எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 1, 2017

பதிவு எண் 1400 – பதிவுலகம் – காணாமல் போன பதிவர்கள்…
என் ப்ளாக்கர் கணக்கு நான் 352 பதிவர்களின் பதிவுகளைத் தொடர்வதாகக் கணக்குச் சொல்கிறது. இதைத்தவிர மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் வருமாறு பதிவு செய்திருக்கும் பதிவர்களின் எண்ணிக்கை இருபதிற்கும் மேல் இருக்கலாம்! அனைவரும் ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதினால் அனைத்தையும், அதே நாளில் என்னால் படிக்க இயலுமா என்று கேட்டால், அனைத்தையும், பதிவிட்ட நாளிலேயே படித்து முடிப்பது சந்தேகம் தான். இத்தனை பதிவர்களைத் தொடர்ந்தாலும், இவர்களில் இப்போது எழுதிக் கொண்டிருப்பவர்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை கொஞ்சம் கவலை தரும் அளவிற்குத் தான் இருக்கிறது. பதிவுலகில் அப்படி ஒரு சுணக்கம்.

எத்தனை எத்தனை பதிவுகள், போட்டி போட்டுக்கொண்டு பதிவர்கள் எழுத, அவற்றைப் படிப்பதும், திரட்டிகளில் வாக்களித்து, பதிவுகளை வாசித்ததற்கான அடையாளத்தினை கருத்திட்டு பதிவு செய்வது, என இருந்த பதிவுலகத்தில் இன்றைய நிலை கொஞ்சம் கவலைக்கிடமானது தான். பெரும்பாலான பதிவர்கள் பதிவுகள் எழுதுவதில்லை என்பதோடு, மற்றவர்களின் பதிவுகளையும் படிப்பதில்லை. தொடர்ந்து வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்த பலர் இப்போது முகநூலின் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் போல அங்கே விரிவாக எழுத வேண்டியதில்லை, ஒரிரு வரிகள் மட்டும் எழுதிவிட்டு நகரலாம் என்று சொன்னாலும், அங்கேயும் பெரிது பெரிதாய் பதிவுகள் எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.அவ்வப்போது நடக்கும் சில சந்திப்புகள், வருடத்திற்கு ஒரு முறை நடந்த ஒரு நாள் சந்திப்புகள் என எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இருக்கிறது பதிவுலகம். முன்பெல்லாம், போட்டிகள், தொடர்பதிவுகள் என கொண்டாட்டமாக இருக்கும்! எத்தனை தொடர்பதிவுகள் – ஒரே தொடர்பதிவுக்கு பலரிடமிருந்தும் அழைப்பு வரும் அளவிற்கு இருந்ததும் உண்டு. இப்போதெல்லாம் எழுத யாருமே இல்லையோ என்ற ஐயம் வந்திருக்கிறது! சக பதிவர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்த விருதுகள் அளித்து மகிழ்ந்ததும் நடந்திருக்கிறது. விருதுகள் மூலம் பணங்காசு கிடைக்காது என்றாலும், நாம் எழுதுவதையும் மதித்து சக பதிவர் ஒருவர் விருது அளிக்கிறாரே என்ற மகிழ்ச்சி நிச்சயம் கிடைத்திருக்கும் – விருது பெற்ற ஒவ்வொரு பதிவருக்கும்!எத்தனை நகைச்சுவை பதிவுகள் வந்து கொண்டிருந்தன அப்போது – சேட்டைக்காரன், தக்குடு, அனன்யா, அப்பாவி தங்கமணி, ஆர்.வி.எஸ்., பாலகணேஷ் என பலரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தார்கள். பல்சுவை பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த பலரும் இப்போது எழுதுவதே இல்லை. சில பதிவர்கள் பதிவுலகை விட்டு மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள் – மைதிலி கஸ்தூரி ரங்கன், திடங்கொண்டு போராடு சீனு, புதுகைத் தென்றல், நாஞ்சில் மனோ, மெட்ராஸ் பவன் சிவா, ஸ்கூல் பையன் சரவணன், லக்ஷ்மி அம்மா, எழில் அருள், கிரேஸ், சித்ரா சுந்தர், சொக்கன் சுப்ரமணியன், தென்றல் சசிகலா, என இந்த பட்டியல் நீளமாக இருக்கிறது.  இவர்களில் பலர் இப்போதும் முகநூல் மற்றும் ட்விட்டரில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாலும் வலைப்பூவில் எழுதுவதே இல்லை என்று சொல்லலாம்!

முன்பெல்லாம் அவ்வப்போது புதியவர்கள் பதிவுலகிற்கு வருவார்கள். இப்போது அப்படி புதியதாய் வருபவர்களும் இல்லை. தமிழ்மணம் திரட்டி மூலம் தினம் தினம் பல நூறு பதிவுகள் இணைக்கப்பட்டு வந்ததுண்டு. இப்போது நாள் ஒன்றுக்கு ஐம்பது அறுபது பதிவுகள் இணைக்கப்பட்டாலே பெரிய விஷயம்! அப்படி எழுதினாலும் படிக்கப்படும் பதிவுகள் வெகு சில மட்டுமே…. பதிவுலகில் இருக்கும் சுணக்கத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த பதிவர்கள் எண்ணிக்கை அப்போது அதிகம் – இப்போது விரல் விட்டு எண்ணி விடும் அளவிற்குத் தான் இப்படியான தினம் தினம் பதிவு எழுதும் பதிவர்கள் – நண்பர் ஜோக்காளி, எங்கள் பிளாக் ஸ்ரீராம் போல!

சரி, எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், நாம் தொடர்து எழுதுவோம்! பதிவுகள் எழுத ஆரம்பித்தது செப்டம்பர் 30, 2009 – இன்று என் வலைப்பூவில் 1400-வது பதிவு! அட 1400 பதிவுகள் எழுதி விட்டோமா என்று நினைக்கையில் பதிவுலகம் முன்பிருந்த நிலையும் இப்போது இருக்கும் நிலையும் மனதில் தோன்ற, அந்த எண்ணங்களை அப்படியே பதிவிட்டேன். பதிவுலகம் மீண்டும் புத்துணர்வோடு இயங்கும் நாளை எதிர்நோக்கி நானும்….. 

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


டிஸ்கி: இன்று வெளியிட வேண்டிய அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் அடுத்த பகுதி, மாலை வெளியிடப்படும்! 

அலைபேசிமுலம் தமிழ்மணம் வாக்களிக்க....


100 comments:

 1. 1400 வது பதிவுக்கு வாழ்த்துகள். நிறைய பழைய பதிவர்கள் காணாமல் போனாலும், நிறைய புதிய பதிவர்கள் வந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைச் சென்று படித்து ஊக்குவிக்கவேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். எங்கே? பார்ப்போம்.

  சேட்டைக்காரன் கதை எங்களின் இன்றைய கேட்டு வாங்கிப் போடும் கதைப் பகுதியில் அனைவரும் அவசியம் படித்து இன்புற வேண்டிய பதிவு.

  சீனு, தென்றல் சசிகலா, லட்சுமி அம்மா உள்ளிட்ட நிறைய பேர்களை நிச்சயம் மிஸ் செய்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. பலரை நாம் மிஸ் செய்கிறோம் இல்லையா ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. முதலில் எங்கள் இனிய வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன். 1400 இன்னும் பல்கிப் பெருகட்டும்!

  வலைப்பூவில் எழுதுவது இனிய அனுபவம்தான். மேலும் எங்கோ ஓரிடத்தில் தேவைப்படும்போது தேடினால் கிடைக்கும் வசதியுடன் இருப்பதால் என் ஓட்டு வலைப்பூவுக்கே! நீண்ட ஆயுள் இதுக்குத்தான் :-)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஓட்டு வலைப்பூவுக்கே! நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. ஆயிரத்து நானூறாவது பதிவு!...

  அன்பின் நல்வாழ்த்துகள்.. மேலும் மேலும் தொடரவேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. தங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு..

  மீண்டும் அவர்களது பதிவுகள் மலரட்டும்.. வாழ்த்துவோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. அது ஒரு பொற்காலம்..

  கால மாற்றத்தில் இடம் பெயர்ந்த பறவைகள்.. மீண்டும் இங்கு வருமா..

  1400க்கு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பக்கத்திலும் பதிவு வந்து நிறைய மாதங்களாகி விட்டது ரிஷபன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயகுமார்.

   Delete
 7. என்னைப் பொறுத்தவரை இடைவெளி நானாகவே எடுத்துக் கொள்வது தான், மற்றபடி நீங்கள் சொல்வது போல் எல்லோருடைய பதிவுகளுக்கும் போய்ப் படிக்க முடிவதில்லை என்பதும் உண்மை.

  1400 பதிவுகள் விரைவில் பல்கிப் பெருக வாழ்த்துகள். தொடர்ந்து இந்தியச் சுற்றுலாவில் பல்வேறு சுற்றுலாத்தலங்களையும் குறித்து எழுதவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 8. பிறகு வருவேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. முதலில் வாழ்த்துகள் பல...

  உங்கள் கணக்குப்படி பகிர்ந்து கொள்ளாத வலைப்பதிவர்களின் கணக்கு குறைவே... எனது reader-ல் பார்த்தால் கணக்கு பல ஆயிரங்களை தொடும்... ம்... வருத்தப்படுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். நீங்கள் படிக்கும்/தொடரும் பதிவுகள் அதிகம் என்பதால், பதிவுலகத்திலிருந்து விலகி இருக்கும் பதிவர்கள் எண்ணிக்கையை சரியாகச் சொல்ல முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. முதலில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட்ஜி! 1400 பதிவுகள் எழுதியமைக்கும், மேலும் பல தொடர்ந்து படைத்திடவும் எங்கள் வாழ்த்துகள்!

  இதே ஆதங்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அடிக்கடிச் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள் தான். நாங்களுமே எழுதுவது கொஞ்சம் குறைந்து விட்டதுதான். மீண்டும் சுறு சுறுப்பாக எழுத வேண்டும் என்றும் நினைப்பதுண்டு.

  நீங்கள் சொல்வது போல் பலரும் முகநூலில் சுறு சுறுப்பாக இருக்கிறார்கள். முகநூல் தவிர வாட்சப்பிலும். அதில் கூட பெரிய பெரிய பதிவாக வருகிறதே! எங்கள் ஆதரவு வலைக்கே! (துளசி: நான் முகநூலில் உண்டு என்றாலும் இப்போதெல்லாம் ஆக்டிவாக இல்லை...)

  ஜி நிறைய புதிய பதிவர்களும் வருகிறார்கள். வலைப்பதிவகத்தில் தெரிகிறது. நாங்கள் முடிந்த அளவு அவர்களையும் ஊக்குவிக்க நினைத்தாலும் பல நேரங்களில் முடியாமல் போய்விடுகிறது. இனி தொடங்க வேண்டும்..

  நிறைய பேரின் பதிவுகளை மிஸ் செய்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   Delete
 11. 1400 பதிவுக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் பதிவுகள்.
  எழுதப்படாதோரில் நானும் சேர்த்திதான் அடிக்கடி
  பிள்ளைகளிடம் இடம் மாறிச்செல்வதால் எழுதமுடிவதில்லை.வேலைகளும் அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வப்போது எழுத முயற்சி செய்யுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி ஜி.

   Delete
 12. வாழ்த்துகள்.... நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.... பணிச்சுமை.... என்பதை விட... சோம்பேறி தனம் என்ற உண்மையை கூற சங்கடம்..... வந்து விடுகிறேன்... நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது எழுதுங்கள் சகோ. என்னதான் முகநூல் இருக்கிறது என்றாலும், நமக்கெல்லாம் முதல் ஈடுபாடு வலைப்பூ தானே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 13. 1400-க்கு முதலில் வாழ்த்துகள் ஜி

  நல்லதொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் நானும் விரிவாக எழுத நினைத்து எழுதி வைத்து இருந்தேன்.

  முகநூலாவது பரவாயில்லை வாட்ஸ்-அப்பில் மூழ்கிய பதிவர்கள் ஏராளம் இவர்களை யாரும் கட்டாயப்படுத்தி சொல்ல முடியாது.

  மேலும் தான் வலைப்பூவில் எழுதவில்லை என்பதால் பிறரின் பதிவுகளுக்கு போககூடாது என்ற கருத்து உள்ளவர்களும் உண்டு.

  மேலும் இனி நாம் அனைவரும் இணைந்து புதிய பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும் நான் செய்து கொண்டுதான் வருகிறேன்

  காலம் மீண்டு(ம்) வரும் நம்புவோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. //மேலும் தான் வலைப்பூவில் எழுதவில்லை என்பதால் பிறரின் பதிவுகளுக்கு போககூடாது என்ற கருத்து உள்ளவர்களும் உண்டு

   தான் எழுதவே நேரம் எடுக்காத போது பிற பதிவுகளுக்கு நேரம் எங்கே எடுக்க முடிகிறது என்ற காரணம் இருக்கலாம் கிள்ளர்ஜி.. ஹிஹி..

   Delete
  2. வாட்ஸ் அப்-ல் மூழ்கியவர்கள் - உண்மை தான். அதுவும் ஒரே விஷயத்தினை பலரும் அனுப்புகிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
  3. //தான் எழுதவே நேரம் எடுக்காத போது! // இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 14. வாழ்த்துகள்.

  உண்மைதான். அது ஒரு அழகிய நிலாக் காலம் :)! அன்றைய நாளிலிருந்து உற்சாகம் காணாது போனாலும் அமைதியாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது பதிவுலகம். பெரிய இடைவெளிகள் முற்றிலுமாக ஆர்வத்தைக் குறைத்து விடக்கூடாதென்பதற்காகவே அவ்வப்போது பதிந்து வருகிறேன். இதுவே நமது சேமிப்புப் பெட்டகமும். நேரமின்மையால் பலரது பதிவுகள் படிக்க முடியாது போவதும் வருத்தம் அளிக்கிறது. இயன்றவரை சற்று நேரமேனும் ஒதுக்கி வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பக்கத்தில் கொஞ்சமாவது பதிவுகள் வருகின்றன. சிலர் வலைப்பூ பக்கமே வருவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. 1400 பதிவுகள் நிறையும் போது இம்மாதிரி பின்னோக்கி மனம் செல்வது இயல்புதான் எனக்கு ம் முன்பெல்லாம் ஊக்குவித்த பதிவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது இருந்தாலும் யாரோ சொன்னபடி மொய்கு மொய் இருந்துகொண்டுதான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. மொய்க்கு மொய்! :) உண்மை தான். பலரும் அப்படித்தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 16. வாழ்த்துக்கள் வெங்கட்.. கொஞ்சம் கூட தளர்ச்சி வராமல், 5000 இடுகையை எட்ட வாழ்த்துக்கள் (சமீபத்தில், ஃப்ரூட் சாலட் எழுதும்போது கொஞ்சம் தளர்ச்சியைப் பார்த்தேன்.. ஏன் எழுதுகிறோம் என்று எழுதியிருந்தீர்கள்).

  நாம 'follow' பண்ணாம, இன்றைய இடுகைகள் என்பதற்கு ஏதேனும் திரட்டி இருக்கிறதா? தமிழ்மணத்தில், ஒரு இடுகையே ஓராயிரம் தடவை வருகிறது.

  இன்னொன்று. எல்லாரும் எழுத ஆரம்பித்தால், படிக்க எங்கே நேரம் கிடைக்கும்? அதுவும் பின்னூட்டம், த.ம வாக்கு - எங்கு நேரம்?

  த.ம

  ReplyDelete
  Replies
  1. Feedly முயற்சி செய்து பாருங்கள்.... இன்றைய பதிவுகளுக்கான திரட்டி என்று இருப்பதாய் தெரியவில்லை. வாட்ஸ் அப் குழு ஒன்று ஆரம்பித்தாலும், அதில் பல விஷயங்கள் பகிர ஆரம்பித்து விட்டார்கள் - எவ்வளவு முறை குழுவின் நிர்வாகிகள் எத்தனை முறை சொன்னாலும்!

   எல்லோரும் எழுத ஆரம்பித்தால்! :) கொஞ்சம் கஷ்டம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. 1400 வது பதிவுக்கு வாழ்த்துகள்ண்ணே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 18. பூங்காற்று திரும்புமா?!ண்னுதான் பாடனும். பழைய கலகலப்பு வர ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சுடலாமாண்ணே?!

  ReplyDelete
  Replies
  1. ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சுடலாமா? :) எழுத ஆள் வேணுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
  2. இருக்குறவங்களை வச்சு எழுதலாம்

   Delete
  3. நீங்களே ஒரு ஐடியாவோட ஆரம்பிக்கலாம் ராஜி!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜய்.

   Delete
 20. 1400 வது பதிவுக்கு வாழ்த்துகள் வெங்கட்.
  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  இப்போது எல்லாம் நானும் இருக்கேன் என்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
  மீன்டும் வலையுலகம் புத்துயிர்பெற வாழ்த்துவோம்.

  புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும் தான் , பல வேலைகளுக்கு இடையே சில குறிப்பிட்டபதிவர்கள் பதிவுகளுக்கு மட்டும் தான் போக முடிகிறது.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 21. வாழ்த்துகள் ஜி !
  அந்த வசந்த காலம் திரும்ப வராதா என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 22. 1400. பதிவுகள் வாழ்த்துகள்! தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 23. ஆயிரத்து நானூறா.... ஏயப்பா... வாழ்த்துகள்!! தொடர்க இது போல....

  வலைப்பக்கம் போவதற்கு சோம்பேறித்தனம்தான் முதற்காரணம்... :-(

  என்ன இருந்தாலும், அதில் எழுதுவது போல வராது பேஸ்புக்கும், வாட்சப்பும்.... அதில் நாம் எழுதுவதைவிட மற்றவர்கள் எழுதியதை வாசிக்கவி நேரம் போதமாட்டேன்கிறது... :-(

  ReplyDelete
  Replies
  1. சோம்பேறித்தனம் - உண்மை. எனக்கும் இது உண்டு! அவ்வப்போது காணாமல் போய்விடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
  2. சகோதரி அவர்களே, எனக்கும் இதே பிரச்சினை வந்து தீர்வும் கண்டு இருக்கிறேன். இந்த அனுபவத்தையும் ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன். – நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

   என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை? http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_23.html

   Delete
  3. உங்கள் அனுபவங்களையும் படித்தேன். ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 24. தவிர, எனக்கு ஒரு உதவி - இல்லை, ரெண்டு உதவிகள் வேண்டும்.... யாருக்குத் தெரிந்தாலும் சொல்லுங்க...

  அதாவது, முன்பு கூகிள் ரீடர் இருந்தது. அது போனதும் Feedly இருந்தது.. இப்போ அதுவும் போயிடுச்சு... :-( நீங்கலாம் எது பயன்படுத்துறீங்க...??

  ரெண்டாவது, NHMwriter பயன்படுத்துறேன்... ஆனா, சில மாதங்களாக Firefox-ல் அது தகராறு பண்ணுது... வரமாட்டேங்குது.... கூகிளின் எழுத்துருதான் பயன்படுத்துறேன்... எங்கே, அதுதான் என்னைப் படுத்துது.... பயங்கரக் கடுப்பாகுது.... அதனாலேயே எழுத ஆர்வம் வரலை...

  NHMwriter சரியா வரணும்னா என்ன செய்யனும்னு யாருக்காவது தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. Blogger மூலம் தான் நான் படிப்பது - அப்போதும், இப்போதும்!

   ஒரு முறை NHM Writer uninstall செய்து மீண்டும் தரவிறக்கம் செய்து install செய்து பாருங்கள். சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு. இப்போதும் நான் அந்த மென்பொருள் தான் பயன்படுத்துகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
  2. கூகிள் இன்புட் தமிழ் நல்லாவே வேலை செய்யுது.. ரொம்ப நாளா நான் அதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்...

   Feedly மூலமாகத்தான் நான் பதிவுகளைப் படிக்கிறேன்... அதுவும் நல்லா வேலை செய்யுதே....

   Delete
  3. NHM எனக்கும் திடீரென காலை வாரி விடுவதுண்டு. வெங்கட் சொல்லியிருப்பது போலதான், அன் இன்ஸ்டால் செய்து மறுபடி நிறுவுவேன். க்ரோம் அல்லது ஓபரா உபயோகித்துப் பாருங்களேன்.

   Feedly எனக்கும் நன்றாக வேலை செய்கிறது. அதையும் திரும்ப முயன்று பாருங்கள்.

   Delete
  4. நன்றி சகோதரர்கள் @கார்த்திக் & ராமலஷ்மிக்கா.

   Feedly டவுன்லோட் செய்து பார்க்கிறேன்.

   NHM பல முறை uninstall & install செய்து விட்டேன். Firefox automatic update ஆன பிறகுதான் இப்படி ஆகிவிட்டது. க்ரோமில் (ஓரளவுக்கு) சரியாக வருகிறது. ஆனால், அதில் வேறு இமெயில் இருப்பதால் பேஸ்புக் பார்க்க முடியாது. Firefox-ல் இந்த பேஸ்புக்/ பிளாக்கில் எழுதத்தான் கஷ்டமாருக்கு....

   Delete
  5. சகோதரி அவர்களே, எனக்கும் இதே பிரச்சினை வந்து தீர்வும் கண்டு இருக்கிறேன். இந்த அனுபவத்தையும் ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன். – நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

   என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை? http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_23.html

   Delete
  6. சில நாட்கள் நானும் Feedly பயன்படுத்தினேன் என்றாலும் எனக்கு என்னமோ Blogger வழி படிப்பதே பிடிக்கிறது. போலவே NHM மட்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   Delete
  7. நான் பெரும்பாலும் க்ரோம் மட்டுமே பயன்படுத்துகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
  8. முகநூலில் வேறு மின்னஞ்சல் இருந்தாலும் க்ரோமில் பார்ப்பதில் தடையில்லை! எனது இரண்டு மின்னஞ்சலும் வேறு வேறு தான்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
  9. உங்களது பதிவும் படித்தேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 25. வாழ்த்துக்கள்
  உண்மை.... விளக்கமா சொல்லிவிட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 26. 14௦௦ வது பதிவு....அருமை....

  வாழ்த்துக்கள்....


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 27. லிஸ்டுல என் பேரு கீதானு கண்டுக்க வந்தேன் நைனா..
  ஆயிரத்து நாநூறா - எங்கயோ போயிட்ட தல.. சோக்காரு தெர்தா?

  ReplyDelete
  Replies
  1. உங்க பேரு கீதானு கண்டுக்க வந்தியா நைனா! எயுதலனாலும் கீரே நைனா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 28. ப்லாக் எழுதுவது போரடிக்கிறது வெங்கட். இதை என்னால் நம்பமுடியாவிட்டாலும் ஒரு வழியில் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு. ஆனாலும் மற்றவைக்கு இது பரவாயில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
  2. @ அப்பாதுரை,

   உண்மைதான். ஆனால் அப்படி நினைத்து விட்டு விட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வமும் போய் விடும் அபாயம் உள்ளது. என்னிடம் பழைய பதிவுலக நண்பர்கள் பலர் கேட்டு விட்டார்கள்: “இன்னும் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு போர் அடிக்கவில்லையா?” என்று. அதே போல ஃப்ளிக்கரிலும் நம் தமிழ் நண்பர்கள் ஒரு குழுவாக ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்து தினம் உற்சாகமாகப் பதிந்து வந்தோம். அவர்களில் ஓரிருவர் தவிர எவரும் இப்போது அங்கில்லை. ப்ளாகில் பதிகிறேனோ இல்லையோ அங்கே விடாமல் தினம் ஒன்றென தொடர்ந்தபடி இருக்கிறேன். பார்க்கலாம், அதுவும் எவ்வளவு நாட்கள் முடிகிறதென:).

   Delete
  3. ஃப்ளிக்கரில் ஒரு பக்கம் ஆரம்பித்ததோடு சரி. அங்கே தொடர முடியவில்லை. அவ்வப்போது அங்கே சென்று பார்ப்பதோடு சரி.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 29. VaazhththukaL Vengat. write and share more. all our blessings are with you.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 30. தங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். தமிழ் மணத்தில் வரும் புதிய பதிவுகளைப் பற்றிய புள்ளி விவரங்கள் தினம் தினம் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதைக் காட்டுகிறது. பிளாக்கரில் எழுவது ஏதோ ஒரு விதத்தில் புளித்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எழுதுவது புளித்துப் போய்விட்டது.... இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 31. வாழ்த்துக்கள் நண்பரே! பதிவுகள் தினமும் எழுத ஆசைதான். தொடர்ந்து ஒரே மாதிரி எழுத ஒரு சலிப்பு. கொஞ்சம் புதிய விஷயங்கள் எழுத நினைக்கிறேன். ஆனால் குடும்பத்தில் சில சொல்ல இயலா பிரச்சனைகள் காரணமாக பதிவுகளை வாசிப்பதிலும் பதிவுகளை எழுதுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உங்களது பதிவுகளை வாசிக்காமல் இருப்பதற்கு வருந்துகிறேன். விரைவில் மீண்டு வருவேன். இணையமும் அலைபேசி மூலம் இணைப்பு பெறுவதால் நீண்ட நேரம் வலைப்பதிவுகளை வாசிக்க முடிவதில்லை. என் பிரச்சனைகள் தீர்ந்து விரைவில் உங்களுடன் இணைவேன். அதுவரை சற்று பொறுத்துகொள்ளுங்கள்! என் ஆதரவு வலைப்பதிவுகளுக்கே! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. விரைவில் எல்லாப் பிரச்சனைகளும் தீரட்டும். வலையுலா தொடர வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 32. வெங்கட்! முதல்ல உங்க 1400 பதிவுக்காக ஒரு பறக்கும் உம்மா....

  நீங்களும் பிற பதிவர்களும் சொல்லும் அத்தனை கருத்துகளையும் ஏற்றுக் கொள்கிறேன். எவ்வளவு கருத்துப்படி பரிமாற்றங்கள் நடந்தன இங்கே?

  ஏதோ சுணக்கம். முகநூல் துக்கடா பதிவுகள் தரும் நிறைவு தருவதில்லை. மேலும் எனக்கான ஜமாவும் கலைந்தே போய்விட்டது. எழுதுவது உபயோகமாக இருக்க வேண்டும்;மேலதிகமாக புதுக் கருத்துகளும் எழ வேண்டும் என்பது என் நிலைப்பாடு.
  உங்கள் பெயர்லிஸ்டில் நான் இல்லை எனும் ஆறுதல் இருந்தாலும், நானும் அதில் இருக்க வேண்டியவனே!
  இந்த சூட்டுக்கு திருந்துவேன் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பறந்து வந்த உம்மாவினை பிடித்துக் கொண்டேன்! :)

   உங்கள் பதிவுகளில் இருக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் எவ்வளவு ஸ்வாரஸ்யம். I too miss that, even though I am a silent participant!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி அண்ணா!

   Delete
 33. வலைத்தளத்தில் உங்களது 1400 ஆவது பதிவு. வாழ்த்துகள்.
  பதிவுலகில் ஒரு சுணக்கம் என்று, நீங்கள் சொல்வது சரிதான். பல வலைப் பதிவர்களை வலைப்பக்கம் பார்க்கவே முடிவதில்லை. வலையில் படிக்கவாவது செய்கிறார்களா என்று தெரியவில்லை. குறிப்பாக , சென்னை வலைப்பதிவர்கள், சென்னை செம்பரம்பாக்கம் பெருவெள்ளம் (2015) பாதிப்பிற்குப் பிறகு நிறையபேர் வருவதே இல்லை.ஆனாலும் பலபேரை ஃபேஸ்புக்கில் காண முடிகிறது. ஃபேஸ்புக்கிற்கும் வலைத்தளத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தால் அவர்கள் மீண்டும் வலைப்பக்கமே வர்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பல நண்பர்கள் இப்போது பதிவிடுவதே இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 34. 1400ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி ஞானம்.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை... நீங்களும் எழுதி ரொம்ப நாட்களாகிவிட்டன!

   Delete
 35. தங்கள் ஆதங்கம் மிகச் சரியானது
  இன்றைய நிலையில் மிகவும்
  அவசியமானதும் கூட....

  அனைவரின் பின்னூட்டத்தையும்
  அதற்கான தங்கள் பதிலையும்
  முழுமையாகப்படித்துவிட்டு
  இதை எழுதுகிறேன்

  அனைவரும் உங்கள் ஆதங்கத்தை
  ஏற்றுக் கொண்டிருப்பது இனி அவர்கள்
  எழுதுவார்கள் என்கிற நம்பிக்கையை
  விதைத்திருக்கிறது

  பார்ப்போம்....

  ReplyDelete
  Replies
  1. எத்தனை பதிவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள் - அது ஒரு பொற்காலம்! மீண்டும் திரும்பும் என நம்புவோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.

   Delete
 36. அதுக்காக ஒரேயடியாக காணாமல் போன பதிவர்களில் என்னை சேர்த்துவிட்டீங்களே... இந்த ஆண்டு ஏழு மாதங்களில் ஐந்து பதிவுகள் எழுதியிருக்கேனாக்கும்... அதிலும் ரெண்டு சிறுகதை....

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... ஏழு மாதங்களில் ஐந்து பதிவுகள்! இன்னும் எழுதலாம் - உங்கள் பணிகளை முடித்துக் கொண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   Delete
 37. 1400 பதிவுகள்
  சாதாரண விசயமல்ல ஐயா
  இப்பதிவுகளின் பின்னனியில் இருக்கும் தங்களின்
  உழைப்பு வியக்க வைக்கிறது.

  வலைப் பூவின் இன்றைய நிலை
  பரிதாபத்திற்கு உரியதுதான் ஐயா
  பெரும்பாலான பதிவர்கள் காற்றில் கரைந்து போய்விட்டார்கள்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான பதிவர்கள் முகநூலில் மூழ்கி விட்டார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 38. ஆயிரத்து நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்! இந்த ஆயிரம் பல்லாயிரமாகட்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 39. ஹாய் அண்ணா, மொதல்ல 1400'க்கு ஒரு பெரிய பூச்செண்டு. கிரேட், நீங்க ஒருத்தராச்சும் தொடர்வதில் ரெம்ப சந்தோசம். அந்த நாள் நியாபகம் நிஜமாவே ஆனந்த மலரும் நினைவுகள் தான், அப்பப்போ பழைய பதிவுகளையும் நட்புகளின் கமண்டுகளையும் படித்து சிரிச்சுப்பேன். என்னையும் நினைவு வெச்சு ஆட்டத்துல சேத்திகிட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா. Gone are those days, wish we all cud write like that again :)

  ReplyDelete
  Replies
  1. Gone are those days! If you want, you can make a comeback!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி..

   Delete
 40. வெங்கட் அண்ணா, முதல்ல வாழ்த்துக்கள்! நீங்க சொன்ன விஷயம் உண்மைதான். பதிவுகள் நின்னு போனதுக்கு பல காரணங்கள் உண்டு. இடம், வயது, குடும்ப பொறுப்புகள், வேலைபலு,மூஞ்சி புஸ்தகம்,அப்புறம் என்ன சமாசாரம்(whats app),இடமாற்றம் அப்பிடினு சொல்லிண்டே போகலாம். இருந்தாலும் நமக்கு நாமே தட்டிகுடுத்துண்டு பதிவு எழுதாம போனா கொஞ்சம் கொஞ்சமா எழுதும் பழக்கமே இல்லாம போயிடும்! :(

  ReplyDelete
  Replies
  1. மூஞ்சி புத்தகம், அப்புறம் என்ன சமாசாரம்! :) தக்குடு டச்! வாரத்துக்கு ஒரு பதிவாது எழுதுங்க தக்குடு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு!

   Delete
 41. வலைப்பூக்களே நான் மிகவும் விரும்புவது எழுத இயலாத சூழலில் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்று முகநூலில் உள்வுவதுண்டு. வலைப்பக்கம் மீண்டும் வந்து தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 42. வலைப்பூக்களே நான் மிகவும் விரும்புவது எழுத இயலாத சூழலில் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்று முகநூலில் உள்வுவதுண்டு. வலைப்பக்கம் மீண்டும் வந்து தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் வலைப்பக்கம் வர வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....