கொள்ளு இட்லி - கொத்ஸு
இந்த கொள்ளு
இருக்கே, இதை குதிரை மட்டும்தான் சாப்பிடும்னு தான் சின்ன வயசுல எனக்கு ஒரு
நினைப்பு. வீட்டில் அம்மா பயன்படுத்தியதே இல்லை என்று சொல்லலாம்! தீபாவளி
சமயத்தில் அப்பா Member-ஆக இருந்த Thrift Society-இல் கூப்பன் கொடுப்பார்கள் – அதற்கு ஒரு ஸ்வீட் பாக்கெட், ஒரு மிக்ஸர்
பாக்கெட் கிடைக்கும் – அதை வாங்க நானும் மூத்த சகோதரியும் சைக்கிளில் போய் வாங்கி
வருவோம்! அப்படி வாங்கிக் கொண்டு வரும் மிக்சரில் கொள்ளு பார்த்து, “அய்ய குதிரை
சாப்பிடற கொள்ளு மிக்சரில் போட்டு இருக்காங்களே!” என்று அருவருப்பாய் சொன்னதுண்டு
[ஆனாலும் அதை மட்டும் ஒதுக்கி விட்டு மிக்சர் சாப்பிட்டு விடுவேன்!]. அதைச்
சாப்பிட்டால் குதிரை மாதிரி கனைக்க வேண்டி வருமோ என்ற பயம் கூட இருந்தது! கொஞ்சம்
விவரம் தெரிந்த பிறகு கொள்ளு மனிதனும் சாப்பிடத் தக்கதே என்று புரிந்தது.
இந்த கொள்ளு நிறைய மருத்துவ
பலன்களைத் தரக்கூடியது. ஊளை சதையைக் குறைக்க வல்லது! நமக்குத்தான் தொப்பை இருக்கே,
கொள்ளு ரசம் சாப்பிடலாம் என்று கொள்ளு வாங்கப் போனால் அதன் ஹிந்தி பெயர்
நினைவுக்கு வரவில்லை! சமீபத்தில் நண்பர் வீட்டில் கொள்ளு ரசமே கிடைத்தது!
ஹிந்தியில் கொள்ளு “குல்தி” என அழைக்கப்படுகிறது. வாங்கி வச்சுக்கணும்.
சரி இப்ப, கொள்ளு இட்லி எப்படிச்
செய்வதுன்னு பார்க்கலாம்!
Over to Adhi….
நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
கொள்ளு இட்லி& கத்திரிக்காய் கொத்சு!!
(Horse gram Idly & brinjal
kotsu)
Natchiyar Sivasailam அம்மா அவர்கள்
பகிர்ந்து கொண்ட ரெசிபி பார்த்தது முதல் செய்யணும் என்று நினைத்தது. இப்போ செய்தாச்சு.
அவர்களுக்கு எனது நன்றி. எப்படிச் செய்யணும்னு பார்க்கலாம்!
கொள்ளு இட்லி:
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 3 கப்
கொள்ளு - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - சிறிதளவு
ஒன்றாக ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு
கரைத்து புளிக்க விடணும். பிறகு இட்லி தட்டில் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டியது
தான் – நார்மல் இட்லி போலவே!
கத்திரிக்காய் கொத்சு:
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 2
கத்திரிக்காய் - 4
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு
பாசிப்பருப்பு - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
மஞ்சள்தூள் – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
செய்முறை:-
சின்ன குக்கரில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, இஞ்சி, கத்திரிக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், பாசிப்பருப்பு போட்டு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்
விட்டு மசித்து தாளிக்கவும். கொத்சு ரெடி!
எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம்!
ஒரு வேளை இட்லி செய்து மீதி இருந்த
மாவில் ஒரு வேளை தோசையும், இன்னொரு வேளை குழிப்பணியாரமும் செய்தாச்சு! நல்லாவே
இருந்தது. நீங்களும் செய்து சுவைத்துப்
பாருங்களேன்!
நட்புடன்
கொள்ளுப்பொடி செய்து வைத்து ரசம் முதலானவற்றில் போட்டு சாப்பிட்டிருக்கிறேன்.எல்லாமே கொஞ்ச காலம்தான். கொள்ளு இட்லி நல்ல சாய்ஸ்.உடன் கத்தரிக்காய் கொத்ஸு... ஸூப்பர்.
பதிலளிநீக்குகொள்ளு பொடி ரசத்தில் போட்டு சாப்பிட்டதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கொள்ளுப் பொடி நானும் சாம்பாரில் போட்டதுண்டு..கொள்ளு இட்லி நன்றாகவே இருக்கிறது.. சுவையில் வித்தியாசம் தெரியலை. மகள் லஞ்சுக்கு எடுத்துச் சென்றாள்..
நீக்குநன்றி ஸ்ரீராம் சார்.
வணககம்
பதிலளிநீக்குஐயா
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று..த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி ரூபன் சார்.
நீக்குமீதி இருந்த மாவும் பயன்பட்டுள்ளது. அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஆமாம் ஐயா. தோசையும், குழிப்பணியாரமும் கூட ஜோராக இருந்தது..
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.
அழகு.. அழகு..
பதிலளிநீக்குபடங்களுடன் செய்முறை அருமை.. வாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி துரை. செல்வராஜூ சார்.
நீக்குEvlo neram oora vaikanum? Ellavatrayum onragave araikkanuma?
பதிலளிநீக்குநான்கு மணிநேரம் ஊறவைத்தால் சரியாக இருக்கும். நான் ஒன்றாகவே தான் போட்டுத் தான் அரைத்தேன்.
நீக்குநன்றிங்க மி.கி.மாதவி.
ஆஹா! நானும் கொள்ளு இட்லி ரெசிப்பி எங்கள் ப்ளாகின் திங்க பதிவுக்கு எழுதி வைச்சுருக்கேன்..கேமரா லென்ஸ் எரர் வந்து செர்வீஸில் இருப்பதால் படம் எடுத்து அனுப்ப முடியாமல் இருக்கு.....இதில் கொஞ்சம் அளவுதான் வித்தியாசம். அப்புறம் நான் உளுந்தைத் தனியாக அரைப்பேன். கொள்ளும் அரிசியும் சேர்த்து அரைப்பேன். இப்படி எல்லாம் சேர்த்தும் போட்டு செய்து பார்க்கிறேன். அப்புறம் நான் கொஞ்சம் வெந்தயமும் சேர்த்துக் கொள்வேன்.
பதிலளிநீக்குகொத்சு சிதம்பரம் கொத்சு என்று சில வருடங்களுக்கு முன் நெட்டில் பார்த்து கற்றுக் கொண்டு செய்வதுண்டு கிட்டத்தட்ட அதே. பாசிப்பருப்பு அதில் சற்றுக் கூடுதலாக இருக்கும். ஆதியின் குறிப்பையும் எடுத்து வைத்துக் கொண்டாயிற்று. நன்றி வெங்கட்ஜி ஆதிக்கும் நன்றி சொல்லிடுங்க! சூப்பர்னு சொல்லிடுங்க...
கீதா
நான் பார்த்த ரெசிபியில் போட்டிருந்த படியே செய்து விட்டேன்.. அடுத்த முறை மாற்றங்களுடன் செய்து பார்க்கிறேன். வெந்தயம் இதிலும் சேர்த்திருக்கேன். கொத்சு கீதா மாமி ரெசிபிப்படி செய்து பார்க்கணும்.
நீக்குதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா சேச்சி.
முந்தைய கருத்தில் ஒரு மாற்றம் பாசிப்பருப்பு இல்லாமல் செய்வது சிதம்பரம் கொத்சு...மாறி வந்துவிட்டது...ஜி!
பதிலளிநீக்குகீதா
ஓ! அப்படியா!! நன்றி சேச்சி.
நீக்குகோவைடுடெல்லி ல வரவேண்டிய இடுகை இங்க வந்திருக்கே. கடைசி படம் பார்த்த உடனே மி.பொடி லைட்டா தடவினதான்னு பார்த்தா குழிப்பணியாரம். இட்லி, கொத்சு பணியாரம் அருமை.
பதிலளிநீக்குதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.
நீக்குகொள்ளும் பார்லி அரிசியும் அரைத்து வைத்து காலையில் கஞ்சிபோல் செய்து குடித்து வந்தேன். ஸ்ரீராம் அண்ணா சொன்னது போல் எல்லாம் சில காலமே.
பதிலளிநீக்குகொள்ளு இட்லி வீட்டில் செய்து பார்க்கச் சொல்லணும்.
அப்புறம் இன்னமும் கொள்ளு பொறித்துக் கலந்த மிக்சர் எனக்குப் பிடிப்பதே இல்லை.
கொள்ளு மிக்சர் எனக்குப் பிடித்தமானது..:) வீட்டில் இட்லி செய்து பார்க்கச் சொல்லுங்கள்.
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி பரிவை குமார் சகோ.
கொள்ளு இட்லி சூப்பர்.. எங்கள் வீட்டில் அடிக்கடி கொள்ளு செய்வேன்.. நானும் ஒரு இட்லி ரெசிப்பி.. கொள்ளில் வைத்திருக்கிறேன் போட்டு அசத்தோணும்:)..
பதிலளிநீக்குஉங்கள் இட்லி ரெசிபியும் பகிருங்கள் ஆதிரா.
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதிரா.
"இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழி ஞாபகம் வந்தது. இட்லி ரொம்ப மிருதுவா பார்க்கவே நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஉங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.
நீக்குமிக்ஸரில் கொள்ளு !!! நான் நினைக்கிறேன் அது ப்ரவுன் மைசூர் பருப்பு தோலோட இருக்குமே அது தானே ..
பதிலளிநீக்குஅது ரொம்ப ருசியா இருக்கும்ங்க :)
கொள்ளு இட்லி இதுவரை செஞ்சதில்லை ..ரசம் மட்டுமே செஞ்சிருக்கேன் ..
தாங்க்ஸ் ஆதி :)
கொள்ளு மிக்சர் நல்லா இருக்கும் எனக்குப் பிடிக்கும். வீட்ல ஒருத்தருக்கு பிடிக்காவிட்டால் இன்னொருவருக்கு கட்டாயமா பிடிக்கணுமே...:))
நீக்குநன்றி ஏஞ்சலின்.
ஹெல்த் அண்ட் டயட் ரெசிபி கொள்ளுல இட்டிலி மட்டும் செய்து பார்த்ததில்லை இப்ப பார்த்திட வேண்டியது தான் வேண்டியதுதான்
பதிலளிநீக்குசெய்து பாருங்கள்..
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றிங்க பூவிழி.
இட்லி மாவில் அடிஷனலாக கொள்ளு போட்டு அரைப்பதுதான் கொள்ளு இட்லி மாவா எனக்ஊ கொள்ளு இப்பவும் பிடிக்காது உடலுக்கு நல்லது என்று மனைவி அவ்வபோது குழம்பு செய்வாள்
பதிலளிநீக்குதங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஜி.எம்.பி ஐயா.
நீக்குகொள்ளு இட்லி! தில்லி பருவநிலைக்கு ஏற்ற உணவு. தொண்டையில் 'கிச் கிச்'சினால் கனைத்துக் கொண்டிருக்கும் தில்லிவாசிகள் எல்லோருக்கும் கொடுக்கலாம்.
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா..இப்போதைய பருவ நிலையில் மாவு புளிக்காதே..:)
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி பத்து சார்.
அருமை
பதிலளிநீக்குதம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகொள்ளு துவையல், கொள்ளுரசம் எல்லாம் செய்வார்கள் மாமியார், அம்மா எல்லாம்.
பதிலளிநீக்குஅதனால் நானும் செய்வேன். கொள்ளு இடலியும் செய்து இருக்கிறேன்.
கொள்ளு பனியாரம் பார்க்கவே அழகு ஆதி. கத்திரிக்காய் கொத்சும் இஞ்சி சேர்க்காமல் இது போல் செய்து இருக்கிறேன்.
ஜலதோசத்திற்கு கொள்ளு ரசம் நல்லது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..
நீக்குரொம்ப நல்லா இருக்கு கொள்ளு இட்லி....
பதிலளிநீக்குஎங்க வீட்ல கொள்ளு கஞ்சி தான் ஸ்பெஷல் ..வாரம் ஒரு முறை கண்டிப்பாக உண்டு..பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..
சீக்கிரம் செஞ்சு பார்த்திடலாம் ஆதி...
கத்திரிக்காய் கொத்சு நானும் இதே முறையில் தான் செய்வது...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்கு