ஞாயிறு, 30 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி - Gக்யானி Dதி ஹ(t)ட்டி - குல்ஃபி ஃபாலூடா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


பழைய தில்லி பகுதியான சாந்த்னி சௌக் அருகே இருக்கும் ஃபதேபுரி பகுதியில்  கடந்த 60/70 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் உணவகம் Gக்யானி Dதி ஹ(t)ட்டி…. இங்கே சோளே Bபட்டூரே, சோளே CHசாவல் போன்றவை கிடைத்தாலும் இங்கே கிடைக்கும் ஐஸ்கிரீம், குல்ஃபி, ரப்டி ஃபாலூடா போன்றவை மிகவும் பிரபலமானவை. தினம் தினம் காலை 08.30 மணிக்குத் திறந்தால் இரவு பதினோரு மணிக்குதான் உணவகத்தினை மூடுவார்கள். எப்போதும் மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதால் உரிமையாளர்களுக்கு வரவும் அதிகம். 



ஒன்றிரண்டு முறை அங்கே சென்று உணவையும் குல்ஃபியும் சுவைத்தது உண்டு. அலுவலகத்தில் சில சமயம் Swiggy, Zomato போன்ற செயலிகள் மூலம் வரவழைத்து சுவைத்தாலும் நேரே சென்று சுவைப்பது போன்ற உணர்வு வருவதில்லை. ஒன்று ஆறி அவலாக வரும். என்னதான் போதுமான அளவு Packing இருந்தாலும் குல்ஃபி, ஐஸ்கிரீம் போன்றவை உருகும் நிலையில் இருக்கும். அதனால் பெரும்பாலும் அங்கே சென்று சுவைப்பதையே நான் விரும்புவேன். 


இந்த உணவகம் ஆடம்பரமான இருக்கைகள், அழகான சூழல் போன்றவை கொண்டதாக இல்லை என்றாலும், இங்கே கிடைக்கும் உணவின் சுவைக்காக நீங்கள் நிச்சயம் இங்கே சென்று வரலாம். அதிலும் குறிப்பாக இங்கே 150 ரூபாய்க்கு (மேலே இருக்கும் படத்தில் இருப்பது பழைய விலையாக இருக்க வேண்டும்! படம் இணையத்திலிருந்து எடுத்தது!) கிடைக்கும் ரப்டி ஃபாலூடாவின் சுவைக்காக மட்டுமே ஒரு முறை சென்று வரலாம். இதை எழுதும் போதே, மனதுக்குள் ஒரு அறைகூவல்…. "அடேய் அங்கே சென்று வந்து நீண்ட காலம் ஆகிவிட்டதே, நாளை விடுமுறை தானே சென்று வரலாமே" என! :)




சரி வீட்டிலிருந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால்? இருக்கவே இருக்கிறது வீட்டின் அருகே இருக்கும் Gக்யானி ஐஸ்கிரீம் கடை. பெரிய உணவகத்தில் கிடைக்கும் அனைத்தும் இங்கே கிடைக்காது என்றாலும் ஐஸ்கிரீம் மட்டும் இங்கே கிடைக்கும். இவர்களுக்கு இது போன்று சில கிளைகள் உள்ளன என்றாலும் பிரதான கடையில் சென்று சாப்பிடுவது நல்லது. அங்கே சென்றால் வேறு தகவல்களையும் இந்த இடுகையில் சேர்த்து விடுகிறேன்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…



7 கருத்துகள்:

  1. சுவை கூறும் பதிவு, சுவையான பதிவு!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா! ரப்டி ஃபாலூடா - சுவைக்கத் தோன்றுகிறதே. முழுவதும் சாப்பிட முடியாதுதான்....கூட வரவங்களை வாங்கச் சொல்லிட்டு!!!!!! ஒரு ஸ்பூன் ஆகிலும் கண்டிப்பா சுவைக்கணும். ரப்டி ரொம்பப் பிடிக்கும்...ஓரளவு புரிகிறது இப்படித்தான் செய்வாங்களோ என்று. ஃபல்லூடா செய்ததுண்டு. எனவே ஒரு சின்ன ஊகம். என்றாலும் நேரில் சுவைத்துதான் அறிய வேண்டும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சுவையான பதிவு. படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....