அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட dhதாரி தேவி மந்திர் - மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
தலைநகர் தில்லியில் இருப்பதில் ஒரு வசதி - நம் இந்தியத் திருநாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பாரம்பரியமான கலைகள், உணவுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் கண்காட்சிகள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும். அவற்றை விருப்பமிருப்பின் சென்று பார்த்து ரசிக்கலாம். பாரம்பரியமான பொருட்களை நாம் இருக்கின்ற இடத்திலேயே வாங்கவும் வாங்கலாம் - அப்பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருப்பதோடு, தயாரிக்கும் இடத்திற்கே சென்று வாங்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போகிறது. இப்போதைய காலகட்டத்தில் வீட்டு வாசலிலேயே பொருட்களை வாங்குவது - அதாவது இணையவழி வாங்குவது தானே அனைவருக்கும் பிடித்திருக்கிறது. தலைநகர் தில்லியில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன - குறிப்பாக குளிர்காலத்தில்! இந்த நாட்களில் உலா வருவது நமக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அதனால் இந்த நாட்களில் நான் அதிகம் சுற்றிவருவது வழக்கம். கூட வருவதற்கு யாரும் தயாராக இல்லை என்றாலும் கூட கவலையில்லாமல் ”தனியே தன்னந்தனியே…” என்று புறப்பட்டுவிடுவது வழக்கம்.
ஃபிப்ரவரி மாதம் அப்படி நடந்த ஒரு நிகழ்வு “ஆதி மஹோத்ஸவ் 2025”. நம் நாட்டில் இருக்கும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளின் பாரம்பரியமான கலைகள், அவர்களது வேலைப்பாடுகள், உணவு, நடனம், நாட்டியம், ஓவியம் என பலவகையான விஷயங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் விதமாக ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வுகள் “ஆதி மஹோத்ஸவ்” என்ற பெயரில் தலைநகரில் நடைபெறுகின்றன. இந்தியாவின் தலைநகர் மட்டுமல்லாது வேறு சில மாநில தலைநகரங்களிலும் கூட இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழகத்தில் நடக்கிறதா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை! உள்ளூர்வாசிகள் சொல்லுங்களேன் - நம் மாநிலத் தலைநகர் சென்னையில் இது போன்ற ஆதி மஹோத்ஸவ் நடக்கிறதா என்று. இந்த வருடம் நடந்த நிகழ்விற்கு, ஒரு நாள் மாலை அலுவலகம் முடிந்தபிறகு, இரண்டு அலுவலக நண்பர்களுடன் சென்று வந்தேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலே அங்கே செலவழித்ததோடு நிறைய படங்களும் எடுத்தோம். அப்படி எடுத்த படங்கள் சில இன்றைக்கும், வரும் நாட்களிலும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படங்களின் வரிசையில் இன்றைய பதிவில் உடன் வந்த அலுவலக நண்பர் அவரது DSLR Camera-வில் எடுத்த சில படங்கள் கீழே…
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
6 மார்ச் 2025
ஆதி மஹோத்சவ் விவரங்கள் அருமை. படங்கள் மிக அருமை. சென்னையில் இப்படி எல்லாம் நடப்பதா... திராவிட பாரம்பர்யம் என்ன ஆவது!
பதிலளிநீக்குதில்லியில் நடப்பது போன்று இங்கு இப்படி இல்லை என்றாலும் பெங்களூரிலும் நிறைய நடக்கின்றன. ஆனால் என்னால் போக முடிந்ததில்லை. ஒவ்வொரு வருடமும் ஓவியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படுவதை நம்ம அனு பிரேம் எடுத்துப் போடுவாங்க. நீங்களும் பார்த்திருப்பீர்கள் அவங்க தளத்தில்.
பதிலளிநீக்குஇங்கு Technical Expos அதிகம்.
படங்கள் செமையா இருக்கு ஜி.விதம் விதமான பிள்ளையார் வாவ்! உலோக வடிவங்களை இங்கு ஒரு கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். இங்கும் கர்நாடகாவின் கைவினைப் பொருட்கள் காட்சிகள் நடக்கும்.
DSLR Camera தனிதான் என்று தெரிகிறது. படங்கள் செம
கீதா
படங்கள் அனைத்தும் அருமை. தனியே தன்னந்தனியே.... சூப்பர் ஜி
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் நன்று. ஆதி மஹோஸத்வ படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. விதவிதமான பொருட்களில் செய்யப்பட்ட விநாயகரை ரசித்தேன். மற்ற கலைப் பொருட்களாக செய்யப்பட்டவை அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஆதி மஹோத்ஸவ் 2025”. படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
ஆதிவாசிகளின் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை வெளிக்கொண்டு வரும் அருமையான ஏற்பாடாக உள்ளது ஆதி மஹோத்ஸவ். பெங்களூரில் நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. படங்களும் பகிர்வும் மிக அருமை. நன்றி.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபொருட்காட்சி கைவினைப் பொருட்கள் நன்றாக உள்ளன.