புட்டு செய்யலாம்
என்று வாங்கிய ராகி மாவில் பெரும்பாலும் தோசை தான் செய்ய முடிந்தது. அதனால் மகள்
நெடுநாட்களாக கேட்ட ராகி புட்டை இப்போது செய்து சாப்பிட்டாச்சு.
இந்த குழாயை
கோவைக்கு போயிருந்த போது வாங்கினேன். குக்கரின் மேலே வெயிட் போடும் இடத்தில்
வைத்து வேகவைக்கலாம்.
கோதுமை மாவிலும்
புட்டு செய்யலாம் என்பதை கேரளத் தோழி ராக்கி மூலம் தெரிந்து கொண்டேன். நாங்கள்
சர்க்கரை சேர்த்து சாப்பிட்டோம். நீங்கள் கடலைக் கறி அல்லது குருமாவுடன்
சாப்பிடவும்.
உடலுக்கு நன்மை
தரும் ராகியில் இந்த மாதிரி புட்டு செய்து நீங்களும் சாப்பிடலாமே.
செய்முறை:-
ராகி மாவை வறுத்துக்
கொண்டு உப்பு, தண்ணீரும் சேர்த்து பிசறி பத்து நிமிடம் ஊறவைத்து குழாயில் போட்டு
செய்யலாம். இல்லையென்றால் துணியில் மூட்டை கட்டி ஆவியில் வைக்கலாம்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....
அருமையான புட்டு, சுடச்சுடச் சாப்பிடோணும்.. இந்த குரக்கன் புட்டுக்கு.. அவித்தபின் தேங்காய்ப்பூச் சேர்த்துக் குழைத்து, நீங்க சொன்னதுபோல் சக்கரை அல்லது சீனி சேர்த்துச் சாப்பிட சுவையோ சுவை... ஆனா என்ன கொஞ்சம் அலர்ஜி இதில் உண்டு.
பதிலளிநீக்குசிலருக்கு கண், மூக்குக் கரை எல்லாம் அரிக்கும்...
ராகி/குரக்கன் புட்டுவில் அலர்ஜியா? அதிரா? எப்படி? புதிய விஷயமாய் இருக்கே. இதுவரை கேள்விப்பட்டதில்லை....
நீக்குகீதா
புட்டு அலர்ஜியா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.
எனக்கும் அதே தான் தோன்றிற்று.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
சுலபமாக இருக்கிறது. படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎங்கள் (இருவரது) வீட்டிலும் அடிக்கடிச் செய்வதுண்டு. எங்கள் காலை உணவாக. அரிசி மாவுப் புட்டு, ராகிப் புட்டு செய்வதுண்டு. கோதுமை மாவுப் புட்டும் அவ்வப்போது செய்வதுண்டு. சிகப்பரிப் புட்டும் அவ்வப்போது. தொட்டுக் கொள்ள பெரும்பாலும் பழம், பப்பட், சீனி, கடலைக்கறி.
பதிலளிநீக்குகீதா: ஆதி சிகப்பரி புட்டும் நன்றாக இருக்கும். அது போல சோள புட்டு மாவும் கிடைக்கிறது அதையும் செய்து பாருங்கள். நன்றாக இருக்கிறது. நான் பெரும்பாலும் புட்டு மாவை புட்டு செய்வதற்கு முன்னதாகவே கலந்து வைத்து வைடுவேன். கலக்கும் போது கொஞ்சம் தேங்காய்ப் பூவும் கலந்து 4 மணி நேரம் ஊற வைத்துவிடுவேன். இடையில் அவ்வப்போது கலந்து கலந்து விட்டுக் கொண்டு இருப்பேன். அப்படிச் செய்யும் போது இன்னும் ம்ருதுவாக வரும். கையால் தான் கலப்பது வழக்கம். கட்டிகளை உதிர்த்துக் கொண்டு. இடையில் கலக்கும் போது மாவு ட்ரை ஆகிவிட்டதா என்றும் தெரியவரும். அப்போது மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் விரவி வைப்பேன். அப்புறம் குழலில் நீங்கள் செய்திருப்பது போல்தான் மாவு தேங்காய் பூ, மாவு என்று போட்டு...பழம் பப்படும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் தொட்டுக் கொள்ள...கடலைக் கறியும் செய்வேன்..என்றாலும்...இதே போன்று அவலைப் பொடித்துக் கொண்டும் செய்யலாம். நான் அவலைப் பொடித்துக் கொண்டு உப்புத் தண்ணீர் விட்டுப் பிசறி வைத்து உப்புமாவுக்குத் தாளிப்பது போல் தாளித்து புட்டுக் குழலில் தேங்காய்பூ இந்தக் கலவை என்று மாற்றி மாற்றி வைத்து ஸ்டீம்க் செய்வதும் உண்டு...நன்றாக இருக்கிறது..அவல் உப்புமா தான் ஹிஹிஹிஹிஹி....மகன் சிறு வனாக இருந்த போது அவனை ஏமாற்ற ஒரு பெயர் வைத்துச் செய்தது. இப்போ அவன் சொல்லிக் காட்டுறான்....அம்மா நீ என்னைச் சின்ன வயசுல எப்படி ஏமாத்திருக்கனு...ஹா ஹாஹாஹா
ரொம்ப நல்லா வந்துருக்கு உங்கள் புட்டு..சூப்பர்!!
தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குசெஞ்சு பார்த்துடுறேன்... எனக்கும் புட்டுன்னா ரொம்ப பிடிக்கும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குஎன்னது செய்முறை முழுமையா இல்லையே. தேங்காய் எப்போ போட்டீங்க? அடுக்கு அடுக்காய் தேங்காய் சேர்க்கவேண்டாமா? கொஞ்சம் மாவு, அப்புறம் தேங்காய் துருவல், அப்புறம் மாவு என்று?
பதிலளிநீக்குகுக்கரில் மேலே வேகவைப்பது புதுசு.
அம்மணி பதில் எழுதுவாங்கன்னு நானும் காத்திருக்கிறேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நல்ல இருக்கு படங்களுடன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
நீக்குஅழகான புட்டு படங்கள்.
பதிலளிநீக்குநானும் செய்வேன்.
கடையில் இப்போது எல்லா புட்டு மாவுகளும் கிடைக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஉடலுக்கு மிகவும் நல்லது..
பதிலளிநீக்குஇங்கே அடிக்கடி செய்வதுண்டு..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஹெல்தி காலை உணவு அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா கமால் ஜி!
நீக்கு