வியாழன், 18 ஏப்ரல், 2024

கதம்பம் - Coconut Roll cut Ice Cream - காலைத் தென்றல் (நடைப்பயிற்சி) - கனவுகள் - சுஜாதா (வாசிப்பனுபவம்) - ராமநவமி (நடைப்பயிற்சி)


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


Coconut Roll cut Ice Cream - 11 ஏப்ரல் 2024:



அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா நல்லாத் தான் இருக்கும்! அப்படி இணையத்தில் பார்த்து செய்த பனிக்கூழ் இது...🙂 செய்முறை எளிதானது! சுவையும் ஜோர்!


*******


காலைத் தென்றல் (நடைப்பயிற்சி) - 16 ஏப்ரல் 2024:




காலையில நல்ல ஜில்லுனு தான் காத்து வருதே! பகல்ல தான் உஷ்ணம் தாங்க முடியல!


போன தடவை பார்த்ததுக்கும் இப்ப பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம்  வந்துடுத்து இல்ல!


தோப்புகளும், வயல்களும் அப்படியே காணாம போய் எங்க பார்த்தாலும் கான்க்ரீட் காடுகளா மாற ஆரம்பிச்சாச்சு! 


இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்தா இதெல்லாமும் மாறலாம்! வரிசையா மரத்தெல்லாம் வெட்டி போட்டிருக்காங்க...🙁


*******


கனவுகள் - 16 ஏப்ரல் 2024:


சமீபத்தில் 'சிலப்பதிகாரம்' வாசிக்க வாய்ப்பு கிடைத்தது! எளிய தமிழில் வாசிக்க சுவாரஸ்யமாகவும் இருந்தது! கதை நமக்கு முன்பே தெரிந்திருந்தாலும் ஒவ்வொருவரின் உரைநடையில் கோணங்கள் மாறுபடும்!


நான் சிலப்பதிகாரம் வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில் மகள் 'சிவகாமியின் சபதம்' வாசித்தாள்! இருவரும் கதையைக் குறித்தும் பேசிக் கொண்டோம். 


சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு ஏற்பட்ட கனவில் புதிய ஒரு நகருக்கு தாங்கள் செல்வதாகவும் அங்கு அவர்களுக்கு தீங்கு ஏற்படுவதாகவும் தோன்றுகிறது! கோவலனுக்கோ தான் ஒரு எருமையின் மேல் அமர்ந்து செல்வதாகவும் கண்ணகிக்கு அதன் பின்பு தீங்கு ஏற்படுவதாகவும் தோன்றுகிறது!


பின்னால் நடக்க இருக்கும் நிகழ்வுகள் தான் இவர்களுக்கு கனவில் தோன்றுகிறது! ஆனால் நமக்கெல்லாம் தோன்றும் கனவுகள் இயற்கைக்கு முரண்பட்டும், மாறுபட்ட கோணத்திலும் அல்லவா இருக்கிறது!!??


*******


சுஜாதா (வாசிப்பனுபவம்) - பிரிவோம் சந்திப்போம் - 16 ஏப்ரல் 2024:


நேற்று முதல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'பிரிவோம் சந்திப்போம்' வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்! அம்பாசமுத்திரம், பாபநாசம் என்று பயணிக்கத் துவங்கியிருக்கும் கதையில் ரகுபதி - மதுமிதா காதல் கைகூடுமா??


*******


ராமநவமி (நடைப்பயிற்சி) - 17 ஏப்ரல் 2024:







இது என்ன மரம்? பூவா! இலையான்னே தெரியல? வழி நெடுக இருக்கு!


வேப்பம்பூ வேற கொட்டிக் கிடக்கு! 


அங்க கோழிக்கொண்டை மாதிரி செண்டு செண்டா போகன்வில்லா இருக்குல்ல!


ஆமா! நல்ல டார்க் கலர்ல! இங்க பாரு வாழையெல்லாம் தார் போட்டிருக்கு!


அட! ஆமா! இலையால மூடி வெச்சிருக்காங்க!!


ஒருதடவ தான் தார் விடுமா??


இந்தப் பூவில இருந்து தான் இவ்வளவு காயுமா??


ஆமா! நம்ம வாழைப்பூ வாங்கும் போது கள்ளன் எடுத்துப் போடுவோம் தானே! அதுகூட பூ இருக்கும்! அதெல்லாம் தான் இப்போ காயா மாறியிருக்கு!


அப்படியா!! அப்போ வாழைப்பூ கூட விக்கறாங்களே! அதைக் காயா மாற விட வேண்டியது தானே??


பூவுக்குன்னே சிலதை விட்டுடுவாங்க!


ஓ! வாழையில எல்லாமே பயன்படும்னு படிச்சிருக்கேன்!


இதென்ன! எதுல தான் போஸ்டர் ஒட்டுறதுன்னு இல்லையா!


'இமயம் சரிந்தது'ன்னு போகற பாதைய காட்டற போர்ட்ல போய் ஒட்டியிருக்காங்களே!


வெளில இருந்து வர்றவங்களுக்கு வழி தெரியத் தான் இப்படி வச்சிருக்காங்கன்னு யோசிக்க வேணாமா! என்னத்த சொல்றது!!


சரி! சரி! சீக்கிரமா வீட்டுக்கு நடையக் கட்டுவோம்! இன்னிக்கு நம்ம 'பாப்பா ராம்'க்கு பர்த்டே இல்லையா!


ஒரு சொல்! ஒரு வில்! ஒரு இல்! என வாழ்ந்து காட்டியவன்! நீதிநெறி தவறாத அரசாட்சி செய்தவன்! அவன் கைப்பிடிச்சு அழைச்சிண்டு போற பாதைல நாமும் பயணப்படுவோம்!

*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


6 கருத்துகள்:

  1. உண்மையில் வெயில் நேரத்தில் ஐஸ்க்ரீம்  சாப்பிடக்கூடாது என்பார்கள்.  கோகனட் ரோல் கட் ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது.  ஸ்ரீரங்கமே கான்க்ரீட் காடுகளாய் மாறினால் சென்னை போன்ற பெருநகரங்கள்?!!  கண்ணகி பெரிய அல்லது முதல்தர பத்தினி இல்லை - பாண்டியன் மாதேவியைவிட - என்பது போன்ற ஒரு வாதத்தை ஒரு பேச்சாளர் பட்டிமன்றத்தில் பேசக்கேட்டேன்.....சுவாரஸ்யமாய் இருந்தது!  பிரிவோம் சந்திப்போம் வெளிவந்தபோது வாசித்தது.  காதலின் தவிப்பை முதல்பாகத்தில் அப்படி எழுதி இருப்பார் சுஜாதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் நேரத்தில் சில்லென்ற பானங்களும் ஐஸ்க்ரீமும் அல்லவா உயிரூட்டுகிறது!! உண்மை தான் சார் ஸ்ரீரங்கமே இப்படியென்றால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு கேட்கவும் வேண்டுமா!! பிரிவோம் சந்திப்போம் இரண்டு பாகங்களும் சேர்ந்த தொகுப்பை தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. கதம்பம் அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.
    எல்லா ஊர்களும் காங்க்ரீட் காடுகளாக மாரி வருவது உண்மை.
    காடுகளை அழித்து , வளத்தை அழித்து மாடியில் தோட்டம் அமைக்கும் கலை பரவி வருகிறது.

    ராமநவமி பிரசாதம் நீர் மோர், பானகம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஈடுகட்ட வேறு வழியில்லை என்று தோன்றுகிறது! காடுகளை அழித்தால் வளமும் குறைந்து போய்விடுகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. போஸ்டர் ஒட்டுவதற்க்கு வேறு இடமா கிடைக்கவில்லை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். கொஞ்சம் கூட யோசிப்பதில்லை..:( எல்லா இடத்திலும் போஸ்ட்டர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....