வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சாப்பிட வாங்க – காந்த் – சேப்பங்கிழங்கின் அண்ணன்!


 காந்த் பொரியல்!

காய்கறிகள் நாம் இருக்கும் இடத்தினைப் பொறுத்து தான் விளைகின்றன. தமிழகத்தில் கிடைக்கும் சில காய்கறிகள் வடக்கில் கிடைக்காது. இங்கே கிடைக்கும் சில காய்கறிகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை. தலைநகர் வந்த புதிதில் உணவகம் செல்லும்போது “டிண்டா” சப்ஜி என்று சொல்ல, இப்படி ஒரு காய்கறி நம் ஊரில் பார்த்ததே இல்லையே, இது என்ன, என்ன சுவை இருக்குமோ என்ற நினைவில் ஒதுக்கி விடுவேன். கொஞ்சம் விலை குறைவு என்பதால், பெரும்பாலான தென்னிந்திய உணவகங்களிலும் சாம்பாரில் டிண்டாவை போட்டு விடுவார்கள்! அப்படியே தள்ளி வைத்து தான் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது! எப்படி இருக்குமோ என்று ஒரு பயம்!  


நான் தான் காந்த்!

அதே மாதிரி இன்னுமொரு காய்கறியும் இங்கே கிடைக்கிறது. அந்த காய்கறி பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். அது ”காந்த்” என்று அழைக்கப்படும் ஒரு கிழங்கு வகை.  சேப்பங்கிழங்கு வகையைச் சேர்ந்தது என்றாலும் பெரிய அளவில் இருக்கிறது இந்த காந்த். சேப்பங்கிழங்கின் பெரிய அண்ணன் போன்ற உருவம். ஒவ்வொரு கிழங்குமே அரைக்கிலோவிற்கு மேல் தான் இருக்கிறது! ஒன்று வாங்கினால் எதேஷ்டம்! இதை வைத்து என்ன செய்வது என்று தெரியாது. சரி கூகிள் பாபாவிடம் கேட்கலாம் என்றால் சேப்பங்கிழங்கைத் தான் காண்பிக்கிறது! சரி கடைக்காரரிடமே கேட்டுவிடுவது நல்லது என்று அவரிடமே கேட்க – “என்ன செய்யணும்னே தெரியாம, வாங்கிட்டியா மாப்பு!” என்று ஒரு பார்வை.


தோலை உரிச்சுடுவேன்... உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே!

எனக்கு விற்க மட்டும்தான் தெரியும், அதை வைச்சு என்ன பண்ணலாம்னு தெரியாது என்று சொல்லிவிடுவாரோ என கவனிக்க, உருளைக்கிழங்கு பொரியல் செய்யற மாதிரி தான், தோலை சீவித் தள்ளிட்டு, துண்டுகளாக்கி, பொரியல் செய்ய வேண்டியது தான். உப்பு மட்டும் கொஞ்சம் கம்மியா போட்டுக்கணும் மாமு, ஏன்னா கொஞ்சம் உப்பு சக்தி இக்காய்க்கு உண்டு என்று ஒரு சீக்ரெட்டும் சொல்லிக் கொடுக்க, ”நன்றி” சொல்லி வந்தேன்! அடுத்த நாள் காந்த் பொரியல் தான்!

எப்படிச் செய்யணும் மாமு?


காந்த் பொரியல் in making!


காந்த் பொரியல்! - final product!
மானே தேனே எல்லாம் போட்டுக்கறது உங்க வேலை! அதாங்க, கருவேப்பிலை, கொத்தமல்லி!

அட என்னங்க, இதையெல்லாமா என் கிட்ட கேப்பீங்க! உருளைக்கிழங்கு பொரியல் கூடவா உங்களுக்குச் செய்யத் தெரியாது! காந்த் காயை எடுங்க, தோல் சீவி, சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டுங்க, வாணலியை அடுப்பில் ஏத்துங்க! ஸ்டார்ட் மியூசிக்! இந்தக் காய் கிடைத்தால் செய்து பாருங்க! நல்லாவே இருக்கு!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.


22 கருத்துகள்:

 1. வெங்கட் ஜி இது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறது. கிழங்கு நல்ல பெரிதாக இருக்கும். சேம்பு போலவே இலைதான். ஆனால் அடியில் கிழங்கு பெரிதாகவே இருக்கும். அவ்வப்போது தோட்டத்திலிருந்து எடுத்து நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் வீட்டில் செய்வார்கள். சில சமயம் வேகவைத்துத் தோலை எடுத்தும் செய்வார்கள். ஆனால் முறை இதேதான். சேம்பு போன்று அவ்வளவு வழவழப்பு இல்லாமல் இருக்கும். டிண்டா பெயர் கேட்டதில்லை. படம் பார்த்தால் இங்கு உண்டா என்று சொல்ல முடியும்...ஜி

  கீதா: ஹஹஹ்ஹ் சேம்பின் அண்ணன்!! காந்த்...சேம்புகாந்த்! ஆர்பிகாந்த்!!! நு சொல்லலாமோ ஜி!

  ஜி தில்லி வந்த போது தங்கையுடன் காய் கடைக்குச் சென்ற போது பார்த்திருக்கிறேன். அவள் இதனை நீங்கள் செய்திருப்பது போன்றும் செய்தாள். நான் அவர்கள் வீட்டில் இருந்த போது உருளைக் கிழங்கு சப்ஜி செய்தது போலும் அதாவது ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள செய்வோம் இல்லையா வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்துவிட்டு க்ரேவி அப்படியும் செய்து கொடுத்தேன். அப்புறம் சாம்பார், மோர்க்குழம்பிலும் போட்டேன் அங்கு இருக்கும் போது அப்புறம் அவள் குழந்தைகள் ஃப்ரை கெட்டார்கள் என்று இதனை மெலிதாக வெட்டி ஃப்ரையும் செய்து கொடுத்தேன்...நன்றாகவே இருந்தது ஜி.

  டிண்டா இங்கு கிடைக்கிறது. ஆனால் பொதுவான மார்க்கெட்டில் கிடைக்காது. திநகரில் இருக்கும் பனகல்பார்க் மார்க்கெட்டில் கிடைக்கும். இங்கு விலை அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் முன்பு இங்குதான் நடிகர்கள் நடிகைகள் வாங்குவார்கள் என்பதால் சினிமா மார்கெட் அல்லது ஆக்டேர்ஸ் மார்க்கெட் என்று சொல்லுவோம். ஆனால் இப்போதுதான் நிறைய சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டனவே! சில சமயம் சில சூப்பர் மார்க்கெட்டில் டிண்டா அரிதாகக் கிடைக்கும். க்ரேவி செய்யலாம். இங்கு விலை அதிகம். நான் சொல்லுவது ஒரு 4, 5 வருடங்கள் முன்பே அதன் விலை கிலோ 50, 60, 70 கூட இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த காயில் மேலும் சில குறிப்புகள் - நன்றி கீதா ஜி! இப்போது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் எல்லா ஊர் காய்கறிகளும் கிடைக்கிறது என்றாலும் ஃப்ரெஷ்-ஆக இருப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 2. த ம லிங்க் எரர் வருகிறது ஜி! பின்னர் வந்து பார்க்கிறேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் மணம் சில சமயங்களில் இப்படித்தான் பிரச்சனை தருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. கருணைகிழங்க இந்த மாதிரி செய்யும்போது கொஞ்சம் தேங்காய் துருவல் போட்டு சாப்பிட்டு பாருங்கண்ணே. செமயா இருக்கும். காந்த் காயை நான் பார்த்ததில்ல. கேள்விப்பட்டதுமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேங்காய் துருவல் போட்டு சாப்பிட்டு பார்க்கலாம்! செய்து பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 4. தமிழ்மணம் கண்ணாமூச்சி காட்டுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணாமூச்சி ரே ரே... கண்டுபிடி ரே ரே.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 5. இங்கு இருக்கிறதா தெரியவில்லை.

  கிடைத்தால் சமைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைத்தால் சமைத்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 6. >>> காந்த் காயை எடுங்க, தோல் சீவி, சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டுங்க, வாணலியை அடுப்பில் ஏத்துங்க! ஸ்டார்ட் மியூசிக்!..<<<

  அருமை.. அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 7. படத்தைப் பார்த்தால் சைனா சேப்பங்கிழங்கு மாதிரி இருக்கு. ஆனால் நீங்க ஒவ்வொண்ணும் அரைக்கிலோ சைஸ்னு சொல்றீங்க. நெல்லைல முட்டான் அப்படீன்னு ஒரு கிழங்கு கிடைக்கும். அது சேப்பங்கிழங்கு முத்தினால் வருவது என்றுதான் ஞாபகம். அதையும் இதுபோல் செய்யலாம் (அதுதான் இதுவோ?) த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முட்டான் கிழங்கு - கேள்விப்பட்டதில்லை! கிடைத்தால் செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. கிடைக்கிறதா எனத் தேடிப் பார்க்கிறேன். படம் சுவைக்கும் ஆவலைத் தூண்டுகிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைத்தால் செய்து பாருங்கள்.... நன்றாகவே இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 9. சின்ன வயதில் எனக்கு சேம்பு பிடிக்கும். இன்னமும் அதே நினைவில் நான் எங்காவது சென்றால் சேம்புதான் ரோஸ்ட்! விட்டது என்று சொன்னாலும் எடுத்துக்கொள்வதில்லை!. இந்த காந்த் பார்த்தால் எனக்கும் சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... சாப்பிடத் தோன்றவில்லையா! எனக்கும் இப்படி ஒரு சில காய்கறி உண்டு. ஆனால் சாப்பிட்டுவிடுவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....