1. விரைவில் பார்க்கிறேன் தனபாலன். தகவலுக்கு நன்றி.

   Delete
 8. //உன் சிலம்பணிந்த கைகள்!..
  சிலம்பு!?..// - துரை செல்வராஜூ

  வண்டினமே மங்கையின் மல்லிகையில் மயங்கும் போது ஒரு கவிஞன் மயங்காதிருப்பானா!
  இது மயக்கத்தில் வந்த மருட்சி. அந்த மயக்கத்தில் நமக்குக் கிடைத்தது நற்கவிதை. வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. //வண்டினமே மங்கையின் மல்லிகையில் மயங்கும் போது -
   ஒரு கவிஞன் மயங்காதிருப்பானா!
   இது மயக்கத்தில் வந்த மருட்சி. அந்த மயக்கத்தில்
   நமக்குக் கிடைத்தது நற்கவிதை. வாழ்க.//
   - @Easwaran

   காலையில் இருந்து நானும் யோசித்ததில் இந்த விடைதான் முன் நின்றது!..
   அதையே தாங்களும் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.
   நற்கவிதை வாழ்க.. நற்கவிஞன் வாழ்க!..

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   Delete
  3. உங்களுக்கு பத்மநாபன் அண்ணாச்சி பதில் சொல்லி இருக்காரே துரை செல்வராஜூ....

   கவிஞன் மயங்காதிருப்பானா.... - அசத்தறீங்க பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 9. அழகான கவிதை சகோ. வாழ்த்துக்கள். பகிா்ந்த நண்பருக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 10. படித்தேன். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. தலைவிக்கு .மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாட்டு பிடிக்கும் போலிருக்கிறதே !
  ரூபனுக்கு பாராட்டுக்கள் !
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. வித்தியாசமான அருமையான கற்பனை
  மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 16. கவிதை அருமை...
  வாழ்த்துக்கள் இருவருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 17. அருமையான தேன் கவிதை.
  ரூபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....