அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பனி படர்ந்த பாதைகள் மற்றும் சூரியோதயம் - பாம்பின் சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தலைநகர் தில்லியில் ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு. அந்த நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் இந்தத் தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம். இது வரை வெளியிட்ட பதிவுகளை பார்த்திருக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம்.
நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்த மேலும் சில படங்கள் இன்றைய பதிவாக உங்கள் பார்வைக்கு.
அருணாச்சலப் பிரதேசத்தில் தினசரி வாழ்வில் பயன்படும் பொருட்கள்
நாகாலாந்து மக்கள் தினசரி வாழ்வில் பயன்படும் பொருட்கள்
மரத்தில் செய்யப்பட்ட துர்கா (மஹிஷாசுரமர்த்தினி) - கேரளத்திலிருந்து…
சரஸ்வதி, விஷ்ணு மற்றும் லக்ஷ்மி - கற்சிலைகள்
பிரம்ஹஞானத்தினை கௌரிக்கு போதிக்கும் சிவபெருமான் - பத்தாம் நூற்றாண்டுச் சிலையின் மாதிரி
கர்ஜிக்கும் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் சிம்ஹநாதா - பதினோறாம் நூற்றாண்டுச் சிலை..
மரத்தில் ஜன்னல் கதவுகள் - கிருஷ்ண பரமாத்மாவின் கோவர்த்தன லீலை - ஒடிசாவிலிருந்து…
லடாக் பகுதியிலிருந்து போதிசத்வா சிலை - களிமண் கொண்டு செய்யப்பட்ட சிலை…
வணங்கிய வடிவத்தில் கருடன் (ராஜஸ்தான்), மரத்தில் செய்யப்பட்ட இந்திராணி யானை மீது அமர்ந்த கோலத்தில் (கர்நாடகா) மற்றும் விஷ்ணு பரமாத்வை முதுகில் சுமந்தபடி கருடன் (கர்நாடகா)
பஞ்சலோகத்தில் குழலூதும் கிருஷ்ணர்
கூத்து/நாடகம் போன்றவற்றில் அணிந்துகொள்ளும் முகக்கவசம் - கேரளத்திலிருந்து - மரத்தினால் செய்யப்பட்டது…
மரத்தினால் செய்யப்பட்ட இராவணன் சிலை - பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து…
வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பூஜையறை - மரத்தில் - தென்னிந்தியாவிலிருந்து…
மரத்தினால் ஆன ஒரு அலங்காரத் தூண் - மேல் பகுதியில் பிள்ளையார்…
இரண்டு நாகினி - சர்ப்பபந்தா எனும் வடிவத்தில்…
மஹிஷாசுரமர்த்தினி - மரத்தில் - ஒடிசாவிலிருந்து…
மரத்தினால் செய்யப்பட்ட ஜரோக்கா (பால்கனி) - ஒரு பாரம்பரிய வீட்டிலிருந்து - குஜராத்
மேலே உள்ள படத்தின் ஒரு அருகாமைக் காட்சி - சித்திர வேலைகள் பிரமிக்க வைக்கின்றன அல்லவா?
குஜராத் பாரம்பரிய வீடு ஒன்று…
வீட்டின் வெளியே வண்டி ஒன்று…
இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
25 ஃபிப்ரவரி 2025
அழகிய கலை வடிவங்களை அற்புதமான படங்கள் மூலம் எங்களுக்கும் காணக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இவ்வளவையும் மொத்தமாக படம் எடுத்துக் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பகிர்வீர்கள். எப்படி எதெது என்னென்ன வகையறா என்று நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள்?
பதிலளிநீக்குஹாஹா... நல்ல கேள்வி. பொதுவாக இது போன்ற இடங்களில் கண்காட்சி எனும்போது அது குறித்த தகவல்களும் சிறு பதாகையாக வைத்திருப்பார்கள். அவற்றையும் சேர்த்து ஒரு படமும் தனியாக ஒரு படமும் எடுத்துக் கொள்வேன். பகிர்ந்து கொள்ளும்போது அதற்கான தகவலையும் சேர்த்து விடுவது வழக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஓ... ஜரோக்கா என்றால் பால்கனியா? முன்பு விவித்பாரதியில் ஜரோக்கா என்றும் ஒரு ஹிந்திப் பாடல்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். மறந்திருந்த அந்த வார்த்தை சட்டென நினைவுக்கு வந்ததது!
பதிலளிநீக்குசில வார்த்தைகள் இப்படி திடீரென நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி தான். இப்போது இந்த வார்த்தை அதிகம் புழக்கத்தில் இல்லை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இரண்டு சஜஷன்ஸ்.
பதிலளிநீக்கு11ம் நூற்றாண்டு என்று சொல்ல வந்தீர்கள் என்றால் ரா வரவேண்டும். றா வந்தால் என்னதான் னோ வந்தாலும் ஆறோ என்று எண்ண வைக்கிறது!
அடுத்து அருகாமை என்றால் அருகில் என்று பொருள் அல்ல. தூரத்தில் என்று பொருள். அருகில் என்று சொன்னால்தான் கிட்டத்தில் என்று பொருள் வரும்.
பிழைகளைச் சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அத்தனையும் என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை. அற்புதமான கலைவடிவங்கள்!
பதிலளிநீக்குலடாக் - களிமண்ணால் செய்யப்பட்ட அந்த புத்தர் ரொம்ப அழகு
ஜரோக்கா கவர்கிறது! அந்தக்காலத்து மாடத்தைதான் பால்கணி என்று சொல்கிறார்களோ? ஜராககாவின் க்ளோசப் படமும் செம. அற்புதமான நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள் வாவ்!
குஜராத்தின் பாரம்பரிய வீடு கவர்ச்சியாக இருக்கு. நடுவில் முற்றம் போல வைத்து கவர்கிறது.
வண்டிக்கே இவ்வவுகலை நுணுக்கமா!! ஓட்டவே தோன்றாதே!!!!!!!
கீதா
பதிவு வழி பகிர்ந்த படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. தெய்வம் சார்ந்த உருவங்கள், சாரளகதவு, கூத்து/நாடகம் போன்றவற்றில் அணிந்துகொள்ளும் முகக்கவசம், குழலூதும் கிருஷ்ணர் என அனைத்தும் நன்றாக உள்ளது.
அந்த பாரம்பரிய வீடு, வாகனம் (அதைப்பார்த்தால் அந்த கால தொட்டில் போன்று காணப்படுகிறது) எல்லாமே சிறப்பாக செய்துள்ளனர். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவும் பதிவு வழி பகிர்ந்த படங்கள் மற்றும் செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் அருமை. கலைப்பொருட்கள் எல்லாம் மனதை கவர்கிறது. எதை சொல்வது எதை விடுவது என்று சொல்லமுடியவில்லை. அனைத்தும் மிக அழகு.
பதிலளிநீக்குகுஜராத் பாரம்பரிய வீடு , பால்கனி, பூஜையறை கலை வேலைபாடுகள் அழகு.
வாசகம் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
கலைப் பொருட்களும் படங்களும் அருமையாக உள்ளது நாகினியும் பால்கனியும் அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜயலக்ஷ்மி சென்னை.
நீக்கு