சனி, 14 அக்டோபர், 2023

வந்து விட்டது நவராத்திரி - ஏற்பாடுகள் - 2023


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

நேற்று வெளியிட்ட ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா பதிவினையும் இன்று காலை வெளியிட்ட சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

 

******

 

கொலு பொம்மைகள் - 11 அக்டோபர் 2023


























 

திருவரங்கத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டத் துவங்கி விட்டது! இதோ இன்று படிகளை அடுக்கி பொம்மைகளை இருத்த வேண்டுமே! தெருவில் கொலு பொம்மை! கொலு பொம்மை! டிவி பொம்மை! ஷோகேஸ் பொம்மை! என்று தள்ளுவண்டியிலும், டெம்போவிலும் ரெகார்ட் செய்யப்பட்ட குரலில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது! 

 

ராஜகோபுரம் அருகே காந்தி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் கொலு கண்காட்சி போடப்பட்டுள்ளது! இதுபோக வழக்கமாக நவராத்திரி சமயத்தில் போடப்படும் மூன்று நான்கு கடைகளிலும் கொலு பொம்மைகள் கண்களைக் கவர்கின்றன! எங்கும் வண்ணமயமாய் காட்சியளிக்கின்றன.

 

மண் பொம்மைகள், பேப்பர் மெஷ், க்ளேவால் செய்யப்பட்டது என்று விதவிதமான பொம்மைகள்! இம்முறை கல்கத்தா பொம்மைகள் கண்களைக் கவர்ந்தது! எடை அதிகமில்லை! நுண்ணிய வேலைப்பாடு! கண்களை உறுத்தாத லேசான வண்ணங்கள் கொண்டு அழகாக இருந்தது!

 

சென்ற வருட கொலுவின் இடையில் பூம்புகார் கைவினைப் பொருள் கண்காட்சிக்கு சென்ற போது அடுத்த வருடத்துக்கு என்று ராமர் சீதை சுயம்வரம் வாங்கி வந்தோம்! இதுபோக பெரியம்மா வாங்கித் தந்த துர்கா லஷ்மி சரஸ்வதி வேறு இருக்கிறது! அதனால் இந்த வருடம் எதுவும் வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால்...🙂

 

இன்றைக்கு ராஜகோபுரம் வரை செல்லும் வேலை இருக்கவே அப்படியே கொலு கண்காட்சியையும் பார்க்கலாமே என்று சென்றதும் மனது மாறி விட்டது...🙂 கல்கத்தா பொம்மைகளில் அர்த்தநாரீஸ்வரரும், ராஜஸ்தான் தம்பதிகளும் எங்களுடன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்...🙂

 

&*&*&*&**&*&*

 

Eco friendly bags - 6 அக்டோபர் 2023:




 

நேற்றைய மாலைநேரம் தெற்கு சித்திரை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது விதவிதமான துணிப்பைகளை கடை போட்டு ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். சிறிது பெரிதுமாக பைகளும், பர்ஸ்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன!

 

அவரிடம் விசாரித்ததில் அவர்களே அவற்றை தைத்து விற்பனை செய்வதாகச் சொன்னார்! எங்களிடம் விலைப்பட்டியலும் தந்தார்! எல்லாமே துணியால் உருவானது தான்! குஷன் போல உள்ளே மெத்தென்று இருக்கும் விதமாய் தைத்திருக்கிறார்கள்! விலையும் சாதாரணமாக தான் இருக்கிறது! 

 

நவராத்திரி சமயத்தில் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதற்காக 100 பைகள், 200 பைகள் என்று சிலர்  அவரிடம் வாங்கிச் சென்றதாகவும் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எங்களுக்கும் பிடித்திருந்தது தான்! ஆனால்!!

 

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்! எங்கள் வீட்டு கொலுவுக்கு நான் Eco friendly ஆகவும் வீட்டுக்கு மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ள வரும் பெண்களுக்கு உபயோகமாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்து தான் எப்போதும் வாங்குவேன்! 

 

இந்த வருட கொலுவுக்காக என்னவர் என்னிடம் கேட்ட போது 'என்ன வாங்க  வேண்டும்' என்றும் அதற்கான  பட்ஜெட்டையும் சொல்லவே டெல்லியிலிருந்தே வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்! அதனால் இந்த வியாபாரியிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை!

 

அவரிடம் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டோம்! சற்று தூரம் சென்றதும், இப்போதைக்கு 20 பை வேணா அவர்ட்ட வாங்கிக்கோ! நடுவுல யாராவது வீட்டுக்கு வந்தாலும் கொடுக்கலாமே! என்று என்னவர் சொல்லவும் அதுவும் சரியென பட்டது!

 

சில வருடங்களாகவே வீட்டுக்கு விருந்தினர் யாரேனும் வந்தால் தாம்பூலத்துடன் பிளவுஸ் பிட்டுக்கு பதிலாக இதுபோன்ற உபயோகமான பொருட்களை தான் வைத்து தருகிறேன். இந்தப் பைகளை அப்படி கொடுத்துடலாம் என்று தோன்றவே  வாங்கிக் கொண்டோம்.

 

இவரைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும் இல்லையா! பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கவும், திரும்பத் திரும்ப விடாது கருப்பு போல் சுற்றி வரும் பிளவுஸ் பிட்டுக்கு மாற்று வழியாகவும் நிச்சயம் இருக்கும்!

 

&*&*&*&**&*&*

 

ரோஷ்ணி கார்னர் - ஷில்ப்கார் - 12 அக்டோபர் 2023:


 

குழம்புக்காக வாங்கிய மண்சட்டி ஒன்று பெரியதாக இருக்கவே இதுவரை புழங்காமல் வைத்திருந்தேன். அதை கொலுவில் அலங்கரித்து வைக்கலாம் என்பதற்காக மகள் shilpakar கொண்டு தயார் செய்து வருகிறாள்! இதன் மேலே பெயிண்ட் செய்ய வேண்டும்! முழுதாக முடிந்ததும் அதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன். அதுவரை காத்திருங்கள்…




 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. படங்கள் அத்தனையும் ஈர்க்கின்றன ஆதி. செம அழகு எல்லாம் ரசித்துப் பார்த்தேன். கவர்கின்றன. கொலுப்படி போல சைடில் சின்னதா இருக்கே என்ன அழகு அந்தப்படத்தில் எல்லாமே சுண்டி இழுக்கின்றன. வேலைப்பாடு செய்த பேக் நல்லாருக்கு. எனக்கு என் தங்கை வாங்கிக் கொடுத்த டாப்ஸ் துணி நானே தைக்கும் போது மீந்த துணியில் இப்படிச் சிறிதாக பை சைத்தேன் உள்ளே ஸ்பாஞ்ச் வைத்து அப்புறம் உள்ளே இரண்டு மூன்று அடுக்கு வேறு துணிகள் வைத்தும்...ஆனால் சில நாட்களில் வேலைப்பாடுகள் உதிரத் தொடங்கிவிட்டன.

    நான் பருத்தித் துணி மட்டும் தான் போடுவது வழக்கம். சுடிதார், பாட்டம் எப்போதாவது கட்டும் புடவை உட்பட எல்லாமே காட்டன் மட்டும்தான் வேறு எந்த துணியும் போடுவதில்லை. அதனால் தைக்கும் போது வெட்டும் துணிகளில் கிடைத்தால் பை அல்லது சின்ன விரிப்புகள் தைத்து விடுவேன்.

    இப்போதும் எடுத்து வைத்திருக்கிறேன். தைப்பதற்கு,

    பொம்மைகளில் அதுவும் முதல் பொம்மை, அர்த்த நாரீஸ்வரர் செம அழகு அது போல தவழ்ந்த முருகர் தவழ்ந்த கிருஷ்ணர் க்யூட்! எல்லாமே கொள்ளை அழகா இருக்கு, என்ன வித் விதமான பொருட்கள்! சுற்றிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

    உங்கள் வீட்டு கொலு படங்களும் வரும் என்று நினைக்கிறேன், கொலு எனக்குப் பிடித்த விஷயம் ஆனால் எக்சேஞ்ச் மேளா!!!!!!!! எனக்கு ஒத்துவருவதில்லை. வீடு வீடாக மாறிக் கொண்டே இருப்பதாலும், கொலு பழக்கம் விட்டுவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தநாரீஸ்வரர் கண்களைக் கவர்ந்ததால் வாங்கி விட்டோம். அங்கிருந்த அத்தனை பொம்மைகளுமே மிகவும் அழகாக இருந்தது!

      பதிவு குறித்த தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  2. குழம்புச்சட்டி கலைப்பொருளாகிறது!!!! ரொம்ப நல்லா செய்யறாங்க ரோஷ்ணி! ரோஷ்ணி Rocks! Shilpakar!!

    என் பழைய நினைவுகள் எழும்பி மீண்டும் செய் என்று தூண்டுகிறது ஆனால் அடக்கிக் கொள்கிறேன், இனி எதுவும் சேகரிப்பதில்லை என்று. மாறும் வீடுகளில் இடப்பற்றாக் குறை. Minimalism தான் எப்போதுமே என்று... முன்பெல்லாம் குல்ஃபி, தயிர் வாங்கும் போது இந்த பானை கிடைக்குமே எல்லாமே வீட்டில் இருந்தன. இப்ப ஒன்றும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். குழம்புசட்டி கலைப்பொருளானது. அனைவரையும் கவர்ந்தது!

      எங்கள் வீட்டிலும் எப்போதுமே மினிமலிஸம் தான். அடைசல் எதையும் வைத்திருப்பதில்லை. சுத்தம் செய்து கொண்டே தான் இருப்பேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. விடாது கருப்பை ரசித்தேன்.

    துணிப்பு - காடா துணியில் செய்தது, ஒரு அடி உயரம், முக்காலடி அகலம் தேடிக்கொண்டிருந்தேன். பாக்கெட்டில் இந்தப் பையைக் கொண்டு சென்றால், வெளியில் ஏதேனும் வாங்கிவர வசதியாக இருக்கும். அழகுக்காக வரும் பைகள் எடை தாங்குவது இல்லை. தாம்பூலப் பைகளால் உபயோகமே இல்லை (விசேஷங்களில் தரப்படுவது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அது விடாது கருப்பு தான்...:)

      தாம்பூலப் பைகள் பெரிதாக எடை தாங்குவதில்லை தான்! ஆனால் இங்கு வெளியில் செல்லும் பெரும்பாலனவர்களிடம் தாம்பூலப் பைகள் கட்டாயமாக இருக்கும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....