திங்கள், 11 மார்ச், 2019

பீஹார் டைரி – நாளந்தா – அருங்காட்சியகம்நாளந்தாவின் அழிவுச் சின்னங்களைப் பார்த்த கையோடு அந்த இடத்தின் எதிர் பக்கத்தில் இருந்த அருங்காட்சியகத்தினையும் பார்க்கச் சென்றோம். நுழைவாயில் அருகிலேயே மிகப் பிரம்மாண்டமான மணி ஒன்று நம்மை வரவேற்கிறது. இத்தனை பெரிய மணியை வேறு எங்கும் பார்த்ததில்லை. அந்த மணியை சிறப்பான மண்டபத்தில் தொங்க விட்டு அப்பக்கத்தில் சிறு பூங்காவினையும் அமைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தபடியே அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டினை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறோம்.
 
வாயிலில் இருந்த சிப்பந்தியிடம் படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டதற்கு, எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் விரைவாக எடுத்து விடுங்கள் என்று சொல்லி, கூடவே இன்னும் ஒன்றும் சொன்னார்! அலைபேசி வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் என பலரும் ரொம்பவே படுத்துகிறார்கள் என்பது தான் அந்த விஷயம்! ரொம்பவே நொந்து போயிருப்பார் போல அந்தச் சிப்பந்தி. கவலை வேண்டாம் – என்னால் யாருக்கும் தொந்தரவு இருக்காது – எவ்வளவு தேவையோ அவ்வளவு படங்களை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறேன் என்று சொல்லி உள்ளே சென்றேன். நாளந்தாவிலிருந்து அகழ்வாராய்ச்சி செய்த பல சிற்பங்களை இங்கே வைத்திருக்கிறார்கள். எதை விட எதைச் சொல்ல…. பல சிற்பங்கள் உடைந்த இலையில் இருப்பது மனதுக்குள் வலியைத் தந்தது.

ப்ரஜனபாரமிதா அன்னை சில சிற்பங்களின் அழகு நம்மை வெகுவாகக் கவர்கிறது. புத்த மார்க்கம் என்று சொல்லும்போது நம்மில் பலருக்குத் தெரிவது புத்தர் மட்டுமே. ஆனால் அந்த புத்த மார்க்கத்தில் வேறு பலருக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப் பார்த்த சிலைகளில் ஒன்று ப்ரஜனபாரமிதா அன்னையின் சிலை.  புத்த மார்க்கத்தில் முக்கியமான சூத்திரங்களில் ஒன்று ப்ரஜனபாரமிதா சூத்ரம்.  இணையத்தில் இசையோடு இந்த சூத்திரம் காணொளியாக இருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் இங்கே கேட்கலாம். மனதுக்கு இதமான இசையும், அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் கேட்க ரொம்பவே இதமாக இருக்கிறது. இந்தப் பதிவினை தட்டச்சு செய்யும்போது கேட்டுக் கொண்டே தான் தட்டச்சு செய்தேன்.


அப்படி பார்த்த சிலைகளில் இன்னுமொன்று யமந்தகா சிலை. இந்த யமந்தகா யார் – யமதர்மனையே வதைத்தவர் தான் இந்த யமந்தகா. போதிசத்வ மஞ்சுஸ்ரீ என்பவர் எடுத்த ஒரு உருவம் தான் யமந்தகா. மனிதப் பிறவியில் ஒருவர் யோகநிலையை அடைவதைத் தடுத்து மீண்டும் மீண்டும் பிறவிகளைத் தரும் யமனையே அழித்தவராம் இந்த யமந்தகா. அவரின் சிற்பத்திற்குக் கீழே எருமையும் இருக்கிறது. இந்த யமந்தகா சிலை போலவே வேறு சில சிற்பங்களும் அங்கே உண்டு. சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும் ஒரு சிற்பம் ரொம்பவே அழகாக இருந்தது. இந்தப் பதிவிலும் அதனை இணைத்திருக்கிறேன் – உங்கள் பார்வைக்காக. இந்தப் பதிவில் அங்கே எடுத்த படங்களில் சில உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


எத்தனை எத்தனை சிற்பங்கள் – பல சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. சில சிற்பங்களை விட்டு அகலவே மனம் இல்லை. ஆனால் அங்கே வைக்கப்பட்டிருந்த பல சிற்பங்கள் உடைபட்ட நிலையில் இருக்க அது மனதை சங்கடப் படுத்தியது. சிலைகள் நாளடைவில் இயற்கைச் சீற்றங்களாலோ அல்லது காலத்தின் கோலத்தாலோ அழிந்தால் பரவாயில்லை ஆனால் மனிதர்களால் அழிக்கப்படுகின்றன எனும்போது அந்த சங்கடம் அதிகமாகிறது. நாளந்தா பற்றிய முந்தைய பதிவில் கூட இதைப் பற்றி எழுதி இருந்தேன். எந்த ஒரு மனிதனுக்கும் படைப்புகளை அழிக்க உரிமை இல்லை. ஆனால் அடுத்தவர்களுடைய கலைப் படைப்பினை அழிக்கவே பலரும் முனைகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இப்படி நிறையவே இருக்கிறார்கள். அந்த உடைபட்ட சிலைகளைப் பார்க்கும்போது உங்களுக்கும் மனதில் வலி தோன்றுகிறது அல்லவா?

சிவன் பார்வதி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருந்த பலவற்றையும் பார்த்துக் கொண்டே வெளியே வந்தோம். வரும்போது அங்கே இருந்த சிப்பந்திக்கு நன்றி கூறி வெளியே வந்தோம். அருங்காட்சியகத்தின் வெளியேயும் சில படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். அருங்காட்சியகத்தின் வெளியே இருந்த பூங்காவில் அழகான இட்லிப்பூ என நாங்கள் அழைக்கும் விருட்சிப் பூ செடிகள் நிறைய இருந்தது. அவற்றையும் சில படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாக எங்கே சென்றோம், வேறு என்ன பார்த்தோம் என்பதை பிறிதொரு பதிவில் சொல்கிறேன்.


யமந்தகா 

இந்தப் பதிவில் சொன்ன விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட படங்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

56 கருத்துகள்:

 1. எவ்வளவு பெரிய மணி.... அது ஒலித்தால் எவ்வளவு தூரம் கேட்கும்!

  குட்மார்னிங்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ!! எனக்கு முன்னே புகுந்துவிட்டாரே ஸ்ரீராம் இன்று!!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஹா... ஹா... ஹா... கொஞ்சம் சீக்கிரம் எழுந்து விட்டேன்!!

   நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்...

   ஒலித்தால் எவ்வளவு தூரம் கேட்கும்.... ஆமாம். மிகப் பெரிய மணி! அதனை ஒலிக்கச் செய்யவே பத்து பேர் வேண்டுமாக இருக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. ஆஹா... இன்னிக்கும் ஸ்ரீராம் ஃபர்ஸ்ட்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  5. இன்றைக்கு எனக்கும் சீக்கிரம் விழிக்க வாய்த்தது! அதான் இங்கே வந்து விட்டேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. காலை வணக்கம் வெங்கட்ஜி

  முதல் படமே அட்டகாசம். ஈர்க்கிறது. படங்கள் எல்லாம் அருமை..சில சிலைகள் உடைந்து இருக்கிறதே...சிதைந்து...பதிவு இனிதான் வாசிக்கனும்...

  முகப்புப் படம் ரொம்ப அழகா இருக்கு..செம ஜி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!.

   ஆமாம் சிறைய சிலைகள் சிதைந்த நிலையில் உண்டு.

   முகப்புப் படம் - ரசித்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும். சமீபத்தில் எடுத்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. ப்ரஜனபாரமிதா... சொல்லிப்பார்க்கிறேன்.

  கேள்விப்படாத பெயர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... சொல்லிப் பார்த்தீர்களா? நானும் ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் படித்துப் பார்த்து தான் இங்கே தமிழில் எழுதினேன்! குழப்பம் வந்து விடக்கூடாது என்பதால்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. அழகிய படங்கள்.

  என்ன ஒரு கலைப்பொக்கிஷங்கள்...

  அவற்றின் அருமை தெரியாமல் சேதப்படுத்துவோரை என்ன சொல்ல, என்ன செய்ய!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கலைப்பொக்கிஷங்களே தான். ஆனாலும் பலருக்கும் இப்படியான கலைப்பொருட்களின் அருமை தெரிவதுமில்லை, புரிவதுமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ப்ரஜனபாரமிதா//

  ஆ ஆ ஆ ஆ உச்சரிக்க கொஞ்சம் ஹிஹிஹி...ஹப்பா உச்சரித்துவிட்டேன்...கேட்கிறேன் ஜி அந்த லிங்கை..

  சிலைகள் சில உடைந்திருந்தாலும் நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது...

  படங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கிறது..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருங்காட்சியகப் பராமரிப்பு நன்றாகவே இருந்தது கீதா ஜி!. வரும் மக்கள் தொல்லை தான் தாங்க முடியவில்லை என்பதை அங்கே இருந்த சிப்பந்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

   ஹாஹா... நீங்களும் பெயரை உச்சரித்துப் பார்த்தீர்களா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 6. யமந்தகா சிலை. இந்த யமந்தகா யார் – யமதர்மனையே வதைத்தவர் தான் இந்த யமந்தகா. போதிசத்வ மஞ்சுஸ்ரீ என்பவர் எடுத்த ஒரு உருவம் தான் யமந்தகா.//

  இப்பெயர்களும் மனதில் பதிய கொஞ்சம் நேரம் எடுக்கும் ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதில் பதிய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. ஆகா... எத்தனை எத்தனை அழகான படைப்புகள்..
  இவற்றையும் சிதைத்த கொடூரிகளின் வக்ரம் நன்றாகவே புரிகின்றது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஜி!

   சிதைக்கப்பட்ட சிற்பங்கள் - வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 8. காலங்கார்த்தால கலை விருந்து படைத்து விட்டீர்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலை விருந்து - எல்லாப் புகழும் சிற்பங்களை படைத்தவர்களுக்கே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. அருங்காட்சியின் சிற்பங்கள் மிக அருமை. பின்னப்பட்டிருப்பதைப் பார்த்து, இதனை ரசிக்கத் தெரியாத மூடர்கள் இருந்திருக்கிறார்களே என்று தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி பல மூடர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பது சோகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. பிரம்மாண்டமான மணி தான் கில்லர்ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. காலை வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்.
  அனைத்து பாடங்களும் மிக அழகு.
  நானும் 'ப்ரஜனபாரமிதா சூத்ரம்' இசையை கேட்டுக் கொண்டு படங்களைப் பார்த்தேன்.
  இனிமையான பாடல் மன அமைதியை தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதுக்கு இதமான இசை தான்.... நானும் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 12. அன்று பார்த்த சிற்பங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. அருமையான சிற்பங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடன் பயணித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 14. அழகான சிற்பங்கள்...

  உடைத்தவர்களின் மனநிலையை என்னவென்று சொல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 15. ப்ரஜனபாரமிதா இசை உண்மையிலேயே மனதை அமைதிப்படுத்துவது போலிருந்தது! இசைக்கு மொழியில்லை என்பதை நிரூபிப்பது போல, இதயத்தை வருடிக்கொடுப்பது போல... அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இசைக்கு ஏது மொழி! இசை ரொம்பவே பிடித்து விட்டது எனக்கும். தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 16. சிற்பங்கள் அனைத்தும் அழகு! சிவன் பார்வதி சிற்பம் கொள்ளை அழகு! மனித‌னும் கோபமும் ஆங்காரமும் வக்கிரமும் வந்தபோதெல்லாம் கோவில்களில் சிற்பங்களைத்தான் உடைத்திருக்கிறான்! அவை இந்திய கோவில்களில் நிறையவே நட‌ந்திருக்கிறது! சுந்தர பாண்டியனின் கோபம் தஞ்சாவூரை பெருமளவு அழித்தது! இது வரை அரண்மணை இருந்த இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. சமீபத்தில் சிற்பங்களின் சிதைவுகளை கம்போடியாவில் மிக அதிகமாகவே பார்த்தேன். மனம் மிகவும் வேதனையுற்றது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த நாட்டிற்கு படை எடுத்தாலும், முதலில் அழிக்கத் தான் நினைக்கிறார்கள்....

   கம்போடிய சிதைவுகள் - உங்களுடைய முதல் இரண்டு பதிவுகளை இப்போது தான் படிக்க முடிந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 17. எம்ம்ம்ம்ம்ம்மாம்பெரிய மணி?! அதிலிருப்பது எதாவது எழுத்துக்களா அல்லது டிசைனா?!

  மன்னர்களின் பழி/பகை உணர்ச்சி எத்தனை பெரிய கலைப்பொக்கிசங்களையும் தூசியென எண்ண வைக்குது?! சில கோவில்களில், கோட்டைகளில் பழுதுபட்ட சிலைகளை பார்க்கும்போது மனசு வலிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணியில் இருப்பது எழுத்துகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 18. அருமையான தொகுப்பு. அந்த பெரிய மணியை கற்பனையில் அடித்துப் பார்த்தேன். காதுகளில் இன்னும் ஓம்காரிக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனையில் அடித்துப் பார்த்தீர்களா... ரீங்காரம் இங்கும் கேட்கிறது! மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 19. வெகு அழகான சிற்பங்களை எங்கள் பார்வைக்கு கொணர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா...

   நீக்கு
 20. அற்புதமான சிற்ப அதிசயங்கள். இப்போ வரதெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்தக் காலங்களில் நாகரிகத்திலும் கட்டுமானத்திலும் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கின்றனர் என்பதை நினைத்துப் பார்க்கையில் நம்முடைய இப்போதைய நிலை வெட்கத்தைத் தருகிறது. எல்லாச் சிற்பங்களும் அழகோ அழகு. சிவன், பார்வதி கண்களையும் மனதையும் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவன் பார்வதி ரொம்பவே அழகு... எனக்கும் பிடித்த சிற்பம் இது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 21. அன்பு வெங்கட், இசையுடனே பதிவைப் படித்தேன். திபேத்திய இசையை ஒத்த்,அமைதியாக இருக்கிறது.
  புத்த மதத்தின் கிளைகளாகப் பல தெய்வங்கள் உண்டு.
  ரெய்கி சிகித்சையின் பல குருக்கள் புத்தரின் அருள் பெற்றவர்களாக செயல்படுகிறார்கள்.
  நீங்கள் பதிவிட்டிருக்கும் படங்கள் உயிரோட்டத்துடன் விளங்குக்கின்றன.

  சிதைத்தவர்களும் சிதைக்கப் படுவார்கள் என்பது கர்ம வினை.
  ஆனால் நாம் இழந்தது இழந்தது தானே.

  அந்த மணிதான் எத்தனை அருமை வேலைப்பாடுகளோடு இருக்கிறது.
  அதிலிருந்து வரும் நாதம் அஹிம்சையைப் பரப்பட்டும்.

  தங்களால் நளந்தாவின் பெருமைகளை அறிந்தேன். நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெய்கி சிகிச்சை குருக்கள் புத்தரின் அருள் பெற்றவர்களாக செயல்படுகிறார்கள். இங்கே சில நண்பர்கள் ரெய்கி மூலம் சிகிச்சை தருகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 22. சிற்பங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் பொக்கிஷம். அதைச் சிதைத்தவர்களை என்னவென்று சொல்ல. வெறியர்கள். தகவல்களும் சிறப்பு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 23. ப்ரஜனபாரமிதா இசை நன்றாக இருக்கிறது. கண்னை மூடிக்கொண்டு கேட்கனும்...அமைதியான இடத்தில்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அந்த இசையைக் கேட்க மனதில் ஒரு அமைதி.... மென்மையான இசைக்கு என்னவொரு சக்தி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 24. மிக அற்புதமான சிற்பங்கள். பல சிதிலமடைந்திருப்பது வருத்தமானது. பெரிய மணியில் சில தகவல்களையும் செதுக்கியிருப்பது தெரிகிறது.

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணியில் செதுக்கி இருப்பவை மந்திரங்கள் எனத் தெரிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 25. ப்ரஜனபாரமிதா சூத்ரத்தை கேட்டுக்கொண்டே தங்களின் பாக்டீவைப் படித்தேன். மணியும் மணியான படங்களும் அருமை! பாராட்டுகள்! சிதைந்த சிற்பங்கள் மந்தை ஏதோ செய்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இசையையும் ரசித்து பதிவினையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 26. மனதை என்பது மந்தை என தவறுதலாக தட்டச்சு ஆகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சுப் பிழை - சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....