அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
A CREATIVE MAN IS MOTIVATED BY THE DESIRE TO
ACHIEVE, NOT BY THE DESIRE TO BEAT OTHERS.
******
நவராத்திரி 2023 - நான்காம் நாள்: 18 அக்டோபர் 2023:
இன்றைய பதிவில் நவராத்திரி கொண்டாட்டங்களின் இரண்டாம்
மூன்று நாட்கள் குறித்து பார்க்கலாம்!
நவராத்திரி நான்காம் நாள் நைவேத்தியமாக இன்று
பச்சைப்பயறு சுண்டல் செய்திருந்தேன்!
மாலை Geetha Sambasivam மாமி வீட்டிற்குச் சென்று
கொலு பார்த்து தாம்பூலம் வாங்கி வந்தோம்! மாமியால் இங்கு வர முடியாது என்பதால்
எங்கள் வீட்டிலிருந்து தாம்பூலமும் எடுத்துச் சென்று கொடுத்து விட்டு வந்தேன்!
வீட்டிற்கு வந்ததும் அக்கம்பக்கம் உள்ள நட்புகளும்
வந்ததில் இன்றைய நாள் இனிதே கடந்தது!
&*&*&*&**&*&*
நவராத்திரி 2023 - ஐந்தாம் நாள்: 19 அக்டோபர் 2023:
நவராத்திரி ஐந்தாம் நாள் நைவேத்தியமாக இன்று வெள்ளை
கொண்டக்கடலை சுண்டல் செய்திருந்தேன்!
&*&*&*&**&*&*
நவராத்திரி 2023 - ஆறாம் நாள்: 20 அக்டோபர் 2023:
நவராத்திரி ஆறாம் நாள் நைவேத்தியமாக இன்று சிவப்பு
அவலில் புட்டு செய்திருந்தேன்!
வீட்டுக்கு அருகில் உள்ள தோழி வீட்டில் இன்று மாலை
லலிதா சகஸ்ரநாம பாராயணம் இருக்கவே கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த தோழிகள்
சிலரையும் அழைத்து தாம்பூலம் தர முடிந்தது! அதில் இன்றைக்கு புதிதாக அறிமுகமானவர்
சுப்ரஜா! இப்படியாக இன்றைய நாள் இனிதானது!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பின் குறிப்பு: எனது
முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில்
வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…
நவராத்திரி கொலு சிறப்பாக சென்று கொண்டிருப்பது தெரிகிறது. கீதா அக்கா கொலு வைத்திருந்தார்களா? புதிய நட்புகள் கிடைப்பதும் சிறப்பு.
பதிலளிநீக்குஆமாம் சார். கீதா மாமி கொலு வைத்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்ததில் புகைப்படம் எடுக்கவில்லை.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
பச்சைப் பயிறு இனிப்புச் சுண்டலா? நான் இங்கு அந்தச் சுண்டலைச் செய்து எபிக்கு அனுப்ப எடுத்துவைத்திருக்கிறேன் (செய்முறை)
பதிலளிநீக்குஓ.. கீதா சாம்பசிவம் மேடம் வீட்டருகில்தான் இருக்கிறீர்களா?
பச்சைப்பயறு காரம் சேர்த்த சுண்டல் தான். தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து சேர்த்திருந்தேன்.
நீக்குகீதா மாமி வீட்டிலிருந்து ஆட்டோவில் பத்து நிமிட பயணம் தான்.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
நவராத்திரி கொலு பொம்மைகள் அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குநவராத்திரி கொலு அழகு.. அருமை..
பதிலளிநீக்குஅன்பின் நல்வாழ்த்துகள்..
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குஉங்கள் கொலு கோலாகலமாக இருக்கிறது!!! சூப்பர் கொலு. பிரசாதம் எல்லாமே அருமை...
பதிலளிநீக்குகீதா
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்குகொலு படங்கள், பிரசாதங்கள் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள். கீதா சாம்பசிவம் அவர்கள் நன்றாக இருக்கிறார்களா?
அவர்கள் வீட்டுக்கு போய் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
கீதா மாமி நலமுடன் இருக்கிறார் கோமதிம்மா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
அழகோ அழகு...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
நீக்குஅழகு சிறப்பு
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநவராத்திரி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.
நீக்குபதிவுலக நட்புகளுடன் நவராத்திரி கொண்டாட்டம் மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு