செவ்வாய், 15 மே, 2018

டிங்கிரி டிங்காலே மீனாட்சி





படம்: இணையத்திலிருந்து....

இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே? எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில், வேதா அவர்களின் இசையில், டி. யோகாநந்த் அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த படம்! இந்தப் பாடலை பாடியது டி.எம்.எஸ்! அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு பாடல். முதல் முறை கேட்டாலும் ரொம்பவே பிடித்தது எனக்கு. உங்களுக்கும் பிடிக்கலாம். இந்த மாதிரி நிறைய பழைய பாடல்களை வேம்பார் மணிவண்ணன் என்பவர் Youtube-ல் தரவேற்றம் செய்து வைத்திருக்கிறார். முடிந்தால் அவரது யூ பக்கத்தில் பார்த்து பாடல்களை ரசிக்கலாம்!


இந்தப் பாடல் வரிகளும் அதே பக்கத்தில் கிடைத்தது. வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  

காணொளியுடன் பாடல்:


பாடல் வரிகள்:

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ...ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம படைச்சுப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே


ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி


உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
--டிங்கிரி டிங்காலே

கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
--டிங்கிரி டிங்காலே

என்ன நண்பர்களே, பாடலை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து.....

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி! ஆஜர் இதோ பதிவு பார்த்துட்டு வரோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறோம் ஜி ஆனால் இப்பத்தான் வரிகள் முழுமையாகப் பார்க்கிறேன்..

    //உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

    கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
    காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்//

    ஆஹா 1958 லயும் இதே டயலாக் தானா....அப்புறம் எதுக்கு நம்ம மக்கள் அந்தக்காலத்த பாரு அந்தக்காலம் அப்படினு....இது தொடர்கதை போல...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இந்தப் பாடல் நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? நான் முதல் முறை கேட்டேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
    குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச//
    கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
    பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
    கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
    காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது//

    ஆஹா நாம இப்ப சொல்லறதுதான் அப்பவேவா!! அப்ப இனி அந்தக் காலத்துல நு யாராவது தொடங்கினாங்கனா இந்தப் பாட்டை எடுத்து விடட்டற வேண்டியதுதான் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்துல நு யாராவது தொடங்கினாங்கனா.... ஹாஹா... இது நல்ல வழியா இருக்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. அருமையான பாடல் ஜி!! மிக மிக அருமையான பாடல்..மிக்க நன்றி ஜி பகிர்ந்தமைக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. குட்மார்னிங் வெங்கட். பாடல் கேட்டிருக்கிறேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. என் பழைய பாடல் சேமிப்பில் இருக்கும் பாடல்.
    அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் சேமிப்பில் இந்தப் பாடலும் இருக்கிறதா.... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் வெங்கட்ஜி அப்போதெல்லாம் சிலோன் ரேடியோவில் இது அடிக்கடி ஒலிக்கும் பாடல். அருமையான பாடல் அந்தக் காலமும் இந்தக் காலம் போலத்தான் இருந்தது போலும்...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல் - மகிழ்ச்சி. சிலோன் ரேடியோ கேட்ட காலம் - அது ஒரு கனாக் காலம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  10. முதல் இரண்டு வரிகள்தான் தெரியும். இப்போதுதான் முழு பாடலும் கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவு மூலம் முழுப் பாடலும் நீங்களும் கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  11. பழைய பாடல்களில் நான் ரசிக்கும் பாடல்களில் இதும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பழைய காலத்து நல்ல பாடல். பலமுறை பாடல் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இன்று தங்கள பதிவின் மூலம் வரிகள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  13. கேட்ட பாடல்தான் ஆனால் பாடல் வரிகளுக்குள் சென்று ரசிப்பது இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிகள் - இப்போதைய பாடல்களில் வரிகள் புரிவதே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. எங்க அம்மா இந்தப் பாடலை அடிக்கடி பாடுவார். அதனால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இந்தப் பாடல் உங்கள் அம்மா அடிக்கடி பாடும் பாடலா? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....