ஞாயிறு, 9 மார்ச், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி மூன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு பட்டம் வாங்கினாத்தான் மதிப்பு அப்படின்னு நான் சொன்னது இந்த பட்டம் இல்ல ராதா.


தெரியும் கிருஷ்ணா அதுக்கு இன்னும் time இருக்கு.இப்போதைக்கு வாங்க முடிஞ்ச இந்த பட்டத்த வெச்சு enjoy பண்ணலாம் வா.


*******



உன்னுடைய சுருண்ட நீண்ட அழகான கூந்தலின் ரகசியம் என்ன கிருஷ்ணா?


அதான் ரகசியமாச்சே எப்படி சொல்றது ராதா?


*******



இங்கயா இருக்கீங்க ரெண்டு பேரும்? அம்மா ஊர் முழுக்க உங்களைத் தேடறாங்க, exam வேற. 

அதுக்குத் தப்பிச்சுத்தான இங்க வந்திருக்கோம்.


*******



சீதா இது சிவதனுசு இல்ல. குடுத்துடு சமத்தா. உன் புருவமும் கண்களும் இருக்க வில்லும் அம்பும் எதற்கு?

(ஹும் நம்ம ஆயுதத்தை சேதமில்லாம வாங்கிக்க எத்தனை bit போட வேண்டியிருக்கு)


*******



நான்தான் சொல்லிட்டேனே இனிமே சொல்லாம எங்கேயும் போகமாட்டேன்னு. இனிமே எழுந்துக்கலாமாம்மா


*******



சந்திரன் எப்படி என் சிரசுக்கு வந்தான் தெரியுமா தேவி?

அத விடுங்க. கங்கை எப்படி வந்தா? அதை சொல்லுங்க முதல்ல


*******



எங்கிருந்தோ ஒரு மணம் வீசுதே ராதா.அது என்னவோ..


நான் பண்ணின வெத்தகுழம்பு மணம்தான் கிருஷ்ணா சாப்பிட வா.


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

9 மார்ச் 2025


3 கருத்துகள்:

  1. பட்டம் - குழல் வல்லான் என்று பட்டம் கொடுத்து விடலாம்!

    ரகசியத்துக்கான பதில் அருமை.

    குழந்தைகள் இருவரும் தூக்கத்தில் நழுவி தண்ணீரில் விழுந்தால் என்ன ஆவது!

    உங்கள் புருவமும் டிட்டோவாக இருக்க என்னிடம் பிட்டைப் போடுவானேன் ராமா!

    எழுந்துக்கலாம்னு சொல்லேன் யசோதா...   அந்தக் கண்கள்..!

    முதல்ல கங்கை எப்படி வந்தான்னு சொல்லுங்க...  அதுக்கு நீ  ஜெயகாந்தனோட கங்கை எங்கே போகிறாள் படிக்கணும் பாரு....

    ம்ஹூம்...  வத்தக்குழம்பு மணத்தைக்கூட கனவில்தான் காணவேண்டியிருக்கு!!

    VV யின் வரிகள் ரசனை.  என்னையும் தொடர்ந்து யோசிக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  2. நன்றி Shriramji.
    Viji.

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.

    படங்களும் ரசனையான வரிகளும் அருமை.

    //சந்திரன் எப்படி என் சிரசுக்கு வந்தான் தெரியுமா தேவி?

    அத விடுங்க. கங்கை எப்படி வந்தா? அதை சொல்லுங்க முதல்ல//

    அதானே! சரியான கேள்வி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....