எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 5, 2014

விஜயவல்லி சமேத சுதர்சனர்.....மஹாவிஷ்ணுவின் ஆயுதங்களில் முக்கியமான ஒன்று சக்கரம்.  அவரது வலது கையில் வைத்திருக்கும் இந்தச் சக்கரத்தினை சுதர்சன பகவான் என்று அழைக்கிறார்கள்.  சுதர்சன பகவானே ஸ்ரீமன் நாராயணின் ஒரு உருவம் தான் என்றும் சொல்வதுண்டு. சுதர்சனாஎன்ற சொல்லுக்கே “மோக்ஷத்திற்குச் செல்லும் சரியான வழியைச் சொல்பவர்என்ற அர்த்தமும் உண்டு. எல்லா முக்கியமான திவ்யதேசங்களிலும் சுதர்சன பகவானுக்கும் ஒரு இடம் உண்டு.  திருவரங்கத்தில் சக்கரத்தாழ்வார் [சுதர்சனர்] தனியாகவே சன்னதி உண்டு.

இப்படிப்பட்ட சுதர்சனருடைய பக்தியில் திளைக்க, தில்லியில் ஸ்ரீ விஜயவல்லி சுதர்சன சேவா சத்ஸங்கம் என்ற ஒரு சத்ஸங்கம் ஏற்படுத்தி, சங்க உறுப்பினர்களின் வீடுகளிலும், புண்ணிய பூமிகளிலும் சுதர்சன ஹோமம், அபிஷேகம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி, ஹரித்வார், ரிஷிகேஷ், குருக்ஷேத்திரா, அயோத்யா, நைமிசாரண்யம், பிட்டூர், கோவர்த்தன், பிருந்தாவன், மதுரா, முக்திநாத், காத்மண்டு வில் உள்ள ஜல் நாராயணன் கோவில், சுக்ரதால், புஷ்கர் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித யாத்திரையும் மேற்கொண்டு அங்கேயும் சுதர்சன ஹோமம், அபிஷேகம், கல்யாண உத்ஸவம் போன்றவற்றை நடத்துவார்கள்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியிலிருந்து மே மாதம் 1-ஆம் தேதி வரை முக்திநாத் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். விவரங்கள் அவர்களது தளத்தில் இருக்கிறது.

எனது நெருங்கிய நண்பர் இந்த ஸத்ஸங்கத்தில் உறுப்பினர் என்பதால், அவர்கள் வீட்டில் ஸத்ஸங்கத்தினர் நடத்தும் சில நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டதுண்டு.  அங்கே எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்கிறேன்.விஜயவல்லி சமேத சுதர்சனர்.

சுதர்சனர்

விஜயவல்லி தாயார்

வெண்ணைக்காப்பு சாற்றிய ஆஞ்சனேயர்.

விஜயவல்லி சமேத சுதர்சனர் – வேறு அலங்காரம்

விஜயவல்லி தாயார் – வேறு அலங்காரம்

விஜயவல்லி சமேத சுதர்சனர் – கல்யாண கோலத்தில்.....

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் நான் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் உங்களுக்கு மகிழ்ச்சி தானே..... தொடர்ந்து சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  பதிவு சிறப்பாக உள்ளது படங்களும் மிக அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்
  த.ம2வது வாக்கு.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. புகைப்படங்கள் அருமை ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 3. விஜயவல்லி சமேத சுதர்சனர் – கல்யாண கோலத்தில்.....
  அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. புகைப்படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 6. விஜயவல்லி சமேத சுதர்சனர் படங்கள் அனைத்தும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. நீண்ட நாட்களாக சுதர்சனாஷ்டகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த என் பாஸுக்கு சமீபத்தில்தான் அதை அவர் செல் மெமரியில் ஏற்றிக் கொடுத்தேன். இங்கே சுதர்சனர் படங்கள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. Thanks for sharing this post with us Venkat. Sudharsana chakkiram kodukkum protection perumaaLE vanthathu pOlaththaan.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 9. விஜயவல்லி சமேத சுதர்சனர் – கல்யாண கோலத்தில்..... அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..! கண்குளிரக்கண்டு தரிஸித்தேன். நன்றி, ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. அருமையான புகைப்படங்கள்! கண்குளிர தரிசனம்! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 11. அழகான படங்கள். விஜயவல்லி சமேத சுதர்சனர் கல்யாண கோலம் மிக அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 12. புகைப் படங்கள் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 13. ஸ்ரீ சுதர்சனர் படங்களும் பதிவும் கண்டு
  மனதில் சொல்லமுடியாத ஆனந்தம் பரவியது.
  தரிசிப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்...

  அருமையான பகிர்வு! நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  த ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 14. படங்கள் மிக அருமை. நல்ல ஆன்மிக விஷயங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 16. விஜயவல்லித் தாயார், சுதர்ச்னர் தரிசனம் கிடைக்கப் பெற்றேன், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 17. அருமையான ஆன்மிக பணி செய்யும் சத் சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள்! அழகான படங்களையும் தகவலையும் தந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 18. அழகான படங்கள்...
  தெய்வீக தரிசனம் அண்ணா...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 19. Arumayana pugaippadangal. Nalla dharisanam.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....