அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
ஐ அத்தனையும் எனக்கே எனக்கா கிருஷ்ணா?thanks..
இல்ல கணேசா, ஃபோட்டோக்கு pose குடுக்க மட்டும்தான்... எல்லார்க்கும் கொடுத்துட்டுத் தான் சாப்பிடணும். நான் வெண்ணை, லஸ்ஸியை யெல்லாம் அப்படித்தான் செய்வேன்..... ok?
(நம்மள 🐀 சேத்துக்குவாங்களா இவங்க கூட்டணில???)
ஓம் விக்ன விநாயகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு... மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு...🕺
(ஆடற ஆட்டத்துல சறுக்கி குளத்துல நீ land ஆனா அம்மாட்ட பாட்டும் உண்டு....)
என்ன மூஞ்சூறு bro?
ஒரு கைல லட்டு இன்னொரு கைல குடை வாய்ல பாட்டு கால்ல தாளம்... அடி தூள்..னு சொன்னேன் கணேசா... நீ போடற ஆட்டத்துல எனக்கு shower குளியல் bonus...🥶 .
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*********
ஒரு மணி நேரமாச்சு இன்னும் தன் அழகை ரசிச்சு முடியல... ஹ்ம்ம் இனி எப்ப கிளம்பி பூஜைக்குப் போயி எப்ப பிரசாதமெல்லாம் ஒரு கை பாக்கறது! நானும்தான் மூக்கும் முழியுமா அழகா 🐭 இருக்கேன்.. அதுவும் அந்தப் 😬 பல்வரிசை! அதுக்காக இப்படியா நிக்கறேன் மணிக்கணக்கா கண்ணாடி முன்னாடி...😕
ஓம் வக்ரதுண்டாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
ஏன் முருகா, அம்மா நம்மளப் பாத்துக்கிட்டிருக்காங்க..
அப்பா யாருக்கோ Hi சொல்றாரே யாருக்கா இருக்கும்?
யாரோ அப்பாவோட friend ஆ இருக்கும்... அது உனக்கு இப்ப ரொம்ப முக்கியமா? Scenery ஐ ரசி.... ஆஹா... இங்கிருந்து பூமி எவ்வளவு அழகா தெரியுது பாரு....
ஓம் சுமுகாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
என்னது தும்பிக்கையோட லட்டு ஒட்டிக்கிச்சு??? பாகு ஜாஸ்தியா.... இல்ல முறுகிடுச்சா... சீக்கிரம் photo எடுத்துத் தொலைடா... அம்மா....அம்மா....
வரேன்...லட்டு பிடிச்சு அது ஆற்ரதுக்குள்ள அவசரப்பட்டா இப்படித்தான்...
ஓம் விகடாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
மோதகத்த நேரடியா எடுத்துக்க வேண்டியதுதான கணேசா இப்படி மூக்க காதயெல்லாம் சுத்தித் தொடணுமா...
இது stretching excise மா அதை பண்ணிக்கிட்டே மோதகத்த எடுத்துக்கறது... Two in one... எப்படி??
(ஆக மொத்தம் மோதகம்தான் தான் Target... ஹ்ம்ம்)... பாத்து கணேசா, எங்கயாவது புடிச்சுக்கப் போவுது... அப்புறம் நான்தான் move தடவி விடணும்..
ஓம் வக்ரதுண்டாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
***********
கணேசா போதும் எழுந்திரு நேரமாச்சு, அங்க அரிசி வெல்லம் எல்லாம் கிடைக்கும்...
தேவி நான் 🐀வேணா இந்தப் பூவை ஒவ்வொண்ணா எடுத்து பைல போட்டுமா? ஹெல்புக்கு என் brother ம் வந்திருக்கான்...
தேவையில்ல கொஞ்சம் கம்முனு இரு...(இவன் வேற நடுவுல....)
ஓம் லம்போதராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
04-10-2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....