செவ்வாய், 4 மார்ச், 2025

காரிகர் காதா (Kharigar Gaathaa) - சிற்பக்கலையின் பாரம்பரியம் - தலைநகர் நிகழ்வு - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தலைநகர் தில்லியில் ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு.  அந்த நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளில் பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம்.  இது வரை வெளியிட்ட பதிவுகளை பார்த்திருக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம். 


காரிகர் காதா - பகுதி ஒன்று 


காரிகர் காதா - பகுதி இரண்டு


காரிகர் காதா - பகுதி மூன்று


காரிகர் காதா - பகுதி நான்கு


நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்த மேலும் சில படங்கள் மற்றும் காணொளிகள் இன்றைய பதிவாக - இத்தொடரின் நிறைவுப் பகுதியாக - உங்கள் பார்வைக்கு. 



நூல் கொண்டு இப்படியும் ஆடைகள் தயாரிக்கலாம்…



லக்னோ பகுதியில் உபயோகித்த ஷராரா எனும் உடை மாதிரி…



பயணத்திற்குப் பயன்பட்ட வண்டி ஒன்று…



பயணத்திற்குப் பயன்பட்ட மற்றுமொரு வண்டி…



திறந்தவெளி அரங்குகளில் அலங்காரங்கள்…



மரத்தில் நிகழ்வு குறித்த பதாகை….



நடனக்காட்சி ஒன்று படமாக…



நடனக்காட்சி ஒன்று காணொளியாக…













ஜார்க்கண்ட் மாநிலத்தின் சோஹ்ராய் ஓவியங்கள் சில…


இந்த சோஹ்ராய் ஓவியங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் பிரபலமானவை.  இந்த ஓவியரிடம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். பொதுவாக இவர்களது ஓவியங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளே வரைபொருளாக இருக்கும் என்கிறார் அவர்.  அதைப் போல எல்லா ஓவியங்களும் மூன்று கோடுகள் கொண்டு முடியும் என்கிறார். அதற்குக் காரணமாக சொல்வது முதல் கோடு இயற்கையை வழிபடும் விதமாகவும் இரண்டாம் கோடு இறைவனை வழிபடும் விதமாகவும், மூன்றாவது கோடு அப்படி வழிபடுவதால் கிடைக்கும் நல்ல எண்ணங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கிறது என்கிறார்.  அவரிடம் பேசியதில் இப்படி சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.  ஒவ்வொரு மனிதரிடமும் பேசும்போது நாம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இவருடனான சம்பாஷணை எனக்கும் மீண்டும் உணர்த்தியது.  




பீஹார் மாநிலத்தின் சிக்கி க்ராஃப்ட் - ஒரு வித புல் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள்…



கணேஷா சிலையொன்று…



சதீஸ்கட் மாநிலத்தின் பாரம்பரிய வீட்டின் மாதிரி…


இராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய இசை - காணொளியாக….

(Headphone பயன்படுத்த வேண்டியிருக்கலாம்!)


இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன்.  தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

4 மார்ச் 2025


4 கருத்துகள்:

  1. சோஹ்ராய் ஓவியங்கள் + ஓவியருடன் உரையாடல் புதிய தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  2. படங்களும், படங்களில் உள்ள பொருள்களும் அருமை.  காணொளிகள் ரசனை.

    பதிலளிநீக்கு
  3. கோட்டோவியம் மகள் வரைந்ததா? இயல்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....