வியாழன், 21 மார்ச், 2019

சாப்பிட வாங்க – உப்பு நார்த்தங்காயில் ஒரு ரெசிப்பி - பதிவர் அறிமுகம் - நிர்மலா ரங்கராஜன்
இந்த வாரம் ஒரு புதிய அறிமுகம். இந்த வலைப்பூவில் ஏற்கனவே தில்லி நண்பரான பத்மநாபன் மற்றும் திருமதி சுதா த்வாரகநாதன் அவர்கள் எழுதி வருவது நீங்கள் அறிந்த விஷயம். இந்த வாரம் இன்னும் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி. பதிவுலகில் இப்போது புதிய பதிவர்கள் வருவதும் எழுதுவதும் குறைந்து விட்டது. இருந்த பலரும் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என தங்களது தளங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். புதியதாக வலைப்பூ ஆரம்பித்து எழுத வைப்பது கடினமாக இருக்கிறது. சரி நம் தளத்திலேயே வாரம் ஒரு பதிவாவது இப்படி சில நண்பர்களை பதிவு எழுதச் சொல்லி வெளியிடுவது எனக்கு வழக்கமாகி இருக்கிறது. நானே எழுதிக் கொண்டிருந்தால் யார் படிப்பது! ஹாஹா…

எங்கள் பகுதியில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கு ஒரு வேலையாகச் சென்ற போது அவர்களின் இல்லத்தரசி ஒரு சிறிய டப்பாவில் [சந்தடி சாக்குல கொஞ்சம் பெரிய டப்பாவில் கொடுத்திருக்கலாம் எனச் சொல்வதாக யாராவதாக நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல!] உப்பு நார்த்தங்காயில் செய்த ஒரு பதார்த்தத்தனைக் கொடுத்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்க சார் எனக் கொடுத்து அனுப்பினார். அடுத்த நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து என்ன சமைக்க என யோசித்தபோது சாதம் மட்டும் வைத்து இந்த நார்த்தங்காய் சேர்த்து சாப்பிடலாம் என முடிவு எடுத்தேன்! ஆஹா சுவை ரொம்பவே நன்றாக இருந்தது. குழம்பு, ரசம், பொரியல் என டீடெய்லாக சமைக்க முடியாத போது இந்த மாதிரி சாப்பிடலாம் என்பது ஒரு வசதி. கொடுத்து உதவிய சகோதரி நிர்மலா ரங்கராஜன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

இதை எப்படிச் செய்வது என்று எழுதி அனுப்புங்கள் என்று சொல்லி இருந்தேன். இரண்டு மூன்று முறை சொன்ன பிறகு எழுதி அனுப்பியதோடு படங்களும் அனுப்பி வைத்தார். வாருங்கள் இந்த நார்த்தங்காய் பதார்த்தத்தினை எப்படிச் செய்வது என்பதை திருமதி ரங்கராஜன் அவர்களின் வார்த்தைகளில் பார்க்கலாம்! Floor is now handed over to திருமதி நிர்மலா ரங்கராஜன்! [அப்பாடி ஒரு வழியா கொடுத்தாண்டா சாமி! புதிய பதிவர்னு சொல்லிட்டு அவனே எழுதிட்டு இருக்கான்!] – வெங்கட், புது தில்லி

உப்பு நார்த்தங்காயில் ஒரு ரெசிப்பி:

அனைவருக்கும் வணக்கம். நான் நிர்மலா ரங்கராஜன், புது தில்லி வாசி. இந்தப் பதிவின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நார்த்தங்காய் கிடைக்கும்போது அதனை நறுக்கி உப்பு போட்டு வைத்திருப்பது நம் எல்லோர் வீடுகளில் இருக்கும் ஒரு வழக்கம். அந்த நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் வைத்து ஒரு புதிய ரெசிப்பி எப்படிச் செய்வது என்பதை உங்களுக்கு இன்றைக்கு சொல்லப் போகிறேன். வாருங்கள் இதற்கு என்னென்ன தேவை எனப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:உலர்ந்த உப்பு நார்த்தங்காய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், வேர்க்கடலை, கறிவேப்பிலை, வெல்லம் சிறிதளவு, நல்லெண்ணெய் தேவையான அளவு.

மேல் பொடிக்கு: வெந்தயம், பெருங்காயம், மிளகாய், மல்லி விதை.

செய்முறை:

முதலில் நார்த்தங்காய் உப்பு ஊறுகாயை விதைகளை நீக்கிவிட்டு சுடுதண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியிலிட்டு நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு மேல் பொடிக்கு தேவையான பொருட்களையும் தனித்தனியாக சிறிதளவு எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து பொடி செய்து கொள்ளவும் (மல்லி விதையை மட்டும் எண்ணையில்லாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்).

வாணலியில் (மண்சட்டியாக இருந்தால் இன்னும் சிறந்தது) எண்ணை விட்டு கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கடுகு, மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனோடு சிறிதளவு மஞ்சள் தூள், வெல்லம் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்றாக எண்ணை பிரியும் வரை கிளறவும். எண்ணை பிரிந்து வரும் போது இறக்கிவிடவும்.

குறிப்பு: ஊறுகாயில் உப்பு முன்பே சேர்ந்திருப்பதால் தனியாக உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கலாம். இந்த விழுதை மாங்காய் தொக்கு போலவும் செய்து மோர் சாதம் மற்றும் பருப்பு சாதத்தோடு பயன் படுத்தலாம்.  இந்தக் குறிப்பின் படி நீங்களும் செய்து பார்த்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவின் மூலம் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

நிர்மலா ரங்கராஜன்
புது தில்லி

28 கருத்துகள்:

 1. காலை வணக்கம் வெங்கட்ஜி

  உப்பு நார்த்தங்காய் பதார்த்தம் பார்த்ததும் நார்த்தங்காய் பச்சடி அல்லது குழம்புனு சொல்றது என் மாமியார் செய்வாங்க கத்துக் கொண்டேன். அது போல இருக்கே...பார்க்க

  முழுவதும் பார்த்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி!

   நார்த்தங்காய் பச்சடி அல்லது குழம்பு - மாமியார் செய்வது! :) மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. நார்தாங்காய் புளிக்குழம்புனு மாமியார் செய்வாங்க. இதேதான் ஆனால் கடலை சேர்க்க மாட்டாங்க வதக்கும் போது. சாதத்தில் கலந்து (புளியோதரை போல..) அப்ப வறுத்த கடலையும் சேர்த்துக் கலப்பாங்க. ஆனால் அது சில சமயம்தான். கடலை சேர்க்காமலும் செய்வதுண்டு. சூப்பரா இருக்கும். மாமியாரிடம் கற்றுக் கொண்டேன். (அளவு எல்லாம் கண்ணளவுதான் ஹா ஹா ஹா ஹா) நான் கண்ணளவில்தான் செய்வது...எங்கள் வீட்டில் ரொம்பப் பிடிக்கும்..

  நிர்மலா அவங்க அளவும் சொல்லிருக்காங்க. அளவு நோட் செய்து கொண்டேன் கடலையும் போட்டு செய்துட்டா போச்சு.

  ரொம்ப நல்லாருக்கு பார்க்கவே. நன்றி நிர்மலா அவர்களுக்கும் வெங்கட்ஜிக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாவிடம் எனக்கு ஆச்சர்யமே இதுதான். கிட்டத்தட்ட அவர் எல்லாவகை ரெசிப்பிகளையும் அறிந்திருப்பது என்பதோடு ஒருமுறையாவது செய்தும் பார்த்திருக்கிறார்.

   நீக்கு
  2. கண்ணளவு - :) அது தான் பலருக்கும். ஆனால் சரியாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  3. உங்கள் கருத்துடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். அவருக்கு எத்தனை திறமை! வாழ்த்துகள் கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. குட்மார்னிங்.

  புதிய பதிவர் அறிமுகமா? பலே பலே... வருக வருக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதியதோர் அறிமுகம். தொடர்ந்து எழுதச் சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து எழுதட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. இது போல செய்து சாப்பிட்டதில்லை. புதிதாக இருக்கிறது. ஒருமுறையாவது செய்து பார்க்க வேண்டும். உப்பு நார்த்தங்காய் எங்கள் வீட்டில் முன்னெல்லாம் ஏராளமாக ஸ்டாக் இருக்கும். இப்போதேனு சமீபத்தில் கொஞ்சம் கடையில் வாங்கவேண்டிய நிலை வந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இது புதிது தான். அதனால் தான் இங்கே பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். சுவைத்துப் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்தது! நீங்களும் செய்து பாருங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. புதிய பதிவர் திருமதி. நிர்மலா ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

   நீக்கு
 8. மிக அருமையான நார்த்தங்காய் பச்சடி, அல்லது துவையல்.
  மாயவரத்தில் வருடம் முழுவதும் உப்பு நார்த்தங்காய் இருப்பது போல் வீட்டுக்கு வீடு போட்டு வைத்துக் கொள்வார்கள், நமக்கும் கொடுப்பார்கள். அவர்கள் இப்படி செய்து எனக்கு கொடுப்பார்கள்.
  உடல் நலம் சரியில்லை என்றால் வாய் கசக்கும் அப்போது இந்த பச்சடி மிக நன்றாக இருக்கும்.

  நிர்மலா ரங்கராஜனுக்கு வாழ்த்துக்கள். செய்முறை படங்களுடன் அருமை. தொடர்ந்து பார்க்கலாம் இனி அவரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து எழுதினால் சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 9. அதென்னவோ இப்போது வரும் சமையல் குறிப்புகள் பலதும் எனக்குப் பிடிப்பதில்லை கசப்பு என்றால் எனக்குப் பிடிக்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   நீக்கு
 11. நல்ல ஐடியாதான். ஒருவேளை மாங்காய் ஊறுகாய்லயும் இதுமாதிரி பண்ணலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாங்காய் ஊறுகாய்? நீங்க செய்து பார்த்து சொல்லுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 12. மிக அருமையாகச் செய்திருக்கிறார். நார்த்தங்காய் வாய்க்கும் ருசி. பல்லுக்கும் நல்லது.

  நன்றி வெங்கட். திருமதி நிர்மலா ரங்கராஜனுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 13. நாரத்தங்காய்த் தொக்கு அல்லது பச்சடி. அடிக்கடி செய்வது உண்டு. பச்சை நாரத்தங்காயிலும் பண்ணுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....