எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 20, 2017

ஃப்ரூட் சாலட் 191 – ஜல்லிக்கட்டு – பேட்டா ஏ க்யா ஹே!
ஜல்லிக்கட்டு பற்றி பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் நேரம் இது. என் அலுவலகத்தில் இருக்கும் வடக்கத்திய முதியவர் ஒருவர் கேட்ட கேள்வி தான் தலைப்பு – ஜல்லிக்கட்டு – “Bettaa, ye kyaa hai?” ஜல்லிக்கட்டு என்பது என்னவென்று தெரியாதவர்களாகத் தான் பலரும் இருக்கிறார்கள் வடக்கில்! புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது! நிறைய தகவல்களும் வாதங்களும் செய்தபிறகு தான் “ஓ, இந்த ஜல்லிக்கட்டில் இத்தனை விஷயங்கள் இருக்குதா!” என்று ஆச்சரியத்துடன் ஒப்புக் கொண்டார். இந்த வார ஃப்ரூட் சாலட் பதிவில் அனைத்தும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே!

இந்த வார நற்செய்தி:

தமிழகம் மட்டுமல்லாது, உலகின் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கும் செய்திகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தலைநகர் தில்லியிலும் இன்று ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள். மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒற்றுமையோடு களத்தில் இறங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அரசியல்வாதிகளையும், ஆதாயம் தேடும் நடிகர்களையும் அண்டவிடாது இருப்பதும் நல்ல விஷயம். ஜல்லிக்கட்டுக்காக பாடுபடும் அனைவருக்கும் இந்த வாரத்தின் பூங்கொத்து! இந்த ஒற்றுமை குலையாமல் இருக்கட்டும்!

இந்த வார மீம்:

நண்பர் AG Sivakumar அவர்களின் மீம்கள் நேரத்திற்குத் தகுந்தமாதிரி, மிகச் சிறப்பாக இருக்கும்.  இந்த நாளில் அவர் வெளியிட்ட ஒரு மீம்! நன்றி சிவா.....


இந்த வார முகப்புத்தக இற்றை:

போராட்ட களத்தில் ஒரு காட்சி:

பசங்க: மீசையை முறுக்கு...
கூட்டம்: பீட்டாவை நொறுக்கு.
பொண்ணுங்க: ஓய்ய்ய்ய்ய்ய்... இன்னா... அப்ப மீசை இல்லாத நாங்க என்ன தக்காளி தொக்கா..? 😍
செம சிரிப்பு சத்தம்... பட்டுன்னு ஒரு பையன் ஸ்பீக்கரை வாங்கினான்...
"கூந்தலை கட்டு..."
பொண்ணுங்க: "பீட்டாவை வெட்டு" 😂😂😂

அங்க இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் ஓடி வந்து... "கொஞ்சம் வயலண்டா இருந்தாலும் ரைமிங்கா இருக்கு தம்பி... சூப்பர்"ன்னு பசங்க தோளை தட்டிவிட்டு போகிறார்.

ரசித்தது...... – தமிழ்வாசி பிரகாஷ், மதுரை.

இந்த வார காணொளி:

CNN News 18 channel பேட்டியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பங்களித்த நிகழ்வு!இந்த வார வேண்டுகோள்:

அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதில் அரசியல் வேண்டாம் – பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் விஷயங்களான – ரயில் மறியல், கடை அடைப்பு போன்றவை வேண்டாமே….. இம்மாதிரி செய்வது, போராட்டத்தின் நோக்கத்தினை திசை திருப்பி விட வாய்ப்புண்டு.

இந்த வார ரசித்த பாடல்:

ரஜினி ”நடித்த” முரட்டுக்காளை படத்திலிருந்து, பொதுவாக என் மனசு தங்கம் – இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ரசிக்கும் பாடல்… இதோ உங்களுக்காக!இந்த வார கார்ட்டூன்:
படித்ததில் பிடித்தது:

டாலர் சம்பளம், பீட்ஸா,கோக்,வீக் எண்ட் கோலாகலம், போன்ற மாயைகளில் இருந்து நம்முடைய பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்...

ஜல்லிக்கட்டு ....frustration என்பதின் marginal அல்லது one more additional dose. ஆனால், இந்த one more additional dose என்பது ஒரு மயிற் பீலி போல! ஒரு கால கட்டத்தில் வண்டி சக்கரத்தையே சாய்த்து விடும் வல்லமை அந்த 'மயில் பீலி'க்கு உண்டு.

Problem பொறுக்க அல்லது, சகிக்க முடியாமல் போனால், Solution அதன் உள்ளிருந்தே பீறிட்டு கிளம்புமாம்... இப்போது அது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது..

பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல்,அரசியல் வாதிகளை தம்முடன் கலக்க விடாமல், anti social elements ஐ தம்முடன் நெருங்க விடாமல், இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்காமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒரு அருமையான ...அற்புதமான....அபூர்வமான ..முதிர்ச்சியுடன், இதற்கு முந்தைய தலைமுறையை அவர்களின் பள்ளி பருவத்தில் நல்வழிபடுத்திய....நல் வழிப்படுத்த முயன்ற moral instruction session என்கிற வாய்ப்பு துளிக்கூட இல்லாத இன்றைய நம் இளைஞர்கள் எல்லாரும் ரொம்ப காலத்திற்கு பிறகு கட்டுப்பாடுடன் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பது மிக மிக நல்ல விஷயம்...

எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் என்றுமே வென்றதில்லை..ஜல்லிகட்டில் கூட, ஆக்ரோஷத்துடன் வேகமாக ஓடி வரும் மாடு எளிதில் வீழ்ந்து விடும்...ஆனா ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்து நடந்து வந்து கொண்டிருக்கும் காளை இது. இதை வீழ்த்துவது கடினம்!

மேலும், Law is not only the Supreme Power but also the Supreme Confidence. மக்கள் அத்தனை பேரின் ஒட்டு மொத்த நம்பிக்கை என்பது போய் விட்டால், சட்டம் என்பது காற்றில் அலைக்கழைக்கப் படும் சாதாரண வெறும் பட்டம் தான்!
நம் அத்தனை பேரையும் Federal Republic என்ற அந்தஸ்து கொடுக்காமல் வெறும் மாநிலங்களாக பிரித்தது மாபெரும் தவறு.எதாவது ஒரு மாநிலம் உதாசீனபடுத்தப் பட்டால் நம் இறையாண்மையே சிதைந்து விடும் ரிஸ்க் அதிகம்.

மொழி தான் நம் உணவு; நம்முடைய கலாசாரமும்,பண்பாடும் நம் உடை; உறையுள் நம் தேசம். நடக்கும் அறப் போராட்டம் தொடர வேண்டும்..நீர்த்துப் போய் விடக்கூடாது என்பதே நம் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும்.

'மொழியையும்,கலாச்சாரத்தையும்,விட்டு கொடுத்து விட்டால் நிர்வாணப் பட்டு போய் விடுவோம்' என்கிற எச்சரிக்கை உணர்வு நம்மிடம் இருக்கும் வரை அது, இத்தகைய போராட்டத்தை நீர்த்து போகாமல் இருக்கச் செய்யும்......செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில்......

     திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி, திருச்சி.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 comments:

 1. அனைத்துமே ஜல்லிக்கட்டு!!!!!!விளையாடிவிட்டீர்கள் ஜி. அனைத்தையும்..ரசித்தோம் ஜி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. ஆம் உங்கள் வேண்டுகோளை வழி மொழிகிறோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. இந்த வியக்க வைக்கும் ஒற்றுமை தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஒற்றுமை தொடரட்டும். அதுதான் நம் அனைவருடைய ஆசையும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. சுவையான ஃப்ரூட்சாலட். சுவைத்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 5. ஏறுதழுவுதல் கண்டிப்பாக நடை பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.கருத்துப்படம் அருமை, அந்த கரடியின் கண்கள்.......

  ReplyDelete
  Replies
  1. கரடியின் கண்கள் ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி வாசன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. / பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல்,அரசியல் வாதிகளை தம்முடன் கலக்க விடாமல், anti social elements ஐ தம்முடன் நெருங்க விடாமல், இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்காமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒரு அருமையான ...அற்புதமான....அபூர்வமான ..முதிர்ச்சியுடன், இதற்கு முந்தைய தலைமுறையை அவர்களின் பள்ளி பருவத்தில் நல்வழிபடுத்திய....நல் வழிப்படுத்த முயன்ற moral instruction session என்கிற வாய்ப்பு துளிக்கூட இல்லாத இன்றைய நம் இளைஞர்கள் எல்லாரும் ரொம்ப காலத்திற்கு பிறகு கட்டுப்பாடுடன் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பது மிக மிக நல்ல விஷயம்.../இப்போது வரும் செய்திகள் ரயில் நிறுத்தப் போராட்டம் பொது கடஒஇ அடைப்பு அரசியல் வாதிகள் கைது சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு..... வருத்தமளிக்கிறதே பேட்டா எ க்யா ஹை என்று கேட்பவர் வட இந்தியாவில் நிறையவே இருக்கிறார்கள் சிஎன் என்னின் செய்தி ஆங்கர் இது பற்றி ஏதும் தெரிய வில்லை அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை என்றாரே

  ReplyDelete
  Replies
  1. பலருக்கும் இங்கே தமிழகம் பற்றி தெரிவதில்லை. தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. தாமதமான வருகைக்கு மன்னிக்க. ப்ரூட் சாலட் முழுவதும் ஜல்லிக்கட்டு! ரசித்தேன். வரலாறு காணாத எழுச்சி கண்டு மகிழ்ச்சி தான். பகிர்வுக்கு நன்றி வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!

   Delete
 9. வழக்கத்துக்கு மாறாக இந்த வார பழக்கலவையில் ஒரே பொருள் பற்றி வெவ்வேறு தகவல்கள் தந்தமைக்கு நன்றி! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்துள்ள இந்த உணர்ச்சி மிகு போராட்டத்திற்கு வாழ்த்துகள்! வெற்றியை எட்டும் நாள் விரைவில்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. #'மொழியையும்,கலாச்சாரத்தையும்,விட்டு கொடுத்து விட்டால் நிர்வாணப் பட்டு போய் விடுவோம்' #
  நிர்வாணமாகி விடக் கூடாது இன்றும் தொடரும் போராட்டத்தை வாழ்த்துவோம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. ரசித்தேன். காணொளிகளைக் க்ளிக் செய்தால் என் கணினி ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும்!

  ReplyDelete
  Replies
  1. கணினி இன்னும் சரியாக வில்லையா! :)

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....