வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கதம்பம் - National Handloom day - வேடிக்கை மனிதர்கள் - Grinder


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THERE IS NO GREATER WEALTH IN THIS WORLD THAN PEACE OF MIND.


******


National Handloom day:



நான் இயந்திரவியல் துறை மாணவியாக இருந்த போது பார்க்கும் பொருள் அனைத்திலும் அதன் Top view, Front view, pattern, இந்த போல்ட்டுக்கு இந்த ஸ்பேனர் சரியாக இருக்கும்! என்றெல்லாம் தான் என்  யோசனைகள் இருக்கும்!


அதுபோல எங்கள் வீட்டில் இன்னொரு துறை! Fashion Technology! அம்மா! அப்படியே கொஞ்சம் நேரா நில்லேன்! ஓகே! ஓகே! இது இந்த pattern..! 


இன்று கல்லூரியில் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இணைந்து பலவித துணிகளால் இந்தியா மேப் வடிவத்தை பிரம்மாண்டமாக செய்கிறார்களாம்! அதனால் அதற்கேற்ற Quotes செய்து கொடுத்திருக்கிறாள்! போட்டோ எடுத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.


&*&*&*&**&*&*


வேடிக்கை மனிதர்கள்!


நம்பிக்கை மனிதர்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவை வாசித்திருப்பீர்கள்! உதாரண மனிதர்களாக வாழும் அவர்களைப் போன்றவர்களைப் பார்த்தால் நமக்குள் நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும் என்று எழுதியிருந்தேன்!


இன்று நாம் பார்க்கப் போவது நம்மிடையே பழகிக் கொண்டிருப்பவர்களில் சற்று வித்தியாசமானவர்கள்!


'உன் முதுகில் இருக்கும் அழுக்கை முதலில் பாரு! அப்புறம் மத்தவங்கள பார்க்கலாம்!' என்று சகஜமாக சொல்வதை கேட்டிருக்கலாம்! 


நேற்றைய பொழுதில் காய்கறி வாங்க வாரச்சந்தைக்கு நான் சென்று கொண்டிருக்கும் போது சந்தித்த ஒரு பெண்மணியிடம்,  'நல்லாருக்கீங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு! என்று நான் சொன்னதும் தான் தாமதம், அவரைப் பற்றி நான் எதுவும் கேட்பதற்குள்ளாகவே என்னைப் பற்றிய இற்றை தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்..🙂


நமக்கு தான் எதையும் ஒளித்து மறைத்தெல்லாம் பேசத் தெரியாதே..🙂 நானும் பகிர்ந்து கொண்டேன்! உடனே எனக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்..🙂 


முன்பெல்லாம் பணிக்குச் செல்பவர்கள் தான் ஹோம்மேக்கர்ஸ் எனும் பதவி கொண்டவர்களை ' உங்களுக்கு என்னப்பா! நாள் முழுக்க வீட்டிலேயே இருக்கீங்க! ஜாலி தான்! என்று சொல்லி உள்ளிருக்கும் வேதாளத்தை முருங்க மரத்தில் ஏற்ற வைத்துக்  கொண்டிருப்பார்கள்..🙂


ஒருமுறை நவராத்திரி கொலுவுக்கு எங்கள் வீட்டுக்கு தாம்பூலம் வாங்க வந்த பெண்மணி ஒருவர் கூட  சைகையாலேயே தான் ரொம்ப பிசி என்றும் தாம்பூலத்தை சீக்கிரம் தருமாறும் சொன்னார்..🙂


சரி! நேற்றைய கதைக்கு வருவோம்! 'பாப்பா! காலேஜ் சேர்ந்துட்டாளா! அப்ப ஒண்ணு செய்யுங்க! நாள்முழுக்க வீட்டுல சும்மா தானே இருக்கீங்க! நெட்ல தேடி பாப்பாக்கு படிக்க ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க! நானாவது என் பொண்ண ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வரேன்! நீங்க வீட்டிலேயே தான் இருக்கீங்க! அதனால வாக்கிங்காவது போயிட்டு வாங்க! என்று சொல்லிச் சென்றார் அந்த கரண்டி ஆஃபீசர்..🙂


தன்னைப் போலவே இருக்கும் சகமனிதரின் உணர்வுகளை காயப்படுத்துவதில் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை...🙂 அவரவரின் குடும்பச்சூழலும், சந்தர்ப்பங்களும் வேறு! அதுவும் போக நான் ஒன்றும் வெட்டியாக இல்லை! இத்தனை வருடங்களில் தனித்து தானே எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன்!


சரி! பரவாயில்லை! எல்லாம் நன்மைக்கே! இன்று எனக்கு எழுதுவதற்கு விஷயத்தைத் தந்த அவர்களுக்கு நன்றி தான் நான் சொல்லணும்..🙂


&*&*&*&**&*&*


Grinder:



அன்றாடம் நமக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கதைகள் பல உண்டு! அவை எந்த சந்தர்ப்பத்தில் நம்மோடு பிணைந்து கொண்டது! எப்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக உதவியது என்று வரிசைகட்டி நிற்கும்!


மகள் பிறந்த சமயம் திருவரங்கத்திலிருந்து டெல்லிக்கு கிளம்பும் முன் கிரைண்டர் ஒன்றை வாங்கிக் கொண்டால் ரயிலில் போட்டு எடுத்துச் சென்று விடலாமே! குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கலாம் என்கிற போது பஞ்சு போன்ற இட்லி செய்து கொடுக்கலாமே என்று நினைத்தேன்! நாங்கள் இருவர் தானே அதனால் அதுவரை மிக்சியில் அரைத்து தான் செய்து கொண்டிருந்தேன்!


பொதுவாக கிரைண்டர் தயாரிப்பு  என்றாலே எங்க ஊர் கோவை தான்! Submersible pumps, கோவில்களில் அடிக்கப்படும் எலெக்ட்ரிக்கல் பெல் என்று பல தயாரிப்புகள் இங்கேயிருந்து தான் உருவாகிறது! இதை எழுதும் போது மிகவும் பெருமிதமாக உணர்கிறேன்! 


கிரைண்டர் என்ற ஒன்றை வாங்குவதென்றால் அதை  கோவையிலிருந்து தான் வாங்க வேண்டும் என்று முன்பே நினைத்திருந்தோம்! அதனால் என்  நெருங்கிய தோழியிடம் சொல்லி அதை தயாரிக்கும் இண்டஸ்ட்ரியிலேயே வாங்கி வரச் சொன்னதும் அவரும் எங்களுக்காக வாங்கி காரில் போட்டு திருவரங்கத்துக்கு கொண்டு வந்தார்.


EMI ல் வாங்கும் பொருளை விட சிறுகச்சிறுக காசு சேர்த்து சேமிப்பிலிருந்து வாங்கிய பொருளுக்கு என்றுமே மதிப்பு கூடுதல் தான்! அப்படி பிரசவத்திற்கு பின் என்னிடம் சேர்ந்திருந்த கையிருப்பை எல்லாம் கொடுத்து இந்த கிரைண்டரை வாங்கிக் கொண்டேன்! இப்படித் தான் அது எங்களோடு கலந்தது!


2005ல் டெல்லிக்கு ரயிலில் பயணித்து மகளோடு கிரைண்டரும் இணைந்து தலைநகரில் கால் தடம் பதித்தது! சில வருடங்களுக்குப் பின் நாங்கள் திருவரங்கத்தில் செட்டிலான பின் எனக்கு உதவியாக இருக்குமென்று ஒருமுறை என்னவர் அதை ஒரு Travel bagல் வைத்து எடுத்து வந்திருந்தார்! மீண்டும் பந்தம் தொடர்ந்தது!


18 வருடங்கள் எங்களோடு ஒன்றாக பயணித்து பல பதார்த்தங்களை உருவாக்க ஒத்துழைப்பு கொடுத்த கிரைண்டர் சென்ற வாரம் முதல் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளட்டுமா!! என்று யோசிக்கத் துவங்கி விட்டது! இத்தனை வருடங்களில் இடையில் ஒரே ஒருமுறை ஒயர் மட்டும் மாற்றியிருக்கிறேன்! அவ்வளவே!


பாவம்! எத்தனை வருடங்கள் தான் உழைக்கும்?? இல்லையா! அதனால் வேறு ஒரு புதிய உறுப்பினரை சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன்! உங்கள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் பரிந்துரைக்கு மிக்க நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு
  2. பதில்கள்
    1. நம்மிடையே அடுத்தவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் தானே வலம் வருகிறார்கள் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. ஆதி, National Handloom தினம் கண்டிப்பாகக்கொண்டாடப்பட வேண்டும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவும் வேண்டும் என்று நானும் நினைப்பதுண்டு. நேரிடையாகக் கண்டதுண்டு. நாகர்கோவில் வடசேரியில் கைத்தறி இருக்கிறது இப்போதும் இருக்கு என்று நினைக்கிறேன். அது போன்று நாராயணவனம் எனும் கிராமத்திலும் கைத்தறி நெசவுதான் அங்கும் பார்த்திருக்கிறேன்.

    நல்ல விஷயம் ரோஷினியின் கல்லூரியில் இப்படிச் செய்வது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைத்தறி நெசவாளர்களுக்கு நிச்சயம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அடுத்த வருடம் மாணவர்களை கைத்தறி நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்களாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  4. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு என்னவோ வேலையே இல்லாத மாதிரி பேசுறவங்க உண்டு ஆதி. நாம் அதைக் கடந்து சென்று விட வேண்டியதுதான். ஆனால் பாருங்க மத்தவங்க மனசு பத்தின்றதை விட, நாம இப்படிப் பேசுறது சரியா? என்று யோசிக்கமாட்டாங்க. வாய்க்கு வந்தபடி பேசிடுவாங்க. Evolve ஆகறதில்லை நிறையப் பேர்.

    //சரி! நேற்றைய கதைக்கு வருவோம்! 'பாப்பா! காலேஜ் சேர்ந்துட்டாளா! அப்ப ஒண்ணு செய்யுங்க! நாள்முழுக்க வீட்டுல சும்மா தானே இருக்கீங்க! நெட்ல தேடி பாப்பாக்கு படிக்க ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க! நானாவது என் பொண்ண ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வரேன்! நீங்க வீட்டிலேயே தான் இருக்கீங்க! அதனால வாக்கிங்காவது போயிட்டு வாங்க! என்று சொல்லிச் சென்றார் அந்த கரண்டி ஆஃபீசர்..🙂//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...எப்படி இப்படி எல்லாம் பேச வருகிறதோ? பக்குவமற்ற மனிதர்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பக்குவமற்ற மனிதர்கள் தான். தன்னிடம் இருக்கும் குறைகளை மறைத்துக் கொண்டு அடுத்தவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருப்பார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  5. grinder னாலே கோயம்புத்தூர்தான் எனக்கும் நினைவு வரும். ultra நல்லாருக்கு ஆனா விலை கூடுதல். எது வாங்கினாலும் சின்னதா வாங்கிக்கோங்க ஆதி என்று சொல்வேன் தனிப்பட்ட கருத்து. Prestige, Premier ரெண்டும் இடம் அடைக்காம மோட்டார் அடிலயும் Drum மேலயும் இருக்காப்ல வருது. ரெண்டுமே நல்ல brand தான். ஆனா கோயம்புத்தூர்ல உள்ளூர் தயாரிப்புகள், brand நிறைய கிடைக்குமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்முறை திருச்சி மங்கள் & மங்களில் தான் வாங்கணும். முகநூலிலும் எல்லோரும் பரிந்துரை செய்தது அல்ட்ரா தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு



  6. //எல்லோரும் இணைந்து பலவித துணிகளால் இந்தியா மேப் வடிவத்தை பிரம்மாண்டமாக செய்கிறார்களாம்! அதனால் அதற்கேற்ற Quotes செய்து கொடுத்திருக்கிறாள்! போட்டோ எடுத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.//

    ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்.

    நீடித்து உழைக்கும் Ultra Grinder. தான் சொல்வேன்.
    கோவையில் 1978 ல் வாங்கிய சுஜாதா கிரைண்டர் குளழி தூக்க முடியவில்லை என்று 2007ல் வாட்ச்மேனுக்கு கொடுத்தேன் அப்புறம் Ultra Grinder. தான் அதுவும் சின்னதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரின் பரிந்துரையும் அல்ட்ராவாக தான் இருக்கிறது! கூடிய சீக்கிரம் வாங்கி விட்டு பகிர்ந்து கொள்கிறேன்

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கோமதிம்மா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. //நாள்முழுக்க வீட்டுல சும்மா தானே இருக்கீங்க! // - இதை எப்படி இன்னொரு பெண்ணால் சொல்ல முடிகிறது? நான் ஆரம்பகாலத்தில் (திருமணத்துக்குப் பின் 10-15 வருடங்கள்) அப்படித்தான் நினைத்திருந்தேன், அதாவது சமையல் போன்றவை செய்தபிறகு ரெஸ்ட் எடுக்க டிவி பார்க்க அவங்களுக்கு நேரம் கிடைக்கும்னு. பிறகுதான் அனுபவத்துல தெரிந்துகொண்டேன், வீட்டுப் பெண்மணியாக இருப்பது என்பது எவ்வளவு வேலைகள் செய்யவேண்டிய பொறுப்பு என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லத்தரசியாக இருக்கும் பெண்களைக் குறித்தான தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன் சார். இப்படி எல்லோரும் நினைத்து விட்டால் நன்றாகத் தான் இருக்கும்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  9. 2000 ஆம் ஆண்டில் நான் வைத்திருந்த பெரிய கிரைண்டரைக் கொடுத்துவிட்டு அல்ட்ரா வாங்கினோம். பெரிய கிரைண்டரைக் கொடுத்த காரணம். அது வாங்கும்போது எண்பதுகளில் கூட்டுக் குடித்தனம், அதில் அரைக்கும் மாவே இரண்டு நாட்களுக்கு மேல் வராது. பின்னாட்களில் பெண்ணும் கல்யாணம் ஆகிப் போய்ப் பையரும் பரோடாவில் எல் அன்ட் டியில் வேலை செய்யத் தொடங்கியதும் குடும்பம் குறுகிவிட்டது. அதோடு அப்போ சொந்த வீட்டில் தரைத்தளத்தில் டைல்ஸ் பதிச்சிருந்தோம். கிரைண்டர் குழவியைத் தூக்க முடியாமல் கீழே போட்டுவிடுவேன், தரை வீணாகிடும் என நம்ம ரங்க்ஸுக்கு எண்ணம். ஆகவே அவசரம் அவசரமாக அல்ட்ராவை வாங்கக் கூட்டிச் சென்றார். அதிலும் நான் பெரிது எடுக்கவில்லை. சின்னதே எடுத்துக் கொண்டேன். மாவு அரைக்க முடியாமல் சிரமப் படப் போகிறாய் என்று ஒரே கேலி எல்லோரும். ஆனாலும் இத்தனை வருடங்களாக அது என்னுடன் ஈடு கொடுத்துக் கொண்டு எத்தனை பேர் வந்தாலும் அரைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கு. அதற்கு வெள்ளி விழா கொண்டாட வேண்டும். அதே போலத் தான் தொலைக்காட்சிப் பெட்டியும். ஃபிலிப்ஸ் கம்பெனித் தொலைக்காட்சிப் பெட்டி. அதுவும் 2000 ஆம் ஆண்டில் வாங்கியது தான். நன்றாகவே இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கிரைண்டர் குறித்த அனுபவங்கள் அருமை மாமி. நானும் இப்போது அல்ட்ரா தான் வாங்கியிருக்கிறேன். ஆனாலும் என் பழைய கிரைண்டரில் இருந்த செளகரியங்கள் இதில் இல்லை என்றே தோன்றுகிறது!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

      நீக்கு
  10. வேடிக்கை மனிதர்கள் .... பலவிதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  11. ரொம்ப நாட்கள் பதிவே எழுதாமலிருப்பது புதுசாக இருக்கிறது. இவ்வளவு இடைவெளி இந்த ப்ளாக்ஸ்பாட்டில் வந்ததில்லையே....

    2013க்கு முற்பட்டவைகளில் மனதைக் கவர்ந்தவையை மீள் பதிவாக்கலாம்.

    நலம்தானே, வீட்டில் அனைவரும்? பெரியோர்கள் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். நீண்ட இடைவெளியாகி விட்டது! வீட்டில் பெரியவர்கள் உள்பட எல்லோரும் நலம். அலுவலக ஆணிகளும், சற்றே சுணக்கமும் தான் நீண்ட விடுப்புக்கான காரணங்கள்..:)

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....