வெள்ளி, 24 மே, 2024

23ஆம் ஆண்டில் அடியெடுத்து….
இந்த மனதிற்கு தான் எத்தனை எத்தனை உணர்வுகள்! சட்டென்று திரும்பி பார்த்த போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது! மிகவும் பிரயத்தனப்பட்டு கடத்திய நாட்கள் தான் எங்கே!! இப்போது இவ்வளவு தூரமா வந்துவிட்டோம் என்று பிரமிப்பாக உள்ளது!


ஒரு பார்வையாளராக என்னை நானே உற்று பார்க்கிறேன்! காலம் தான் எனக்கு எவ்வளவு பரீட்சைகள் வைத்து பார்த்திருக்கிறது! என் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பதில் தந்திருக்கிறது! இப்படித்தான் இருக்கணும் என இறைவன் முடிவு செய்ய அதை நாம் எங்கே மாற்றுவது!! 


தனித்திருந்து தன்னம்பிக்கையை, தைரியத்தை, வாழ்க்கைக்கான பக்குவத்தை, யாரின் மீதும் பற்று வைக்காதிருக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும் சாதிக்கவும் நேரம் ஒதுக்கியதாக தான் நினைக்கிறேன்! இந்த எண்ணங்கள் எல்லாம் நேரம் காலம் பொறுத்து தான் வரும்!


வாழ்க்கைப் படகில் கரம் கோர்த்து பயணிக்கத் துவங்கி வருடங்கள் பல கடந்து விட்டாலும் துவக்கத்தில் இருந்த உற்சாகமும், ஈர்ப்பும் அந்தப் பயணம் முழுவதும் இருக்குமா என்றால் அது நம்மை நம் சுற்றியிருக்கும் சூழலை பொறுத்தே இருக்கும்!


ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும்,  அன்பும், புரிதலும் தான் சங்கிலி போல் பிணைந்து பெரும் காற்றுக்கும் மழைக்கும் புயலுக்கும் நடுவே அரண் போல் பாதுகாத்து அவர்களை கரை சேர உதவும்! கடந்து வந்த பயணத்தை அவ்வப்போது அசை போட்டு பார்த்தால் வாழ்வின் மீதான புரிதல்கள் புரிய வரும்!


இந்த இனிய நாளில் எங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நட்புகளான உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் ஆசிகளும் மாரி போல் மலர் தூவி எங்கள் மீது பொழிந்தால் மிகவும் மகிழ்வோம்!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

24/5/24

16 கருத்துகள்:

 1. இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கில்லர்ஜி சார்.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. அருமையாக உங்கள் மனதின் எண்ணங்களை எழுதியுள்ளீர்கள். இல்லறத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பையும் பாசத்தையும் மட்டுமே பகிர்ந்து கொண்டு கருத்துக்கள் பேதமின்றி ஒருமித்து வாழ்ந்து வந்தால் , அந்த இல்லறம் சிறப்புடையதாக அமையும். அத்தகைய சிறப்புகளுடன் வாழ்ந்து வரும் உங்களிவருக்கும் என் மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துகள். சகோதரி. இன்று போல் நீங்கள் என்றும் வாழவேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் கமலா ஜி.

   நீக்கு
 3. திருமணநாள் வாழ்த்துகள். இருவரும் சேர்ந்து செயல்படும்கோது வாழ்க்கைப் படகு ஓட்டுவது அவ்வளவு கஷ்டமில்லை. இன்னும் சில பல வேலைகள்தாம் பாக்கி. எல்லாமே நன்றாக நடைபெறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் நெல்லை சார்.

   நீக்கு
 4. பெயரில்லா25 மே, 2024 அன்று 8:03 AM

  ஸாரி ஆதி அண்ட் வெங்கட்! தாமதமாகிவிட்டஹு.

  மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்!

  எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் கீதா சேச்சி.

   நீக்கு
 5. தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 6. காலை முதல் என் கமெண்ட் ஏறவே இல்லை. பலமுறை முயற்சித்தும் ஏறவில்லை. இப்போது மாடரேஷன் வைத்துள்ளீர்கள் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியல சார். என்னவர் ஏதேனும் மாற்றியிருக்கலாம் என நினைக்கிறேன்.

   நீக்கு
 7. இனிய திருமணநாள் வாழ்த்துகள் ஆதி, வெங்கட் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
  பதிவு அருமை. புரிதல்தான் கணவன், மனைவிக்கு இடையே உள்ள பிணைப்பை வலுபடுத்தும்.இன்றுபோல என்றும் வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் கோமதிம்மா.

   நீக்கு
 8. தாமதமாக வந்துள்ளேன்.

  இனிய தம்பதிகளுக்கு எமது அன்பான இனிய திருமணநாள் வாழ்த்துகள்.
  இருவருக்கும் வாழ்க்கையில் வெற்றிகளும் நலன்களும் கிடைக்க வேண்டுகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....