சனி, 30 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – தொக்கு – சேச்சா – ஹம்சஃபர் - ஸ்ரவாணி


காஃபி வித் கிட்டு – பகுதி – 26

சாப்பிட வாங்க – பச்சைக்கத்திரிக்காய் தொக்கு….

எங்கள் பிளாக் ”திங்க” கிழமை பதிவாக கீதாஜி எழுதியிருந்த வழுதநஞ்சா தொக்கு பார்த்த ஒன்றிரண்டு நாட்களில் எங்கள் பகுதி காய்கறி மார்க்கெட்டில் இந்த வகை நீண்ட பச்சை நிற கத்தரிக்காய் கிடைத்தது. படம்: நன்றி... எங்கள் பிளாக்

சரி கீதாஜி சொன்ன முறையில் செய்து பார்க்கலாமே என வாங்கி வந்தேன். அடுத்த நாளில் செய்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டேன். ரொம்பவும் சுவையாகவே இருந்தது. பொதுவாக கத்தரிக்காய் என்றால் கொஞ்சம் அல்ல காத தூரம் ஓடுபவன் நான் – அதுவும் குழம்பில் தானாக போட்டால் பிடிக்கவே பிடிக்காது – ஒதுக்கி வைத்து விடுவேன். கத்தரிக்காய் கள்ளப்பருப்பு கூட்டு என்றால் சாப்பிடுவேன். தலைநகர் வந்த பிறகு Bபர்த்தாவாகச் செய்து சுவைப்பது உண்டு. கீதாஜி சொன்ன முறையில் செய்து சாப்பிடுவதும் பிடித்திருக்கிறது. கீதாஜி அவர்களுக்கு நன்றி. நான் செய்ததை படம் எடுக்கவில்லை என்பதால் இங்கே படம் எங்கள் பிளாகிலிருந்து! 

முகநூலில் ரசித்த வாசகம்:

உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும்! உனக்கான மாற்றத்தை உன்னால் மட்டுமே விதைக்க முடியும்! உன் வாழ்க்கையின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும்!

படித்ததில் பிடித்தது – சேச்சா – சுஜாதா:

அடுத்த ஞாயிறு அவன் வீட்டுக்குச் சென்றபோது கோடம்பாக்கத்தில், அந்தக் கல்லூரி வளாகத்தில் காற்றோட்டமாக குவாட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள். சேச்சாவின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் இருப்பது சந்தோஷமாக இருந்தது. தெரு விளக்குக்குப் பதில் சற்று அதிகப்படியாகவே குழல் விளக்குகள்! கட்டில், காத்ரெஜ் அலமாரி, பதினாலு இஞ்ச் டி.வி. நல்ல வீடு, அழகான மனைவி. செல்லம்மாள் அப்படியே இருந்தாள். மருமகளைப் பெண் போல அழைத்தாள். நப்பின்னை கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. கையில் மூன்று வயசுக் குழந்தை பெயர் ரங்கநாதன் அவ்வப்போது களுக், களுக் என்று சிரித்துக் கொண்டு இருக்க, சேச்சாவின் டேப் ரெக்கார்டரில் மாலியின் குழலிசை ஒலிக்க, ஏதோ ஒரு விதத்தில் நியாயம் நடந்துவிட்டதாகத் தோன்றியது. வெண்ணெயும் வெல்லமும் வைத்து அடை சாப்பிட்ட போது, “இந்த மாதிரியெல்லாம் டிபன் சௌகரியங்கள் இருக்குன்னா கல்யாணம் பண்ணிக்கலாம் போலத்தான் இருக்கு மாமி”, என்றேன். நப்பின்னை களங்கமில்லாமல் கன்னம் சிவந்தாள்!

சுஜாதா அவர்களின் சேச்சா எனும் கதையிலிருந்து ஒரு பகுதி. கதை முழுவதும் வாசித்தவர்களுக்கு இந்தக் கதையின் சோகமான முடிவு தெரிந்திருக்கலாம்!

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் - இரயில் பயணத்தில்:


ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் - வெளிப்புறத் தோற்றம்வாரணாசி இரயில் நிலையத்தில் ஓவியம்....

ப்ரயாக்ராஜ் நகரிலிருந்து தில்லி திரும்பும்போது ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் எனும் இரயிலில் தான் முன்பதிவு செய்திருந்தார் நண்பர். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரயில் இந்த இரயில். மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும், ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி மொபைல் சார்ஜிங் பாயிண்ட், இரவில் படிக்க வசதியாக சின்ன விளக்குகள், பெட்டி முழுவதும் இருக்கை எண் உட்பட அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலம், ஹிந்தி தவிர பார்வைத்திறன் இல்லாத நண்பர்களுக்காக ப்ரெயில் முறை அறிவிப்புகள் என அசத்தலாக இருக்கிறது இந்த இரயில் பெட்டிகள். மிகவும் சுத்தமாக இருந்தது இந்த பெட்டிகள். இரவு புறப்பட்டு காலையில் தில்லி வந்தடைவதற்குள் ஒரு வழி செய்து விட்டார்கள் பயணிகள் என்பது வருத்தம் தந்த விஷயம்! சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய கடமையும் கூட என்பதை மறந்து விடுகிறார்கள் மக்கள். அரசை மட்டுமே குறை கூறித்தானே நமக்கு பழக்கம். பெட்டியின் உள்ளே இருக்கும் வசதிகளைத் தவிர என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பெட்டிகளின் வெளியே இருந்த ஓவியங்கள். மிகவும் அழகாக ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பராமரிப்பார்கள் என்றால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் இது!

இந்த வாரத்தின் நிழற்படம்:


எங்களுக்கு இது தான் சிம்மாசனம்!

இந்த வாரத்தின் இசை:

இந்த நாளை இனிமையான இசையுடன் ஆரம்பிக்கலாமா… ஸ்ரீ விக்னராஜம் பஜே பாடல் இண்டியன் ராகா தளத்திலிருந்து….இதே நாளில் – பின்னோக்கிப் பார்க்கலாம்:ஒரு ஓவியம்/படம் கொடுத்து அதற்கு கவிதை அல்லது கதை எழுதச் சொல்லி அழைப்பு விடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படியான ஒரு ஓவியத்திற்கு, பதிவர் ஸ்ரவாணி எழுதி அனுப்பிய ஒரு கதை இதே நாளில் 2013-ஆம் ஆண்டு வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பதிவு…


இப்போது பதிவர் ஸ்ரவாணி எழுதுவதே இல்லை எனத் தோன்றுகிறது. அவரது வலைப்பூவும் திறக்க முடியவில்லை. இப்படி எழுதாமல் விட்ட பதிவர்கள் எத்தனை எத்தனை பேர்!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஆஹா நம்ம தொக்கு செஞ்சுட்டீங்களா! சூப்பர். நன்றாக இருந்தது என்று சொன்னதற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி! செய்வதும் எளிதுதான்.

  மிக்க நன்றி வெங்கட்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி!

   ஆமாம் செய்து பார்த்து விட்டேன் - உங்கள் செய்முறையில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. முகநூல் ...வரிகள் அருமை. உண்மைதானே

  சேச்சா படிக்க வேண்டும். வாசிக்கவே செமையா இருக்கே. சுஜாதாவின் கதைகள் ஓன்றிரண்டு அதுவும் தொடரில் ஆங்காங்கே சில பாகங்கள் மட்டுமே வாசித்ததுண்டு. எங்கேனும் கண்ணில் பட்டால் கல்லூரிக் காலத்தில். அப்பவே அவர் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதிலிருந்து சுஜாதா என்று, அரிதாக எங்கு பார்த்தாலும் அது பெட்டிச் செய்தியாக இருந்தாலும் வாசித்துவிடுவேன். அதன் பின் அது போலவே கற்றதும் பெற்றதும் ஆங்காங்கே சில பாங்கள் தான். அதிலேயே நான் ஈர்க்கப்பட்டேன்.

  சமீபத்தில்தான் ஸ்ரீராம் எபியில் குறிப்பிட்டிருந்த 14 நாட்கள் முழுவதும் வாசித்தேன். செம கதை. அவர் முடித்திருந்த விதம் மிக நன்றாக இருந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேச்சா - இணைய வழி தான் நானும் படித்தேன். சிறுகதை தான். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவ்வப்போது இப்படி புத்தகங்கள் படிக்க விருப்பம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. குட்மார்னிங்.

  பச்சைக்கத்தரிக்காய் தொக்கு. அடடே.... அதைச் செய்தே பார்த்தாச்சா... ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   செய்து பார்த்தாச்சு! இங்கேயும் பகிர்ந்து கொண்டாச்ச்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சேச்சா... நான் மிஸ் செய்த கதைகளில் ஒன்றாய் இருக்கும் போல. தேடிப்பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைய வழி தான் படித்தேன். கீழுள்ள லிங்கில் சில கதைகள் இருக்கின்றன - உங்கள் தகவலுக்காக!

   http://www.valaitamil.com/literature_short-story_sujatha/

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ஹம்சபர் ரயில் வண்டித் தகவல்கள் சிறப்பு. நம் மக்கள் என்று மாறுவார்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் மக்கள் என்று மாறுவார்களோ? மாற்றம் மக்கள் விரும்பாத வரை நிகழப் போவதில்லை! இங்கே ஒரு வாக்கியம் சொல்வார்கள் - தடி எடுத்தால் தான் திருந்துவார்கள் என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் குறித்து வாசித்தேன் இங்க உங்க அனுபவம். ஓவியம் அழகா இருக்கு இப்ப எல்லா ஸ்டேஷன்களிலும் கூட இப்படியான அந்தந்த மாநிலத்தின் ஊரின் கதை சொல்லும் ஓவியங்கள் ப்ளஸ் இந்தியாவின் இடங்கள் என்று வரையப்பட்டுள்ளது.

  சுத்தம் என்பது மக்கள்தான் கடைபிடிக்க வேண்டும் அரசைச் சொல்லிக் குத்தமில்லை. மக்கள் ரொம்பவே அசுத்தம் செய்கிறார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இரயில் நிலையங்களில் இப்படி ஓவியங்கள் வரைந்து வருகிறார்கள். இரயில் வண்டிகளிலும் வெளிப்புறத்தில் ஓவியங்கள்! சிறப்பான விஷயம். தொடர்ந்து பராமரிக்க வேண்டும்....

   மக்கள் ரொம்பவே அசுத்தம் செய்கிறார்கள் - வேதனையான உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 7. நிழற்படம் ரசிக்க வைக்கிறது. பழைய பதிவில் முதல் கமெண்ட்டே நான்தான் போல!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய பதிவில் உங்கள் கமெண்ட்! பல பதிவுகளில் உங்கள் கமெண்ட் தான் முதலில்! தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றி

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. ஓவியங்கள் அழகு. நிழற்படம் குழந்தைகள் எப்போதுமே அழகுதான்.

  வீடியோ பாடல் அப்புறம் கேட்கிறேன்...

  ஸ்வராணிய்ன் கதைக்கு..போகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடியோ பாடல் ம் முடிந்த போது பாருங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 9. அனைத்தும் அருமை.
  முகநூல் வாசகம் மேலும் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 10. சுஜாதாவின் இந்த கதையை படித்த நியாபகம் இல்லை.
  உண்மை தான் மற்றம் மக்களிடம் இருந்து வந்தால் தான் அரசியல்வாதிகளும் திருந்துவார்கள்

  நிழற்படம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதைக்கான சுட்டி மேலே தந்திருக்கிறேன் சொக்கன். அச்சுட்டியில் மேலும் சில கதைகளும் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 11. தொக்குனு பார்த்ததும் ஆதி போட்ட மாங்காய்த் தொக்குனு நினைச்சேன். காஃபி வித் கிட்டு சுவையாக இருக்கிறது. ரயில் பிரயாணத்தில் பயணிகள் செய்யும் தொந்திரவுகள் அதிகம் தான். அதிலும் குப்பை போடுவதில் மன்னர்கள். சொன்னால் நம்மிடம் சண்டையும் போடுவார்கள். இதில் இன்னமும் நம் மக்கள் திருந்தவில்லை. அன்னம் விடு தூது மத்தியானமாய்ப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் திருந்த நினைப்பதும் இல்லை! நாங்க இப்படித்தான் இருப்போம் என முடிவோடு இருந்தால் என்ன செய்ய! ஆதி போட்ட மாங்க தொக்கு! முகநூலில் தான் இருக்கிறது. இங்கே இன்னும் வரல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 12. சேச்சா படித்த ஞபகம் இல்லை. காப் வித் (வெங்)கிட்டு சுவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 14. அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது.
  பாடல் இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 15. தமயந்தி தான் நளனுக்கு அன்னத்தை தூது விடுத்தாள். இது பற்றிய ரவிவர்மா சித்திரம் உள்ளது.

  https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Ravi_Varma-Princess_Damayanthi_talking_with_Royal_Swan_about_Nala.jpg/325px-Ravi_Varma-Princess_Damayanthi_talking_with_Royal_Swan_about_Nala.jpg

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் அனுப்பிய சுட்டி மூலம் ஓவியம் கண்டேன். அழகான ஓவியம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 16. சுஜாதாவின் எள்ளல் கலந்த தொய்வில்லாத விறு விறு நடைக்கு நான் அடிமை.

  அவரை நினைவுகூர்ந்து கணிசமான பதிவுகளைப் பழைய என் வலப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலப்பக்கங்களில் > வலைப்பக்கங்களில்

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி.

   நீக்கு
  3. அவ்வப்போது தட்டச்சுப் பிழைகள் வந்து விடுகின்றன.... வலை என்றே படித்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி.

   நீக்கு
 17. சேச்சா கதை படித்த நினைவு இருக்கிறது என்று படித்தேன் இத்தனை சோகத்தை எதிர்பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோகமான முடிவு தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. சகோதரி கீதா ரெங்கன் பகிர்ந்த பச்சை கத்திரிக்காய் தொக்கு செய்து சாப்பிட்டு விட்டீர்களா? பாராட்டுக்கள்.

  முகநூல் வாசகம் நன்றாக இருந்தது.

  படித்ததில் பிடித்தது. சேச்சா கதை படித்தாக நினைவு இல்லையெனினும் புத்தகம் கிடைத்தால் படிக்கலாம். சோக முடிவு என சொல்லி விட்டீர்களே.!

  ஹம்சஃபர் ரயில் வண்டி பற்றிய தகவல்களுக்கு நன்றி. அதில் வரைந்துள்ள ஓவியங்கள் ரசிக்கும்படியாக உ‌ள்ளது. எந்த ரயில் வண்டியிலும் பயணம் செய்பவர்கள் குப்பைகளை கண்டபடி போடுவது... பார்க்கும் போது கஸ்டமாகத்தான் உள்ளது.

  குழந்தைகளின் அப்போதைய சிம்மாசனம் அழகாகத்தான் உள்ளது.

  அன்னம் விடு தூது கதை அருமை. முந்தி தங்கள் பதிவில் படித்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேச்சா மற்றும் வேறு சில கதைகளுக்கான சுட்டி மேலே பின்னூட்டத்தில் தந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 19. அனைத்தும் அழகிய தொகுப்பு.. புகைப்படத்தில் குழந்தைகளின் அழகோ அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 20. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம். பலவித செய்திகளுடன் காஃபி வித் கிட்டு
  பிரமாதம். ஸ்ரவாணியின் கதை ரொம்ப அழகு எப்படி முடிந்ததோ.
  சுஜாதா சாருக்குள் இப்படி கதை எழுத எப்படித்தான் தோன்றியதோ.

  ஸ்ரீ விக்னராஜம் பஜே காணொளி பிரமாதம். காலுக்கு செருப்பு போடாமல் குல்லாய் அணிந்த சிறுவன். சிம்மாசனமாக நினைத்து உட்கார்ந்திருப்பது அழகு.

  நீங்கள் கொடுத்த லிங்க் பயனுள்ளது.
  கத்திரிக்காய் ஊறுகாய் நன்றாக இருந்திருக்கும்
  மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 21. அனைத்தும் அருமை வெங்கட்ஜி..விரிவாகச் சொல்ல இயலவில்லை கொஞ்சம் பணிகள் கூடுதலாகிப் போனதால்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணிச்சுமை - எனக்கும் இங்கே வருடாந்திர கணக்கு முடிவு.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 22. நேற்று காணொளியும் பாட்டும் கேட்டேன் ஜி மிக நன்றாக இருந்தது.

  ஸ்ரவானி இனிதன வாசிக்கனும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....