வெள்ளி, 13 ஜனவரி, 2017

ஃப்ரூட் சாலட் 190 – பீலா மாஸ்டர் – பத்து பைசாவில் என்ன கிடைக்கும்? – ராஜா காது!


இந்த வார நற்செய்தி:தலைநகர் தில்லியின் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த மதன் சிங் என்பவர் சென்ற வாரம் தனக்குக் கிடைத்த பர்ஸ் – கிட்டத்தட்ட 50000/- பணம், மற்றும் Credit/Debit Card உடன் இருந்த பர்ஸ்-ஐ அதன் உரிமையாளரிடம் திருப்பி தந்திருக்கிறார் – அதற்கு பர்ஸின் உரிமையாளர் கொடுக்க விரும்பிய பரிசையும் வாங்கிக் கொள்ளவில்லை அந்த போக்குவரத்து காவல் அதிகாரி.... 

இது போன்ற நல்லவர்களும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.  முழு செய்தியும் படிக்க....


திரு மதன் சிங் அவர்களுக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து!

இந்த வார விளம்பரம்:

பத்து பைசா நினைவிருக்கிறதா உங்களுக்கு…. பத்து பைசாவில் ஏதாவது இப்போது கிடைக்குமா? கிடைக்கும் எனச் சொல்கிறது இந்த விளம்பரம்… பாருங்களேன்…இந்த வார முகப்புத்தக இற்றை:

நிறைய Smart Phone-களில் Unlock செய்ய Face recognition software இருக்கிறது. இது பல சமயங்களில் பிரச்சனை தரலாம்! பாருங்களேன்!இந்த வார குறுஞ்செய்தி:

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட்கிழமைகள் கொடூரமானவை!

இந்த வார WhatsApp Message:

இந்த WhatsApp-ல் ஒரே சமயத்தில் இரண்டு பேரிடம் Chat செய்வது தொல்லை தரும் விஷயம். ஒருவருக்கு அனுப்ப வேண்டிய செய்தியை அடுத்தவருக்கு அனுப்பி விடுவது அடிக்கடி நடக்கும். அப்புறம், இது உங்களுக்கான செய்தி இல்லைன்னு சமாளிக்க வேண்டியிருக்கும்! இங்கே பாருங்க, ஒருத்தர் எப்படி மாட்டிக்கிட்டாருன்னு!

ஒரு ஆள், தன்னுடைய தோழிக்கு செய்தி அனுப்பறதா நினைச்சுக்கிட்டு, தன்னுடைய மனைவிக்கே இப்படி ஒரு செய்தியை தப்பா அனுப்பிச்சிட்டாராம் – “மனைவியும் குழந்தைகளும் மாமனார் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்! நீ வீட்டுக்கு வருகிறாயா?” 

அனுப்பிய பிறகு தான் தெரிந்திருக்கிறது, தனது மனைவிக்கே செய்தியை அனுப்பியது! பிறகு மொபைல் டேட்டா தீரும் வரை மனைவியை சமாளிக்க வேண்டியிருந்ததாம். Pest Control ஆளுக்கு அனுப்பறதா நினைச்சு உனக்கு அனுப்பிட்டேன் என்று சமாளிக்க, அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.  Pest Control ஆள் வீட்டுக்கு வந்து முழு வீட்டையும் Pest Control எனும் பெயரில் திருப்பிப் போட்ட பின் தான் சென்றார்! தேவையில்லாத செலவு!

WhatsApp-ல post தட்டச்சு செய்தபிறகு யாருக்கு அனுப்பறோம்னு பார்த்துட்டு அனுப்புங்க!  Post Control is better than Pest Control!

ராஜா காது கழுதைக் காது:

நம்ம நெல்லைத் தமிழன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த வாரம் ஒரு ராஜா காது கழுதைக் காது பதிவு! 

நம்ம ஆளுங்க இருக்காங்களே, சிலருக்கு பீலா விடுவது ரொம்பவும் பிடித்தமான விஷயம்! இரண்டு நாளுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வந்திருந்த ஒருவருக்கு அவரது கைடு சொன்னது –

“குடியரசுத் தலைவர் வெளியூருக்குப் போயிருக்காரு! இல்லைன்னா உங்களை அவர்கிட்ட அழைச்சுட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்திருப்பேன்!”

இந்த வார காணொளி:

சில பாடல்கள் கேட்கும்போது நம்மை பரவசம் அடையச் செய்பவை.  மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை…  இந்தப் பாடல் கொஞ்சம் பழைய பாடல் தான் – இருந்தாலும் இப்போதும் கேட்டால் பாடுபவரின் Energy பிரமிக்க வைக்கும்… இந்தியா, பாகிஸ்தான், பங்க்ளாதேஷ் மூன்று நாட்டு பாடகிகளும் பாடும் பாடல்… நீங்களும் கேளுங்களேன்!படித்ததில் பிடித்தது:

ஒரு வயதானவர் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் இளைஞரை திருடன் என்று அனைவரிடமும் சொல்லி வந்தார்.  தொடர்ந்து இப்படிச் சொல்ல, அந்த இளைஞர் ஒரு நாள் சிறைபிடிக்கப்பட்டார்.  வழக்கு நடந்தது.  அந்த இளைஞர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது.  சிறையிலிருந்து வெளி வந்த இளைஞர் அந்த பக்கத்து வீட்டுக்காரர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். 

அவதூறு வழக்கு நீதிமன்றத்திற்கு வர, முதியவர் தான் இளைஞர் பற்றி சொன்னது சாதாரணமான வதந்திகள் தான் அது யாரையும் பாதிக்காத வதந்தி தான் என்று சொல்ல, நீதிபதி, அந்த முதியவரிடம், “நீங்கள் இந்த இளைஞர் பற்றி சொன்னவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதுங்கள். எழுதி முடித்த பிறகு அந்த காகிதத்தை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து நீங்கள் வீட்டுக்குப் போகும் போது வெளியில் வீசி விட்டுச் செல்லுங்கள்.  நாளை நீதிமன்றத்துக்கு வாருங்கள்! நாளை இந்த வழக்கில் தீர்ப்பு எனச் சொல்லி அனுப்பி விட்டார்.

அடுத்த நாள் நீதிபதிக்கு முன்னர் பெரியவரும் இளைஞரும் மற்றவர்களும் இருக்க, அந்த முதியவரைப் பார்த்து, “நேற்று நீங்கள் கிழித்துப் போட்ட காகிதத்தின் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, முதியவர், “அது எப்படி முடியும்? நேற்று போட்ட காகிதத் துண்டுகள் காற்றில் எந்தெந்த மூலைக்கு அடித்துச் செல்லப்பட்டதோ, அதைத் தேடுவது கடினமாயிற்றே” என்று சொல்ல, அந்த நீதிபதி அவருக்கு பதில் சொன்னார் –

“பறந்து போன காகிதத் துண்டுகள் போலத்தான், இந்த இளைஞரைப் பற்றி நீங்கள் சொன்ன வதந்திகளும் எங்கெங்கோ பரவிவிட்டன.  அவை இந்த இளைஞரின் வாழ்வையே குலைத்துவிடும்.  ஒருவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவருக்குக் கெடுதல் தரும் செயல்களைச் செய்யாதீர்கள்”!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

36 கருத்துகள்:

 1. ரசித்தேன்.

  தம பட்டை எல்லா தளங்களிலும் காணாமல் போயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. த.ம. பட்டை - இப்போதெல்லாம் நிறையவே தொந்தரவு தருகிறது.... கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கப் போவதற்கான அறிகுறியோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்....

   நீக்கு
 5. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தமிழ் மணம் காலையில் ஏனோ பிரச்சனை செய்தது. வாக்குப் பட்டையே காணவில்லை கில்லர்ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.....

   நீக்கு
 8. அனைத்தும் அருமை!!! மிகவும் ரசித்தோம். இற்றை ஹஹஹ். படித்ததில் பிடித்தது அருமை! பாட்டு மிகவும் ரசித்தோம். இதுவரை கேட்டதில்லை.!

  அனைத்தும் அருமை!ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 9. ரசித்துப்படித்தேன் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. நலமே கலாநேசன்..... நீங்கள் நலமா? இப்போதும் தில்லியில் தானா? பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாநேசன்.

   நீக்கு
 12. இந்த வார பழக்கலவையில் நான் மிகவும் இரசித்தது பாடகி ரூனா லைலாவின் பாடலைத்தான். 1973-76 களில் புது டில்லியில் இருந்தபோது கேட்டு இரசித்த பாடலை திரும்பவும் கேட்டு இரசிக்க உதவியமைக்கு நன்றி! வழக்கம்போல் பழக்கலவையில் அனைத்தும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பாடல் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   நீக்கு
 14. டென் பைசே சாப் பாடலை, மொழி புரியாவிடினும் ரசித்தேன். படித்ததில் பிடித்ததும் அருமை. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜனா சார்.

   நீக்கு
 16. #Pest Control ஆளுக்கு அனுப்பறதா நினைச்சு உனக்கு அனுப்பிட்டேன் என்று சமாளிக்க, #
  இது இப்போதைய சமாளிப்பு ,எப்படியும் பலநாள் ஒருநாள் அகப்படுவான்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 17. சாலட் சிறப்பு அண்ணா...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....