சனி, 2 மார்ச், 2019

காஃபி வித் கிட்டு – உயிர்வலி – பெண் – கச்சேரியும் உணவும்
காஃபி வித் கிட்டு – பகுதி – 22

ராஜா காது கழுதைக் காது - கச்சேரியும் உணவும்

சென்ற வாரம் சனிக்கிழமை தலைநகரில் உள்ள சண்முகானந்தா சங்கீத சபா TTD பாலாஜி மந்திர் வளாகத்தில் இருக்கும் த்யான மந்திர் அரங்கில் ”ரஞ்சனி-காயத்ரி” கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு பற்றி முன்னரே அறிந்திருந்தாலும், சரியாக மறந்து விட்டது.

எப்போதும் போல இரவு எட்டே முக்கால் மணிக்கு கோவில் செல்லும்போது கச்சேரி நடப்பது பார்த்து அரங்கிற்குள் சென்றேன். கடைசி இரண்டு பாட்டுகளும், மங்களமும் கேட்க முடிந்தது. அபங்க் ஒன்று அருமையாக பாடினார்கள் – எப்போதும் குறை சொல்லும் ஒரு அரைகுறை ஞானஸ்தர் “பாட்டு அவ்வளவு நல்லா பாடலை” என்றார். அவரின் அடுத்த குறை – “இரவு ஒன்பதரை மணி வரை பாட்டு நிகழ்ச்சி – சாப்பாடு போட வேண்டாமோ? [இலவச சாப்பாடு என்பதையும் சொல்ல வேண்டும்!] Khகானா-விட Gகானா தான் முக்கியம் இல்லையா! [ஹிந்தி பாடம் – Khகானா – உணவு…. Gகானா – பாடல்]

உயிர்வலி – படித்ததில் பிடித்தது:

சுந்தர்ஜி – இவரும் வலையுலகில் எழுதிவந்தவர் தான். சுந்தர்ஜி, ரிஷபன் ஜி, மோஹன் ஜி என வலையுலகில் எழுதி வந்த பலரும் இன்றைக்கு முகநூலில் மூழ்கிவிட்டார்கள். முகநூலில் நானும் உண்டு என்பதால் அவர்கள் வெளியிடும் தகவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் சுந்தர்ஜி அவரது “நூற்றாண்டு உறக்கம்” கவிதைகள் தொகுப்பு கிண்ட்லில் வெளியானது பற்றி எழுதி இருந்தார். சில நாட்களுக்கு மட்டும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதி இருக்க, தரவிறக்கம் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி படித்த ஒரு கவிதை கீழே….

உயிர்வலி….

எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.

ஓணானுக்கு ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.

பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றை அடி.

நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.

மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
காடைக்கும் அணிலுக்கும்
அதனதற்கேற்றார் போல்.

மீனுக்கு வலைவீச்சு.
யானைக்கு பெரும்பள்ளம்.

மானுக்கு ஒற்றைக்குறி.
காளைக்கும் கழுதைக்கும் பெரும்பாரம்.

ஒட்டகத்துக்கு முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.

வாழாதிருந்து சாகிறான் மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன உயிர்களெல்லாம்…

ஒரு குறும்படம் – எத்தனை பிரச்சனைகள் பெண்களுக்கு:

சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம்.  எத்தனை பிரச்சனைகள் இந்தப் பெண்களுக்கு…..  மனதைத் தொட்ட குறும்படம். நீங்களும் பாருங்களேன்…
திருநங்கைகள் – பேருந்துப் பயணத்தில்:

நெய்வேலி செல்லும்போது பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் கடை கேட்பது போல பஸ் கேட்பதை ஆறு திருநங்கைகள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் வாய்ச் சண்டை – வரிசைக் கிரமமாக ஒவ்வொரு பேருந்து வந்ததும் ஒவ்வொரு திருநங்கை அப்பேருந்தில் ஏறிக்கொண்டு காசு கேட்கிறார். வரிசை மாற்றி பேருந்தில் ஏறிவிட்டார் என அவர்களுக்குள் சண்டை. எங்கள் ஓட்டுனரும் நடத்துனரும் உணவகத்தில் உணவு சாப்பிட்டு வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிடம் ஆனாலும் சண்டை தீர்ந்தபாடில்லை. நடுவே ஒரு நடத்துனர் அவர்களில் ஒருவரிடம் சில்லரை கேட்க, நூறு ரூபாய்க்கு சில்லரை கொடுத்தார். காலையில் குளித்து அலங்கரித்து வந்திருந்தவர்களில் மிகச் சிறியவருக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வாரத்தின் நிழற்படம்:

சமீபத்தில் எங்கள் பகுதியில் ஒரு நிகழ்வு – அங்கே நிழற்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். வெளியே அப்பகுதி கூர்க்காக்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை படம் எடுக்கக் கேட்க, சில படங்கள் எடுத்தேன். செங்கல்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததால் கைகளில் உள்ள மண்ணைத் தட்டிக் கொண்டார்கள். அப்போது எடுத்த படங்களில் ஒன்று…இந்தப் படம் உங்களுக்குள் ஏற்படுத்தும் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லலாமே… 

முகநூலில் இருந்து - குறுஞ்செய்தி:

உன்னை யார் வேண்டுமானாலும் ஒதுக்கி வைக்கலாம் ஆனால் நீ ஒதுக்கி வைக்க வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான் – “என்னால் முடியாது” என்ற வார்த்தையை.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!!

  நேற்று பிஸி போலும்!!

  இங்கு ஒரு கால் எபி க்ரியேஷன்ஸில் (நம்ம ஏரியா!!) ஒரு கால் என்று...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி.

   Schedule செய்ய, தட்டச்சு செய்து பதிவிட நேரம் இல்லை. அதனால் மாதத்தில் முதல் நாள் பதிவு இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. வெங்கட்ஜி நம்புங்கள் நீங்கள் ரஞ்சனி காயத்ரி கச்சேரிக்குப் போயிருப்பீர்கள் என்று நினைத்தேன் என் தங்கை (குர்காவ்ன்) அவள் கணவன் கச்சேரிக்கு வந்திருந்து வாட்சப்பில் அப்டேட் செய்து கொண்டே இருந்தாள். அவளிடம் சொல்ல நினைத்தேன் வெங்கட்ஜி வந்திருப்பார் பார்த்தால் அடையாளம் தெரிந்துவிடுன் முடிந்தால் பார் என்று அப்புறம் அவள் அப்டேட்டில் விடுபட்டுவிட்டது...

  நன்றாக இருந்தது என்று சொன்னாள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... முன்னமே தெரிந்து இருந்தால் சந்திக்க முயற்சி செய்திருக்கலாம். வரும் 10-ஆம் தேதி மாலை அதே இடத்தில் சுதா ரகுநாதன் கச்சேரி இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. குட்மார்னிங். ர.கா கச்சேரி நேரில் ஒரே ஒரு முறை கேட்டிருக்கிறேன். அவர்கள் ஸ்பெஷல் அபாங் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபங்க் அவர்களது ஸ்பெஷாலிட்டி... அன்றைய கச்சேரியிலும் பாடினார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. சுந்தர்ஜியின் கவிதை அபாரம். திருநங்கைகள் - பாவமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை எனக்கும் பிடித்தது. தொகுப்பு இன்னமும் வாசிப்பில்.

   திருநங்கைகள் பாவம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. படத்துக்கு வரி...

  "உள்ளங்கையில் உலகம் தெரிகிறதா என்று பார்க்கிறேன்!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை சூப்பர் ஸ்ரீராம்!!! ரசித்தேன்!

   கீதா

   நீக்கு
  2. உள்ளங்கையில் உலகம் தெரிகிறதா என்று பார்க்கிறேன்... ஆஹா... அசத்தல்

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. நானும் அவரது வரிகளை ரசித்தேன் கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. சுந்தர்ஜி யின் கவிதை அட்டகாசம்!!! இறுதி வரி செம!!! மிகவும் ரசித்தோம் ஜி!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. பாராட்டுகள் அனைத்தும் சுந்தர்ஜி அவர்களுக்கே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. குறும்படம் அப்புறம் பார்க்கிறேன் ஜி.

  திருநங்கைகள் மிகவும் பாவம் ஜி! நான் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தப்ப அவர்களில் மூன்று பேர் பங்களூரில் இருப்பவர்களை அப்போது சும்மா பேச்சு கொடுத்து ஃபோட்டோ கூட எடுக்க அனுமதித்தனர் பதிவும் போட்டேன்...நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. மூன்று பேரும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருநங்கைகள் பாவம் தான். அவர்களில் சிலரால் எல்லோருக்கும் அவப் பெயர். உங்கள் பதிவும் நினைவில் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 9. குழந்தைகள் படம் அழகு!!

  நாளைய உலகம் நம் கையிலாம்! சொல்றாங்க நீ என்ன சொல்லற..

  நாளையைப் பத்தி என்னத்துக்கு பேசுற...ஏய் இப்ப அங்க பாரு..இங்க விளையாடினதுக்கு .நம்மள சத்தம் போட வராங்களோ..என்று பெரிய குழந்தையின் கையைத் தட்டுகிறாளோ சின்னவள்?!!!

  கீதா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிழற்படம் உங்களுக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை இங்கே சொன்னதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. குறுஞ்செய்தியை நீங்கள் இரசித்ததில் மகிழ்ச்சி கீதாஜி!

   நீக்கு
 11. ரத்தினச்சுருக்கமான செய்திகள். நிழற்படம் மனதைத் தொட்டுவிட்டது.குழந்தைகளின் யதேச்சையான உணர்வுகளின் வெளிப்பாடு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. சுந்தர்ஜி அவர்களின் கடைசி வரிகள் செம...

  நம்ம கில்லர்ஜி மட்டும் அந்தப்பக்கம் போகவே மாட்டார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 14. தூசு தட்டுவதுபோல் கவலைகளை தட்டி விட முடிந்தால்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் கவலைகளை ஊதித் தள்ளிவிடலாமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 15. பொதுவாக திரு நங்கைகள் நம்மனதில் ஒரு காழ்ப்பு உணர்வைத்தான் ஏற்படுத்துகிறார்கள்அஹு பெரும்பாலானவரின் நடவடிக்கைகளால் என்று தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களில் சிலரால் இப்படி எல்லோருக்கும் கஷ்டம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. நல்ல பதிவு. ரஞ்சனி - காயத்ரி கச்சேரி மட்டுமில்லை, பொதுவாகக் கச்சேரிகளே யூ ட்யூபிலும் தொலைக்காட்சிகளிலும் பார்ப்பது/கேட்பது தான். நேரில் சென்றதில்லை. சுந்தர்ஜியின் கவிதைத் தொகுப்பு வெளியீடு பற்றி நானும் முகநூலில் படித்தேன். கவிதை அருமை! திருநங்கைகளுக்கு இப்போதெல்லாம் மறு வாழ்வுக்கான பல ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. ஆனாலும் அவர்கள் ஏன் இப்படிப் பேருந்து பேருந்தாகச் சென்று பிச்சை எடுக்கணும்! வருத்தமாக உள்ளது! அந்தக் குழந்தைகள் உள்ளங்கைகளில் மணல் ஒட்டிக் கொண்டிருக்கிறதா எனப் பார்த்திருப்பார்கள்! :)))) உலகம் தெரியுமானு யோசிக்கும் அளவுக்கு வளர்ந்த குழந்தைகள் இல்லையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கச்சேரிகள் நானும் நேரில் சென்று கேட்பது குறைவு தான். வீட்டின் அருகிலேயே என்பதால் சென்றேன். இந்த வாரம் கூட சுதா ரகுநாதன் கச்சேரிக்குச் சென்று இருந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. சுந்தர்ஜியின் கவிதை அருமை
  குழந்தை படம் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 18. கூர்க்காகளின் குழந்தைகளின் புகைப்படத்தில் உயிரோட்டம் ததும்புகிறது! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிழற்படத்தினை நீங்களும் இரசித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....