வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – வெண் பாலை – எங்கெங்கும் உப்புஇரு மாநில பயணம் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஆதவனின் மறைவு....
வெண் பாலையில்....

மதிய உணவு முடித்து சற்றே ஓய்வெடுத்த பிறகு, மாலை தேநீர் சுடச்சுடக் குடித்து, தங்குமிடத்திலிருந்து புறப்பட்டோம். மாலை நேரத்தில் வெண்பாலையில் சூரியன் மறையும் காட்சி பார்க்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.  வெண் பாலை என ஏன் அழைக்கிறார்கள் – இந்தப் பகுதி முழுவதுமே மண்ணே உப்பு தான் – வெள்ளை வெள்ளையாக பூத்துக் கிடக்கும். பகுதி முழுவதுமே உப்பு சதுப்பு நிலங்கள்! பொதுவாக மணல் சதுப்பு நிலங்களைத் தான் நாம் பார்த்திருப்போம். இங்கே இருப்பவை உப்பு சதுப்பு நிலங்கள். இந்த இடத்தில் தான் வருடா வருடம் ரண் உத்சவ் கொண்டாடுவார்கள். அதைப்பற்றி படித்திருக்கிறோமே தவிர நேரில் பார்த்ததில்லை.டபுள் டெக்கர் பேருந்தில் பயணம்....

வெண் பாலையில்....
கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்....

வெண் பாலையில்....
சதுப்பு நிலத்தில் நடக்கும் பயணிகள்....

வெண் பாலையில்....

செல்ஃபி புள்ளைகள்....
வெண் பாலையில்....
நான் ரெடி... நீங்க?

வெண் பாலையில்....


தேநீரைச் சுவைத்த பிறகு புறப்பட்டு வெண்பாலை நோக்கிச் சென்ற எங்களுக்கு வழியிலிருந்த மற்ற தங்குமிடங்கள், Bபூங்கா வீடுகளைப் பார்த்தபடிச் செல்வது பிடித்திருந்தது. அந்த வருடத்தின் ரண் உத்சவ் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. திருவிழா நடக்குமிடத்தினைக் கடந்தபோது வாகனத்தினை நிறுத்தி உள்ளே செல்லலாம் என விசாரித்தோம் – இன்னும் ஆரம்பிக்கவில்லை, இன்னும் சில நாட்கள் கழித்து தான் திறப்பு விழா எனச் சொல்ல, அங்கிருந்து புறப்பட்டோம்.  வழியில் ஒரு வாகனம் – லண்டன் டபுள் டெக்கர் பஸ் மாதிரி அழகான வாகனத்தில் அமர்ந்தபடி சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்க்கலாம் – White Rann Resort நிறுவனத்தினரின் பேருந்தில் பயணிகளை அழைத்து வந்திருந்தார்கள்.


அதோ... அந்தப் பக்கம் தான் பாகிஸ்தானா?

வெண் பாலையில்....
உப்பு சதுப்பு நிலம்....

வெண் பாலையில்....

ஆதவனின் மறைவு....

வெண் பாலையில்....
ஆதவனின் மறைவு....
வெண் பாலையில்....


ஆதவனின் மறைவு....
வெண் பாலையில்....

வெண்பாலை சமீபம் வரைதான் வாகனத்தில் செல்ல முடியும். பிறகு நீண்ட பாதையில் நடை அல்லது குதிரை வாகன சவாரி, ஒட்டக வாகன சவாரி என வசதிகள் உண்டு. நாங்கள் மெதுவாக நடந்தபடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே செல்ல முடிவு செய்தோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த மாதிரி வாகனங்களை வைத்திருந்தவர்கள் அதிக அளவில் இருந்தார்கள். நடப்பவர்களை கொஞ்சம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாகன நிறுத்தத்திலிருந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். நாங்கள் வழியில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு ஒரு குதிரை வாகன ஓட்டி, பரிதாபமாக எங்களைக் கேட்டுக்கொண்டே இருக்க, சரி கொஞ்சம் குதிரை வாகன சவாரி செய்ய முடிவு செய்தோம்.


ஆதவனின் மறைவு....
வெண் பாலையில்....சூரிய அஸ்தமனத்தினை ரசிக்கும் ஒரு குடும்பம்...
வெண் பாலையில்....வாட்ச் டவர்....
வெண் பாலையில்....ஒட்டக வாகனங்கள் வரிசை...
வெண் பாலையில்....நான் வந்தாச்சு..... என்று சொன்ன நிலா
வெண் பாலையில்....


ஒட்டக வாகனத்தில் சவாரி செய்வதை விட குதிரை வாகனத்தில் சவாரி செய்வது கடினமாக இருந்தது! பின்புறம் சாய்ந்து இருக்க, எப்போது உருண்டு கீழே விழுவோமோ என்ற எண்ணம் வந்தது.  ஆனாலும் அதுவும் ஒரு த்ரில் தானே.  சாலையின் கடைசியில் அமைத்திருக்கும் வாட்ச் டவர் பகுதி வரை அழைத்துச் சென்று விட்டார் அந்த வாகன ஓட்டி. அங்கே எங்களைப் போலவே வந்திருந்த பல சுற்றுலாப் பயணிகளும் வெண்பாலையை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.  எங்கே பார்த்தாலும் வெண் பாலை – இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான உப்பு மூட்டைகளைப் பிரித்துக் கொட்டியது போல இருந்தது. அந்த வெண் பாலையில் ஒரு பக்கம் ஆதவன் மறைவு என்றால் மற்ற பக்கத்தில் சந்திரன் உதயம். பார்க்கவே அற்புதமாக இருந்தது அந்தக் காட்சி.


விடுதிகளிலிருந்து வெண்பாலை நோக்கி....
வெண் பாலையில்....வாங்க போகலாம்....
வெண் பாலையில்....குதிரை வாகனங்களின் வரிசை....
வெண் பாலையில்....நாங்க நடந்து தான் போவோம்....
வெண் பாலையில்....ஆதவனின் மறைவு....
வெண் பாலையில்....


வாட்ச் டவர் மீது ஏறி நின்று பார்க்க எங்கெங்கும் உப்பு மயம். வெண் பாலையை ரசித்தபடியே இருந்த பிறகு கீழே இறங்கி வந்தோம்.  அங்கே ஒரு மேடை அமைத்திருக்க, அதில் குஜராத்தின் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் அமர்ந்து இசை விருந்து தர அங்கே நின்று அவர்களது இசையில் லயித்திருந்தோம். சுற்றுலாப் பயணிகள் சிலரும் அவர்களது இசைக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் கவனித்தபடி காவல்துறையினர் தங்களது கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள்.  நீண்ட நேரம் அந்தக் காட்சிகளைப் பார்த்து ரசித்த பிறகும் வெண் பாலையிலிருந்து விலக மனமில்லை. இருட்ட ஆரம்பித்து விட்டது. தங்குமிடம் திரும்பலாம் என மீண்டும் குதிரை வாகனத்தில் சவாரி!


ஒட்டகம், குதிரை மட்டுமல்ல, நானும் இருக்கேன்.
வெண் பாலையில்....இசைக்கலைஞர்...
வெண் பாலையில்....


எங்களுக்காக ஓட்டுனர் முகேஷ் காத்திருக்க தங்குமிடத்தினை நோக்கி பயணித்தோம். தங்குமிடத்தில் பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  வெண்பாலை படங்கள், அந்தியில் மறையும் ஆதவன், உதிக்கும் நிலா படங்கள் அனைத்தும் மிக அழகு. குதிரை ஒட்டகங்களின் அணிவகுப்பும் அருமை. "நானும் இருக்கேன்" என்ற பறவையும் அமைதியாய் படமெடுப்பதற்கு ஒத்துழைத்திருக்கிறது.நாங்களும் உங்கள் பயணத்தோடு வெண்பாலையை அழகாய் ரசிக்க முடிந்தது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 4. வெண்பாலை போகலை. படங்கள் அருமை! போகாமல் விட்டுட்டோமேனு இருக்கு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போகாமல் விட்டுட்டோமேன்னு - முடிந்தால் போயிட்டு வாங்க....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 5. மிகவும் அழ்கான படங்கள். அழகான இடம் பார்க்க வேண்டிய இடம். உங்கள் வழி பார்த்துவிட்டென்!!!

  கீதா: வெங்கட்ஜி செமை படங்கள்!!! அதுவும் சூரியன் மறையும் அந்தப் படம் லைட் ரிஃப்ளெக்ஷன் கீழ அந்தச் சதுப்பு நிலத்தில்..செமையா இருக்கு...அத்தனை படங்களும் அழகோ அழகு. தூரத்தில் கடல் தெரிவது போல் இருக்கே...தெற்குப்பகுதியோ அல்லது தென்மேற்குப் பகுதி? அரபிக் கடல்.. உப்பளம் இல்லையோ ஜி? தண்ணீர் ஆங்காங்கே தெரிவது போல் உள்ளதே...ஹைடைட் அரபிக் கடல் தண்ணீர் வந்து சென்ற நேரமாக இருக்கும் போல ....அழகான இடம்...அழகாய் இருக்கு ஜி. இதனை நேரில் பார்க்கணும் போல ரொம்பவே ஆசை எழுகிறது..மிக்க நன்றி ஜி படங்கள் பகிர்ந்தமைக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடல் இல்லை. அத்தனையும் வெண்பாலை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 6. மிக அழகான படங்கள். படங்களொடு லேபலும்
  வெண்பாலையாக ஒட்டி வருவது அழகு. தண்ணீர்,கடல், பாலைக் கடல்,
  சூரிய சந்திர வடிவங்கள் அனைத்துமே அற்புதம். மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. முகப்புத்தகத்தில் வந்த கருத்துரை:

  Amit Joshi

  Kutch dekh liya to sab kuchh dekh liya !

  பதிலளிநீக்கு
 9. முகப்புத்தகத்தில் வந்த கருத்துரை:

  Subbu Subbu

  Marvelous view a birds eye view with illustration. Thanks very much👍👍
  Manage

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சுப்பு அண்ணாச்சி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....