ஞாயிறு, 10 மார்ச், 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா – பகுதி மூன்றுதலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] நடந்த தோட்டத் திருவிழா சென்ற போது எடுத்த நிழற்படங்களை இரண்டு வாரங்கள் மட்டுமே வெளியிட நினைத்திருந்தேன். ஆனாலும், பல படங்களை ஒரே பதிவில் வெளியிடுவது சரியல்ல, சாத்தியமும் இல்லை. 

அதனால் தொகுதியின் மூன்றாம் பதிவாக இதோ இந்த வாரமும் பதினைந்து படங்கள்…. அடுத்த வாரத்துடன் இந்தப் பூங்காவில் எடுத்த படங்களின் தொகுப்பு நிறைவு பெறும்.

பூங்கா சென்ற போது சிலர் பூக்களை ரசிக்க, ஒரு சிலர் மட்டும் காட்சிகளையும், அங்கே வருபவர்களையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி – எப்படியும் அறுபது வயதிற்கு மேல் இருக்கலாம். பூக்களால் செய்து வைத்திருந்த உருவங்களை தொட்டுத் தொட்டுப் பார்த்தார் – ஒரு சில பூக்களை அப்படியே கசக்கிப் பார்த்தார். பார்க்கும்போதே அதிர்ச்சியாக இருந்தது. அழகியல் உணர்வே அவருக்கு இல்லை போலும். இப்படிக் காட்சிக்கு வைத்திருப்பதை தொட்டுப் பார்த்தால் அதன் அழகு கெடும் என்பதை உணரவில்லை அவர் – இத்தனை வயதான பிறகும். நண்பர் பத்மநாபன் அவர்கள் சொல்லவே சொல்லி விட்டார் – ஆனாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது! எல்லா இடங்களில் பூக்களை கசக்கிக் கொண்டிருந்தார். சிலரை எப்படியும் திருத்த முடியாது! 

வாருங்கள் பூக்களை, நிழற்படங்களை ரசிக்கலாம்!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

 1. காலை வணக்கம் வெங்கட்ஜி!

  //ஒரு சில பூக்களை அப்படியே கசக்கிப் பார்த்தார். பார்க்கும்போதே அதிர்ச்சியாக இருந்தது. அழகியல் உணர்வே அவருக்கு இல்லை போலும்//

  எனக்கும் இதை வாசித்ததும் என்ன இது என்று தோன்றியது. ஆனால் ஒரு சிலர் இப்படிச் செய்வதைப் பார்த்திருக்கேன் வெங்கட்ஜி..இவர்களுக்கு ரசனையே இல்லை என்றும் தோன்றியதுண்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

   இப்படியும் சிலர்... என்ன செய்ய....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. இத்தனை வயதான பிறகும். நண்பர் பத்மநாபன் அவர்கள் சொல்லவே சொல்லி விட்டார் – ஆனாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது! எல்லா இடங்களில் பூக்களை கசக்கிக் கொண்டிருந்தார். சிலரை எப்படியும் திருத்த முடியாது! //

  சூப்பர் ஆனால் பாருங்க சொல்லியும்...ஹூம் இவங்களை என்ன செய்யலாம்..அழகியல் தெரியா மனிதர்கள்...

  பூக்கள் படங்கள் அத்தனையும் செம மனதை மயக்குகிறது. கேக்டஸ் உட்பட...ரொம்ப ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகியல் தெரியாத மனிதர்கள். அதே தான்.

   பூக்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. குட்மார்னிங்.

  பூக்களைக் கசக்கும் பெண்மணி வாழ்வில் எத்தனை மென்மையான உள்ளங்களைக் கசக்குகிறாரோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   மென்மையான உள்ளங்களைக் கசக்குகிறாரோ.... அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. படங்கள் வழக்கம்போல துல்லியம். வயலட் பூவும், மஞ்சள் பூவும் அழகு. தேனெடுக்கும் வண்டும் படத்தில் துல்லியமாக விழுந்துள்ளது! அதைப் பார்த்தும் எனக்கு நினைவுக்கு வரும் பாடல் "பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்.... ஆஹா.... இப்பாடல் எனக்கும் நினைவுக்கு வந்தது. ஆனாலும் பதிவு செய்யும்போது இங்கே எழுதவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அடுக்கு ரோஜாவும் அழகு. அந்தக் கள்ளிப்பூவும் அழகு. அனைத்தையும் ரசித்தேன். காலையில் மலர்களின் படங்களை பார்த்தது ரெப்ரெஷ் செய்துகொண்டது போலிருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காலையில் மலர்களின் படங்களைப் பார்த்தது ரெஃப்ரெஷ் செய்து கொண்டது போலிருந்தது..... // உண்மை. மலர்கள் நமக்கு புத்துணர்ச்சி தருகின்றன....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. முதல் இரு படங்களும் அழகோ அழகு! ரோஜாக்கள் அதை விட அழகு! அந்தப் பெண்மணிக்குக் குழந்தைகளே இல்லையோ என நினைக்கிறேன். :( என்ன மனசு! :( பூவைக் கசக்க மனம் எப்படி வருது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன மனசோ.... அந்தப் பெண்மணிக்கு குழந்தைகள் உண்டு. கூடவே வந்திருந்தார்கள்! மேலும் ஒன்று குழந்தைகள் இல்லை என்றால் இப்படி இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. மென்மையான பலர் எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. ஹாஹா, குழந்தைங்களையும் கொஞ்சுகிறேன் பேர்வழினு கை விரலைக் கடித்து, கன்னத்தைக் கடித்து, கிள்ளினு கொஞ்சறவங்க இருக்காங்க! :)))))

   நீக்கு
  3. கடித்து கிள்ளி.... இப்படியும் சிலர் உண்டு!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 8. படங்கள் எல்லாம் அழகு.
  கள்ளிப்பூ முதல் அணைத்தும் அழகு மிக அழகாய் எடுத்து இங்கு நாங்கள் பார்க்க தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. //பூக்களால் செய்து வைத்திருந்த உருவங்களை தொட்டுத் தொட்டுப் பார்த்தார் – ஒரு சில பூக்களை அப்படியே கசக்கிப் பார்த்தார். பார்க்கும்போதே அதிர்ச்சியாக இருந்தது.//

  மற்றவர்கள் பார்க்கும் போது தோற்றம் மாறிவிடும் என்ற எண்ணம் இல்லையே அவர்களிடம். மலர்காட்சிகளை தொடக் கூடாது என்று என்று அறிவுப்பு பலகை வைக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவிப்புப் பலகை பல இடங்களில் இருந்தது. அதையெல்லாம் படித்தாலும் அதைச் செய்யக் கூடாது என்ற எண்ணம் இல்லை எனும்போது என்ன செய்ய....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. சிரிக்கும் மலர்கள் ...கொள்ளை அழகு

  11 வது படம் பிங்க் வெள்ளையுடன் உள்ள பூ இங்கு cuppan பார்க்கில் பார்த்து எடுத்து இருக்கிறேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கப்பன் பார்க் - ஒரு முறையோ, இரு முறையோ சென்றிருக்கிறேன் - சகோதரி பெங்களூரில் இருந்த போது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 12. அந்தப் பெண்மணி, இவையெல்லாம் நிஜப் பூக்களா இல்லை பிளாஸ்டிக்கா என்று சோதித்திருப்பாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பூவையுமா சோதிக்கத் தோன்றும்?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. வழக்கம்போல திகட்டாத விருந்தளித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. எங்கள் காலை வேலையை பூக்களால் அலங்கரித்த உங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 15. அழகிய பூக்களின் அணிவகுப்பு ரசிக்க வைத்தன ஜி

  சிலருக்கு ரசனை என்பது கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசனை என்பது கிலோ எவ்வளவு? அதே தான் - ரசனையற்ற மனிதர்கள் இங்கே நிறையவே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  ஆஹா . அத்தனை மலர்களும் மிக மிக அழகு. காணக்காண தெவிட்டாத ரம்யம் மனதுக்குள் உருவாகிறது. மஞ்சள் மலரும், ரோஜா, சிகப்பு அடுக்கு ரோஜா மிகவும் அழகாக உள்ளன. அனைத்தையும் ரசித்தேன்.

  இவற்றை பார்த்து ரசிக்காமல், ஏன் துன்புறுத்தி ரசித்தார் அந்த பெண்மணி. ஒரு வேளை கண் (இல்லை மனக்கண) பார்வையற்றவரோ? சிலர் சின்ன குழந்தைகளை தொட்டு மிருதுவாக கொஞ்சாமல், செல்லமாக அடித்துக்கிள்ளி துன்புறுத்தி கொஞ்சுவார்கள்.அவர்களுக்கு அதுபோல் குணம் போலிருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. மலர்களை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

  பதிலளிநீக்கு
 18. அழகிய மலர்களின் அணிவகுப்பு. அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 19. கண்கள் நிறை வண்ணங்கள். வண்ணங்கள் நிறை
  மலர்கள்.
  தொடுவதற்கே தயங்கும் பூக்களை ,யாராவது கசக்குகிறார்கள்
  என்று கேட்கவே கசக்கிறது.
  மனம் கவர்ந்த பதிவு .நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 20. அந்தப் பெண்மணி செய்த செயல் நிறையவே வருத்தம் தந்தது வல்லிம்மா.... இப்படியும் சிலர்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

  பதிலளிநீக்கு
 21. //நண்பர் பத்மநாபன் அவர்கள் சொல்லவே சொல்லி விட்டார் – ஆனாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது!//

  என் பேச்சுக்கு வீட்டில் என்ன மரியாதை கிடைக்கிறதோ அதே மரியாதை வெளியிலும் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். ஹா! ஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் கிடைக்கும் மரியாதையே வெளியே! ஹாஹா.... மாறுதல் இருந்தால் நல்லதல்ல! எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் தான் நல்லது.... :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....