வியாழன், 28 மார்ச், 2019

சாப்பிட வாங்க – அம்ரூத் கி சட்னி
தோசையும் தொட்டுக்கொள்ள அம்ரூத் கி சட்னியும்


’தம்பி டீ இன்னும் வரல! வடிவேலு அவர்களின் புகழ்பெற்ற வசனம்! பலமுறை நானும் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த மாதிரியே “சட்னி இன்னும் வரல!” என்று சொல்ல வேண்டி இருந்தது திருமதி சுஜாதா அவர்களிடம்! சமீபத்தில் தான் ஒரு புதிய சமையல் குறிப்பினை எங்கள் குழுவில் பகிர்ந்து கொண்டார் அவர். செய்முறையை எழுதி அனுப்பச் சொல்லி இருந்தேன். அவருக்கு இருக்கும் பணிச்சுமையில் எழுதி அனுப்பவே இல்லை. இணையத்தில் ஒரு செய்முறை கிடைக்க, அந்த முறையில் செய்து பார்த்தேன். நன்றாகவே இருந்தது. என்றாலும், அவர் சொல்லும் முறை என்ன என்பதைக் கேட்டு இங்கே வெளியிட நினைத்ததால், மீண்டும் அவரைக் கேட்க, செய்முறையை அனுப்பி வைத்தார். அந்த குறிப்பு தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது! 


தில்லியில் இருக்கும் நண்பரின் இல்லத்தரசி – எங்கள் குழுவில் ஒருவரான திருமதி சுஜாதா நரசிம்மன் அவர்கள் சொல்லிய ஒரு உணவு வகை. தலைநகர் வாசி – கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்து நிறைய அனுபவங்கள் பெற்றவர். நிறைய விஷயங்கள் தெரிந்தவர். தொடர்ந்து இங்கே தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் என நம்புவோம்.

தலைப்பில் அம்ரூத் எனப் பார்த்து இது என்ன புது வகையான காய்கறி என பயம் கொள்ள வேண்டாம். நாம் கொய்யா என அழைக்கும் பழம்/காயைத் தான் ஹிந்தியில் அம்ரூத் எனச் சொல்வார்கள். பொதுவாக கொய்யாக் காய் அல்லது பழம் அப்படியே சாப்பிடுவது தானே நம் ஊர் வழக்கம். வடக்கில் அதிலும் ஒரு வித சட்னி செய்கிறார்கள். கொய்யா வைத்து எப்படி சட்னி செய்வது என்பதை இன்று பார்க்கலாம்! ரொம்பவும் சுவையாக இருக்கும் இந்த அம்ரூத் கி சட்னி.

தேவையான பொருட்கள்:
கொய்யா – 1 அல்லது 2 கொஞ்சம் காய்வாடாக இருத்தல் நலம்!
பச்சை மிளகாய் – 2-3
கொத்தமல்லி தழை [ஹிந்தியில் தனியா!]– சிறிதளவு
பூண்டு – 2 [அ] 3 பல் – பூண்டு பிடிக்காதவர்கள் விட்டு விடலாம்!
இஞ்சி – 1 இஞ்ச் அளவு துண்டு
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை ¼ ஸ்பூன்

செய்முறை:

கொய்யாவினை நன்கு கழுவி துடைத்து, அதன் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சுத்தம் செய்த தனியா, காம்பு நீக்கிய பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்திருக்கும் கொய்யாவுடன் சேர்த்து மிக்சி ஜாரில் போடவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

மிகவும் கொஞ்சமாக தண்ணீர் கலந்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்!


அவ்வளவு தான் – அம்ரூத் கி சட்னி தயார்!இந்த அம்ரூத் கி சட்னி கோதுமை பராட்டா, சப்பாத்தி, பருப்பு சாதம்/சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்! மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த அம்ரூத் கி சட்னியை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.  உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நான் செய்த போது தோசைக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன். சப்பாத்தியுடனும் சாப்பிட்டுப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது.

நாளை மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஆஹா அம்ரூத் சட்னி! நான் செய்ததில்லை கேள்விப்பட்டதுண்டு.

  கொய்யா மிகவும் காயாக இருந்தால் பச்சடி செய்வதுண்டு...

  சட்னி எப்படினு பார்க்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

   கொய்யாவில் பச்சடி - சாப்பிட்டதில்லை. எப்படி எனச் சொன்னால் அதையும் செய்து பார்த்துவிடலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 2. வெகு எளிதாக இருக்கிறதே. அடுத்த முறை காய் கிடைத்தால் செய்துவிட வேண்டியதுதான்.

  மிக்க நன்றி சுஜாதா அவர்களுக்கு...உங்களுக்கும் வெங்கட்ஜி இப்படி உங்கள் நட்பு வட்டத்து ரெசிப்பிக்களைப் பகிர்வதற்கு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எளிதான செய்முறை தான். நிமிடங்களில் தயார் செய்து விடலாம் கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. குட்மார்னிங்.

  அவசரத்தில் கிட்னி என்று படித்துவிட்டேன்! ஹிஹிஹி...​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   அவசரத்தில் கிட்னி! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஹி.. ஹி.. உண்மையிலேயே நானும் அப்படித்தான் படித்து விட்டேன்.

   நீக்கு
  3. ஹாஹா... நீங்களுமா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. ஹலோ.... தேவைப்படும் பொருட்களில் தனியாவே சொல்லவில்லை. அப்புரம் எப்படி நாங்கள் திடீரென அதை எடுத்துக்கொள்வது?!!!!

  ஹா... ஹா... ஹா... தனியா என்பதால் தனியா சொல்லிட்டீங்களோ!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஹிந்தி தனியா! :) கொத்தமல்லி என்பதை தான் ஹிந்தியில் இங்கே தனியா என எழுதி இருக்கிறேன் ஸ்ரீராம்! அதனால் இப்போது ஹிந்தியில் தனியாவும், தனியா சேர்த்து இருக்கிறேன்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அது சரி...

  கொய்யாவே இனிப்பு.. அப்புறமும் எதற்கு சர்க்கரை?

  இதுவரை இப்படிச் செய்து பார்த்ததில்லை. ஒருமுறை செய்து பார்த்துவிடுகிறேன். என் பாஸ் கிட்ட சொல்றேன். அவிங்களுக்கும் இதே பெயர்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காயில் அத்தனை இனிப்பு இருக்காதே! சர்க்கரையும் மிகக் குறைந்த அளவு தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அருமையான அம்ரூத் கி சட்னி .
  செய்முறை விளக்க படம் அருமை.
  செய்து பார்க்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது செய்து பாருங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. அம்ரூத் ஜாம் செய்து சுவைத்ததுண்டு, சட்னி செய்யாலாம் என்பதை தெரியப்படுத்தியுள்ள சுஜாதா நரசிம்மன் மற்றும் வென்கட் அவர்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. ஆஹா ...அம்ரூத் கி சட்னி

  ரொம்ப ரொம்ப புதுசு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் புதிதா.... செய்து பாருங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 13. செய்துபார்க்கிறேன். கொய்யாவில் விதை அதிகம் உண்டே... அரைத்தால் கரகரவென இருக்காதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்முறையிலேயே சொல்லி இருக்கிறேன் - விதைகளை நீக்கி விட்டு என! அந்த வரியை விட்டு அடுத்த வரிக்கு போய் விட்டீர்கள் போல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. நீங்கள் செய்ததால் அது ரொம்ப ருசியாகத்தான் இருக்கு,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... நீங்கள் செய்தாலும் நன்றாகவே இருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி.

   நீக்கு
 15. ஆ..கொய்யாவில் சட்னியா. இது புதுசா இருக்கே. இங்கு அடிக்கடி வாங்குவதுண்டு. ஊரில் வீட்டில் பெரிய மரமே இருந்தது. நிறைய காய்க்கும். செய்து பார்க்கிறேன். தைராய்டுக்கு கொய்யா சாப்பிட்டா நல்லது என்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொய்யா நல்லது தான். முடிந்தால் இந்த சட்னி செய்து பார்த்து சொல்லுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. ஆமாம். கொய்யாவிலே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 17. கொய்யாப் பழம், காயில் ஜெல்லி செய்வேன். சட்னி செய்ததில்லை. வாங்கினால் ஒரு முறை செய்து பார்க்கணும்! பூண்டு இல்லாமல் தான்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூண்டு இல்லாமல்! :) அது இல்லாமலும் நன்றாகவே இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 18. அந்த கொய்யா மட்டும் கையில கிடைக்கட்டும். சட்னி செஞ்சுடறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 19. சூப்பரா இருக்கு கொய்யா சட்னி ..நான் வாரம் 2 கொய்யா வாங்கிடுவேன். இங்கே விலை தான் அதிகம்
  நிச்சயம் செய்து பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே சில சமயங்களில் கிலோ 100 ரூபாய் கூட விற்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 20. பதில்கள்
  1. வடக்கத்திய சட்னி! :) நம் ஊரில் நானும் கேள்விப்பட்டதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....