புதன், 22 நவம்பர், 2017

காங்க்ரா கலை அருங்காட்சியகம் - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காங்க்ரா கலை அருங்காட்சியகம் - வெளிப்பு/றத் தோற்றம்


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து தரம்ஷாலா நகரம் 


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து தரம்ஷாலா நகரம் 


 காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து தரம்ஷாலா நகரம் 

பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. உள்ளூர்காரர்கள் அதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பார்க்கத் தவறுவதில்லை. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் கலைப்பொருட்கள், படங்கள், ஓவியங்கள், சிலைகள் மூலம் அந்தப் பகுதியைப் பற்றிய பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதால் எந்தப் பகுதிக்குச் சுற்றுலா சென்றாலும், இது போன்ற அருங்காட்சியகங்களைக் காண்பது வழக்கம். தரம்ஷாலா சென்ற போதும், இதே போல ஒரு அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தோம். அந்த அருங்காட்சியகம் – Kangra Art Museum! தரம்ஷாலா பேருந்து நிலையத்திலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த அருங்காட்சியகம்.


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... 

காலை 10.00 மணி முதல் மாலை 05.00 வரை வாரத்தின் திங்கள் கிழமை தவிர எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் [ரூபாய் 20/-] உண்டு! புகைப்படக் கருவியை பயன்படுத்தவும் கட்டணம் [ரூபாய் 100/-] உண்டு. 1990-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் இப்பகுதி மக்களின் உடை, அலங்காரம், பயன்படுத்திய கருவிகள், அங்கே கிடைத்த சிற்பங்கள் என பலவற்றை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். பழமையான ஓவியங்கள் கூடவே தற்போதைய ஓவியங்களும் இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். சில ஓவியர்கள் அங்கே அமர்ந்து ஓவியங்களை வரைவதையும் நாம் பார்வையிட முடியும்.! நுண்ணியமாக வரையப்பட்ட ஓவியங்களில் இருக்கும் Details பார்க்க பூதக் கண்ணாடி வசதியும் உண்டு.


காங்க்ரா கலை அருங்காட்சியகத்தில் நான்.... 


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... 

பஹாடி [மலைப்பகுதி] ஓவியங்கள், கலம்காரி எனப்படும் வேலைப்பாடுகள், ஆகியவற்றையும் இங்கே பார்க்க முடியும். கூடவே இப்பகுதியை ஆண்ட மன்னர்களான “கடோச்’ ராஜாக்கள் பற்றிய வரலாறும் இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பொருட்கள், சில பதப்படுத்தப்பட்ட [வேட்டையாடிய பின்] மிருகங்களின் உருவங்கள் என பார்க்க இருந்தாலும், அதிக பட்சமாக அரை மணி நேரத்தில் இந்த அருங்காட்சியகத்தினை நீங்கள் பார்த்து விட முடியும். பராமரிப்பும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. நிறைய ஆபரணங்கள் பார்க்கக் கிடைத்தன. ஒரே ஒரு புகைப்படக் கருவிக்கான கட்டணம் மட்டுமே கொடுத்து உள்ளே சென்றதால், எனது புகைப்படக் கருவியில் படங்கள் ஏதும் எடுக்கவில்லை.  நண்பர் மட்டுமே அவருக்குப் பிடித்த சில காட்சிகளைப் படம் எடுத்துக் கொண்டார். அவற்றை இப்பதிவில் சேர்த்திருக்கிறேன்.


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... 


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... 

அருங்காட்சியகம் சற்றே மேடான பகுதியில் இருப்பதால், அங்கிருந்து தரம்ஷாலா நகரின் பல பகுதிகளைக் காண முடிந்தது. நல்லதொரு View Point அது! மலைப்பிரதேசம் என்று சொன்னாலும் எங்கெங்கு காணினும் கட்டடங்கள்! நம் நாட்டில் இப்படி எங்கே பார்த்தாலும் கட்டிடங்கள் கட்டித் தள்ளுகிறார்கள்! ஒரு இடமும் விட்டு வைப்பதில்லை. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்க, கூட்டுக் குடும்ப முறையிலிருந்து மாறி தனித் தனிக் குடும்பங்களாக வசிக்க ஆரம்பித்து விட்ட நிலையில், கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆற்றுப்படுகைகள், மலைச்சிகரங்கள் என எந்த இடத்தினையும் விடுவதில்லை! உத்திராகண்ட் மாநிலத்தில் நடந்த பேரழிவு நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது!  


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து....  


காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... 


 காங்க்ரா கலை அருங்காட்சியகத்திலிருந்து.... 

ஆபரணங்கள், கலைப்பொருட்கள், ஓவியங்கள் ஆகியவற்றை பார்த்து ரசிக்க முடிவது ஒரு நல்ல விஷயம் என்பதால் இங்கே சென்று ரசிக்கலாம். அருங்காட்சியகத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் என்ன செய்தோம், எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

22 கருத்துகள்:

 1. படங்களை ரசித்தேன். எனினும் அருங்காட்சியகங்களை பார்க்கும் ஆவல் இருந்ததில்லை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. எப்பொழுதுமே அருங்காட்சியகத்தை உள்ளூர்காரர்கள் பார்ப்பதில்லை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. அருங்காட்சியகம் நன்றாக இருக்கிறது.
  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 5. அருங்காட்சியகங்களுக்குள் நிறைந்திருக்கும் மௌனத்திற்கு ஈடிணையில்லை..

  அரிய பொருட்களைப் படங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 6. சேகரிப்புகள் வியப்பளித்தன. ஓவியங்கள் அழகு! சிலைகளில் பன்றி கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 7. அருங்காட்சியகம் அழகாக இருக்கு. இருந்தாலும் பொருட்கள் (கலெக்ஷன்ஸ்) மிகவும் கம்மியாகத் தெரிகிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறைவாகவே இருந்தன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. அதென்ன கொலுசா?! அருங்காட்சியகங்களுக்கு நம்ம பசங்களை கூட்டி போகனும் அப்பதான் நம் கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் பற்றி தெரிஞ்சுப்பாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொலுசு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 9. காங்க்ரா உங்க பதிவு வழியாக படித்து சுற்றி பார்த்தாச்சு படங்களுடன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   நீக்கு
 10. அருங்காட்சியகம்..படங்கள் சூப்பர்ப்ப.....அதுவும் கடைசியில் சிலைகள் படம் நல்லாருக்கு....கொலுசு படமும்...

  மக்கள் தொகை பெருக்கம், கட்டிடங்கள்...பற்றி நீங்கள் சொல்லியிருப்பது...அப்படியே டிட்டோ....

  தொடர்கிறோம். ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 11. வராகமா அது?

  கெமெரா சார்ஜ் ஒன்னு வச்சுருந்தால் எனக்கு நிம்மதி. கொடுத்துட்டு நாம் சுட்டுத் தள்ளிக்கலாம் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேமரா சார்ஜ் - நல்லது தான் - இஷ்டப்படி சுடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....