செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிஷா – முதல் நாள்!அரக்கு பள்ளத்தாக்குபகுதி 21

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!இந்தப் பயணத்தின் முக்கியமான நோக்கம் அரக்கு பள்ளத்தாக்கு செல்வது என்றாலும், கூடவே அருகில் உள்ள மற்ற இடங்களுக்கும் செல்லும்படி தான் திட்டமிருந்தார் நண்பர். ஆந்திரப் பிரதேசத்தில் சிம்ஹாசலம், அன்னவரம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீமுகலிங்கம் என பல இடங்கள் பார்த்த பிறகு நாங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் அடுத்த மாநிலமான ஒடிஷாவின் தலைநகரான புவனேஷ்வர் நோக்கியே பயணித்தோம். விசாகப்பட்டினத்திலிருந்து புவனேஷ்வர் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இரவு நேர இரயில் ஒன்றில் முன்பதிவு செய்திருந்ததால் நிம்மதியாக உறங்கி, காலையில் விழித்தெழ புவனேஷ்வர் வந்து சேர்ந்திருந்தோம். இரயில் நிலையத்திற்கே எங்களை அழைத்துச் செல்ல வண்டி காத்திருந்தது.


ஒடிஷாவில் முக்கியமாக பார்க்க நினைத்த இடம் பூரி ஜகன்னாத் கோவில் தான் என்றாலும், வேறு சில இடங்களுக்கும் பயணித்தோம். ஒடிஷாவில் நாங்கள் பார்த்தவை பெரும்பாலும் கோவில்களே என்பதையும் உங்களுக்கு முன்னரே சொல்லி விடுகிறேன்.  புவனேஷ்வர் நகரத்தில் அரசுத் துறை ஒன்றின் தங்குமிடத்தில் தான் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார் நண்பர். அரசுத் துறை தங்குமிடம் என்றாலும் நன்றாகவே இருந்தது. எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த மகிழ்வுந்தில் தங்குமிடம் வரை சென்று, காலை நேர வேலைகளை முடித்துக்கொண்டு கொஞ்சம் இளைப்பாறிய பிறகு அன்றைய பயணத்தினைத் துவங்கினோம். 
தங்குவதற்கு அரசுத் துறையின் தங்குமிட வசதி என்றாலும், நாங்கள் முதலில் சென்றது புவனேஷ்வர் நகரின் ஜெயதேவ் விஹார் பகுதியில் அமைந்திருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம்/திருமண மண்டபத்திற்கு தான்.  ஒரு சிறு கோவிலும் அங்கே உண்டு. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் ஒருவர் தனது ஒரு வயது மகள் மற்றும் மனைவியுடன் அங்கே பூஜை செய்து கொண்டிருக்கிறார். அவர் தான் எங்கள் ஒடிசா பயணத்தின்போது தேவையான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார் – நண்பரின் நண்பர் கட்டளையின்படி இந்த ஏற்பாடு! பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டதோடு ஒன்றிரண்டு வேளை உணவும் எங்களுக்கு அவர் வீட்டில் தான் – வெளியே பார்த்துக் கொள்கிறோம் என்றாலும் கட்டாயப்படுத்தி அங்கேயே சாப்பிட வைத்தார்கள்.  காலை உணவாக ரவா உப்புமா, ஊறுகாய், சட்னி என சமைத்துக் கொடுக்க, அதை உண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  நாங்கள் முதலில் சென்றது புவனேஷ்வர் நகரில் அமைந்திருக்கும் ISKCON அமைப்பின் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா-பலராமா கோவிலுக்குத் தான்.  1991-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கோவில், இவர்களது மற்ற கோவில்களை விட அளவில் சிறியது என்றாலும், மற்ற இடங்களைப் போலவே இங்கேயும் பராமரிப்பில் எந்தவிதக் குறையும் இல்லை. இங்கேயும் “கோவிந்தம்” உணவகமும் உண்டு.கோவில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கை பரபரத்தாலும், கட்டுக்குள் வைத்து மனதை புகைப்படங்கள் எடுக்கும் நினைப்பிலிருந்து அகற்றி கோவிலில் இருக்கும் அமைதியில் மூழ்கினேன். சற்று நேரம் அங்கே அமர்ந்து இருந்த பிறகு அங்கே கிடைத்த சர்க்கரை மிட்டாய் பிரசாதமும் தீர்த்தமும் வாங்கிக் கொண்டு மெதுவாக வலம் வந்தோம். புத்தகங்கள் விற்பனையும், பிரசாதம் விற்பனையும் இருக்க, அவற்றை பார்த்துக் கொண்டே வெளியே வந்தேன்.  வாசலிலிருந்து இரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். இப்பதிவில் இருக்கும் படங்கள் இரண்டு தவிர மற்றவை, ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணா-பலராம கோவிலின் இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டவை [இணையத்திலிருந்து இங்கே!]

காலை 04.15 மணி முதல் இரவு 08.30 மணி வரை இக்கோவில் திறந்திருக்கும் என்றாலும், நைவேத்திய சமயங்களில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. கோவில் அமைந்திருப்பது, புவனேஷ்வர் நகரின் நயபள்ளி பகுதியில்.  மேலதிகத் தகவல் வேண்டுபவர்கள் கோவில் நிர்வாகத்தினரை iskcon.bhubaneswar.tp@pamho.netiskcon.bhubaneswar.tp@gmail.com  ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலோ +91 (0674) 2553517 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்!

அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன். 

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

42 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 2. தொடர்ந்து பயணிக்கிறோம். ஜகன்னாதரைக் காணக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 3. ஓ! அடுத்த பயணம் ஒடிஷாவா!! சூப்பர்....விவரங்கள் வழக்கம் போல அருமை...காத்திருக்கிறோம்...

  கீதா: ஜி நீங்கள் சந்திப்பூர் கடற்கரை பயணத்திட்டத்தில் இல்லையோ...அங்கு கடல் தண்ணீர் தினமும் 5 கிமீ தூரம் ரெசீட் ஆகி மீண்டும் மெதுவாகத் தவழ்ந்து வரும் ரொம்ப அழகாக இருக்குமாம்...தண்ணீர் ரெசிட் ஆகும் போது நாமும் நடந்து செல்லலாமாம்...கண் முன்னாடியே தண்ணீர் காணாமல் போய் அப்புறம் சில மணி நேரங்களுக்கூப் பிறகு ஹைடைட் வந்து மெதுவாக வருவது.....இதை நானும் மகனும் யுட்யூபில் பார்த்துள்ளோம்...நேரில் பார்க்க ஆசைதான்.....நீங்கள் சென்றீர்களா ஜி!! இப்போதி இல்லை என்றாலும் அடுத்த முறை பார்த்துவிடுங்கள்...இயற்கையின் அற்புதமே தனிதான்...இல்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திப்பூர் கடற்கரை பயணத்திட்டத்தில் இல்லை. அடுத்த முறை செல்ல வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. தொடர்கிறேன்.என்ன என்ன புரான்மந்திர்கள் நீங்கள் தரிசித்தீர்கள் என்று படிக்க ஆவலுடன் இருக்கிறேன். த ம.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றிரண்டு பழைய கோவில்களுக்குச் சென்று வந்தோம். அது பற்றியும் எழுதுவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. எஸ் கிச்சாவே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 10. காலில் சக்கரம்தான் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள் தொடரட்டும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலில் சக்கரம் - இருந்தால் நன்றாக இருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. இஸ்கான் என்றாலே பிரமாண்டம்தான் போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய வருமானம் - நிறைய செலவழிக்கிறார்கள் - சுத்தமாக வைத்திருக்கிறார்கள், பராமரிப்பும் செய்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 13. அருமையான பயணம்.. படங்கள் அழகு.. அதுசரி இதனை.. “ஒரிஷா” எனத்தானே அழைக்கோணும்.

  நானும் ஒரிஷா பற்றி நிறையக் கேள்விப்பட்டதுண்டு... பிரசித்திபெற்ற அம்மன் கோயிலும் உண்டெல்லோ... தட்சனின் யாகத்தின் போது ஏதோ கோபமடைந்த உமாதேவியார் தன் உடலை வெட்டி வீசியதாகவும் அதில் ஒரு அங்கம் வந்து விழுந்த இடம் ஒரிஷா எனவும்.. அங்கு பிரசித்தி வாய்ந்த அம்மன் கோபில் கட்டியிருப்பதாகவும் அறிந்த நினைவு... தொடருங்கோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரிசா - ஒடிஷாவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டத ஆதிரா....

   நிறைய கோவில்கள் இங்கே உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா ஜி.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. காலையும் எடுங்கோ ஜி ஐயும் எடுங்கோ:) மீ “அதிரா” மட்டும் தேன்..

   நீக்கு
  3. அதிரா மட்டும்! ஓகே!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 14. பயணங்கள் தொடரட்டும் நண்பரே...


  உங்கள் பதிவுடன் தொடர்ந்து பயணிக்க
  எம்மால் இயலவில்லை....
  இருந்தும் தொடர்ந்து பயணிக்க முயல்கிறேன்...
  நேரம் கிடைக்கையில் எமது தளத்திற்கும்
  வருகை தாருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப்.

   நீக்கு
 15. இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 18. புகைப்படங்கள் அழகு தொடர்ந்து வருகிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....