ஞாயிறு, 11 அக்டோபர், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எண்பத்தி ஒன்பது - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


********


 


கிரீடம் கனமா இருக்காடா செல்லம்? எடுத்துட்டுமா?

வேணாம்பா. இந்த பைய மட்டும் தூக்கிக்கோ போதும் (கன்னா பின்னான்னு எல்லா விளையாட்டு சாமானையும் உள்ள தூக்கிப் போட்டுட்டோமோ.... இந்த கனம் கனக்குது!😕)

ஓம் விகடாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

********


எல்லாம் வெச்சாச்சு இந்த லட்டுவ எங்க வைக்கலாம்? ம்ம்ம்ம்?

எங்கிட்ட 🐭வேணா குடு கணேசா. பத்திரமா வெச்சுக்கறேன்...

நீதான?? அதுக்கு நான் என் வாயிலயே பத்திரமா வெச்சுப்பேன்...

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

*********


ஐ இதை கீழ விரிச்சா சிவப்பு கம்பளம் மாதிரி சூப்பர் ஆ இருக்கும்.. எடுத்துக்கலாம்...

கணேசா அது உங்கம்மாவோட புதுப் புடவை, தொடாத, பக்கத்துல விளக்கு வேற இருக்கு, ஏதாவது ஆச்சுன்னா நான் தீர்ந்தேன்... எங்கிட்டதான் குடுத்து பத்திரமா வெக்கச் சொன்னா....

ஓம் ஹேரம்பாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

**********


என்ன கணேசா மோதகத்துக்கு நமஸ்காரமெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்ட...

ச்சும்மா இரும்மா. சாப்பிடறதுக்கு முன்னால warmup. இதுபேரு Balasana...

அட பரவாயில்லையே... சமத்து🥰 அதுக்காக மோதகத்த வெளுத்து வாங்கக்கூடாது... பாத்துக்கோ செல்லம்....

ஓம் ஏகதந்தாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

********


என்ன சிம்மா, அலை அலையா பிடரி முடி, பச்சை கலர் சால்வை, நெத்தில காலணா அளவுக்குப் பொட்டு... ச்சும்மா கலக்கற? 

(மீசைக்கு எண்ணெய் போட்டதோட dye யும் போட்டிருந்தா இன்னும் பக்காவா இருந்திருக்கும்..🙂).

கொஞ்சம் சும்மா இரு நந்தி bro, தேவி, கணேசனுக்கு makeup பண்ணி பொட்டு வைக்கும்போது

பக்கத்துல நின்னுக்கிட்டிருந்தேனா? 

அவன் பண்ணின வேலை... மூக்கு நுனிலயும் ஈஷி விட்டிருக்கான்.. சே இனிமே கொஞ்சம் distance maintain பண்ணணும். என்னது மீசைக்கு dye ஆ? ஆனாலும் உனக்கு குசும்பு ஜாஸ்தி....

(🐂சத்தமாவா நினைச்சோம்???🙄)

ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻

*******


அம்மா என்னைத் தூக்கிக்கறயா? என்னை ஒண்ணா bed ல போடு இல்ல தரைல விரிப்பு விரிச்சு போடு. இந்த கூடை பிசினஸெல்லாம் வேணாம்... (பொறந்த போது வந்ததெல்லாம் போதும்)... இதுல இல தழையெல்லாம் வேற.. ஹ்ம்ம்.... சே எட்டி இந்த வெண்ணையக் கூட எடுக்க முடியல....

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻

********


என்ன நந்தி bro முகம் மட்டும் உன்னை மாதிரி இருக்கு. உடம்பெல்லாம் பார்த்தா தேவி வாகனம் மாதிரி இருக்க? ரொம்ப வரி போட்டு tax பண்ணிட்டாங்களா... பாவமே...

நீ வேற மயில் bro, 

நந்தி பாதி மிருகம்(புலி) பாதி கலந்து செய்த கலவை நான்.. ரெண்டு பேருக்கும் நான் common வாகனம் (ஹ்ம்ம்ம் overtime கேட்டா மட்டும் குடுக்க மாட்டேங்கராங்க... Daily பேட்டாவையாவது ஜாஸ்தி பண்ணலாமில்ல..)

ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻

********

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

11-10-2026

1 கருத்து:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....