ஞாயிறு, 9 ஜூலை, 2023

குவாரி பாஸ் - மலையேற்றம் - காணொளி உலா - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கோமரத்தாடி! - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


எனது அலுவலக நண்பர் Pபிரேம் Bபிஷ்ட் அவர்களின் மலையேற்றப் பயணங்களில் ஒன்றாக உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் குவாரி பாஸ்  சென்ற போது எடுத்த படங்களில் சிலவற்றையும், அந்த இடம் குறித்த சில தகவல்களையும் கடந்த மூன்று ஞாயிறில் - பகுதி ஒன்று, பகுதி இரண்டு மற்றும் பகுதி மூன்று - பதிவுகளாக வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த வாரம் இப்பயணத்தில் எடுத்த சில காணொளிகளை இங்கே பார்க்கலாம்.  அதற்கு முன்னர் இந்தப் பயணத்தினை ஏற்பாடு செய்யும் சில நிறுவனங்கள் குறித்தும் உங்களுக்குத் தகவல் சொல்லி விடுகிறேன். இப்படியான பயண ஏற்பாடுகள் செய்யும் நிறுவனங்கள் நிறையவே இருந்தாலும், இருப்பதில் முதன்மையானது என பல மலையேற்றம் செய்த நண்பர்கள் குறிப்பிடுவது India Hikes நிறுவனத்தினரையே! அது தவிர thrillophilia எனும் நிறுவனமும் உண்டு.  


ரிஷிகேஷிலிருந்து குவாரி பாஸ் செல்லும் வழியிலும் நிறைய இடங்கள் பார்க்க உண்டு என்றாலும் இந்தப் பயணத்தினை முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். செல்லும் வழியில் உள்ள இடங்களை பார்க்க நினைத்தால் இன்னும் அதிக நேரம் உங்களுக்குத் தேவையாக இருக்கும் என்பதை, பயணத்தினை திட்டமிடும்போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பயண ஏற்பாடுகளை செய்து கொண்டு இந்த மாதிரி மலையேற்றப் பயணங்கள் மேற்கொள்வதே சிறந்தது - ”அங்கே போய் பார்த்துக்கலாம்” என்று பயணம் செய்ய இது போன்ற பயணங்கள் சரி வராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.  நம்மில் பலருக்கும் இது போன்ற சாகசப் பயணங்கள் செய்ய ஆவல் இருந்தாலும் பயணம் செய்ய வாய்ப்பும் அமைவதில்லை, அப்படியே அமைந்தாலும் செல்வதற்கு முன்னர் பலவாறும் யோசித்து தள்ளிப் போட்டு விடுகிறோம்.  நம் உடல் நிலை சரியாக இருக்கும்போதே, அல்லது இளமையிலேயே இது போன்ற பயணங்களை மேற்கொண்டு விடுவது தான் நல்லது.  


விருப்பம் இருக்கும் அனைவருக்கும் இது போன்ற மலையேற்றப் பயணம் அமையட்டும் என வாழ்த்துகிறேன். சரி வாருங்கள் சில காணொளிகளைப் பார்க்கலாம்.


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


16 கருத்துகள்:

  1. உண்மை.  இது மாதிரி சாகசப் பயணங்களை ரசிக்கத்தான் முடிகிறது.  நான் எங்கே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால் இப்படியனான பயணங்களை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், இப்படியேனும் ரசிக்க முடிகிறதே என்று மகிழ்ச்சிகொள்ள வேண்டியது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இன்றைய வாசகம் சிரிக்க வைத்துவிட்டது! அது எந்தத் துணையாக இருந்தாலும் நம் அலைவரிசைக்கு ஒத்துவந்தால்தான் பயணம் இனிக்கும். அனுபவமும் உண்டே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு வழி பகிர்ந்த வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அலைவரிசைக்கு ஒத்து வரும் துணை இருந்தால் பயணமும் இனிக்கும், வாழ்க்கையும் இனிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. குவாரி பாஸ் - நீங்கள் சொல்லியிருப்பது போல் இதைச் சுற்றி நிறைய இடங்கள் இருக்கின்ற்ன போகும் வழியில் பார்க்க என்று. இணையத்திலும் சும்மா சுற்றிப் பார்த்து!!!தெரிந்து கொண்டேன்.

    //நம்மில் பலருக்கும் இது போன்ற சாகசப் பயணங்கள் செய்ய ஆவல் இருந்தாலும் பயணம் செய்ய வாய்ப்பும் அமைவதில்லை, அப்படியே அமைந்தாலும் செல்வதற்கு முன்னர் பலவாறும் யோசித்து தள்ளிப் போட்டு விடுகிறோம். நம் உடல் நிலை சரியாக இருக்கும்போதே, அல்லது இளமையிலேயே இது போன்ற பயணங்களை மேற்கொண்டு விடுவது தான் நல்லது. //

    அதே..அதே...

    திட்டமிடல் மிக மிக அவசியம் இப்படியான பயணங்களுக்கு. வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் இப்படிப் பார்த்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

    காணொளிகள் யுட்யூபில் பார்த்தேன். இங்கும் பார்த்து வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான பயணங்கள் நமக்கு அமைந்தால் மகிழ்ச்சி தான். அமையும் வரை இப்படி காணொளி வழி பார்த்து ரசிப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. படங்களின் தொகுப்பாகப் போட்டிருந்தார். அதில் தகவல்களோடு செல்லும் தூரம்....அதை அங்கு பார்த்து Like கொடுத்து கருத்தும் போட்டிருந்த நினைவு. இங்கு உள்ள முதலாவதை இப்போதுதான் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில காணொளிகள் போட்டு இருக்கிறார். காணொளிகள் எடுப்பது சற்றே சிரமம் - பல இடங்களில் பேட்டரி சார்ஜ் செய்ய முடியாது என்பதால்! படங்கள் அலைபேசியில் எடுத்ததை தொகுத்து காணொளியாக வெளியிட வேண்டியிருக்கிறது அவருக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. காணொளிக்ள் அருமை. எல்லா மலைகளுமே என்னை ஈர்க்கும் (இயற்கை எல்லாமே) இமயமலை அவர் சொல்லியிருப்பது போல் காந்தம் தான்....இரு முறை ஹிமாச்சலப்பிரதேசம் சென்ற போது உணர்ந்த ஒரு பரவச நிலை. இப்படியான அமைதியான யாருமே அதிகம் போகாத இடம் என்றால் அது இன்னும் கூடும்.

    உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் ஜி, He is blessed! இப்படி இமயமலையை அடிக்கடி பார்த்து ரசித்து அதனோடு இணைந்து அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்தற்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. He is blessed! - உண்மை தான். எத்தனை வாய்ப்புகள் அவருக்கு - சற்றே பொறாமையாகக் கூட இருக்குமெனக்கு! :)

      பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. வாசகம் அருமை.

    //நம் உடல் நிலை சரியாக இருக்கும்போதே, அல்லது இளமையிலேயே இது போன்ற பயணங்களை மேற்கொண்டு விடுவது தான் நல்லது. //

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    முதல் காணொளி பின்னனி இசை மிகவும் பிடித்தது , இந்தி சினிமாக்களில் மலை வாழ் வாழும் காட்சிகளில் இந்த இசை தான் வரும். காட்சிகளும் அருமை.
    அடுத்த காணொளி மலையேற்றம் செய்ய போகிறர்வர்களுக்கு மிகவும் உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....