எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 18, 2014

ஓவியக் கவிதை – 14 – கோவை ஆவி
டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினான்காம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திரு ஆனந்தவிஜயராகவன் எனும் கோவை ஆவி அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

பயணம் எனும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வரும் திரு ஆனந்தவிஜயராகவன் அவர்கள் தனது வலைப்பூவில் திரை விமர்சனங்கள், புதிய பாடல்கள், தொடர்கதை, கவிதைகள் என பல பதிவுகள் எழுதி வருகிறார்.  விரைவில் அவரது “ஆவிப்பாபுத்தகமாக வெளிவர இருக்கிறது. அவரது புத்தக வெளியீட்டிற்கு உங்கள் அனைவரின் சார்பில் எனது வாழ்த்துகள்! கோவை ஆவி என பதிவுலகில் அறியப்படும் இவரை கடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் சந்தித்தேன்.  இதுவரை இவரது பதிவுகள் படிக்காதவர்கள் படிக்கலாமே!

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திரு ஆனந்தவிஜயராகவன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

எழில் கொஞ்சும் மாலையிலே,
தென்றல் உலவும் தோட்டத்திலே,
வெட்கம் தரித்த பெண்மயிலாய்,
என்னவளும் அமர்ந்திருக்க..

நிசப்தத்தை விரட்டிவிடும் கால்சிலம்பும்,
என் ஸ்பரிசத்தை தட்டிவிடும் கைவளையும்,
இச்சையை தூண்டிடும் கச்சைகளும்,
யவனத்தின் புகழ் பாடும் வளைவுகளும்,

நாணத்தால் சிவந்து நிற்கும் கன்னங்களும்,
தொட்டுவிட்டால் சாய்ந்துவிடும் சிலிர்ப்புடனும்,
தொட்டுவிட துடித்து நிற்கும் என் கரங்களுக்கு
கட்டளையிடும் சுரப்பிகளைப் புறக்கணித்தே 

துள்ளி வரும் அவள் பேரழகில் 
மயங்கியது நான் மட்டும் தான் என்றிருந்தேன்,
அவள் அணிந்திருந்த மல்லிகையின் 
வாசம் கண்டு கருவண்டே நீயுமா?

-          கோவை ஆவி.

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினான்காம் கவிதை இது. கவிதை படைத்த திரு ஆனந்தவிஜயராகவன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:

73 comments:

 1. கவிதை அருமை
  கோவை ஆவியின் புத்தக வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி ஸார்..

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.

   Delete
 2. Replies
  1. தமிழ் மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 3. கோவை ஆனந்த விஜயராகவனுக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார்!

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. வரிகள் அசத்தல்... இனிய நண்பர் ஆவிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி DD

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. சிவத்த பையா சிவத்த பையா மேட்டிலே சூபரா வருதே ,,,

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. தேங்க்ஸ் தாத்தா!

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.... பாடிடுங்களேன்!

   Delete
 6. ஆஹா! என் தம்பி மரபு கவிதையிலும் பிண்ணுறானே!

  ReplyDelete
  Replies
  1. கடவுளே... இதுல மரபு எங்கருந்தும்மா வந்துச்சு?

   Delete
  2. ராஜி அக்கா, வாழ்த்துக்கு நன்றி.. ஆவி வெரி ஹேப்பி!!

   Delete
  3. ஆஹா, வாத்தியார் கண்டுபிடிச்சுட்டாரே!

   Delete
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி......

   Delete
  5. //ஆஹா, வாத்தியார் கண்டுபிடிச்சுட்டாரே!//

   அதனால் தான் அவர் வாத்தியார்! :)

   Delete
 7. பெண்மயிலின் அழகை அருமையாய் கவிதை வடித்துப்
  பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. வண்டு மயங்கியது வாசம் மட்டுமே கண்டு ,ஆவி மயங்கியதோ தலை முதல் கால் வரை கண்டு !
  +6

  ReplyDelete
  Replies
  1. ஒரு நிமிஷம் +16 போட்டுட்டீங்களோ ன்னு பயந்துட்டேனாக்கும்!! :)
   நன்றி பகவான்ஜி ஜி!!

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. துள்ளி வரும் அவள் பேரழகில்
  மயங்கியது நான் மட்டும் தான் என்றிருந்தேன்,
  அவள் அணிந்திருந்த மல்லிகையின்
  வாசம் கண்டு கருவண்டே நீயுமா?//
  அருமையான் படத்திற்கு பொருத்தமான கவிதை.
  வாழ்த்துக்கள் கோவை ஆவி அவர்களுக்கு.
  பகிர்வுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி கோமதி அவர்களே..

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. டியர் ஆவி...! கவிதையின் கருப்பொருளும் வார்த்தைகளும் அருமை! படிக்கையில் நல்ல ரசனையை உண்டுபண்ணுகிறது. மகிழ்வான பாராட்டுகளும் வாழ்த்துக்களும்! (யவனம் - கிரேக்கம் ; யவ்வனம் - இளமை ... நீ சொல்ல வந்தது எதைப்பா?)

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்- வேற யாராவது கேட்டிருந்த கிரேக்க சிற்பம் ன்னு சொல்லி அந்த கைப்பிழையை சமாளிச்சிருப்பேன்.. ஆனா நான் சொல்ல வந்தது யவ்வனம் தான்.. :)

   Delete
  2. இப்படி ஒரு நல்ல போட்டி நடத்தி, தமிழ் வளர தன்னாலான சேவை செய்யும் வெங்கட் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.. மேலும் என்னையும் என் முதல் புத்தகமான ஆவிப்பாவையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு என் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்..

   Delete
  3. நல்ல கேள்வி வாத்தியாரே.... யவ்வனம் - நான் திருத்த நினைத்தேன். ஆனால் அப்படியே வெளியிட்டு விட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 11. அழகான கவிதையை வடித்துத் தந்த கோவை ஆவிக்கு வாழ்த்துக்கள். அதை வெளியிட்ட வெங்கட்ஜிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
  2. ராஜலக்ஷ்மி மேடம்- மிக்க நன்றி..

   Delete
 12. /இச்சையை தூண்டிடும் கச்சைகளும்,
  யவனத்தின் புகழ் பாடும் வளைவுகளும்/

  ஆஹா!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமார்.

   Delete
  2. அவ்வளவு வரிகள்ல பயபுள்ள எத லைக் பண்ணியிருக்கு பாருங்க.. ம்ம் ;-) நன்றி சிவா.

   Delete
 13. அன்பின் வெங்கட்.. நலமா!..

  ReplyDelete
  Replies
  1. நலமே துரை செல்வராஜு..... நீங்கள் நலமா?

   Delete
 14. வணக்கம்
  ஐயா.

  மிகச்சிறப்பான கவிதை படைத்த கோவை ஆவிக்கு எனது வாழ்த்துக்கள் அதை மிக அழகாக தொகுத்து பதிவாக ஒளிரச்செய்த தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா.
  த.ம 9வது வாக்கு

  கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete

 15. வணக்கம்!

  பாவையின் பேரழகைப் பாடிப் பறக்கின்ற
  கோவையார் வாழ்க குளிர்ந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete
  2. நன்றி கவிஞர் ஐயா..

   Delete
 16. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.

   Delete
 17. கவிதை அருமை! நான் சொல்ல நினைத்த எழுத்துப்பிழையை வாத்தியார் சொல்லிட்டார்! வாழ்த்துக்கள் ஆவி! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 18. //தொட்டுவிட துடித்து நிற்கும் என் கரங்களுக்கு// இந்த இடத்தில ஜெர்காயிட்டேன்... அடுத்த வரியில் நச்சுன்னு பதில் இருந்தது. வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாகுமரன்.

   Delete
  2. ஹஹஹா.. கலாகுமரன் சார்! ரொம்ப நன்றி..

   Delete
 19. கரு வண்டே என்று அருமையாக கவிதையை முடித்தவிதம் அழகு! வாழ்த்துக்கள் ஆவிக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
  2. நேசன், மிக்க நன்றிங்க..

   Delete
 20. கவிதை அருமை...
  கவிஞருக்கு வாழ்த்துக்கள்...
  பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 21. இரசித்தேன்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
  2. ரொம்ப நன்றிங்க..

   Delete
 22. கவிதை அருமை நண்பரே !!!

  தங்களது புத்தக வெளியீட்டிற்கு மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம் ஜி!

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

   Delete
  2. தேங்க்ஸ் தங்கச்சி..!

   Delete
 24. //துள்ளி வரும் அவள் பேரழகில்
  மயங்கியது நான் மட்டும் தான் என்றிருந்தேன்,//

  நீங்களும் கருவண்டும் மயங்கியது அவள் பேரழகு கண்டு.
  நாங்கள் மயங்கியது உம் கவிதை கண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....