வியாழன், 1 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக்கு தப்பாது – ரசித்த பாடல் – கார்ட்டூன் – என்ன ஆகும்


காஃபி வித் கிட்டு – பகுதி – 39

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


ரசித்த சிற்பமும் அதற்கான விளக்கமும்:

WhatsApp வழியே வந்த இந்தப் படமும் தகவலும் மனதைக் கவர்ந்தது. இதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லாதவர்களுக்காக, இங்கேயும்...அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்திக்கிறான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்கிறான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காண்பிக்கிறார்.

யார் இந்த ஆமையும் யானையும்? விபாவசு, சுப்ரீதிகா என்று இருவர் இருந்தனர். இளையவன் சுப்ரீதிகா தமையன் விபாவசுவிடம் சொத்துகளைப் பிரித்துத் தருமாறு சண்டை போட்டுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சொத்துப் பிரிவினை நடந்தாலும், அதன் பிறகும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபிக்கிறான். சுப்ரீதிகா, தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபிக்கிறான். யானையாகவும் ஆமையாகவும் ஆனபின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொல்கிறார் கஷ்யபர்.

கருடன் பாய்ந்துசென்று ஒரு கையால் யானையின் தும்பிக்கையையும் மற்றொரு கையான் ஆமையின் கழுத்தையும் பிடிக்கிறான். பிறகு சாவகாசமாக இரண்டையும் தின்ன ஓர் இடத்தைத் தேடுகிறான். இப்படியே பரந்து பறந்து சென்று கடைசியில் ஒரு ஆலமரத்தில் ஏறி அமர்கிறான் கருடன். ஆனால் கருடனின் கனம் தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழப்போனது. அந்த மரக்கிளைகளில் வால்கில்ய ரிஷிகள் தலைகீழாகத் தொங்கி தவம் செய்துவந்தனர். வால்கில்யர்கள் பிக்மி வகை ரிஷிகள். மிகச் சிறிய பரிமாணம் உடையவர்கள். சொல்லப்போனால் கருடன் பிறப்புகே வால்கில்யர்கள்தான் காரணம். அந்த ரிஷிகள் கீழே விழுந்துவிடக்கூடாதே என்று கருடன் பாய்ந்து அந்தக் கிளையை தன் அலகால் கவ்விக்கொள்கிறான்.

அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.

என் கணக்கு என்னிக்குமே தப்பாது:

கடந்த ஞாயிறன்று ஒரு கடைக்குப் போயிருந்தேன். பொருட்களை வாங்கிய பின் அதற்குரிய மதிப்பினை டெபிட் கார்டு மூலம் தரலாம் எனக் கொடுக்க, ”மெஷின் வேலை செய்யல, காசா கொடுங்க” என்றார் அங்கே இருந்த இளைஞர். நல்ல வேளையாக அப்போது தான் பணம் எடுத்து வந்திருந்தேன் – அவரிடம் 400 ரூபாய் கொடுக்க, மீதியாக ஒரு பத்து ரூபாய் காயினும், ஐந்து பத்து ரூபாய் தாள்களும் கொடுத்தார். மீதியாக எனக்குத் தர வேண்டியதோ அதைவிட குறைவான பணம் தான். ”என்ன இவ்வளவு தரீங்க, சரியா கொடுங்க” என அவர் அதிகமாகத் தருகிறாரே என்ற எண்ணத்துடன் சொல்ல, அவரோ, என்னிடம் கோபமாக, “எல்லாம் சரியாத்தான் கொடுத்திருகேன்… என் கணக்கு என்னிக்குமே தப்பாது” என்று ஒரு வித இறுமாப்புடன் பதில் தந்தார்! ”அடேய் நீ அதிகமாக தருகிறாயே என்று உனக்குச் சொல்ல நினைத்தது என் தப்பு! நீயே எனக்கான பில்லையும், நீ கொடுக்க வேண்டியதையும், கொடுத்ததையும் பார்” என்று சொல்ல, ”அட ஆமாம்… அதிகமா தான் கொடுத்துட்டேன் – சிலப்ப இப்படி தப்பும் தான்! அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கலாமா!” என்று சொல்லி சரியான பணத்தினை திருப்பினார்! தப்பை தப்புன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா!

ரசித்த பாடல்:  

இந்த வார ரசித்த பாடலாக ஒரு மலையாளத் திரைப்படப் பாடல் – 1999-ஆம் வருடம் வந்த ஒரு படத்திலிருந்து இந்தப் பாடல். சமீபத்தில் தான் இப்பாடலை ஸ்ம்யூல் பாடல் ஒன்றாக பார்த்தேன். அதில் பாடியவர் வேறு இருவர். இங்கே இந்தப் பாடல் நீங்களும் ரசிக்க…இந்த வாரத்தில் ரசித்த கார்டூன்:
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதே வாரத்தில் 2010-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு பதிவு – என்ன ஆகும்? எதுனால என்ன ஆகும்னு கேட்டிருக்கிறேன்? உங்களில் நிறைய பேர் இந்தப் பதிவினை படித்திருக்க வாய்ப்பில்லை. படிக்காதவர்கள் படித்து வரலாம் – இந்தப் பதிவிற்கான நண்பர் பத்மநாபன் அவர்களின் கருத்துரை இப்போதும் ரசிக்க முடியும்! படித்துப் பாருங்களேன்!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

44 கருத்துகள்:

 1. காஃபி வணக்கம் வெங்கட். பொன்மொழி இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வணக்கம் ஸ்ரீராம். :)

   பொன்மொழி ரசித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
  வாசகம் அருமை.

  ஆம் குழந்தை போல் இதயம் இருந்தால் எந்த நாளும் மகிழ்வான நாள்தான் இல்லையா.

  நேற்றைய எபி பதிவில் கூட பிஏசி யில் இதுதானே டாப்பிக்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் கீதாஜி!

   குழந்தை போல இதயம் இருந்தால்!... அதே அதே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ​கடைசியில் கருடன் அந்த யானையையும் ஆமையையும் தின்றாரா இல்லையா என்று சொல்லவே இல்லை நீங்கள். கீதா அக்கா... ஹெல்ப் ப்ளீஸ்.

  திருக்குறுங்குடி என்றதும் கீதா ரெங்கன் மகிழ்ந்து போவார் என்பது நிச்சயம். வல்லிம்மாவும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் மகிழ்ந்து போனேன்!! திருக்குறுங்குடி என்றதும்..எத்தனையோ நினைவுகள்.

   கீதா

   நீக்கு
  2. முழுக்கதையும் எனக்குத் தெரியாது ஸ்ரீராம். உங்களுக்காகவே கீழே வல்லிம்மா சொல்லி இருக்கிறார்!

   ஆமாம் அவரது மனதுக்குப் பிடித்த ஊராயிற்றே! நிச்சயம் கீதாஜி மகிழ்ந்திருப்பார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. திருக்குறுங்குடி உங்களுக்கு பல நினைவுகளை வரவழைத்திருக்கும் கீதாஜி. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ​வீண் பெருமை கொண்ட வியாபாரிபோல... எனக்கும் இதுபோல நேர்ந்திருக்கிறது. இவர்களை பொறுத்தவரை எப்போதும் மற்றவர்கள்தான் தப்பு செய்வார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம். சிலருக்கு அடுத்தவர்கள் மட்டுமே தவறு செய்வார்கள் என்று பலத்த நம்பிக்கை. என்ன சொல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பாடல் கேட்டுக்கொண்டே கார்ட்டூனை ரசித்தேன். நாய் வழுக்கையை நக்கிய பழைய கதை சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் கேட்டபடியே கார்ட்டூன் ரசித்தீர்களா? மகிழ்ச்சி. காட்சிகளைப் பார்ப்பதை விட பாடலை மட்டும் கேட்பதில் எனக்கும் விருப்பம் அதிகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இந்தப் பாடல் வேறு சில தமிழ்ப் பாடல்களை நினைவு படுத்துகிறது. ஏதாவது தெரிந்த ராகமாய் இருக்கும். யேசுதாஸ் குரல் இனிமை, மிக இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யேசுதாஸ் குரல் இனிமை - எத்தனை இனிமை அவர் குரலில்! எனக்கும் தாஸேட்டன் பாடல்கள் என்றால் இஷ்டம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. கார்ட்டூன் ஹா ஹா ஹா ஹா...

  சிற்பம் செம! என்ன அழகு! ஆஹா திருக்குறுங்குடி கோயிலா? அப்பாவின் ஊர்! நான் எத்தனை முறை சிறு வயதில் கோயிலுக்குச் சென்றிருப்பேன்...அப்போது இதை எல்லாம் பார்க்கவே இல்லை...வளர்ந்து எல்லாம் ரசிக்கத் தொடங்கும் போது கோயிலுக்குச்செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது.

  சொத்துச் சண்டை என்பதெல்லாம் எல்லா காலகட்டத்திலும் உண்டு போல.!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்ட்டூன் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   உங்கள் அப்பா ஊர் - சின்னச் சின்ன கிராமத்து கோவில்களையும் அங்கே இருக்கும் சிற்பங்களையும் சென்று பார்த்து படம் எடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எப்போது ஈடேறுமோ?

   சொத்துச் சண்டை - எப்போதும் உண்டு! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 8. 10 ரூ காயின் செல்லுதா அங்கு?

  இங்கெல்லாம் 10ரூ காயின் பார்க்கவெ முடியலையே இப்போது..

  கடைக்காரர் அனுபவம் ஹா ஹா...ஆனால் இப்படி எனக்கு அனுபவம் ஏற்படவில்லை. உடனே சரிபார்த்து வாங்கிக் கொண்டுவிடுவார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்து ரூபாய் காயின் எங்கேயும் செல்லும் - ஆனால் பல புரளிகளால் நிறைய ஊர்களில் - குறிப்பாக தென்னிந்தியாவில் வாங்கிக் கொள்வதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 9. பாடலும், பின்னோக்கியும் அப்புறமாக வருகிறேன் ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது வாருங்கள் கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. பாடல் முடிந்த போது கேளுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. கருடன் கதையை படித்தவுடன் படத்தை பெரிதாக்கி பார்த்தேன் ஜி. அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ள சிற்பம் மிக அழகு.
  கதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ள சிற்பம் மிக அழகு.
  கதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 14. திருக்குறுங்குடிக் கோயில் சிற்பம் அற்புதம்...

  அந்த கடை வளர வேண்டும்...

  அங்கு நண்பர் பத்மநாபன் அவர்களின் கருத்துரை காணாமே...?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் பத்மநாபன் கருத்துரை - ஈஸ்வரன் என்ற பெயரில் இருப்பது தான் அவர் கருத்துரை தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. எல்லாம் அருமை. பொன்மொழி மிகச் சிறப்பு. நாய் நக்குவது என்னமோ எனக்குப் பிடிக்காத ஒன்று. இத்தனைக்கும் எங்க வீட்டில் பல செல்லங்கள் இருந்து வாழ்ந்து மறைந்திருக்கின்றன. மலையாளப் பாடல்களின் ராகங்கள் எப்போதுமே அழகு, இனிமை, அதிக சப்தம் இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாய் நக்குவது - கொஞ்சம் அருவருப்பு தான். செல்லங்கள் பிடித்தாலும் அவற்றின் சில செய்கைகள் பிடிப்பதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  காஃபி வித் கிட்டு அருமை. பொன் மொழி மிகவும் நன்றாக உள்ளது.

  திருக்குறுங்குடி கோவில் சிற்பமும், கதையும் அழகும், ஸ்வாரஸ்யமுமாக இருந்தது. முடிவில் அமர்த கலசம் கருடனுக்கு கிடைத்ததா என்று தெரியவில்லையே.!

  தாங்கள் கணக்கு சரியாக பார்த்து கொடுத்தது.. நல்லதுக்கு காலமில்லை போலும்.

  அத்தனையும் அருமை. காஃபி சுவையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கமலா,அமிர்த கலசம் கருடன் கொண்டு வந்துவிடுகிறார்.
   அவரது தாயை சிறையில் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார்.
   நாச்சியார் கோவில் என்று கும்பகோணம் அருகே இருக்கிறது,. அங்கு பிரம்மானட கருடனைப் பார்க்கலாம்.

   நீக்கு
  2. அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.///என்ன ஒரு அருமையான புராணம். தாயை வணங்கியவர்கள் யாரும் சோடை போனதில்லை. தன் தாயைக் காக்கக் கருடாழ்வார் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றது.
   அன்பு வெங்கட் மிக மிக நன்றி.
   திருக்குறுங்குடி கோயில் சிற்பம் நான் இது வரை பார்த்ததில்லை.
   மிக மிக அருமை.
   காஃபியும், வாசகங்களும் மிக இனிமை.

   நாம் நாண்யமாக இருக்கணுனு நினைத்தால் கூட
   கடைக்காரர் விடமாட்டார் போல இருக்கே ஹாஆஹ்ஹா.

   மலையாளப் பாடல் கேட்க மிகவும் இனிமை.
   அப்பொழுதெல்லாம் ஸ்ருதி லயம் சேர்ந்து
   காதுகளுக்கு இனிமை கூட்டும்.
   அருமையான பதிவுக்கு நன்றி மா.

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   அப்படியா சகோதரி.! தாங்கள் கூறிய விபரமறிந்து கொண்டேன். இந்த கதை படித்திருக்கலாம். நினைவில் தங்கவில்லை. விளக்கமாக கூறியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. காஃபி வித் கிட்டு - உங்கள் கருத்துரை மகிழ்ச்சி தந்தது கமலா ஹரிஹரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. கருடன் கதை - முழுவதும் உங்கள் மூலம் அறிந்து கொண்டோம் வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  6. நாம் நாணயமாக இருக்கணும்னு நினைத்தாலும்... அதே தான் வல்லிம்மா...

   பதிவு பற்றிய உங்கள் கருத்துரைகள் கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  7. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 17. நாய் நக்கிய கதையைப் படித்த போது சுஜாதா எழுதிய குதிரை கடித்த கதை நினைவுக்கு வந்தது. 10 வருடம் ஆயிற்றே தற்போது முடிவு தெரிந்திருக்குமே.முடிவு என்ன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... நாய் நக்கிய கதையின் முடிவு - பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை. சாதாரணமாகவே இருக்கிறார் அவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. சிற்பம் நன்றாக இருக்கிறது. கதையும் அறிந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....