புதன், 1 நவம்பர், 2023

கதம்பம் - Project - நவராத்திரி முடிவு - நவராத்திரி சிந்தனைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை 
டித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும்; வாழ்க்கை என்னவென்று வலிகளால் உணர்த்தும்.


******


ரோஷ்ணி கார்னர் - Project - Fruit Fibre: 25 அக்டோபர் 2023:


மகள் தன் projectக்காக Fruit fibre என்று சொல்லப்படுகிற தேங்காய் நார் கொண்டு இந்த மாடலின் உடையை வடிவமைத்திருக்கிறாள்!


&*&*&*&**&*&*


நவராத்திரி 2023 - முடிவு:




நவராத்திரி முன்னேற்பாடுகளில் துவங்கி, படியெல்லாம் கட்டி, பொம்மைகளை அடுக்கி ஒவ்வொரு நாளும் நிவேதனங்களை தயார் செய்து, குடியிருப்பில் உள்ளோரை தாம்பூலம் வாங்கிக் கொள்ள குங்குமம் கொடுத்து அழைத்து, ஃபோனில் அழைப்பவர்களுக்கு தகவல் சொல்லி, ஒவ்வொரு நாளும் இல்லம் தேடி வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது என்று நவராத்திரியின்  ஜோரெல்லாம் முடிந்து இன்று தான் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளோம்!


பத்து நாளும் கொலுவிருந்து அருளாசியை வழங்கிய பொம்மைகளை வரும் வருடங்களிலும் இதே போல் கொலுவிருந்து இல்லத்தில் நல்லதோர் நேர்மறையான  எண்ணங்களையும், இனிய நிகழ்வுகளையும் உருவாக்கணும்!  என்று பிரார்த்தித்துக் கொண்டு பெட்டிகளில் பத்திரப்படுத்தி பரணில் வைத்தோம்!


படிகளை அடுக்குவது முதல் பொம்மைகளை எடுத்து வைப்பது, வெற்றிலை பாக்கு பழம் வாங்கிக் கொண்டு வருவது, வருபவர்களுக்கு தாம்பூலம் எடுத்து வைப்பது என்று  என்னவரின் பெரும் உதவிகளால் தான் இந்த நவராத்திரி சிறப்பாக நிகழ்ந்தது என்று சொல்வேன்!


இந்த மாதிரி பண்டிகை நாட்களில் பலவிதமான மனிதர்களை சந்திக்கும் போது அவர்களிடமிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்வதும் பெற்றுக் கொள்வதுமாகவும் சென்றது! சில புரிதல்களையும் உருவாக்கியது! நாம் என்றும் ஒரே மாதிரி இருப்போம்! நல்லதே நினைப்போம்! என்ற எண்ணங்களையும் தோற்றுவித்தது!


&*&*&*&**&*&*


நவராத்திரி 2023 - சில சிந்தனைகள்:




டெல்லியில் இருந்தவரை எங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்றாலும் ஒன்பது நாட்களுமே பிஸியாக தான் இருப்பேன்! மாலை என்னவர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் இரவு உணவை தயாரித்து வைத்து விட்டு குழந்தையையும் பட்டு பாவாடையெல்லாம் போட்டு விட்டு ரெடி பண்ணி விட்டு நானும் ரெடியாகி விடுவேன்!


அவர் வந்ததும் டீ போட்டு குடுத்து விட்டு கிளம்பினோம் என்றால் ஒவ்வொரு நாளும் நான்கைந்து வீடுகளுக்காவது கொலு பார்க்க சென்று விடுவோம்! ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு பகுதியில் இருக்கும்! ரிக்‌ஷாக்களில் தான் சென்று வருவோம்! அங்கே வந்திருப்போர் யாராவது அழைத்தால் அப்படியே சென்று பார்த்து வருவது என்று இரவு நெடுநேரம் கழித்தே வீடு திரும்புவோம்!


நவராத்திரி சமயத்தில் தான் அங்கே இரவு நேரத்தில் குளிரும் துவங்கியிருக்கும்! பின்பு மெல்ல மெல்ல கூடுதலாகி டிசம்பரில் கடும்பனியாக மாறியிருக்கும்!


இப்படியாக நவராத்திரி சமயத்தில் 30 வீடுகளுக்காவது கொலு பார்க்க சென்று வருவோம்! நாங்கள் வசித்த கிழக்கு தில்லி பகுதியில் அப்போது நிறைய தமிழ்க் குடும்பங்கள் இருந்தனர்! எல்லோருக்குள்ளும் நல்லதோர் நட்புவட்டமும் இருந்தது!


எல்லோருமே பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும், உதவி மனப்பாங்கு கொண்டவர்களாகவும், தன்னலம் பாராத பொதுநலத்தில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தார்கள்! பொதுக்காரியங்களை எடுத்து போட்டு செய்வது, விழாக்களை நடத்துவது, கோவில் நிகழ்வுகள், வாரம் ஒருமுறை நண்பர்கள் இணைந்து பூங்காக்களில் சந்தித்து கொள்வது என்று சென்ற நாட்கள் அவை!


2015இலிருந்து Geetha Sambasivam மாமியின் வழிகாட்டுதலில் எங்கள் வீட்டிலும் கொலு வைக்க ஆரம்பித்தேன்! இங்கே மூன்று அல்லது நான்கு வீடுகளுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ளச் செல்கிறேன். பழகிய நபர்களை முடிந்தவரை அழைக்கிறேன்!


ஆனால் பத்து வருட இடைவெளியில் சக மனிதர்களிடம் தென்படும் குறுகிய மனப்பாங்கும், கெளரவமும், சுயநலமும் ஆச்சரியப்படுத்துகிறது! சிந்தனைக்குள்ளாக்குகிறது! ஏன் இந்த மாற்றம்??


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…


18 கருத்துகள்:

  1. நவராத்திரி நினைவுகள் சிறப்பு.  வெங்கட் லீவில் வந்திருந்தாரா?  ஒரு புகைப்படத்தில் கூட காணோமே!  ரோஷ்ணியின் தேங்காய் நார் டிசைன் நன்றாயிருக்கிறது.  நட்பு வட்டம் இனிமைதான்.  அதில் சில குறைபாடுடைய மனதினரும் இருப்பதும் இயல்புதானே..  விடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த ஒன்றரை மாதமாக விடுமுறையில் இங்கு தான் இருந்தார். இப்போது மீண்டும் தில்லிக்கு திரும்பி அலுவலகத்தில் ஜாயின் செய்து விட்டார் சார்.

      ஆமாம் சார். மனிதர்களில் பலவிதம்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் ம
      மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. மனிதர்கள் பலவிதம்

    டிசைன் அழகு. பெண்ணின் கால்கள் alugnedஆக இல்லை. ஃபோகஸ் உடை டிசைன் என்பதால் பாதகமில்லை.

    நவராத்திரியில் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால்கள் பற்றி நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும்
      மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும்
      மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும்
      மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. கதம்பம் அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடும் போது மனதுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. ரோஷ்ணியின் உடை வடிவம் நன்றாக இருக்கிறது இப்போதைய ட்ரெண்டிற்குத் தக்க.

    கால்கள் மட்டும் பூனை நடை வரைய முயற்சி செய்திருக்கிறார் என்று தெரிகிறது இல்லையா? பார்பி பொம்மையின் கால்கள் போல முயற்சி! என்று தோன்றுகிறது.

    நவராத்திரி சிந்தனைகள் சிறப்பு. மனிதர்கள் பலவிதம்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கடந்து சென்றுவிடலாம்! வெங்கட்ஜி இருந்து கொண்டாடியது உதவியது எல்லாம் மிகவும் மகிழ்வான விஷயங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கால்கள் முயற்சி தான் செய்திருக்கிறாள்.
      ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் கடந்து தானே சென்று கொண்டிருக்கிறோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. நண்பர் வீட்டு கொலுவில் நானும் பங்குபெற்ற உணர்வை ஏற்படுத்தியது தங்களின் கொலு அலங்கரிப்பும் தங்கள் நினைவு பகிர்தலும்.

    நண்பர் வெங்கட் அவர்களை ரொம்ப விசாரித்ததாக சொல்லவும்.

    தேங்காய் நார் உடை வடிவமைப்பு அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டு கொலுவில் பங்கேற்ற உணர்வைத் தந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவரிடம் சொல்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி koilpillai சார்.

      நீக்கு
  8. ரோஷ்ணியின் தேங்காய் நார் மாடல் சூப்பர்.

    கொலு அழகாக இருக்கிறது.

    நவராத்திரி நினைவுகள் காலத்தின் மாற்றங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  9. மகளின் படைப்பு அருமை! நவராத்திரி நினைவுகளில் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....