ஞாயிறு, 2 ஜூலை, 2023

குவாரி பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


எனது அலுவலக நண்பர் Pபிரேம் Bபிஷ்ட் அவர்களின் மலையேற்றப் பயணங்களில் ஒன்றாக உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் குவாரி பாஸ்  சென்ற போது எடுத்த படங்களில் சிலவற்றையும், அந்த இடம் குறித்த சில தகவல்களையும் கடந்த இரண்டு ஞாயிறில் - பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு - பதிவுகளாக வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த வாரம் மேலும் சில தகவல்களையும் படங்களையும் பார்க்கலாம்.  


பயணத் திட்டம் - மேலும் தகவல்கள்:


சென்ற இரண்டு பகுதிகளில் பயணம் குறித்த தகவல்களையும் முதல் மூன்று நாட்களுக்கான திட்டங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்தப் பகுதியில் மலையேற்றத்தில் கடைசி மூன்று நாட்கள் என்னென்ன நிகழ்வுகளை வைத்துக் கொள்ளலாம் என்பதைக் குறித்துப் பார்க்கலாம் வாருங்கள். 


நான்காம் நாள்:  பயணத்தின் நான்காம் நாள் மலையேற்றம் கொஞ்சம் கடினமானது. நான்காம் நாள் அன்றே இப்பயணத்தின் பிரதான இலக்கான குவாரி பாஸ் பகுதிக்குச் செல்வோம்.  மூன்றாம் நாள் தங்கிய இடமான குல்லாடாவிலிருந்து புறப்பட்டு பயணத்தின் இலக்கான குவாரி பாஸ் சென்று அதன் பிறகு அங்கிருந்து கீழ் நோக்கிச் சென்று தாலி எனும் இடத்தினை அடையலாம்.  மொத்த தூரம் சுமார் ஏழரை கிலோமீட்டர்.  அன்றைய தினம் கடல் மட்டத்திலிருந்து 12500 அடி உயரத்தினை (குவாரி பாஸ்) அடைந்து மீண்டும் கீழ் நோக்கி இறங்கி 11000 அடி உயரத்திற்கு (தாலி) வந்து சேர்வீர்கள். இந்த நாளில் நடைப்பயணம் மொத்தமாக 9 மணி நேரம் வரை எடுக்கும்.


ஐந்தாம் நாள்:  ஐந்தாம் நாள் அன்று மீண்டும் தாலி என்கிற இடத்திலிருந்து புறப்பட்டால், எட்டரை கிலோமீட்டர் நடந்து நீங்கள் சென்று சேர்கிற இடம் ஔலி (Auli) என்கிற இடத்தினை அடையலாம். அதற்கு சுமார் எட்டு மணி நேரம் ஆகலாம். ஐந்தாம் நாள் சென்று சேரும் இந்த இடம் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்.  பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற இடமும் கூட. இது போன்ற விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருந்தால் இங்கே கூடுதலாக ஒரு நாள் தங்கி பனிச்சறுக்கு விளையாடுகளில் ஈடுபடலாம். அல்லது அங்கே ஒரு நாள் தங்கி ஓய்வெடுக்கலாம்.  


ஆறாம் நாள்: ஔலி (Auli) யிலிருந்து புறப்பட்டால் மாலைக்குள் சாலை வழியாக நீங்கள் வாகனத்தில், மாலைக்குள் ரிஷிகேஷ் வரை வந்து சேரலாம்.  ரிஷிகேஷ் வரையான மொத்த தூரம் சுமார் 270 கிலோ மீட்டர். இந்த தூரத்தினைக் கடக்க சுமார் பத்து மணி நேரம் ஆகலாம்.  அதன் பிறகு ரிஷிகேஷ் நகரில் அன்றைய இரவு தங்கிவிட்டு உங்கள் அடுத்த பயணத்திட்டத்தினை தொடங்கலாம்.  


ஆக ரிஷிகேஷ் நகரிலிருந்து ரிஷிகேஷ் வரை வருவதற்கே ஆறு நாட்கள் தேவைப்படும் என்பதை மனதில் கொண்டு இந்த குவாரி பாஸ் மலையேற்றத்தினை நீங்கள் திட்டமிடலாம்.  முதல் பகுதியில் சொன்னது போல தாங்களாகவே பயணிப்பது கொஞ்சம் கடினம்.  தகுந்த பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் இந்த இடத்திற்குச் செல்வது உத்தமம்.  வாருங்கள் நண்பர் ப்ரேம் பிஷ்ட் அவர்கள் அவரது குவாரி பாஸ் பயணத்தில் எடுத்த சில படங்களை பார்க்கலாம்.  









































இத்தொடரில் அடுத்த வாரம் இங்கே எடுத்த சில காணொளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த வாரம் வரை காத்திருங்கள் நண்பர்களே...

******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


16 கருத்துகள்:

  1. "பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினால் திருக்குறள் படிக்கட்டுமா.." என்று பாடிக்கொண்டே படங்களை ரசித்தேன்.  தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பனிமலை படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி
    தகவல்கள் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பனி படர்ந்த படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளன. பயண விபரங்கள் திகைப்பூட்டுகின்றன. மலையேற்றம் என்பது எவ்வளவு கடினம்... அதிலும், ஒன்பது மணி நேரங்கள் என்பது மிக கடினமாகத்தான் இருந்திருக்கும். இதற்கும் நல்ல மன உறுதி வேண்டும். தங்கள் நண்பர்களுக்கு பாராட்டுக்கள். தாங்கள் தந்த தகவல்களுடன் நானும் பயணித்தேன். அடுத்து காணொளிகளை காணவும் ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. ஜி! என்ன சொல்ல? எனக்கு வார்த்தைகளே வரவில்லை. கிட்டத்தட்ட அரை மணி நேரம் படங்களைப் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்பேன், மகனுக்கும் தங்கை மகளுக்கும் இதைப் பற்றி செய்தி தட்டச்சு செய்து விட்டு மீண்டும் பார்ப்பேன். மீண்டும் அங்கு அடுத்த செய்தி என்று...ரசித்துப் பார்த்தேன். திட்டமிடல்கள் மிகவும் பயனுள்ளவை. போக வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதோ குறித்துக் கொண்டுவிட்டேன். மனதிலேனும் போய் வருவது போல்...

    கடினமான மலயேற்றம் தான். நண்பர் Pபிரேம் Bபிஷ்ட் is blessed!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. படங்களில் பார்த்தேனும் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான். எனக்கும் இது போன்ற இடங்கள் மிகவும் பிடித்தவையே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பார்க்கும் போதே ஜில்லென்று இருக்கிறது. இருவரும் தூரத்தில் நடக்கும் படத்தைப் பார்க்கும் போது அந்தப் படத்தில் எதிரில் இருக்கும் மலை உச்சிகள் ஏதோ அடுத்தாப்ல இருப்பது போல் இவர்கள் நிற்கும் இடமும் அதற்குச் சமமான உச்சி போலத் தோன்றுகிறது.

    ஔலி (Auli) - சுற்றுலாத்தலம் என்பது இங்கு படங்களில் கூடாரங்கள் நிறைய இருக்கின்றனவே அந்த இடமோ ஜி? Auli போகும் வழி பற்றியும் தெரிந்துகொண்டேன். இணையத்தில் பார்த்து. Rope Way இருப்பதும் தெரிகிறது,

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஔலி மிகவும் சிறப்பான சுற்றுலாத் தலம். நிறைய கூடாரங்கள் இருக்கும் இடம் அல்ல. அங்கே நிறைய தங்குமிடங்கள் உண்டு. பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பெயர் பெற்ற இடம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....