வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கண் எதிரே அரக்கு பள்ளத்தாக்கு – கலிகொண்டா வியூ பாயிண்ட்…


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 14

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மேகக் கூந்தலோ!
அரக்கு பள்ளத்தாக்கு....

மதிய உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக பழங்குடி மக்களின் திம்சா நடனம் கண்டு களித்து, நடனத்தில் மூழ்கி இருந்த எங்களை மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தார் எங்கள் வழிகாட்டி. இன்னும் இரண்டு மூன்று இடங்கள் பார்ப்பதற்கு உண்டு, என்பதால் விரைவில் இங்கிருந்து புறப்பட வேண்டும் – அப்போது தான் நமக்கு அடுத்த இடங்களிலும் போதிய அளவு நேரம் கிடைக்கும் என்பது அவர் வாதம். ஒரு நாள் பயணம் என்பதால், மீதி இடங்களை அடுத்த நாள் பார்க்கலாம் என்று ஒத்தி வைக்க முடியாது! புறப்பட்டுத்தான் ஆக வேண்டும்! நாங்களும் புறப்பட்டோம். அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு பேருந்து மீண்டும் புறப்பட்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் எங்கள் பேருந்து செல்ல, நாங்களும் சாலை வழி பயணத்தினை மகிழ்வுடன் கடந்து கொண்டிருந்தோம்.
மலைகளுக்கு நடுவே....
அரக்கு பள்ளத்தாக்கு....

அரக்கு நோக்கிய பயணத்தில் வரும்போது இரயிலில் என்றால் இப்போது சாலை வழியாகப் பயணிக்கிறோம். நீண்ட, வளைந்து நெளிந்த பாதை முழுவதும் சில இடங்களில் தெரிகிறது. புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக, நான் ஓட்டுனர் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் – தெலுகில் மாட்லாட வசதியாக பயணத்தில் கிடைத்த நட்புகள் உடனிருக்க இப்படி ஓட்டுனருடன் பயணிப்பதில் ஸ்வாரஸ்யம் கூடுதல் தான். இச்சாலைப்பயணத்தில் தொடர்ந்து பல மூங்கில் தடைகள் – ஏற்கனவே சொல்லி இருக்கும் அதே தடைகள்! சில பெண்களிடம் ஏன் இப்படி என்று என்னுடன் இருந்த பெண்கள் தெலுங்கில் கேள்வி கேட்க, “வண்டி சேர்ந்துடும்மா, ஒரு ரூபாய் காசு கொடுத்துட்டு போயிட்டே இரு!” என்று சிரித்தபடியே சொன்னார் ஒரு இளம்பெண்! சில சிறுமிகளையும் வண்டியில் அமர்ந்தபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.


சாலைகள் மட்டுமல்ல.... வாழ்க்கையும் மேடு பள்ளங்கள் நிறைந்தது தான்!
அரக்கு பள்ளத்தாக்கு....


மலைப்பகுதிகள் - ஒரு காட்சி....
அரக்கு பள்ளத்தாக்கு....

நாங்கள் அடுத்ததாகச் செல்லப்போகும் இடம் கலிகொண்டா வியூ பாயிண்ட் என அழைக்கப்படும் ஒரு இடம் தான். அரக்கு பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதை ஓரமாகவே அமைந்திருக்கிறது இந்த கலிகொண்டா வியூ பாயிண்ட். போகும் வழியில் நிறைய காப்பித் தோட்டங்கள். சுத்தமான, புதியதான காபிக்கொட்டைகள், காபி பொடி கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு வந்தார் வழிகாட்டி. எப்படியும் வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் காப்பி குடிப்பவர்கள் இல்லை! எனக்காக இங்கேயிருந்து சுமக்க வேண்டுமா என்ற எண்ணத்தில் வாங்கவில்லை! சில இடங்களில் ”Fresh Coffee from Araku”  என்ற பதாகைகள் பார்த்தபோது, நிறுத்தினால் கொஞ்சம் காபி குடித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது! ஏற்கனவே வழிகாட்டி அடுத்து போகும் இடத்தில் காபி கிடைக்கும் என்று சொல்லி விட்டார். அங்கே போனதும் குடிக்கலாம் என்ற ஆசையுடன் பயணக் காட்சிகளை ரசித்துக் கொண்டே புகைப்படங்களும் எடுத்தேன். 
மலைகளுக்கு இடையே விளையாடும் மேகக் கூட்டம்!
அரக்கு பள்ளத்தாக்கு....

இன்னும் சில வேகத்தடைகளைத் தாண்டிய பிறகு வாகனம் சாலை ஓரத்தில் நிற்க, பயணிகள் அனைவரும் இறங்கினோம். சாலை ஓரத்திலேயே மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நின்று இயற்கை எழிலை ரசிக்க ஏதுவாய் வசதி செய்திருக்கிறார்கள். மெல்லிய கம்பித் தடுப்புகள் இருக்க அங்கே நின்று கொண்டு பள்ளத்தாக்கு முழுவதையும் நம்மால் பார்க்க முடியும். நான் என் கேமராவிற்கு வேலை கொடுக்க, வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் செல்ஃபி பிள்ளைகளாக மாறிக் கொண்டிருக்க, மற்றவர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்காமல் நின்று கொண்டிருந்தார்கள்! முகத்தை நேராக வைத்துக்கொண்டோ, புன்சிரிப்புடனோ எடுத்துக் கொண்டிருந்தால் பரவாயில்லை! அஷ்டகோணாலாக்கி, அதில் திருப்தி அடையடையாமல் பல வித சேஷ்டைகள் செய்து தன் முகத்தினை விதம் விதமாக கோரமாக்கி புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அப்படி ஒரு ஆனந்தம்!


மேகக்கூட்டமும் விளையாட்டும்!
அரக்கு பள்ளத்தாக்கு....

காலையில் இந்த இருப்புப்பாதையில் தான் பயணித்தோம்!
அரக்கு பள்ளத்தாக்கு.... 

கொஞ்சம் சைக்கிள் கேப் கிடைக்க, கம்பித் தடுப்பு அருகில் நின்று இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டேன். அங்கே இருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், இரயில் பாதை, தூரத்தே தெரியும் குகை என பலவற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் நகர்ந்தேன். சுற்றுலாவில் கிடைத்த நண்பிகளுடன் நாங்கள் அனைவரும் நின்று ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோம்! சிறிது நேரம் நின்று இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த பிறகு நகர மனதே இல்லாமல் தான் நகர்ந்தோம். அப்படியே இயற்கையான காற்றை சுவாசிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நமக்கு தில்லியில் அழுக்கு தான் என்று விதித்திருக்க, அதை மாற்றவா முடியும்!


இன்னுமொரு காட்சி - வியூ பாயிண்ட்-லிருந்து...
அரக்கு பள்ளத்தாக்கு....


வேக வைத்த மக்காச்சோளம்....
அரக்கு பள்ளத்தாக்கு.... 

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வரும் இடம் போலவே இங்கேயும் தற்காலிகக் கடைகள் – சுடச் சுட வேக வைத்த மக்காச்சோளம், காபி, தேநீர், என பலவும் விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. பிளாஸ்டிக் கப்களும், பேப்பர் கழிவுகளும், அப்படியே வீசி எறிய வசதியாக மலைப்பகுதி இருக்கவே இருக்கிறது! இப்படிச் செய்வதில் இருக்கும் அழிவுகள் பற்றிய சிந்தனை யாருக்கும் இல்லை…. பள்ளத்தாக்கு முழுவதும் கழிவுகளால் மூடிவிட முடியும் எங்களால் என்ற இறுமாப்புடன் தொடர்ந்து வீசுவோம் என்று வீசிக் கொண்டிருக்கிறார்கள்! நடக்கட்டும்…..


எதிர் புறம் இறங்கும் வாகனங்கள்....
அரக்கு பள்ளத்தாக்கு....


பச்சைப் பசேலென....
அரக்கு பள்ளத்தாக்கு....காத்திருந்த அம்மாவும் பிள்ளையும்!
அரக்கு பள்ளத்தாக்கு....

இயற்கைக் காட்சிகளை ரசித்த கையோடு, இந்த செயற்கை அழிவுகளையும் பார்த்து அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் அடுத்ததாகச் சென்ற இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. புகைப்படங்கள் அனைத்தும் அருமை ஜி இரசனைக்குறிய படங்கள்.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. த.ம. விழுந்ததா.... குழப்பமாக இருக்கிறது.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
  3. மூன்று வாக்குகள் காண்பிக்கிறது த.ம.! உங்கள் வாக்கு விழுந்ததா என்று தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. எல்லாப் படங்களும் அருமை. குறிப்பாக கம்பித் தடுப்புக்கு அருகிலிருந்து எடுத்த படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. நான் வாக்களித்து விட்டேன் என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!

   :)))

   நீக்கு
  3. ஹாஹா.... மூன்று வாக்குகளில் ஒன்று உங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும்! ஒன்று என்னுடையது! அப்ப மூணாவது கில்லர்ஜியோடது தான்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 4. வெங்கட்ஜி படங்கள் எல்லாம் செம!!! நானும் கம்பித் தடுப்பிற்கு அருகில் கிடைத்த கேப்பில் படங்கள் எடுத்தேன். ப்ரைட் லைட்டாக அத்தனை சரியாக வரவில்லை எனக்கு. ரயில் பாதையும் மிக அழகாகத் தெரிந்தது என் கேமராவில் சரியாக இவ்வளவு க்ளியராக வரவில்லை. மிக அழகாக இருக்கிறது ஜி! உங்கள் படங்கள். சாலை மிக அழகாக இருந்தது. காபித் தோட்டத்தின் கீழே சாலையில் காபி பொடி, மலையில்விளைந்த மிளகு, ஏலக்காய் மசாலாக்கள் என்று வைத்திருந்தார்கள். சூடாகக் காபியும் குடித்தோம். காபி நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். நிஜமாகவே சுத்தமான காபிதான். எனக்கு ஃப்ளேவர் தெரியாததால் எப்படி இருந்தது என்று சொல்லமுடியவில்லை. தேநீரும் நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள். ஆம் ஜி குப்பை போடுவது மனதிற்கு வேதனையாக இருந்தது. நாங்கள் ஒரு பேகில் போட்டுக் கொண்டு குப்பைத் தொட்டி பார்த்ததும் அதில் போட்டோம். மீண்டும் பயணிப்பது போல் உள்ளது...மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது/ஏற்படுகிறது...

  தொடர்கிறோம் ஜி....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் அங்கே காபி குடிக்கவில்லை. பிறகு டைடாவில் தேநீர் அருந்தினோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 5. படங்கள் நல்லா இருக்கு. தொடர்கிறேன் த ம வாக்கோடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. இயற்கை காட்சிகள் அருமை ,அங்கே வாழும் மக்களைப் பார்த்தால்தான் பாவமாய் இருக்கிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 7. சேதங்கள் வருத்தப்பட வைக்கின்றன.
  அற்புதமான படங்களுடன் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். பயணக்கட்டுரைப் புலி என்றப் பட்டத்தை அளித்து ஆனந்தமடைகிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணக்கட்டுரைப் புலி! அப்படியெல்லாம் இல்லை துரை. ரொம்ப புகழறீங்க! வெட்கமா இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 8. உங்களுடன் நானும் பயணிக்கின்றேன்..
  அரக்கு பள்ளத்தாக்கின் அழகினைப் பதிவில் கண்டு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. படங்கள் அனைத்தும் அற்புதம் ஐயா
  தங்களால் நாங்களும் காணக்கிடைக்காத காட்சிகளைக் கண்டோம் நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. பதிவை படிச்சதுக்கு கூலியா மக்காச்சோளத்தை எடுத்துக்கிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அதான் மக்காச்சோளத்தைக் காணோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. குட்டி பையன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 13. படங்கள் அனைத்தும் அருமை. திரு. அப்பாதுரை அவர்கள் அளித்த "பயணக்கட்டுரைப் புலி" பட்டத்தை வழிமொழிகிறேன்.
  (அடுத்த காட்டுப் பயணத்தின்போது வழியில் புலியைப் பார்த்தால் புகைப்படம் எடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவும். நானும் புலிதான் என்று வண்டியில் இருந்து இறங்கிவிடக் கூடாது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் புலிதான் என்று வண்டியிலிருந்து இறங்கிவிடக்கூடாது! - அடுத்த காட்டுப் பயணம் உங்க கூட தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 14. அருமையான பயணம். படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 15. படங்கள் அருமை என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வதுபோல் இருக்கும் கர்நாடகத்தில் ஆகும்பேயுமிப்படித்தான் இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 16. படங்களை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....