அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
நல்ல வேளை தயிரை இந்த பாத்திரத்தில போட்டு எடுத்துண்டு வந்ததால சௌரியமா போச்சு மழைக்கு.....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
அதிகமா மலராத ஆனா பெரிய தாமரையா வேணும்னு தேவி கேட்டிருக்கா. எதக் கொண்டு போனாலும் அது இல்லம்பா. இந்த ரிஷிட்ட வேணா கேட்கலாமா? அவருக்கு இந்த ச(மா)ம்சாரத்துல experience இருக்குமான்னு தெரியலயே.... ஒருவேளை இந்தமாதிரி சங்கடங்களை தவிர்க்கத்தான் இப்படி ஏகாந்தமா வந்து உக்காந்திருக்காரோ,
தெரியல.....
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏம்மா நீ பியூட்டிசியன் course பண்ணிட்டு practice பண்ண நான்தான் கிடைச்சேனா? என்
அழகான சுருட்ட முடிய straighten பண்ணி அதுல இத்தன brylCreem வேற அப்பி வச்சிருக்க! என்ன யாருக்குமே அடையாளம் தெரியப் போறதில்ல... இந்த கண்றாவிக்கு என்ன smile பண்ணச் சொல்லி photo வேற! ரொம்ப அவசியம்! படுத்தறமா....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன கிருஷ்ணா? Flute க்கு பதிலா ஏதோ கரண்டிய எடுத்துண்டு வர? வல்லவனுக்கு கரண்டியும் குழலா?? பலே..
கொஞ்சம் சும்மா இரும்மா.கைல கிடச்சத கொண்டு வந்துட்டேன். அதை மறைக்க என் white டிரஸ், சிரிப்பு, நடை, வலது கால் ஆறு விரல் இதிலெல்லாம் பாக்கறவங்க கவனத்த கொண்டு வரணும்னு முயற்சி பண்றேன்.... நீ வேற...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ராதா உன் காதைக் காமி...
ஏன் கிருஷ்ணா? அதுல பூ சுத்தப் போறியா? அது கை வந்த கலையாச்சே உனக்கு?
சே சே, அதுக்குப் பின்னாடி அழகா சொருகி வெச்சுவிடலாம்னுதான். எகத்தாளம் ஜாஸ்தி தான் ராதா உனக்கு....
சங்கம் சரணம் கச்சாமி....
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻
*******
ஏற்கனவே மை ஒரு கோட் அடிச்சாச்சு, திரும்ப எதுக்குமா? தூங்கத்தான போறேன்? சியாமள வர்ணன்னு கொஞ்சுவ? தனியா மை எதுக்கு?
இது வேற கிருஷ்ணா. கன்னத்துக்கு. என் செல்லத்துக்கு திருஷ்டி விழக் கூடாதில்ல???
ஆமாமா... நல்லா தீத்தி விடு..... (நான் எழுந்து ஓடவா முடியும், ஹ்ம்ம்..)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
முன்னாடி நான் உனக்குக் குடுத்த முத்து மாலையை நீ பின்னாடி கேசத்தில் சுத்தியிருக்கறத
பின்னாடி இருக்கறவங்க பாக்க வேண்டாம் சுதாமா....
புரிஞ்சுது கிருஷ்ணா அப்பிடியே பின்னாடி backstep வெச்சு போகணும் அவ்வளவுதான?? Done. பின்னாடி அவங்களுக்கு தெரிய வந்துதுன்னா?
அதை பின்னாடி பாத்துக்கலாம்.....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
31 ஆகஸ்ட் 2025
வாசகம் ரொம்ப உண்மை.
பதிலளிநீக்குமுதல்படத்தைப் பார்த்ததும் ஆழி மழைக்கண்ணா என்று சொலல்த் தோன்றியது!
வரி பார்த்துச் சிரித்துவிட்டேன்.
ரிஷிகளுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் உண்டுங்க!!!!!! ஹாஹாஹா
என்ன அலங்காரம் பண்ணினாலும் குறும்பு கொப்பளிக்கும் கண்கள் காட்டிக் கொடுத்துவிடுமே!!!!!
என்ன நீங்க எப்பவும் ஃப்ளூட் வைச்சுட்டுருந்தா அப்புறம் உயரத்துல உரில தொங்கற வெண்ணைய எப்படி எடுக்கறதாம்?
வழக்கம் போல காதுல பூ சுத்தப்போறன்னு நினைச்சேன் தலைல வைக்கறியே அப்ப ஏதோ உள் சமாச்சாரம் ஐஸ்னு தெரியுது!!
கீதா
படங்கள் சிறப்பு ; வரிகள் சிரிப்பு.
பதிலளிநீக்குநன்றாக அனுபவித்து ரசித்து எழுதி இருக்கிறார் VV.
முதல் படத்துக்கான என் வரிகள்..
பதிலளிநீக்கு" அட.. சீக்கிரம் போட்டோ எடுங்கப்பா.. மழைத்தண்ணி மார்பு வரை வந்துடுச்சு..."
இரண்டாவது படத்துக்கு
"(அ) சட்டசபை தேர்தல்லயாவது ஒரு சீட்டாவது ஜெயிக்குமா?
(ஆ) தாமரைல எனக்கொரு இடம் கிடைக்குமா ன்னு பார்க்கறேன்"
முகப்புப் படமும் அதன் வரிகளும் அருமை! கண்ணனின் ஓவியங்கள் அனைத்தும் அழகு!
பதிலளிநீக்குரசித்த உள்ளங்களுக்கு நன்றிகள்..
பதிலளிநீக்குவிஜி.