டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில்
ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி
வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த
வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி
இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஏழாம் கவிதை.
ஓவியம் எழுத அழைப்பு விடுத்து,
வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.
இந்த ஓவியத்திற்கான கவிதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய காயத்ரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு காயத்ரி அவர்கள் எழுதிய
கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....
என்னவனே
என்னை மயக்கிய மன்னவனே
கண்ணாளனே
என்னை களவாடிய கள்வனே
உன்னோடு
நான் கொண்ட காதல் பசலையில்
என்
மேனியும் குருதியாய் திகைக்கிறதே
மோகத்தீயில்
நான் எரிய மேகமாய் உன் காதல் மழை பொழிய
யாருமில்லா
நந்தவனத்தில் மன்னவனே
நீ சூடிய மலரினில்
உன் வாசம் வீச
வெட்கத்தில்
உன் மார்போடு என் முகம் புதைக்க
வேனீர்காலமும், பனிக்காலமாய்
குளிர்கிறதே
என்னவரை
சீண்டிவிடும் சில்லென தென்றல் காற்று,
என்னை
கட்டி அணைத்து.., விரலோடு
விரல் கோர்த்து,
இதழோடு
இதழ் சேர்த்து கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு
நாங்கள் செல்ல, ஒற்றை
நிலவு மட்டும்
எங்களை
ஏக்கத்தோடு பார்த்து கொண்டு இருக்க,
விண்மின்கள்
அர்ச்சனை தூவ, நிலவுக்கு
ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம்
மீண்டும் காதல் சொர்கத்திற்குச் செல்ல.
-
காயத்ரி
என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா? இந்த ஓவியத்திற்கான ஏழாம் கவிதை இது. கவிதை
படைத்த காயத்ரி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!
டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள்
பதிமூன்று மட்டுமே. அவை வந்த
வரிசையிலேயே எல்லா கவிதைகளும் வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை
எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும்
நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
முந்தைய பகுதிகள்:
ஓவியக் கவிதை - 1 - திரு இ.சே. இராமன்
ஓவியக் கவிதை - 2 - திரு காரஞ்சன் [சேஷ்]
ஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்
வாழ்த்துக்கள் கவி காயத்ரி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குகாதல் ரசமும் கவிரசமும் சமரசமாய்!
பதிலளிநீக்குகாதல் வாழ்க. நற்கவிதந்த கவி வாழ்க!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குகாயத்திரிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநான் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிந்து விட்டது என்று எண்ணியிருந்தேன். ஜனவரி 31 வரைக்குமா? சரி, பார்க்கலாம். முயற்சி செய்கிறேன்.
டிசம்பர் 31-ஆம் தேதி வரை தான் கேட்டிருந்தேன். நீங்கள் அனுப்ப எண்ணினால் இந்த மாதம் 10-ஆம் தேதிக்குள் அனுப்புங்களேன். இன்னும் சிலர் கேட்டிருப்பதால் பத்தாம் தேதி வரை அனுப்பலாம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
சனவரி பத்து வரையா? அப்போ நானும் முயற்சிக்கிறேன்..
நீக்குஉங்கள் கவிதை கிடைத்தது ஆவி. நன்றி.
நீக்குகாயத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குரசித்தேன் காயத்திரியின் எண்ணங்களில்
பதிலளிநீக்குஎழுந்த கைவண்ணக் கவிதைதனை...
அருமை! வாழ்த்துக்கள்!
பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கும் சகோ!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஅழகிய கவிதை படைத்துள்ளவருக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇதை ஓர் பதிவாக வெளியிட்டுள்ள தங்களுக்கு என் நன்றிகள், ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குChokkan SubramanianJanuary 2, 2014 at 10:12 AM
பதிலளிநீக்குகாயத்திரிக்கு வாழ்த்துக்கள்.
நான் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிந்து விட்டது என்று எண்ணியிருந்தேன். ஜனவரி 31 வரைக்குமா? சரி, பார்க்கலாம். முயற்சி செய்கிறேன்.
Chokkan SubramanianJanuary vazthikku mikka nanri anna
'
avar pizaiyaga janavery enru kuripittularnu neniakuren pa ithink decemeber 31 st varai vantha kavithai 13 nu solla vanthur iuparunu nenaikuren .....
தவறினை சுட்டியமைக்கு நன்றி காயத்ரி.
நீக்குvekat sir en pathiva thagalin pakatil veli itatharku mikka nanri
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.
நீக்குஅடடா! அலுவலகம், வீடு என்று மிகவும் பிசியாக இருந்ததால் பார்க்கவே இல்லை. இப்பொழுது எழுதி அனுப்பலாமா
பதிலளிநீக்குஉங்களுக்காகவும், இன்னும் கேட்ட சிலருக்காகவும் ஜனவரி - 10 வரை வருகின்ற கவிதைகளை இங்கே வெளியிடுகிறேன்...... விரைவில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி!
அன்புள்ள வெங்கட்....
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... நலமா?
கவிதை படம் இப்பொழுதுதான் பார்த்தேன்... தேதி முடிந்து விட்டது..
உங்களுக்காகவும், இன்னும் கேட்ட சிலருக்காகவும் ஜனவரி - 10 வரை வருகின்ற கவிதைகளை இங்கே வெளியிடுகிறேன்...... விரைவில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.....
கவிதை அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குகாயத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
கவிதை சிறப்பாக உள்ளது.. காயத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.
நீக்குஇதுவரை வந்த கவிதைகள் ஆணின் பார்வையின் என்று நினைவு. இதுதான் பெண் சொல்வதாய் வரும் கவிதை இல்லை? நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகவிதை மிக அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் காயத்திரி அவர்களுக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகாயத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குத.ம.7
பதிலளிநீக்குதமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குகாயத்ரி உங்கள் கவிதை சிறப்பாய் உள்ளது வாழ்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரு. சந்துரு.
நீக்குமிகவம் ரசித்தேன் காயத்ரியின் கவிதையை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்......
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குகவிதையை ரசித்தேன், வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கும்மாச்சி.
நீக்குஇரசித்தேன்! நன்றி நண்பரே! காயத்ரி அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குvazthukkal kooriya anivaikkum mekka nanri nanparkaley
பதிலளிநீக்குஉங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.
நீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குநன்றாக இருந்தது காயத்ரி அவர்களே!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
கன்னல் கனிகளால் கட்டிய நற்கவிதை
என்னும் பொழுதே இனிப்பு
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.
நீக்கு