வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா

சத்ரபதி ஷிவாஜி அவர்களின் பிறந்த நாள் இந்த முறை பல இடங்களில் கொண்டாடப்பட்டது – ஃபிப்ரவரி 19-ஆம் தேதி தலைநகரிலும் ஷிவ் ஜெயந்தி 2018 என்ற பெயரில் திருவிழா நடக்கப்போவது பற்றி 18-ஆம் தேதி தான் தெரிந்தது. 18-ஆம் தேதி வேறு ஒரு விழாவிற்குச் சென்றபோது தான் விழா பற்றிய பதாகை பார்த்தேன். நான் 18-ஆம் தேதி சென்ற போது கோல்ஹாபூர் [மஹாராஷ்ட்ரா]விலிருந்து வந்திருந்த இளைஞர்கள் டோல் எனப்படும் கருவியை இசைத்தபடி வீர முழக்கங்கள் எழுப்புவதைப் பார்த்தபோது அடுத்த நாள் மாலை விழாவிற்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன் – நாம் முடிவு எடுத்துவிட்டால் போதுமா? அடுத்த நாள் பார்க்க முடிந்ததா?


அடுத்த நாள் மாலை அலுவலகத்திற்குச் செல்லும்போதே கேமரா பையையும் எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டேன். மாலை கொஞ்சம் சீக்கிரமாக [ஆறு மணிக்கு] புறப்பட்டு, நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றபோது மாலை ஆறரை மணி! சாலையெங்கும் பலத்த பாதுகாப்பு! எப்போதும் செல்லும் நுழைவு வாயில் அருகே சாலையைக் கடக்க, ஒரே விசில் சப்தம் ”இப்படிப் போகக் கூடாது – அடுத்த நுழைவாயில் வழியே வாருங்கள்” எனச் சொல்ல, அடுத்த நுழைவாயிலை அடைந்தோம். வாசலில் பெரியதோர் சிவாஜியின் சிலை வைத்திருக்க புகைப்படம் எடுத்துக் கொண்டோம்!விழா நடக்கும் பகுதிக்குச் சென்றால் X-Ray Machine – கேமரா பையை வைக்க, ”பையில் என்ன இருக்கிறது?” என்றார் அக்கருவியை இயக்குபவர். கேமரா என்று சொன்னவுடன், ”இதற்கு அனுமதி கிடையாது” என்று சொன்னார். குடியரசுத் தலைவர் வந்திருப்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள்! ஆனால் அங்கே கேமராவைப் பாதுகாப்பாக வைக்க வசதிகள் இல்லை! வேறு வழியில்லை. நிகழ்ச்சியை பார்க்கவும் முடியாது! சிறிது நேரம் வெளியே நின்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  நல்ல வேளையாக முதல் நாள் சென்றபோது கோல்ஹாபூரிலிருந்து வந்திருந்த இளைஞர்கள் பயிற்சி செய்ததை புகைப்படமாகவும், காணொளிகளாகவும் எடுத்திருந்தேன். 
அத்தனை பெரிய டோல், அதனை இடுப்பில் தடிமனான கயிறு மூலம் நான்கைந்து சுற்று சுற்றி கட்டி வைத்துக் கொண்டு டோல் வாசிப்பது மட்டுமல்லாது, நடுநடுவே சுற்றிச் சுற்றியும், டோலை மேலே தூக்கியும் ஆடுவது ரொம்பவே கடினமான விஷயம். ஆண்கள், பெண்கள் என இருவருமே அந்த குழுவில் இருந்தார்கள். ஒரு சிறுவன் கூட நம் ஊர் தாரை-தப்பட்டை போன்ற வாத்தியத்தினை வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. முழு நிகழ்வினையும் பார்க்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாதுகாப்பு காரணமாக கேமராவுடன் உள்ளே அனுமதிக்கவில்லை! சரி பரவாயில்லை. அவர்கள் பயிற்சி செய்ததை எடுத்து வைத்திருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.பயிற்சியின் போது அவர்களின் துடிப்பும், டோலை உபயோகித்த விதமும், நடுநடுவே எழுப்பிய “ஜெய் ஷிவாஜி, ஜெய் பவானி” கோஷங்களும் நம்மையும் சிலிர்க்க வைத்தது. வாருங்கள் புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்க்கலாம்….
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ரசித்தீர்களா? உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

 1. வாசிப்பவர்களின் உற்சாகம் படங்களில் தெரிகிறது. சிவாஜி பிறந்த நாளை இவ்வளவு உற்சாகமாகி கொண்டாடுவார்களா? அட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மஹாராஷ்ட்ராவில் இன்னும் உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். யூட்யூபில் நிறைய காணொளிகள் உண்டு. நேரம் இருந்தால் பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஒவ்வொருவர் முகங்களிலும் எத்துணை ஆனந்தம்
  படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனந்தமும் உற்சாகமும் கொப்பளிக்க அவர்கள் நடனம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்துவதில்
  நானும் மகிழ்ச்சி அடைகின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. சிறுவனின் புகைப்படம் - எனக்கும் பிடித்தது - நேராக எடுக்க முடியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  மாவீரன் சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அருமை. அதை படங்கள் மூலமாகவும், காணொளி மூலமாகவும் தாங்கள் பகிர்ந்துள்ளதை மிகவும் ரசித்தேன். தங்களி்ன் படமெடுத்து பதிவிடும் திறமை காரணமாக எங்களாலும் இத்தகைய நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்....

   நீக்கு
 9. படங்கள் அத்தனையும் அருமை வெங்கட்ஜி! சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை இப்படிக் கொண்டாடுவது பற்றி அறிவது இப்போதுதான் அட போட வைத்தது.
  படத்திலேயே அவர்களின் உற்சாகத்தைக் காண முடிகிறது.

  கீதா: ஜி அக்கருத்துடன் காணொளி கொஞ்சம் மெதுவாகத்தான் வருகிறது. இன்னும் பார்த்து முடிக்கவில்லை...பார்த்தவரையிலேயே அவர்களின் உற்சாகம் தெரிகிறது...ரொம்ப நன்றாக வாசிக்கிறார்கள்...முழு நிகழ்வையும் பார்க்க முடியாமல் போனது வருத்தம்தான்..வேறொனுமில்லை எங்களுக்கும் சொல்லிருப்பீங்க அது இல்லாமல் போனதேனுதான்....என்றாலும் இத்தனையும் அழகாகத் தொகுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்வது தான் சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 10. மிக அருமையான படப் பகிர்வு. நேரில் பார்க்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மக்களின் உற்சாகம் நன்கு தெரிகிறது. காணொளிகள் நாளை பார்க்கணும். இப்போக் கணினியை மூடும் நேரம் தாண்டி விட்டது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகளை முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....