எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 24, 2014

ஃப்ரூட் சாலட் – 77 – கிரிக்கெட் – கேஜரிவால் - குமிழிகள்இந்த வார செய்தி:


குமாரி ஸ்னேஹ் ராணா – டேராடூனில் பிறந்தவர்.  தற்போது நடந்து வரும் ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் விளையாட முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தனது முதல் பந்தயத்திலேயே சிறப்பாக பந்து வீசினார்.  அந்த போட்டியில் அவரது பந்து வீச்சின் விவரம் – 6 ஓவர்கள் அதில் நான்கு மெயிடன்கள். மீதி இரண்டு ஓவர்களில் ஏழு ரன்கள் கொடுத்து ஒரு விக்கட் கைப்பற்றியது மட்டுமல்லாது ஒரு Catch-உம் பிடித்திருக்கிறார்.

தனது பிறந்த மாநிலத்தில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் முதலில் ஹரியானாவிற்கும் பிறகு பஞ்சாப் மாநிலத்திற்கும் இடம் மாறினார். தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பெண்களுக்கான Under-19 குழுவின் Captain இவர் தான்.

பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாட ஆசைப் படும் இவர் ஒரு சாதாரண குடும்பத்தினைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு விவசாயி. என்ன தான் பணக் கஷ்டம் இருந்தாலும், தனது மகளின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் அந்த தந்தையையும், சிறப்பாக விளையாடும் யுவதி ஸ்னேஹ் ராணா-வும் பாராட்டுக்குரியவர்கள். உங்கள் சார்பில் எனது பாராட்டுகள்!

இந்தியாவில் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் ஆதரவு பெண்களின் குழுவிற்கும் கிடைத்தால் இந்த பெண்களைப் போன்றவர்களும் சாதனை படைக்க காத்திருக்கிறார்கள் என்பதை கிரிக்கெட் வாரியமும் நமது அரசாங்கமும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். கூடவே மற்ற விளையாட்டுகளையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கிரிக்கெட் வாரியம் தன்னிடம் இருக்கும் அளவற்ற பணத்தை செலவு செய்தால் நல்லது.

செய்வார்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி

A BABY FISH ASKED HER MOTHER:  WHY CAN’T WE LIVE ON EARTH?

MOTHER FISH: EARTH IS NOT THE PLACE FOR FISH. IT’S MADE FOR SELFISH!

இந்த வாரத்தின் புகைப்படம்: Excuse me! இந்த குளிர் எப்ப முடியும்?

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக ஒலிப்பது - கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மெல்லிசை மன்னர் இசையமைக்க வெளி வந்த மூன்று முடிச்சு படத்திலிருந்து – வசந்த கால நதிகளிலே பாடல்....  உங்கள் ரசனைக்கு!
ராஜா காது கழுதைக் காது:

இந்த திங்கள் கிழமை அன்று தில்லியில் நடந்த விஷயங்கள் உங்களுக்கும் தெரிந்திருக்கும். மாநிலத்தின் முதல்வரே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  அந்த இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல்துறையின் ஜீப் நின்று கொண்டிருந்தது – ஓட்டுனர் மட்டுமே இருக்க வேறு யாரும் வண்டிக்குள் இல்லை. அந்த வாகனத்தினை நானும் இன்னும் சிலரும் கடக்கும்போது, ஓட்டுனர், பொதுவாக சொன்னது – “வண்டி கொஞ்சம் தகறாறு பண்ணுது, ப்ளீஸ் கொஞ்சம் தள்ளுங்களேன்!

பக்கத்தில் வந்த ஹரியானா மாநிலத்தவர் சொன்னது: கேஜரிவால் அந்தப் பக்கம் தான் உட்கார்ந்து இருக்கார்! அவர்ட்ட சொல்லு நல்ல தள்ளுவார்! 

படித்ததில் பிடித்தது!:

குமிழிகள்


கத்தும் கடலோரம்
காற்றை விரும்பி
மணல் மீது அமர்வு.

என் எதிரே-சோப்பு நீரில்
குமிழிகள் ஊதுகிறான்
விளையாட்டுச் சிறுவன்.

பல்வேறு அளவுகளாய் பல
வண்ண வண்ண குமிழிகள்
மேன் மேலும்…!

காற்றில் மிதந்து
அலைகழிந்து வெவ்வேறு
திசைகளில்

வெடித்துச் சிதறி
காற்றில் கரைகின்றன
வெவ்வேறு சமயங்களில்.

பூஜ்ய உ(க)ருப் பெற்று
பூஜ்யத்தில் உழன்றிருந்து
பூஜ்யமாகிப் போகிறோம
குமிழிகள் போல்-
மனிதர்கள் நாம்!

எண்ணம் முகத்தறைய
என்னையும் மீறி
முணுமுணுக்கிறேன்…!

காற்றில் கரையும்
குமிழிகள் செய்கிறான்
கு(சு)றும்பன்!

                ரவிஜி

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. இன்றைய ப்ரூட் சாலட் மிகவும் சுவையாக இருந்தது...

  குறுஞ்செய்தியும், இற்றையும் ரசிக்க வைத்தது...

  பாப்பா தில்லி குளிரை பிரதிபலிக்கிறான்...:))

  ராஜா காது கழுதை காது....:)) வம்பில் மாட்டாம இருந்தா சரி தான்...:)))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி என்னவளே!

   Delete
 2. வணக்கம்
  ஐயா.
  விளையாட்டு அமைச்சுக்கு நல்ல விழிப்புணர்வு அறைகூவல்.... இப்படியான செயல்களை செய்தால் நல்லது... கவிதையும் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா.த.ம2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. அனைத்தும் அருமை! இரசித்தேன் நண்பரே! பகிர்விற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 4. இன்றைய பழக்கலவை மிக நன்று. அதுவும் அந்தக் குஞ்சு மீன், தாய் மீனிடம் கேட்ட கேள்விக்கான பதில் அருமையோ அருமை. ‘மற்ற விளையாட்டுகளுக்களுக்காக கிரிக்கெட் வாரியம் தன்னிடம் இருக்கும் அளவற்ற பணத்தை செலவு செய்தால் நல்லது’ என்ற கருத்து சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்தால் நல்லது. நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை. செய்திகளில் பார்த்த குளிர் பாப்பாவின் மூலம் பிரதிபலிக்கிறது. "ராஜா........"_____ ம், அதானே, ஹரியானாகாரர் சரியாதான் சொல்லியிருக்கார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 6. ஸ்னேஹ் ராணா அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  குழந்தை படம் மனதை மிகவும் கவர்ந்தது...

  வசந்த கால நதிகளிலே பாடல் மறக்க முடியுமா...?

  ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. ///: EARTH IS NOT THE PLACE FOR FISH. IT’S MADE FOR SELFISH!//////

  ப்ருட் சாலட்டில் உள்ள இந்த ப்ருட் மிக மிக சூப்பர் டேஸ்ட் எங்க இருந்து பிடிக்கிறீங்க வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   தோழி ஒருவர் தினமும் இரண்டும் மூன்று குறுஞ்செய்தியாவது அனுப்புவார். அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பகிர்ந்து கொள்ளாததில் நிறையவே இருக்கிறது. என்றாவது தனிப்பதிவாக போட வேண்டும்! பார்க்கலாம்!

   Delete
 8. முதல்வர் போராட்டம் ஓவர்..என்ன தான் அங்க நடக்குது???

  ReplyDelete
  Replies
  1. என்ன நடக்குது என யாருக்கும் புரியவில்லை என்பது தான் உண்மை.....


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 9. இற்றையும், குறுஞ்செய்தியும் குழந்தை படமும் ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. இன்றைய ஃபரூட் சாலட் அருமை.
  பாடல் பகிர்வு அருமை.
  ஆதியின் எச்சரிக்கை நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. இற்றை மண்டையில் அடித்துச் சொல்லித் தருகிறது.

  குறுஞ்செய்தியும் டாப்...


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. இந்த வாரம் அனைத்து தகவல்களும் அருமை .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. குழந்தையின் படம் அழகோ அழகு. மிகவும் கவர்ந்தது..
  இது தான் ஃப்ரூட் சாலட் என்பதா!?.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 14. எல்லாமே டாப் நைனா. பின்னிட்ட நைனா !!!!!!!! வாழ்துக்கள் மிக பல.
  All the very best for your future blogs.

  தில்லி விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 15. சிறப்பான பதிவு கவிதையும் .காணமும் சூப்பர் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
  2. கவிதை குறித்த தங்களின் கருத்திற்க்கு நன்றி ஐயா...அன்புடன் ரவிஜி...

   Delete
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 17. குறுஞ்செய்தி அருமை! இளம் கிரிக்கெட் வீராங்கணை பற்றிய தகவல் புதிது! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 18. செல்ஃபிஷ் அருமையா இருந்தது. எல்லாமும் தான், அர்விந்த் கெஜ்ரிவால் உள்பட. :)))) குளிர் ரொம்ப ஜாஸ்தியோ இந்த வருஷம்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   குளிர் கொஞ்சம் அதிகம் தான் இந்த வருடம்! :(

   Delete
 19. வசந்த கால நதிகளிலே - எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

  ராஜா காது கழுதைக் காது - அரசாங்க வண்டி அதுவும் காவல்துறை வண்டி இப்படி இருப்பது மிகவும் கொடுமை.

  குமாரி ஸ்னேஹ் ராணாக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   புதிதாக வாங்கிய வண்டிகள் நன்றாக இருக்கின்றன. இது கொஞ்சம் பழசு!

   Delete
 20. indha vaara kuruncheidhi sirappu. vasanthakala... yenakku migavum pidiththa paadal. meeendum kettu rasiththen.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 21. இனிக்கும் கவிதை. விவரித்த மனோநிலைகளும்
  உரையாடல் பாணியும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
  2. தங்களின் கருத்துத் தெரிவிற்கு நன்றி சகோதரி...அன்புடன்...ரவிஜி...

   Delete
 22. நல்ல தொகுப்பு. பகிர்ந்த பாடல், குழந்தை புகைப்படம் ஆகியனவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....