புதன், 9 ஜனவரி, 2019

சிவா தாமஸ் அலி....
“சிவா, தாமஸ் பேசறேன்... அலிக்கு நீ உதவி பண்றது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல.... அவன் உன் முதுகிலேயே குத்திடுவான் பாத்துக்க...”


 
“ஹாய், வணக்கம், எப்படி இருக்க?” என்ற பொதுவான விசாரிப்புகள் ஏதும் இன்றி நேரடியாக இப்படித்தான் அலைபேசி மூலம் பதட்டமாகப் பேசினான்.

“என்ன ஆச்சு தாமஸ், ஏன் இவ்வளவு பதட்டம்? மெதுவா பேசு, என்ன விஷயம், பிரச்சனை எதுவா இருந்தாலும் பேசினா தானே தீர்வு கிடைக்கும்.”

“இல்லை, சிவா, நான் சொல்றத கேளு, அலி சரியில்லை. அவனுக்கு உதவி பண்ணாதே... அவ்வளவு தான் சொல்லுவேன். நீ யாருக்கு வேணும்னாலும் உதவி பண்ணு, ஆனா அந்த அலிக்கு மட்டும் உதவி பண்ணாதே....” தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் பிடிவாதமாக இருந்தான் தாமஸ்.

“சரி தாமஸ், நான் இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன்.... சாயங்காலமா நம்ம எப்பவும் சந்திக்கற இடத்துக்கு வா... பேசலாம்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

நாங்க மூணு பேருமே நல்ல நண்பர்கள். தினம் தினம் மாலை நேரம் சந்தித்து, அரட்டை அடித்த பிறகு தான் அவரவர் வீடு திரும்புவோம். இப்படி இருக்க, திடீர்னு அலியைப் பற்றி தாமஸ் ஏன் இப்படிச் சொல்கிறான் என்று மனதுக்குள் குடைச்சல் இருந்து கொண்டே இருந்தது. வேலை ஓடவே இல்லை. அலியிடம் அலைபேசியில் சாதாரணமாகப் பேசினேன். அவனும் தாமஸ் உடன் ஏதும் பிரச்சனை இருப்பதாகச் சொல்லவே இல்லை. என்னதான் ஆயிருக்கும் என்ற எண்ணத்துடனே அன்றைய பொழுது கழிந்தது.

மாலை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்குச் சென்றபோது, தாமஸ் எனக்காகக் காத்திருந்தான். அலி இன்னும் வந்து சேரவில்லை. “இப்ப சொல்லு, உங்களுக்குள்ள என்ன பிரச்சனை என்றேன்”.

“உனக்கே தெரியும், நான் தான் அலியை கில்லர்ஜி கிட்ட அழைத்துப் போனேன். அவங்க இரண்டு பேரும் சந்திக்கவே நான் தான் காரணமா இருந்தேன். ஆனா இப்ப அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க. பிசினஸ் பார்ட்னரும் ஆகிட்டாங்க. நீயும் பிசினஸ் பார்ட்னரா சேர்ந்துக்கோயேன்-ன்னு என் கிட்டக் கேட்கக் கூட இல்லை தெரியுமா?” படபடவென பொரிந்தான் தாமஸ்.

“ஹாஹா... இவ்வளவு தான் விஷயமா? அவங்க புதுசா பண்ணப் போற நகை பிசினஸ் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? உனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நட்புக்காக மட்டும் உன்னையும் பார்ட்னரா சேர்த்துக்கிட்டா அந்த பிசினஸ்-க்கு உன்னால என்ன முன்னேற்றம் உண்டாகும்? அவங்க ரெண்டு பெரும் அந்த ஃபீல்ட்ல நல்ல அனுபவம் உள்ளவங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் செய்யறது தான் சரி. ஒண்ணுமே தெரியாம, நீயும் சேர்ந்து பிசினஸ்ல லாஸ் ஆகக் கூட வாய்ப்பு இருக்கு. யாருடைய செய்கையும் தப்புன்னு சொல்றதுக்கு முன்னாடி, அவங்க பொசிஷன்-ல உன்னை வச்சு யோசி – “நீயா இருந்தா என்ன செய்வேன்னு யோசி...”

தாமஸ் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். யோசிக்கட்டும் என நானும் பேசாமல் இருந்தேன்.  அவனாகவே மௌனத்தினைக் கலைத்தான்.

“சிவா, நல்ல வேளை, அலி கிட்ட நான் தப்பா ஏதும் பேசல. உன் கிட்ட பேசினதுல, நல்ல தெளிவு வந்தது. இல்லைன்னா நல்ல நட்பை இழந்து இருப்பேன். தேங்க்ஸ்டா சிவா” என்றான் தாமஸ்.

அதே நேரத்தில் அலியும் கிலலர்ஜியும் அங்கே ஸ்வீட் பாக்ஸ் உடன் வந்தார்கள். “தாமஸ், உன்னால தான் நானும் கில்லர்ஜியும் சந்திச்சோம். இப்ப பிசினஸ் பார்ட்னரும் ஆயிட்டோம்.... தேங்க்ஸ்டா” என்று அலி சொல்ல நான் தாமஸைப் பார்த்து புன்னகைத்தேன். பார்வையாலேயே நன்றி சொல்லி, “கில்லர்ஜியுடன் நால்வர் ஆனோம்!” என்றான் தாமஸ்!


பின் குறிப்பு: இதுவும் ஒரு சிறுகதை முயற்சி தான்! நல்லா இருக்கான்னு நீங்க தான் சொல்லணும்! நேற்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தோன்றிய எண்ணம், இப்போது எழுத்து வடிவில். கேரக்டர் பேர் என்ன வைக்கலாம்னு யோசிக்கும்போது, நம்ம கில்லர்ஜி அவர்களின் பதிவுகளில் வரும் சிவா தாமஸ் அலி நினைவுக்கு வர, அவங்களையே இங்கே கதாபாத்திரங்களாக மாற்றி விட்டேன். கூடவே நம்ம கில்லர்ஜியும்!

நம்ம தில்லையகத்து கீதாஜியும், எங்கள் பிளாக் ஸ்ரீராமும் நான் கதை எழுதத் தூண்டுகோலாக இருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மனம் நிறைந்த நன்றி.

பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


46 கருத்துகள்:

 1. குட்மார்னிங். அடடே...

  கில்லர்ஜியின் கேரக்டர்கள்

  இங்கே எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   கில்லர்ஜி கேரக்டர் இங்கே எப்படி? சும்மா ஒரு முயற்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஹா.. ஹா... ஹா... நல்ல முயற்சி. சின்னஞ்சிறு கதை. ரசிக்க முடிகிறது. நல்லெண்ணங்கள் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லெண்ணங்கள் வாழ்க... மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   உங்கள் ஊக்கம் தரும் கருத்து கண்டு ஆனந்தம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நன்றாய் இருக்கிறது. இப்படி இரண்டு மூன்றுமுறை எழுதி பழகினால் கீதா ரெங்கன் அளவு நீண்ட (சிறு) கதைகளை எளிதாக எழுதத் தொடங்கி விடலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதிப் பழகினால்..... ம்ம்ம்.... பழகலாம்...

   கீதாஜி என்ன சொல்வார் என்று பார்க்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஆ ஆ ஆ ஸ்ரீராம் நானும் இப்ப சின்னதா எழுதத் தொடங்கிட்டேனே...எபிலயே இதுக்கு முன்ன வந்துருக்கே நேற்றோடு சேர்த்து....ஹிஹிஹி...

   அது சரி....ஸ்ரீராம் அண்ட் வெங்கட்ஜி ...ரிஷபன் அண்ணா, பானுக்கா, ஸ்ரீராம் எல்லாருமே சூப்பரா எழுதுவாங்க....அவங்களை சொல்லலாம்...நான் கத்துக்குட்டிதானே ஸ்ரீராம்...

   வெங்கட்ஜி நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க...உண்மையாவே...நல்லா எழுத வருது வெங்கட்ஜி.....

   எபிக்கு அனுப்பலாம்...எபில ஸ்லாட் கிடைக்கறதுதான் இப்ப இருக்காதுன்னு நினைக்கிறேன் இல்லையா ஸ்ரீராம்...

   சூப்பர் ஜி! மனமார்ந்த வாழ்த்துகள்...இன்னும் எழுதுங்க வாரத்துல ஒரு கதையாவது வரனும் ஓகேயா...உங்களுக்குத்தான் நிறைய அனுபவங்கள் உண்டே...கதை மாந்தர்களையே நீங்க கதையாக்கலாம்...சந்தோஷமா இருக்கு ஜி நம்ம வட்டத்துல அடுத்த கதையாளர் வந்தாச்சுனு...

   வாழ்த்துகள் வெங்கட்ஜி..

   கீதா

   நீக்கு
  3. கதை மாந்தர்கள் சிலரை கதை ஆக்கலாம். நல்ல யோசனை கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. தலைப்பைப் பார்த்துட்டுக் கில்லர்ஜியைக் கலாய்ச்சிருக்கீங்களோனு ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே வெங்கட்! :))))) நல்லாவே எழுதறீங்க, தொடர்ந்து வெற்றி அடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... நான் யாரையும் கலாய்ப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
  2. என்னை வெங்கட்ஜி கலாய்ப்பதில் திருச்சி மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா ?

   நீக்கு
  3. ஆஹா நல்ல கேள்வி. கேளுங்க... கேளுங்க...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  4. ஹிஹிஹி! ஜாலியா இருந்திருக்குமே! :)))))

   நீக்கு
  5. ஹிஹி.. . :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 5. சிறு கதை மிகவும் அழகாகவும் அர்த்தம் உள்ளதாக இருக்கின்றது. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 6. நன்பர்கள்தான் தக்க சமயத்தில் நல்லெண்ணத்தோடு அறிவுரை வழங்குவார்கள் என்று தெரிவித்த விதம் ரொம்பவும் அருமையாக இருந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

   நீக்கு
 7. தலைப்பைப் பார்த்ததுமே மீசைக்கார நண்பர்தான் நினைவில் வந்தார்
  தாங்களும் அவர் தலைப்பைத்தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை பதிவில் நிறைவில் கண்டேன்
  கதை எழுதுதல் தங்களுக்கு இயல்பாய் வருகிறது ஐயா
  அருமை
  தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று பேர் வேண்டும் என்றவுடன் கில்லர்ஜி அவர்களது இந்தக் கேரக்டர் நினைவுக்கு வந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. அருமையான கதை.
  நண்பர்களிடம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை இருந்து விட்டால் அவர்களை யாரும் பிரிக்க முடியாது.
  சிவா போன்ற நல்லதை எடுத்து சொல்லும் நண்பர் இருந்து விட்டால் நட்பு காலம் கடந்து நட்பின் மேன்மையை சொல்லிக் கொண்டே இருக்கும்.
  தேவகோட்டையார்,சிவா தாமஸ் அலி நால்வர் கூட்டணி வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நால்வர் கூட்டணி வாழ்க... வாழ்க வளமுடன்... அதானே எல்லோரும் வேண்டுவது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 9. ஆஹா சரித்திர புருஷர்களைப் பற்றிய குறுநாவல் படித்தது போன்ற உணர்வு.

  எங்களை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு அறிமுகமா... ஹாஹா பிரபலமான பதிவர் நீங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 10. எதார்த்தமான நிகழ்ச்சியமைப்பு. எளிய சுவையான நடை. படித்து மகிழ்ந்தேன்.

  கில்லர்ஜி என்னும் 'எல்லோரும் விரும்பும்' பதிவரைக் கதையில் இணைத்தது வெகு சிறப்பு.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பசி பரமசிவம் ஜி.

   நீக்கு
 11. சின்ன கதை...சிறப்பான கருத்து ...

  மிக மிக அருமை ..

  உண்மையில் பல நேரம் அவசரத்தில் தவறான புரிதல்களே நல்ல நட்புகளை இழக்க காரணம்..

  சற்று நிறுத்தி நிதானம் மாக யோசிக்கும் போது அனைத்தும் சரியாகும் ...


  வாழ்த்துகள் சார் ..

  இன்னும் பல கதைகள் எழுதிட....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் பல சமயங்களில் தவறாகப் போவது உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   நீக்கு
 12. நட்புக்காக என்னையும் சேர்த்துகுங்க ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராமாயண்த்துல வரது போல ஐவரானோம்னு வந்துரும்ல!!! டிடி!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஆஹா... சேர்த்து விடலாம் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. தனபாலனுடன் ஐவரானோம்... அப்படி ஒரு பதிவு எழுதலாம்.....:)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 13. சூப்பர் வெங்கட்ஜி! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...நம்ம கில்லர்ஜியையும் சொல்லி ஹா ஹா ஹா...

  அருமையான கருத்துள்ள கதை. இந்த எண்ணம் நட்பில் மட்டுமல்ல எல்லா உறவுகளுக்குமே பொருந்தும் இல்லையா ஜி?!!! உங்களுக்கு நல்லா சூப்பரா எழுத வருது ஜி! தொடர்ந்து எழுதுங்க ...தயவு செய்து நிறுத்திடாதீங்க...நாங்கல்லாம் இருக்கோம்ல ஃபாலோ செய்ய!!

  பாராட்டுகள்! வாழ்த்துகள் ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து எழுத ஆசைதான். பார்க்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 14. என்னாது கில்லர்ஜி இப்ப அலியோடு நகை பிஸினஸா!! ஸ்ரீராமோடு இல்லையா தொடங்கினார்!!?? ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதப் பாக்கறதுக்குள்ள மீ இன் த ரன் வே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஆமாம். ஸ்ரீராம் உடன் பிசிணஸ் ஆரம்பிக்க இருந்த தகவல் மறந்து விட்டேன்.


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 15. கில்லர்ஜிக்கு தோதான பிசினெஸ் கதை நன்றாக இருந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. ஹா ஹா ஹா அலியுடன் கில்லர்ஜி கூட்டுச் சேர்ந்திட்டாரோ? எங்கட பாளையங்கோட்டை அலியைத்தானே ஜொள்றீங்க?:) ஹா ஹா ஹா..

  நல்லாத்தான் எழுதுறீங்க கதை.. எழுதுங்கோ.. இதைவிட அன்றைய கனவுக் கதைதான் டாப்பூஊஊஊ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கனவு கதைதான் பிடித்ததா.... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  அழகான சிறுகதை. தங்களுக்கே உரித்தான இயல்பான நடையில், சகோதரர் கில்லர்ஜியையும் இணைத்து, அவரது அறிமுகங்களான தோழர்களையும் கோர்த்து.. ஆகா. நல்ல ஒரு கற்பனை நயத்துடன் கதை எழுதியிருக்கிறீர்கள். நிறைய கதைகள் எழுதுங்கள். படிக்க நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம். தங்கள் பதிவினால் ஒரு பழைய திரைப்பட டைட்டிலும் நினைவுக்கு வந்தது. (சங்கர், சலீம் சைமன் என்று நினைக்கிறேன். ) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து உற்சாகம் தந்தது. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 18. எங்கள் பிளாக்காக ஸ்ரீராம் சார் என்னைய கதை கேட்டார். கதை விட தெரிஞ்ச அளவுக்கு கதை எழுத வரல. அப்புறம் எப்படி நான் சாகித்ய அகாடமி விருது வாங்கப்போறேன்னு தெரில

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் எழுத முயலுங்கள்.
   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 19. வெங்கட்ஜி நீங்கள் கதையிலும் மிளிர்கின்றீர்கள். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இப்போது வெளிப்படுகிறது! இதைத் தொடருங்கள்.

  கதை மிக அருமை. நம் கில்லர்ஜியையும் கதாபாத்திரமாக்கி அவரது இடுகையில் வரும் கதாபாத்திரங்களைக் கொண்டே நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள், பாராட்டுகள் வெங்க்ட்ஜி!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....