அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
உங்களுக்கும் ஒரு கதை சொல்லட்டுமா....சீக்கிரமா தூக்கம் வந்துடும்...இதோ இந்த கன்னுக்குட்டி செல்லம் மாதிரி...
ம்க்கும்.... நெத்தில திலகம் எல்லாம் இட்டு என்னைத் தன் படுக்கைல படுக்க வெச்சான் கிருஷ்ணா... சந்தோஷமாத்தான் இருந்தது, அவன் என் மேல படுக்கற வரைக்கும்....😕அதுக்கு நான் தேமேன்னு கீழயே ஒரு ஓரமா படுத்துக்கிட்டிருப்பேன், சுதந்திரமா.....மூச்சு முட்டுது....😒 அன்புத் தொல்லை தாங்கல....
ஜெய் ஶ்ரீ கோபாலகிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
ஏம்மா கட்டாயம் நான் கால் கட்டை விரலை வாய்ல வெச்சுக்கிட்டே ஆகணுமா?
ஆமா கிருஷ்ணா, அதுதான் பொருத்தமா இருக்கும்.உனக்குப் பழக்கம்தான?
பழக்கம்தான், ஆனா அப்போ ஆலிலை....free யா natural ஆ pose வந்துது...இப்போ ஜிலு ஜிலு தலகாணில என்ன படுக்கப்போட்டுஅப்படி pose குடுக்கச்சொன்னா? உன் கோந்தைக்கு முதுகு உறுத்தாதா?... படுத்தற மா...😕
Photo எடுக்கும்போது தொண தொணன்னு பேசாத கிருஷ்ணா....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
கிருஷ்ணா, photo க்கு pose கொடுக்கற ஜோர் ல என் முத்து மாலை பத்திரம்...இழுத்துடாத...எடுக்கவா கோக்கவான்னு கேக்க அப்பா இப்போ இங்க இல்ல...
சரி சரி நீயும் கவனமா தயிர் கடை...கீழ எத்தன சிந்தியிருக்க பாரு....
எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியா பேச கத்துனுட்ட கிருஷ்ணா...
நான் இல்லம்மா, மேல பாரு உன் செல்லக் கிளிதான்....😜
நீதான பழக்கி வச்சிருக்க...விளங்கிடும்... ஹ்ம்ம்...😕
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
ஆஹா என் dress க்குப் பொருத்தமா நீலக் கலர் பூ....ஐ..🤩 ஆமா,
நாம இங்க ஒளிஞ்சு விளையாடிட்டு இருக்கறத யாரும் பார்த்திருக்கமாட்டாங்க இல்ல கிருஷ்ணா?
சே சே....ஆனா அதை அந்த விளக்க ஏத்தறதுக்கு முன்னால யோசிச்சிருக்கலாம்... பாத்து ராதா.. பூவுக்குப் பின்னால கட்டெறும்பும் இருக்கு....(கடிச்சா என்னால சுண்ணாம்பத் தேடிக்கிட்டு இப்ப போக முடியாது..😕)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
என்ன நாதா யோசனை?
இன்னிக்கி ஆடிப்பூரமாச்சே இன்னும் 2 dozen வளை உன் புடவையில் இருக்கற மயில் கலர்ல போட்டு விடலாம்னுதான்...என் டிரஸ் ஐ க்காட்டி அதே கலர்
ல வேணும்னு கேட்டு உனக்காக வாங்கிண்டு வந்திருக்கேன்...எங்க கையைக் காட்டு....
எனக்குப் போதும் நாதா....இந்த arch ல full ஆ அந்த வளையல்களைக் கட்டித் தொங்கவிட்டுருங்க போதும்......என் கோவில்கள்ள அப்படித்தான் செய்வாங்க இன்னிக்கி....
கண்டிப்பா தேவி...நீ சொன்னா செய்யமாட்டேனா...(வந்திருச்சா வேல...ஹ்ம்ம்...)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
என்ன சிம்மா, என்ன மாதிரியே இன்னிக்கி special என்பதாவது சுதந்திர தின அலங்காரத்தோட ச்சும்மா ஜொலிக்கற! பேஷ் பேஷ்...அதுசரி எங்க பாக்கற?
ஒண்ணுமில்ல கணேசா கொடியை உடம்புல paint பண்ணிவிட்டாங்க ok, ஆனா அசோக சக்கரத்தை வயித்துல tattoo பண்ணி விட்டுட்டாங்க..இன்னொரு பக்கமும் பண்றதுக்கு வருவாங்களோ? நான் வேணா இந்த பக்கத்தையே காட்டிக்கிட்டு இருக்கேன், இன்னி முழுக்க...tattoo வேண்டாம் please. நீ சொல்லிடு கணேசா... சுரீர்ங்குது....
சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியிருக்காங்களே எத்தனையோ லக்ஷம் பேர் அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
இதுக்குப் போய் அலட்டிக்கற....
(அதுசரி, அதுக்கு நானா கெடெச்சேன்....😫)
ஜெய் ஹிந்த்🫡
ஜெய் ஜவான்🫡
பாரத் மாதா கீ ஜெய்!
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
16 ஆகஸ்ட் 2026







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....