புதன், 2 ஆகஸ்ட், 2017

கெத்தாமரிக்காய் – தொக்கு – ஆதி வெங்கட்.நெய்வேலியில் இருந்த போது எங்கள் வீட்டிற்கு சில தெருக்கள் தாண்டி, ஒரு உறவினர் இருந்தார். சில சமயங்களில் எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் பேசுவதைக் கேட்டாலே எங்களுக்கு சிரிப்பு வரும் – காரணம் பாதி புரியாது! எதைச் சொல்கிறார் என்று புரிந்த பிறகு சிரிப்பு தான்! ஒரு நாள் அப்படித்தான் வீட்டிற்கு வந்தவர், “இன்னிக்கு டொக்கு போட்டேன்! ரொம்ப நல்லா வந்தது” என்றார். என்னது டொக்கு போட்டாரா, அப்படின்னா என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது அவரது அடுத்த வாக்கியத்தில் எங்களுக்கான பதில் இருந்தது.  “நீங்க கொடுத்த மாங்கால தான் டொக்கு போட்டேன்… ரொம்ப நல்லா இருந்தது. இன்னும் இரண்டு மாங்கா இருந்தா கொடுங்களேன்!” என்றார்…. அட மாங்காயில் தொக்கு எனப்படும் ஊறுகாய் செய்ததைத் தான் இப்படி “டொக்கு” போட்டேன் என்று சொல்கிறார் என்று புரிந்ததும், சிரித்தோம். சில காலம் வரை அவர் வரும்போது அம்மாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அம்மா, டொக்கு மாமி வந்துருக்காங்க!” என்று சொன்னதும் நினைவில்!

இந்த நிகழ்வு இப்போது எதற்கு!  இல்லத்தரசி போட்ட “டொக்கு”, இல்லை இல்லை தொக்கு பற்றிய பதிவினை பகிர்ந்து கொள்ளும்போது சேர்த்துக் கொள்ளத்தான்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

Over to Adhi Venkat!

கெத்தாமரி – தொக்கு!எங்கள் குடியிருப்புக்கு பக்கத்து கிராமத்தில் இருந்து கல்லு போடாத மாம்பழம் கொண்டு வந்து விற்பார் ஒரு அக்கா. நானும் வாங்கினேன். சுவையும் நன்றாக இருந்தது.

அடுத்த நாளும் “மாம்பழம்! மாம்பழம்…. கல்லு போடாம பழுக்க வைச்ச மாம்பழம்!” என அக்காவின் குரல்! மாம்பழத்துக்காகவே சாதம் சாப்பிடுபவளாச்சே நான். குரலைக் கேட்டதும் அடுக்களையிலிருந்த நான் காசை எடுத்துக் கொண்டு ஓடி, வாங்கிக் கொண்டேன் இரண்டு கிலோ...:) அப்போது தான் அந்த அக்கா இந்த கெத்தாமரிக்காய் பற்றிச் சொன்னார்..

தொக்கு போட்டா சூப்பராயிருக்கும் என்றார். கல்லாமணி என்னும் கிளிமூக்கு மாங்காயில் தான் இதுவரை செய்திருக்கிறேன் என்றதும் கொண்டு வந்து தரேன். அதில் செய்து பாரும்மா. அடுத்த வருடமும் என்னை தேடுவீங்க என்றார்.

ரெசிபி வேறு சொன்னார். ஓகே ஆயிலும், விளக்கெண்ணையும் போட்டு உப்பு, காரம் போட்டு செய்து பாரும்மா என்று!

அடுத்த முறை கொண்டு வர ”கெத்தாமரி” வாங்கியாச்சு. துருவி தொக்கு செய்யணும். அந்த அக்கா சொன்னபடி அல்ல! நான் எப்போதும் செய்யும் முறையில்!

இந்த மாங்காய்க்கு தேங்காய் பாறை என்ற பெயரும் உண்டாம். பாறை போலவே பெரிய அளவில் இருக்கிறது அந்த மாங்காய்! அந்த அக்கா பேரு கீதாவாம். அது சரி தொக்கு எப்படி செய்யறது?

தேவையானப்பொருட்கள்:

கெத்தாமரி மாங்காய்  - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

மாங்காயை சுத்தம் செய்து, தோலை சீவி எடுத்து விட்டு, துருவிக் கொள்ளவும்.

வாணலியில், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறிய பிறகு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணையை விட்டு சூடாக்கவும்.  எண்ணை சூடானதும் கடுகு போட்டு, அது வெடிக்கும்போது பெருங்காயத்தூளை சேர்க்கவும்.  பிறகு துருவி வைத்த மாங்காய் சேர்த்து வதக்கவும்.  மாங்காய் பாதி வெந்ததும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, எண்ணை பிரியும் வரை வதக்கவும்.  கடைசியில் வெந்தயப்பொடியைத் தூவி, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். அவ்வளவு தான்! மாங்காய் தொக்கு ரெடி!

வாங்கிய இரண்டு கெத்தாமரி என்றும் தேங்காய் பாறை எனவும் அழைக்கப்படும் மாங்காய்களில் ஒன்றைத் துருவி செய்த தொக்கு. மாங்காய் நல்ல புளிப்பு. தோல் சீவியது நான். துருவியது என்னவர் என்பது உங்களுக்கு நான் தரப்போகும் கூடுதல் தகவல். தொக்கு நன்றாக இருந்ததாக என்னவர் சொன்னார்! [தான் துருவியதால் தான் தொக்கு நல்லா இருந்தது என்று அவர் கொஞ்சம் பீற்றிக் கொண்டார்! அதையும் சொல்லணும்ல!]

நீங்களும் கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்.

வேறு ஒரு பகிர்வில் சந்திப்போம்…..

நட்புடன்


ஆதி வெங்கட்.

66 கருத்துகள்:

 1. இந்த மாங்காய் பேரைக் கேள்விப்பட்டதேயில்லை. நீலன்ல பெரிய சைசோ? பெங்களூர்ல ரொம்பப் பெரிய சைசுல மாங்காய் வாங்கியிருக்கேன் (1 கிலோ இருக்கும் 1 மாங்காய்). ஊறுகாய்க்கு ரொம்பப் புளிப்பா இருந்தது. இவ்வளவு பெரிய மாங்காயைச் சீவச் சொன்னா அப்புறம் எப்படி இடுகைலாம் எழுதறது? அதனால்தான் இரண்டு மாசம் எழுதலையா?

  தொக்கு செய்முறை எப்போதும்போல் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீலன் இல்லை. இதன் பெயரே கெத்தாமரி அல்லது தேங்காய் பாறை! ஒரு மாங்காயே ஒரு கிலோ இருக்கும்!

   இவ்வளவு பெரிய மாங்காயைச் சீவச் சொன்னா, அப்புறம் எப்படி இடுகை எழுதறது.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  2. கருத்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்..

   நீக்கு
 2. கிடைத்தால் அவசியம் சாப்பிட்டுப் பார்ப்பேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
  2. கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா..

   நீக்கு
 3. ஆதி! கெத்தாமரிக்காய்' பேரே வினோதமாக இருக்கே. கீதாசாம்பசிவம் அக்கா அம்பேரிக்காய்னு சொல்லுவது போல்!!ஹஹஹ்

  நான் எல்லா மாங்காயிலும் அதாவது கிடைக்கும் மாங்காய் எதுவாக இருந்தாலும் தொக்கு போட நினைத்தால் டொக்குனு போட்டுருவேன்!!ஹஹஹ். இதே ப்ரொசீஜர் தான். அழகாக அளவு எல்லாம் சொல்லியிருக்கீங்க. நான் அளவினைக் குறித்துக் கொண்டேன். ஏனென்றால் நான் எது செய்தாலும் கண்ணளவுதான்...அப்படியே பழகிவிட்டதால் சமையல் குறிப்புகள் கூட எழுத வருவதில்லை... குறிப்புகள் கொடுக்கணும்னா அளந்துப் போட்டுச் செய்தால்தானே குறிப்புகள் எழுத முடியும் அதுக்குப் பொறுமை வேண்டும்....ஹிஹிஹி..சமையல் குறிப்புகள் எழுதும் அனைவருக்கும் பாராட்டுகள் பா!!!

  அது சரி வெங்கட்ஜி தில்லியிலிருந்து பறந்து போய் ஆதிக்குத் துருவிக் கொடுத்து ஹெல்ப் பண்ணிட்டு வந்துட்டீங்களா ஹஹஹஹ்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பேரிக்காய் மாதிரி கெத்தாமரி! :)

   தில்லியிலிருந்து பறந்து போய்! - மே மாதம் அங்கே இருந்தபோது செய்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  2. நானும் கண்ணளவு தான் கீதா சேச்சி..:) ஆனா குறிப்புகளுக்காக அளவு தருகிறேன்..

   கருத்துகளுக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 4. வெங்கட்ஜி த ம அலை பேசி லிங்க் வரவில்லை...

  தமிழ் மணப் பெட்டியும் தெரியலையே...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு Schedule செய்து வைத்தது. மெதுவாகத்தான் லிங்க் கொடுக்க முடிந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. படத்தில் பார்த்ததும் அப்படியே நாவில் நீர் ஊறுது....நல்லாவந்துருக்குனு தெரியுது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லாவே வந்திருந்தது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. ரெஃப்ரெஷ் பண்ணியதும் லிங்க் வொர்க் ஆச்சு. த ம போட்டாச்சு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. தொக்கு சாதம் சூப்பராய் இருக்கும்.
  மோர் சாதத்துடன் தொக்கு.. சாப்பிடுவதே தெரியாது.. சுகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோர் சாதத்துடன் தொக்கு - சுகம்! :) உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   நீக்கு
 8. நாவில் உமிழ் நீர் சுரக்க வைத்துவிட்டீர்கள். சிறிது வெல்லம் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்குமாம். என் மனைவி சொன்னாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெல்லம் சிறிதளவு சேர்த்தால்.... சிலர் சேர்ப்பதுண்டு. நாங்கள் சேர்க்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   நீக்கு
  2. கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா..

   நீக்கு
 9. மாதா ஊட்டாத சோற்றையும் மாங்காய் ஊட்டும்!..
  மாங்காய் தொக்கு அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதா ஊட்டாத சோற்றையும் ! உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. மாங்காய் பெயர்கள் புதிதாக இருக்கிறது.
  தொக்குசுவை.
  நாங்களும் மாங்காயை விட்டு வைப்பதில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
  2. கருத்துகளுக்கு மிக்க நன்றி மாதேவி..

   நீக்கு
 11. நாங்களும் இது போல் செய்வது உண்டு...

  அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
  2. கருத்துகளுக்கு மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்..

   நீக்கு
 12. காயோட பெயர் புதுசுன்னாலும் இங்கே ஶ்ரீரங்கத்தில் தொக்கு மாங்காய் என்றே விற்பது இதைத் தான்னு நினைக்கிறேன். அம்பத்தூருக்கு முதல் முதல் குடித்தனம் போன வீடு மாந்தோப்பு பங்களா என்றே சொல்வார்கள். சுமார் 20மாமரங்கள் வீட்டைச் சுற்றிலும். குத்தகைக்கு விட்டிருந்தார்கள். குத்தகைக்காரர் மாங்காய் பறிக்கையில் எங்களுக்கு ஒரு மாங்காய் கொடுத்தார். என்னால் இரு கைகளாலும் வாங்க முடியவில்லை! அவ்வளவு பெரியது! ஒரு மாங்காய் 2 அல்லது 3 கிலோ இருக்கும்னு நினைக்கிறேன். சுவையோ சுவை! இப்போவும் அதை நினைத்தால் நாவில் ருசி இனிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொக்கு மாங்காய் - இது தான்! பெரிய காய் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. நீங்கள் சொல்லும் தொக்கு மாங்காய் இது தான் மாமி..மிக்க நன்றி மாமி..

   நீக்கு
 13. தான் துருவியதால் தான் தொக்கு நல்லா இருந்தது என்று அவர் கொஞ்சம் பீற்றிக் கொண்டார்
  /////
  இதேமாதிரிதான் என் சின்ன பொண்ணு சொல்லும்.. நான் பூண்டு நசுக்கி கொடுத்ததாலதான் ரசம் நல்லா இருந்துச்சு. குக்கர் ஆஃப் பண்ணதாலதான் சாம்பார் நல்லா இருந்துச்சுன்னு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா அங்கேயும் எனக்கு ஒரு சப்போர்ட்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
  2. மகளும் இப்படித் தான்...:) நன்றி ராஜி..

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 15. மாங்காய் தொக்கு அருமை.
  மாங்காய் பேர் கேள்வி பட்டது இல்லை.
  தொக்கு பார்க்க அழகாய் இருக்கிறது, சுவையும் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 16. சீசனில் செய்யும் தொக்கு செலவாக சில நேரம் வாரங்களாகும் நாங்கள் இருவர்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
  2. கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா..

   நீக்கு
 17. தொக்கு செய்வது பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இருவருமாக சேர்ந்து செய்ததில் சுவையும் கூடியிருக்கும்!
  கெத்தாமரி மாங்கயைப்பற்றி கேள்விப்பட்டதில்லை! நான் மாங்காய் புளிப்பாக இருந்தால் சிறிது வெல்லம் சேர்ப்பேன். அது அதிகப்படியான புளிப்பை சமன் செய்து விடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருவரும் சேர்ந்து செய்ததில் சுவை கூடி இருக்கும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
  2. கருத்துகளுக்கு மிக்க நன்றி மனோம்மா..

   நீக்கு
 18. நானும் இந்த மாங்காய் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. படத்தைப் பார்த்தால் காரம் கொஞ்சம் கம்மியாய் இருக்கும் போலிருக்கே... ஹிஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரம் கம்மியா இருக்கும் போல இருக்கே! - எனக்காக காரம் கொஞ்சம் கம்மி! அதுவே ஜாஸ்தியா இருந்தது எனக்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. இதுவே கொள்ளை காரமாம்..:) மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

   நீக்கு
 19. தொக்கு இங்கே, 'பெக்' கு எங்கே? - குவார்ட்டர் கோவிந்தன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா குவாட்டர் கோவிந்தன் வந்தாச்சா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்....

   நீக்கு
 21. டொக் ! டொக் ! வெங்கட் ஜி ! பயணத்தின் நடுவே பிக்கிள்சா? அருமை ஜி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தின் நடுவே பிக்கிள்ஸ்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   நீக்கு
  2. மிக்க நன்றி பிரசாத் சார்..

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....