எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 11, 2014

ஓவியக் கவிதை – 11 – திருமதி கமலா ஹரிஹரன்டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். டிசம்பர் 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி வரை எழுதி அனுப்பலாம் எனச் சொல்ல, இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது பதினொன்றாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.


இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய திருமதி கமலா ஹரிஹரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் இங்கே.


வணக்கம் சகோதரரே!!!

உங்கள் ஓவிய கவிதைக்கு  ஏற்ப ஏதாவது கவிதை எழுத வேண்டுமென்று தோன்றியது..

இலக்கணம் முழுமையாக கற்றதில்லை, இயன்ற வரை புது கவிதையாக எழுதியிருக்கிறேன்.. (என் எழுத்தை இத்துடன் இணைத்துள்ளேன்…)

உங்கள் பதிவுகளையும்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து ரசித்திருக்கிறேன்.. அ௫மையான பதிவுகள்...

கமலத்துவம் என்ற பெயரில் என் குழந்தைகள் உதவியுடன் என் ஆசைக்காக ஏதோ எழுதியிருக்கிறேன்  (எழுதவேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை) சூழ்நிலைகள் ஒத்து வரவில்லை..
தற்சமயம் கணிணியின் மூலம் குழந்தைகள் உதவிடன் ஆசை நிறைவேற கடவுள் அருள்புரிகிறார் அவ்வளவுதான்.

என் எழுத்தை தங்கள் பதிவில் பார்வையாக்கினால் மகிழ்ச்சியடைவேன்.

நன்றி,
கமலா.ஹ


இவர்கள் அனுப்பிய வரை இவர்களது பதிவுகளை நான் படித்ததில்லை. இவரது கவிதை வந்தபிறகு கொஞ்சம் படித்தேன். இவர் 2011-ஆம் ஆண்டே பதிவுலகில் அடி எடுத்து வைத்தாலும் இது வரை எழுதிய பதிவுகள் 26 மட்டுமே.  தொடர்ந்து பதிவுகள் எழுத எனது வாழ்த்துகள்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு திருமதி கமலா ஹரிஹரன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

காதல்பரிசு

நாடு விட்டு வெகுதூரம்
நான் விரைந்து வந்துமிங்கே,
நங்கை உந்தன் பூ முகத்தில்
நன்முறுவல் இல்லையடி….!

காலத்தில் வராதது இந்த
காரிகைக்கு கோபமன்றோ….!
காலத்தில் வராததால்,
கார்முகிலும், காரிருளும்
கடிதாக உனை சூழுமென,
கன்னி நீ அஞ்சி நின்றனையோ….!
காலத்தே நான் வந்திருந்தால்,
கருவண்டுகள் உனை சுற்றாதடி….!
பூவிருக்கும் இடமெல்லாம்,
புது தேனைதான் பருக
வண்டினங்கள் வட்டமிட்டு,
வலம் வருவது இயல்பன்றோ….!

உனை சுற்றும் ஒரு வண்டாக,
உன் காதலன் நானிருக்க, உன்
தலைசுற்றும் வண்டுகளால்
தவித்து நீ தளர்ந்தனையோ….!
படை நடத்தி எதிர் வீரர்களை
பந்தாடிய என் வீரம், இச்சிறு
படைவண்டுகளை சிறுபொழுதில்
பதம் பார்த்து விலக்குமடி….!
பதம் பார்ப்பேன் என்றவுடன்
பைங்கிளி உன் மதிமுகத்தில்
பரவுகின்ற இந்த வெட்கமதை,
பரிசாக நான் பெற்றேனடி….!
காதல் பரிசாக நான் பெற்றேனடி….!

இயன்ற வரை வெகு விரைவில்
இம்முறை நான் வந்திருந்தால்,
இன்பமுறும் இப்பரிசைபெறும்
இன்பமதை இழந்திருப்பேன்….

-          கமலா. ஹ.

என்ன நண்பர்களே, கவிதையை ரசித்தீர்களாஇந்த ஓவியத்திற்கான பதினொன்றாம் கவிதை இது. கவிதை படைத்த திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!


டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  ஒரு சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கடைசி தினத்தினை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட முடிவு செய்து ஜனவரி-10-ஆம் தேதி நள்ளிரவு வரை எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்த அத்தனை கவிதைகளும் அவை வந்த வரிசையிலேயே வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


முந்தைய பகுதிகள்:


40 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  கவிதை சிறப்பாக உள்ளதுகமலா. ஹ. அவர்களுக்கு வாழ்த்துக்கள்...த.ம 1வது வாக்கு

  பொங்கல் சிறப்பு கட்டுரைப்போட்டிக்கான காலம் நீடிப்பு.... புதிய பதிவாக என்பக்கம்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. கவிதை வெளிநாட்டில் வாழும் எங்களுக்கானது போல இருக்கிறது வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 3. திருமதி கமலா ஹரிஹரன் அவர்கள் -
  வெகு நேர்த்தியான வார்த்தைகளுடன்
  கவிதைப் பூச்சரம் தொடுத்துச் சூட்டியுள்ளார்.

  வாழ்க தமிழ்.. வளர்க அவர் தம் திறமை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. காலத்தே நான் வந்திருந்தால்,
  கருவண்டுகள் உனை சுற்றாதடி….!

  காலம் தவறி வந்ததற்கு அழகான காரணம்தான் ..!

  அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. ரசிக்க வைக்கும் வரிகள்... திரு. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. nice kavithai vazthukkal kamala

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

   Delete
 7. நன்றாக எழுதி இருக்கிறார் திருமதி கமலா ஹரிஹரன். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க நன்றி சகோதரா
  பகிர்வுக்கு .இன்னும் ஒரு புதுப் பாடல் காத்திருக்கின்றது முடிந்தால் பார்த்து
  ரசியுங்கள் .http://rupika-rupika.blogspot.com/2014/01/blog-post_9.html

  ReplyDelete
  Replies
  1. படிக்கிறேன் அம்பாளடியாள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 9. சிறப்பான கவிதை...
  கவிதாயினிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 10. ;) பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. கமலாஹரிஹரன் கவிதை அருமை. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 12. அருமையான கவிதை! நன்றி! என்னால் போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை! மற்றொருமுறை முயற்சிக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ். சில மாதங்கள் கழித்து வேறொரு படம் தரும்போது எழுதலாம்..

   Delete
 13. #படை நடத்தி எதிர் வீரர்களை
  பந்தாடிய என் வீரம், இச்சிறு
  படைவண்டுகளை சிறுபொழுதில்
  பதம் பார்த்து விலக்குமடி….!#
  இனி இங்கே நமக்கென்ன வேலை?மஞ்சத்தை தலைவன் போர்க்களம் ஆகட்டும் !
  +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி @ நியூயார்க்.

   Delete
 15. பதம் பார்ப்பேன் என்றவுடன்
  பைங்கிளி உன் மதிமுகத்தில்
  பரவுகின்ற இந்த வெட்கமதை,
  பரிசாக நான் பெற்றேனடி….!
  காதல் பரிசாக நான் பெற்றேனடி….!

  அருமையான வார்த்தைகள் கவிதாயினிடமிருந்து!!! நல்ல பகிர்வு!!!

  த.ம+

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   Delete
 16. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி துளசிதரன்.

   Delete
 17. நல்ல கவிதை அய்யா
  ஒரு படம் இத்துணை விளைவுகளை தருவது

  இணயத்தில் மட்டுமே சாத்தியம்...

  நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 18. வணக்கம்!
  நான் எழுதிய இந்த ஓவியக் கவிதைக்கு இந்த பதிவின் மூலம் வருகை தந்து, கருத்துக்களும், வாழ்த்துக்களும் சொல்லி ஊக்கபடுத்திய அன்பான அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

  நன்றி,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 19. வணக்கம்!
  என் பதிவை தங்கள் பதிவில் இட்டு கருத்துக்களும் வாழ்த்துக்களும் பெற செய்த சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..

  மிக்க நன்றி,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 20. //உனை சுற்றும் ஒரு வண்டாக,
  உன் காதலன் நானிருக்க, உன்
  தலைசுற்றும் வண்டுகளால்
  தவித்து நீ தளர்ந்தனையோ….!//

  நன்று! நன்று!

  ReplyDelete
 21. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....