ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பத்தி ஒன்று - விஜி வெங்கடேஷ்

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட புரிதல் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



ரோஜா செடியே இல்லாத இடத்துல எனக்குன்னு கஷ்டப்பட்டு எங்கேர்ந்தோ தேடி பறிச்சுடுட்டு வந்திருக்கீங்களே நாதா! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல🙏🏻


ரொம்ப உருகாத தேவி, வழில market ல papermesh ரோஜா வித்துக்கிட்டுருந்தான். அழகா இருந்துதுன்னு வாங்கிண்டு வந்தேன் உனக்காக.  இந்தா.


*******



என்னது! இவர் height டுக்கு match ஆ நான் இருக்கணும்னா ஸ்டூல் ல தான் ஏறி நிக்கணும் போல இருக்கே! Complan ரொம்ப குடிக்காதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா நாதா?


*******



நேத்து சிவராத்திரிக்கு  நாலு கால அபிஷேகம் அமர்க்களமா கெடச்ச சந்தோஷத்துல  இருக்கார். இனிமே எனக்கு வீட்டுலயும் 4 தடவை விஸ்தாரமா அபிஷேகம் நடக்கணும்னு சொல்லாம இருக்கணும் பகவானே. இப்போ summer, தண்ணி கஷ்டம் வேற....


அதப் பத்தி நீ ஏன் கவலப் படற தேவி, கங்கை இருக்காளே!


ஓ அதான் இத்தனை சந்தோஷமா? ok ok..


*******



தூக்கம் கண்ணை சுத்துது. ஆனா ராதாக்காக கஷ்டப்பட்டு பறிச்சுகிட்டு வந்த பூ கீழயும் விழக் கூடாது. பூக்கூடையும் கொண்டு வரல.

காத்திருக்கிறது எவ்ளோ கஷ்டம்!


*******



இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்துதான் சிந்து பாடும்....


ஏதோ இந்த அந்தமான் தீவு பத்தி கிருஷ்ணா வாசிக்கிறார் போல இருக்கு.


அசடு! நம்மள பத்தித்தான். சந்துல சிந்து பாடுவ இல்ல நீ?


*******



வில்லைக் கொஞ்சம் தள்ளி பிடிங்க பிரபு. கண்ணுல உரசுது. அப்புறம் வேற எங்கயாவது இறக்கிடப் போறேன் உங்களை🙏🏻


கவலப் படாத ஆஞ்சநேயா கூகிள் மேப் எதுக்கு இருக்கு?


*******



சங்கீத நுணுக்கங்கள் பத்தி ராதாகிட்ட பேசும்போதெல்லாம் இதே நிலமைதான். இனிமே சினிமா சீரியல் பத்தி பேசக் கத்துக்கணும்...


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

17 ஆகஸ்ட் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....