ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி - இந்த மூன்று நற்குணங்களோடு அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகிவிடும்விவேகானந்தர்.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணித்தபோது எடுத்த சில நிழற்ப்படங்கள் இன்றைய ஞாயிறில் நிழற்பட உலாவாக… பொதுவாக தமிழகத்தில் இருப்பவர்களுக்கு நம் ஊரில் போக்குவரத்து வசதிகள் சரியில்லை என்ற குறை உண்டு. வெளி மாநிலங்களை – குறிப்பாக வடக்கே இருக்கும் மாநிலங்களின் போக்குவரத்து வசதிகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் போக்குவரத்து வசதி ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பல ஊர்களுக்கு பேருந்து வசதியே இங்கே இல்லை. ஜீப்களிலும், டாடா 407 போன்ற மினி லாரிகளிலும் ஏறிக் கொண்டு – அதுவும் இடம் இருக்கிறதோ இல்லையோ, பலரையும் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பயணிக்கும் வாகனங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம் வரும் – கொஞ்சம் கட்டுப்பாடு இழந்தாலும் விபத்து ஏற்பட்டு பலருடைய உயிர் போகும்! பல விபத்துகள் நடந்த பிறகும் இந்தக் காட்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

சரி வாருங்கள் இன்றைய ஞாயிறு உலாவில் சில நிழற்படங்களைக் காணலாம்!    


படம்-1: மாடு எல்லாம் மேயட்டும்… கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்!


படம்-2: அம்மா, நீ போய்ட்டே இரு, எங்க வண்டில காத்து இருக்கான்னு பார்த்துட்டு பின்னாலேயே வந்துடுவோம்!


படம்-3: பொழுது சாயறதுக்குள்ளே வீடு போய் சேரணும் புள்ள, விரசா நடவேன்!


படம்-4: பார்த்து சூதானமா அம்மாவோடயே நடந்து வா ராசா… தலைச்சுமையோட, உன்னையும் தூக்க முடியல ராசா…


படம்-5: ம்ம்ம்ம்… இப்படித்தான் நடக்கணும்! ஒழுங்கா ஃபோகஸ் பண்ணி ஃபோட்டோ எடுன்னு டி-ஷர்ட் மூலமா எனக்கும் சொல்றாரோ?


படம்-6: எலே சின்ராசு, வண்டில போறவுக, நம்மளையா படம் புடிக்குறாக… எனக்கு ஒரே வெக்கமா இருக்குலே!


படம்-7: காய்கறில்லாம் சல்லிசான விலையல இருக்குங்கோ, வூட்டுக்கு வாங்கிட்டு போய் ஆக்கி சாப்பிடுவீங்களாம்…


படம்-8: கிட்டிப்புள் விளையாடலாம் வாரீகளா? ஆமாம் என்னையா அந்த வண்டில போறவுங்க படம் பிடிக்கிறாக…


படம்-9: ஐயா… நம்ம எல்லாரையும் படம் புடிச்சிட்டாங்களே! அதை நம்ம கிட்டயும் காமிச்சாதான் என்னவாம்!


படம்-10: வண்டிக்கு மேலேயே இத்தனை பேருன்னா… உள்ளே எவ்வளவு பேரு இருப்பாங்க?


படம்-11: ராஞ்சி – ஹசாரிபாக் சாலை – அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமா?


படம்-12: நடுவால போகுதே லாரி, அதோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன? கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அந்த லாரில இருக்க பொருள் உங்களுக்கு பரிசு!


படம்-13: தலைகுனிஞ்சு போகும் இந்த ஆண்களுக்கும் வெட்கமோ? வைக்கோல் சுமையோடு நடக்கும் உழைப்பாளிகள்…


படம்-14: தாத்தா, கீழே விழுந்துடப் போறீங்க… பார்த்து, கெட்டியா பிடிச்சுக்கோங்க! [இந்தப் படம் ஏற்கனவே இங்கே போட்டு இருக்கேனோ?]


படம்-15: காட்டு வழில மிருகம் வந்தாலும் வரலாம்… உள்ளே இருக்கவங்களுக்கு கவலையில்லை… மேலே இருக்க ஆளுங்க கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துட்டே வாங்கடே…

இந்தப் படங்கள் அனைத்துமே எங்கள் வாகனத்தில் பயணித்தபடியே எடுத்தவை என்பதால் அத்தனைச் சிறப்பாக வரவில்லை. வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுக்க முடியாதே... 

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

 1. படங்களும் அதனோடு கூடிய வாசகங்களும் ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கில்லர்ஜி. படங்களும் வாசகங்களும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. எனக்கு காங்கிரஸ் மேல் இன்று வரையிலும் அதிக வெறுப்பு உருவாகக் காரணம் இங்கு பணிபுரியும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் சொல்லும் கதைகள் தான். இப்போது தான் மின்சாரமே உள்ளே போகின்றது. இந்தப் படங்களைப் பார்க்கும் 1947 தமிழ்நாடு ஞாபகத்திற்கு வருகின்றது. நான் ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தெருவில் அங்கங்கே ஒரு குண்டுபல்பு தெருவிளக்காக எறிந்து கொண்டு இருக்கும். இப்போது? இது தான் தமிழ்நாடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகளாகத் தான் முன்னேற்றம் தொடங்கி இருக்கிறது. சாலை வசதிகள், ஆற்றின் குறுக்கே அணைகள், இரயில் பாதைகள் என அமைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் இத்தனை ஆண்டுகள் கழித்து தான் இவை தொடங்கி இருக்கின்றன என்பது பெரும் சோகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 3. கதைகள் பல சொல்லும் படங்கள்.

  சிறு குழந்தைகள் இரண்டு நடந்து செல்வது மனதை தொட்டது உழைக்கும் மக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதைகள் பல சொல்லும் படங்கள்... நன்றி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அன்பு எதனுடன் சேர்ந்தாலும் எல்லாவற்றையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு விடும்.

  வணக்கம் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். அன்பு பற்றிய உங்கள் கருத்து மகிழ்ச்சி தந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அவன் வண்டியை தயார் செய்துகொண்டிருக்கும் ஒரு சிறுவன் மலையின் ஒட்டில் நிற்கிறானோ, விழுந்து விடுவானோ என்கிற கவலையை ஏற்படுத்துகிறான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலையின் ஒட்டில் அல்ல. சாலையோரத்தில் தான்... கவலை வேண்டாம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வண்டிப்பயணம் - ஆபத்தான பயணம். குழந்தைகள் புகைப்படம் எல்லாம் ஜோர். அந்த வண்டி எண் கன்னுக்குத் தெரியவில்லை. அதில் உள்ள பொருட்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆபத்தான பயணம் தான்.... வண்டி எண் :)))) இருப்பதாக தெரியவில்லை ஸ்ரீராம். அதனால் தான் தைரியமாக பரிசு அறிவிப்பு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. // வாகனத்தில் பயணித்தபடியே எடுத்தவை //

  மனிரத்ன ஸ்ரீராம் சாரிடம் இதைப்பற்றி நிறைய பேச வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. ஒவ்வொரு ஊர் மனிதர்கள் அவர்கள் வாழ்வியல் என்று பார்க்கும் போது பல எண்ணங்கள் மனதில் ஓடும். அப்ப்டித்தான் இன்றைய படங்கள்.

  தமிழ்நாட்டில் போக்குவரத்து மிக மிக நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். போக்குவரத்து மட்டுமல்ல பல வசதிகள் வடக்கு மாநிலங்களில் நகரங்கள் தவிர மிஸ்ஸிங்க்தான். பல ஊர்கள் மின்சாரமே இல்லாமல்...போக்குவரத்தும் இல்லாமல் அதுவும் மலைவாழ் மக்கள்..எல்லாம்.பாவம் மக்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல ஊர்களில் பல மனிதர்கள்... அவர்களது வாழ்வியல் என அனுபவம் கிடைப்பது நல்ல விஷயம் தான் கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. முகப்புப் படம் மிக மிக அழகாக இருக்கிறது ஜி.

  படத்திற்கான உங்கள் கேப்ஷன்ஸ் எல்லாமே அருமை.

  வைக்கோல் சுமக்கும் படம் மற்றும் சாலைப் படங்கள் அழகு..

  வண்டியில் பயணித்துக் கொண்டே எடுத்த படங்கள் வாவ்!!!! நல்லாவே வந்திருக்கு வெங்கட்ஜி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகப்புப் படம் தமிழகத்தில் எடுத்தது. சென்னையில் இருந்து மஹாபலிபுரம் செல்லும் வழியில்....

   படங்கள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. படங்கள் எல்லாம் அருமை.
  ஒவ்வொரு படத்திலும் ஒரு கதை இருக்கு .

  வண்டியில் தொற்றிக் கொண்டு போகும் வயதானவர் கவலை அளிக்கிறார்.
  தலைசுமையோடு குழந்தையை தூக்கமுடியாத மனசுமையும் சேர்ந்து கொண்டதே அம்மாவுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு படத்திலும் ஒரு கதை... சக பதிவர்கள் யாராவது இந்தப் படங்களில் ஏதாவது ஒன்றிற்கு கதை எழுதினால் மகிழ்வேப்...

   தலைச் சுமையோடு மனச் சுமையும்... ஆமாம் கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. படங்கள் ஒவ்வொன்றும்
  கதை சொல்கின்றன...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படங்கள் ஒவ்வொன்றும் கதை சொல்கின்றன...// மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....