எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 20, 2014

ஓவியக் கவிதை – 15 – திரு ரவிஜி
டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினைந்தாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு ரவிஜி அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

மாயவரத்தான் எம்.ஜி.ஆர். எனும் வலைப்பூவில் 2012-ஆம் வருடம் முதல் எழுதி வரும் திரு ரவிஜி தன்னை ‘கவிதைக் கிறுக்கன்என்று தலைப்பில் குறிப்பிட்டு உள்ளார். இது வரை அவரது கவிதைகளை/படைப்புகளை நான் படித்தது இல்லை.  அவரது கவிதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தபின் அவரது பதிவுகளில் சிலவற்றை படித்தேன். அப்படி படித்ததில் பிடித்த கவிதை ஒன்று எனது அடுத்த ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிடுகிறேன். அவரது பதிவுகளை நீங்களும் படிக்கலாமே!

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு ரவிஜி அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

இயற்கை மணம்

பூக்கள் மலர்ந்து குலுங்கும் குளிர் நந்தவனம்!
மண(ய)க்கும் பன்னிறப் பூக்களின் -  மென்
குவியலென இவனின் பொன்னிறக் காதலி.
கொஞ்சிடும் வேளையில் குறுக்கே வந்துற்று
கூந்தல் நுகரச் சிறகடிக்கும் ராவணவண்டுகள்.
வண்டுகள் வந்தமர்ந்தால் எடை தாங்காது
வாடுமே நூலிடை என விரட்ட எத்தனிக்கும்
வாளேந்திக் காய்த்த வீரனின் காதல் கரம்.
விரட்ட நீண்ட கரம் விரலால் தீண்டுமென்று
எண்(நா)ணம் மேலிட்டு சிவந்து விலகும் காதலி…!

-          ரவிஜி
(சங்க காலத்தில்தான் இதெல்லாம் சாத்தியம் போலும்ம்!)

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினைந்தாம் கவிதை இது. கவிதை படைத்த திரு ரவிஜி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:

30 comments:

 1. ரசிக்க வைத்தது கவிதை! நல்வாழ்த்துகள் ரவிஜிக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  சிறப்பான கவிபடைத் ரவிஜி அவர்களுக்கு பாரட்டுக்கள்...ஐயா. தங்களின் இந்த முயற்சி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. #(சங்க காலத்தில்தான் இதெல்லாம் சாத்தியம் போலும்…ம்!#
  ரவி ஜியின் கவிதை அருமை ,அதற்கு நீங்கள் சொன்ன கமெண்டும் அருமை !
  த.ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
  2. அதுவும் ரவிஜியின் அஙகலாய்ப்புதான் பகவான்ஜீ...பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா...!

   Delete
  3. தங்கள் வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி ரவிஜி ரவி.

   Delete
 4. சங்க காலத்திற்கு அழைத்துச் சென்ற தங்க கவிதைக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி

   Delete
 5. அருமை.. வாழ்த்துகள் ரவிஜி!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 6. //வண்டுகள் வந்தமர்ந்தால் எடை தாங்காது
  வாடுமே நூலிடை....//

  நல்ல கற்பனை! வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 7. மிகவும் சிறப்பாக கவிதை... திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும் பகிர்வு என் நன்றி கலந்த
  வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 10. அன்பின் திரு. வெங்கட்.. வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   Delete
 12. மாயவரத்தான் கவிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 13. அருமையான சங்கக்காலத்து கவிதை. திரு.ரவிஜிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 14. நன்று! நன்றி! இருவருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....