புதன், 25 ஜனவரி, 2017

சங்கு கழுத்து தெரியும் சங்கு வளையல்?



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 93

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தக்ஷிணேஸ்வர் காளி கோவில்....

தக்ஷிணேஸ்வர் காளி கோவிலில் சில நிமிடங்கள் இருந்து காளியுடன் கொஞ்சம் அளவளாவிய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  கங்கையின் கரைக்கருகே இருக்கும் குறுகிய சந்துகள் வழியே எங்களை அழைத்துக் கொண்டு சென்றார் எனது தில்லி நண்பர் – இவரை சென்ற பகுதியில் பார்த்தோம். வழியில் ஒரு சிறிய நடைபாதைக் கடை – தள்ளு வண்டியில் வைத்து தேநீர் விற்பனை! அங்கே சில யுவன்களும் யுவதிகளும் அமர்ந்து ஒரு கையில் சிகரெட் புகைய மற்ற கையில் ”குல்லட்” தேநீர். ஆண் பெண் வித்தியாசமில்லாது “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என்ற விளம்பரத்தினை மீண்டும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

”குல்லட்” எனும் மண் கோப்பையில் தேநீர் 

எங்களுக்கும் தேநீர் அருந்த அவசியம் இருக்கவே பக்கத்தில் நின்று மூன்று லால் சாய், மூன்று தூத் சாய் சொன்னோம். எங்களுடன் இருந்த மலையாளி ஒருவர் அந்த யுவதிகள் சிகரெட் புகைப்பதை படம் எடுக்க புகைப்படக் கருவியை எடுக்க பாய்ந்து தடுத்தேன்! இருப்பதோ வெகு அருகில், எதற்கு வம்பு என்று அவர்களைத் தடுத்தது நல்லதாகப் போயிற்று! என்னதான் பெங்காலி மொழி பேசும் நண்பர் உடன் இருந்தாலும், இந்த மாதிரி சமயங்களில் பிரச்சனை வந்தால் அதைத் தடுக்க முடியாது – அதுவும் மேற்கு வங்கத்தில்! யார் என்ன பேசுகிறார் என்பதே புரியாத போது என்ன செய்ய முடியும்! பெரும்பாலும் இந்த மாதிரி பயணங்களில் அடுத்தவர்களை படம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.


கங்கையில் ஒரு குளியல் போடலாமா?


மீன் வாங்கிட்டு, இப்படியே இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகுச் சவாரி செய்யலாம்!


கரையில் அமர்ந்து சிலர் அரட்டை அடிக்க, சிலர் சிந்தனையில் இருக்க, சிலர் கடலை வறுக்கிறார்கள்!

தேநீர் அருந்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். எங்களை அவர் அழைத்துச் சென்றது பழைய கொல்கத்தாவின் சந்துகள் வழியாக. ஏழு சகோதரிகள் மாநிலப் பயணத்தில் எங்கேயும் Shopping என்று பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை. மொத்தம் பதினைந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருந்த நாங்கள், வீடு திரும்பும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என கேரள நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்! அதனை dhதாdhதாவிடம் சொல்லி இருந்ததால் அவர் எங்களை ஒரு ஸ்பெஷல் கடைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருந்தார்.  அந்த கடையை நோக்கி தான் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். 


 சந்து சந்தாக இருக்கும் இடங்களில் நடந்து....

பெண்களின் கழுத்திற்கு சங்கை உவமையாக சொல்வது கவிஞர்கள் வழக்கம். இராமயணத்தில் கூட இந்த உவமைகள் உண்டு என்பதை பார்த்திருக்கிறேன். இணையத்தில் சங்கு கழுத்து எனத் தேடிய போது கிடைத்த ஒரு கவிதை கீழே…


சந்தனமும் சவ்வாதும்
சண்டையிட்டுக் கொண்டன
மணப்பதில்
யார் உசத்தி?
அவள் இருப்பதை
மறந்துவிட்டீர்களே!
சாந்தப்படுத்தியது
காற்று!


முகவரித் தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
காற்று
கைப்பிடித்துச் சென்று
காட்டியது
மொட்டை மாடியில்
நீ கூந்தல்
உலர்த்திக் கொண்டிருந்தாய்!

காற்று
உன்   கழுத்தில் பட்டதும்
அழகிய ஓசையாய்
மாறிற்று
உனக்குத் தான்
சங்கு கழுத்தாயிற்றே!

- இராதே [தலைப்பில் சுட்டினால் இவரது வலைப்பூவுக்குச் செல்லலாம்!]


இதுல ட்ரயின் வருமா? கண்டிப்பா வரும்! சர்க்குலர் ட்ரயின்!
நிறைய பேர் நடுவுல உட்கார்ந்து சாவகாசமா  பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள்!


சங்கு கழுத்து என்று மட்டும் உவமை சொன்னால் போதாது என மேற்கு வங்கத்தவர்கள் இந்த சங்கை வைத்து பெண்களின் கைகளுக்கு வளையலும் செய்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.  உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்! பலருக்கு என்னைப் போல தெரியாமல் இருக்கலாம்! சங்கு கொண்டு வளையல் செய்யும் ஒரு இடத்திற்கு தான் எங்களை அழைத்துச் சென்றார் பெங்காலி நண்பர். எங்களை அழைத்துச் சென்ற குறுகிய வீதியில் சங்கு வளையல் செய்யும் நிறைய வீடுகள் இருந்தன.  அப்படி இருந்த வீடுகளில் அவருக்குத் தெரிந்த ஒரு இடத்திற்குச் சென்று பார்த்தோம்.


எது சரியாக இருக்கும்?  தேர்ந்தெடுக்கும் நண்பர்.....


சங்குகளை சின்னச் சின்ன வளையமாக வெட்டி, அதை ஒரு மெஷின் கொண்டு நேர்த்தியாக கை வளையல்களாகச் செய்து தருகிறார்கள்.  மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு பார்க்கவே அழகாய் இருக்கிறது இந்த சங்கு வளையல்கள்.  சங்கு வளையல்கள் பார்க்க மிகவும் அழகாய் இருந்தாலும், இதை பராமரிப்பது கொஞ்சம் கடினமான வேலை – மிகச் சுலபமாக உடைந்து விடும் தன்மையுடையது – கீழே விழுந்தால் உடைந்து விடும். பத்திரமாக வைத்துக் கொள்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்! எனது நண்பர்கள் வாங்கிக் கொள்ள, நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அளவினையும், அதில் இருக்கும் வேலைப்பாடுகளையும் பொருத்து விலை – ஒரு ஜோடி வளையல் 250 ரூபாய் முதல் கிடைக்கிறது.


வளையல் செய்ய நான் தயார் நீங்க தயாரா?



தயாராகும் சங்கு வளையல்....


சங்குகளை முன்னரே வட்ட வடிவில் வெட்டி வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான மாடலைச் சொன்னால், நம் கண் எதிரேயே அழகாய் செய்து தருகிறார்கள். என்ன பிரச்சனை என்றால் அந்த மெஷினில் வளையலைச் செய்யும் போது நிறைய தூசி பறக்கிறது! மிக லாவகமாக வளையல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  தேவையான வளையல்களை செய்து முடிக்க அவர் உழைப்புக்கான ஊதியத்தினைக் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம்.  பெரும்பாலும் குறுக்குச் சந்துகள் தான் எங்கும். இதில் வாகனங்களில் செல்வது வேலைக்கு உதவாது என்பதால் வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். 


சின்னச் சின்ன சந்துகளில்  நடைப்பயணம் தொடர்ந்தது.... 


சங்கு வளையல்கள் வாங்கியாயிற்று – அடுத்ததாய் எங்கே சென்றோம்? இதுவும் கொல்கத்தாவின் ஒரு பாரம்பரியமான விஷயம் நடக்கும் இடத்திற்கு தான்.  அந்த இடம் எந்த இடம் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

31 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். குல்லட் சாய்! அப்படி என்றால்?

    சங்கு வளையல் செய்வது நுணுக்கமான வேலையாக இருக்கும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்லட் என்பது மண் பாண்டம்.... அதில் தரப்படும் தேநீர் குல்லட் சாய்!

      ரொம்பவே நுணுக்கமான வேலை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சங்கில் வளையல்...! வியப்பாக இருக்கிறது... அவர்களின் பொறுமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமை மிக அதிகம் வேண்டும் இந்த வளையல் செய்ய.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. மண் கப்பில் சாய் புதுமையாக இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இப்படி குல்லட் தேநீர் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. சிலர் சங்கே அறுத்துடுவேன்" னு சொல்றாங்களே இதுதானோ ஜி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அந்த சங்கும்... :) ஆனா அது ஆபத்தான சங்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. இராமேஸ்வரத்திலும் சங்கில் பெயர் பொறித்துத் தருகின்றார்கள்.. சங்கு வளையல்களும் கிடைக்கின்றன.. ஆனால் அங்கே சங்கு வளையல்கள் வாங்கியதில்லை..

    காரணம் அங்கே நடத்தப்படும் அடாவடிகளும் அக்கிரமங்களும் தான்!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் ஏமாற்றுபவர்களுக்குக் குறைவே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. சந்து பொந்துகளில் புகுந்து, அழகாகப் படங்கள் எடுத்து, ஒவ்வொரு விஷயங்களையும் சங்காக முழங்கியுள்ளீர்கள். :) பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. Roshni-kum Roshni amma-kkum valaiyal vaangalaya Venkat Ji? ;) :) [ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்...ஹிஹி..!! ]:D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குக் கொஞ்சம் அல்ல நிறையவே முன் ஜாக்கிரதை உணர்வு உண்டு..... கடையிலிருந்து அழைத்து “சங்கு வளையல் இருக்கு, விலை இவ்வளவு, கீழே போட்டா உடைஞ்சுடும், வாங்கவா?” என்று கேட்டுவிட்டேன்.... அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  9. நல்ல தகவல்கள் ஜி! சங்கு வளையல் என் பெண் பார்த்தால் கேட்டுவிடுவாள்...கைவேலையினால் நுணுக்கம் என்பதால் விலை கூடுதலாக இருக்கும் போல்..வுடு ஜூட்!! ஹஹ்ஹ...தொடர்கிறோம்.

    கீதா: அட! கங்கையில் குளியல் படகுசவாரி!! பெரிய ஏரி போன்று இருக்கிறது கங்கை...பெரும்பாலும் ஷாப்பிங்க் என்றாலே பழைய வீதிகள் குறுகலான வீதிகள்தான் போலும்...சங்கு வளையல், சங்கு நெக்லஸ் கூட அதுவும் கம்மல், வளையல் நெக்லஸ் டாலருடன், மோதிரம் என்று செட்டாகக் கூட இருக்கிறது. வெண்மை மட்டுமின்றி கலர் கலராகவும் கிடைக்கிறது. அதிக வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. வாங்கும் திறன் இருப்பவர்கள், அணியும் ஆர்வம் இருப்பவர்கள் வாங்கலாம். நான் ரசிப்பதுண்டு ஆனால் விடு ஜூட்..
    கவிதை அருமை.. அடுத்த ஷாப்பிங்க் என்ன என்று அறிய தொடர்கின்றோம்...ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  10. சங்கு மாலை வாங்கித் தந்தால்,சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை அல்லவா கேட்கிறார்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  12. பயணம் நன்றாக இருக்கிறது. கொல்கத்தா, எளிமையான கிராமமாகக் காட்சியளிக்கிறது. 'அதனால் சங்கு வளையல் வாங்கவில்லை' என்று சொல்லிவிட்டீர்கள் தைரியம்தான், கோவை2தில்லி படிக்கமாட்டார்கள் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி படிப்பார்கள்! :) மேலே மஹி அவர்களுக்குச் சொன்ன பதிலைப் பார்க்கவும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. விஜய நகரம்வரை ரயிலில் சென்றபோது அநேகமாக இம்மாதிரி குல்லட் சாய்கள்தான் சாய் குடித்து அந்தப் பானையை வீசி விடுகிறார்கள் இதே பழக்கமோ என்று ஒரு ஓட்டலில் கப் அண்ட் சாசரில் வந்தடியைக் குடித்து விட்டு அந்தக் கப்பை என் மகன் வீசி எறிந்து விட்டான் ( ஆயிற்று அது நடந்து ஆண்டுகள் பல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  14. வலிப்போக்கன் அவர்கள் எழுதிய பின்னூட்டம். Publish செய்த பிறகும் காக்கா உஷ் ஆன பின்னூட்டம்! :)

    சங்கு கழுத்திற்கு சங்கு வளையல் நல்ல.. பொருத்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.

      நீக்கு
  15. அட உங்கள் ப்லாகில் நிறைய பயண கட்டுரைகள் இருக்கின்றன !!! எல்லா வற்றையும் ஒரு மேய் மேய்ந்துவிடுவோம் ... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையவே இருக்கிறது விஜயன். முடிந்த போது வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.

      நீக்கு
  16. நண்பர் வெங்கட் நடராஐன்!
    சங்கு பற்றித் தேடினேன் இந்தப் பதிவு வந்தது.
    அப்படியே நல்ல படங்கயைப் பார்த்தேன்.
    நல் வாழ்த்துகள். எனது இரண்டாவது வலை
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....